Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

jallikattu tamils

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழியானால், தை பிறக்கும்முன் ஜல்லிக்கட்டிற்கு மல்லுக்கட்டு நடக்கும் என்பது புதுமொழியாக மாறிவிட்டது.

2014 ஆண்டு மே மாதம் இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு எனும் காட்டுமிராண்டி கால பழக்க வழக்கத்திற்குத் தடை விதித்ததில் இருந்து, ஜல்லிக்கட்டிற்காக மல்லுக்கட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடக்கிறதோ இல்லையோ, தை மாதம் நெருங்கிவிட்டாலே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனவும், தமிழர் பண்பாட்டை, பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் எனவும் சப்பைக்கட்டு நடந்து கொண்டு வருகிறது.

இணையதளங்களில், அச்சு ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் என எங்கு திரும்பினாலும் ஜல்லிக்கட்டு அலை அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்படி என்ன ஜல்லிக்கட்டில் இருக்கிறது என அறிந்துகொள்ள அனுபவ அறிவு மற்றும் பகுத்தறிவு என்ற இரு கோணங்களில் ஜல்லிக்கட்டோடு மல்லுக்கட்டலாம் என்ற அடிப்படையில் என் வாதங்களை முன்வைக்கிறேன்.

ஜல்லிக்கட்டு தமிழர் அனைவருக்குமான பண்பாடா? மேலும் அறிவியல் வளர்ந்த நிலையில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பண்பாடு என்றால் என்ன?

1) தமிழர் அனைவருக்குமான பண்பாடெனில் தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஏன் நடைபெறவில்லை?

2) மதுரையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில், மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் கலந்து கொள்வது ஏன்?

3) ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு எனில் மாடு மேய்ப்பது ஆப்ரிக்க பண்பாடா? ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு என்று குதிக்கும் கலாச்சார காவலர்கள் மாடு மேய்ப்பதை இழிவாகக் கருதுவது ஏன்?

4) பழைமையான பழக்கவழக்கம், எனவே ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அளவுகோலை மற்றைய பழைய பழக்க வழக்கங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாமா? கோமணம் கட்டுவது தானே தமிழரின் பழைய பழக்கம். அதை பின்பற்ற எத்தனை கலாச்சார காவலர்கள் தயாராக உள்ளனர்?

5) பழையது என்ற ஒரே காரணத்திற்காக இன்றைய நவீன அறிவியல் யுகத்திற்குப் பொருந்தாத பழக்கவழக்கங்களை அனுமதிக்க முடியுமா?

6) 2014 ஆண்டு மே மாத்ததில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு விட்டது. கடந்த ஆண்டுகளில் அமைதியாக இருந்து விட்டு தற்போது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பாஜக களமிறங்குவது ஏன்? 2016 தமிழக சட்டசபைத் தேர்தலைத்தவிர வேறு காரணங்கள் ஏதும் இருக்க முடியுமா?

7) ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளைச்சண்டை உள்ளதே என்பவர்கள் உலகில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில்லை. ஸ்பெயினில், ஜெர்மனியில் காளைச்சண்டையை நிறுத்தி ஆண்டுக்கணக்காகி விட்டன.

8) பழமைதான் என்பதற்காக தமிழ்நாட்டில் மாட்டு வண்டியில் பயணம் செய்ய நாம் தயாரா?

மேற்கண்ட கேள்விகளுக்கு பகுத்தறிவைப் பயன்படுத்தினால் அறிவியலுக்கும், நடைமுறைக்கு ஒவ்வாத எந்தவித பழக்கமும் காலப்போக்கில் வழக்கிழந்து போகும் என அறிந்து கொள்ளலாம். பண்பாடு என்பது பழைமைகளைப் தூக்கிப் பிடிப்பதல்ல, மாறாக பண்படுதல் என்றே பொருள்.

மேலும் தமிழர் பண்பாட்டை நிறுவ 'தமிழனுக்கு' மட்டும் தான் கடமையும் உரிமையும் உள்ளதா? 'தமிழச்சிகளுக்கு' பங்கில்லையா?.

ஸ்பெயினில் காளைச்சண்டை இருக்கிறது, ஜெர்மனியில் ஜெர்சிப் பசு சண்டை இருக்கிறது, தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதென வீரவசனம் பேசும் என் இனிய தமிழ்த் தேசியர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். ஸ்பெயினில் காளைச்சண்டை இருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டை நடத்துங்க. ஆனால் அதே போல் ஸ்பெயினி்ல் சாதி இல்லாமல் இருப்பது போல், தமிழ்நாட்டிலும் சாதி இல்லாமல் இருங்க. உங்களால் முடியுமா? உங்க வீரத்தை இந்த விஷயத்தில காட்ட முடியுமா? சவால் விடுகிறேன்.

