சிந்திய இரத்தம் உலரவில்லை.
வைத்த மை இன்னும் அழியவில்லை அதற்குள் அனைத்துக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு, துரோகம் செய்யத் துணிந்துவிட்டன!
கொரோனா தொற்று உயிர்வளி (ஆக்சிஜென்) உற்பத்தியைக் காரணமாக முன்வைத்து தூத்துக்குடி நச்சு ஆலை ஸ்டெர்லைட்டை திறக்க நடக்கின்ற அனைத்தும் வேதாந்தா மற்றும் அவர் கைகூலிகள் நடத்தும் முழு நாடகமேயாகும். இவை அனைத்தையும் உறுதியாக தமிழ் மக்கள் நிராகரிக்கிறோம்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் உயிர்வளி காற்று தேவை பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லையா? திட்டமிடவில்லையா? நச்சு ஆலை முதாலாளி தான் சிந்திக்கிறானா? அவனை விட்டால் எவனும் ஆளே இல்லையா? உயிர்வளி உற்பத்திச் செய்ய மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் தவிர வேறு இடமோ? ஆலையோ இல்லையா?
எதற்கு இந்த நாடகம் எல்லோரும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது. நேற்று வரை எடப்பாடியை எடுபிடி என்றவர்கள் தாங்களும் இனி எடுபிடிதான் என்று சொல்லத் தொடங்கி விட்டீர்களா? ஆலையைத் திறப்பதற்கு முன் எங்களுக்கு நச்சு ஆலையைத் தவிர வேறு இடமில்லை, வேதாந்தாவை விட்டால் வேறு ஆள் இல்லை. நாங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள் கைகூலிகள் என்பதை அறிவித்துவிட்டு செல்லுங்கள் அடிமைகளே!!
தமிழ் மக்கள் தங்கள் உயிர்வளி காற்றைக் காக்க நச்சு ஆலையை நிரந்தரமாக மூட தங்கள் சொந்த வழிகளில் உறுதிபடுத்துவார்கள். ஒருநாள் அந்த நச்சு ஆலை இருந்த இடம் எருமைக் கொண்டு உழவு செய்து காடாக்கி இந்த தமிழ்மண் காக்க உயிர்நீத்த 'ஸ்னோலின்' உள்ளிட்ட தூத்துக்குடி ஈகியர்களின் திருஉருவை தமிழ்மக்கள் நிறுவார்கள்.
நச்சு ஆலையைத் திறக்க ஒப்புதல் அளித்த அனைவரும் தமிழ்மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களே. வேதாந்தாவின் கைகூலிகளே.
தமிழக அரசே நச்சு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்காதே!!!
செயப்பிரகாசு நாராயணன்
தலைவர்,
தமிழர் முன்னணி