இளவட்டக்கல் தூக்குவதும், புலிப்பல் பிடுங்கி வருவதும் தமிழ்ப் பண்பாடு, இக்காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்த பின்னரே பெண்களை மணம் முடித்துத் தருவது அன்றைய தமிழர் பண்பாடு என்கிறார்கள். இன்று தமிழ்ப் பண்பாட்டுக்காக இப்போது புலியை வேட்டையாடினால் மாமியார் வீட்டுக்குப் போகலாம். ஆனால் அந்த மாமியார் வீட்டிற்கு சிறைச்சாலை என்ற பெயர் உள்ளது. மாமியார் வீட்டிற்குப் போக தமிழ் மருமகன்கள் தயாரா?

jallikattu 404

அடுத்த படியாக ஜல்லிக்கட்டின் மூலம் தான் நாட்டு மாடுகளைக் காப்பாற்ற இயலும் என்ற இன்னொரு வாதம் விவசாயிகளின் சார்பில் வைக்கப்படுவதாக, விவசாயிகளின் பிரதிநிதிகளாக சிலர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு வாதம் வைக்கின்றனர். இதை எனது அனுபவத்தின் அடிப்படையில் பகுத்துப் பார்க்க விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எனது கிராமத்தில் வாழ்ந்திருக்கிறேன். விவசாயம் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தோடு நேரடித் தொடர்பு இல்லையெனினும் கிராமத்தோடு தொடர்பில் இருக்கிறேன்.

நான் அறிந்தவரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு, அதன்மூலம் நாட்டு மாடு காப்பாற்றப்பட்டு, அதன்மூலம் தன்னுடைய விவசாயம் செழிக்கும் என என் கிராமத்தில் உள்ள எந்த விவசாயியும் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாருமே விவசாயத்திற்கு நாட்டு மாட்டைத்தான் பயன்படுத்துவோம் என்ற வீண்பண்பாட்டு அல்லது மூட நம்பிக்கையை கடைபிடிக்கவில்லை. எது விவசாய வேலை மற்றும் செலவைக் குறைக்கிறதோ, அதைத்தான் விவசாயிகள் செய்து வருகின்றனர். அடையாளத்திற்காக முதல் விதையை அல்லது முதல் உழவை குறிப்பிட்ட திசையில் ஆரம்பிப்பது என்ற வகையில் மட்டுமே பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகின்றனர்.

விவசாயிகள் மீதும் வீண்பெருமையை, மூட நம்பிக்கையை, தேவையற்ற பண்பாட்டுப் பெருமையை திணிப்பவர்கள் தமிழின் பெயரால் இனவாதம் அல்லது மூட நம்பிக்கையை பேசுபவர்கள் தான். ஜல்லிக்கட்டை ஆதரிப்பது என்பது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய மூட நம்பிக்கையை தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் விவசாயிகளின் தலையில் ஏற்றாதீர்கள். அவர்கள் உங்களை விட முற்போக்கானவர்கள். அவர்களுக்கு தமிழ்ப்பண்பாடு தெரியாது மட்டுமல்ல, தேவையும் கிடையாது.

ஜல்லிக்கட்டை பண்பாடென மல்லுக்கட்டும் தோழர்கள் சற்று பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகிறேன். தமிழர்கள் மட்டுமல்ல உலகினர் அனைவரும் விலங்கோடு தான் வாழ்ந்து வந்தனர், இன்றும் கூட. அதன் காரணமாகவே பண்டைய பண்பாட்டு நடவடிக்கைகள் இன்று ஏற்புடையதாகாது. ஒரு எடுத்துக்காட்டை இப்போது பார்ப்போம். மாடு வைத்து உழும் போது மரத்திலான ஏர்க்கலப்பை பயன்படுத்தினோம். அதனோடே உணர்வுப்பூர்வமாக ஒன்றியிருந்தோம். இன்று டிராக்டர்களின் வருகைக்குப்பின் இரும்புக் கலப்பைகளையே பயன்படுத்துகிறார்கள். பழைய மாட்டுக்கலப்பையை இன்று எந்த கிராமத்திலும் காண இயலாது. மர ஏர்க்கலப்பைக்குப் பூஜை அல்லது மரியாதை செய்வதை பண்பாட்டு நடைமுறையாக வைத்திருந்தவர்கள் இன்று இரும்புக் கலப்பையைக் கொண்டாடும் நடைமுறைப் பண்பாட்டிற்கு வந்துவிட்டார்கள். நாளை இதைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் வருமெனில் அதையும் யதார்த்த விவசாயிகள் உடனடியாக கைக்கொள்வார்கள்.

ஆனால் இனப் பண்பாட்டு பெருமை பேசும் நீங்கள், பாமரப் பகுத்தறிவோடு இருக்கும் விவசாயிகளையும் பின்னோக்கி இழுக்கும் செயலை அப்போதும் இனப்பெருமை என்ற பெயரில் செய்து கொண்டிருப்பீர்கள். இந்த வீண் பெருமையைத்தான் இப்போதும் நீங்கள் பேசி, உங்கள் ஆசையை, பிற்போக்குத்தனத்தை விவசாயிகளின் மீதும், விலங்குகளின் மீதும் திணிக்கும் வேலையைச் செய்து வருகிறீர்கள்.

ஜல்லிக்கட்டை பெரியாரியவாதிகள், பகுத்தறிவாளர்கள் தக்க காரணங்களோடு, ஆதாரங்களோடு மறுத்து தெளிவான விளக்கங்களை பலமுறை அளித்துள்ளனர்.

இதையும் மீறி பண்பாடு என்ற பெயரில் ஜல்லிக்கட்டிற்காக மல்லுக்கட்டுபவர்கள் மூடநம்பிக்கையாளர்கள் அல்லது இனவாதிகளாகத்தான் இருக்க முடியும்.

- சு.விஜயபாஸ்கர்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 Prasath Selvaraj 2017-01-06 18:40
அருமை தோழர்!!!
Report to administrator
+2 #2 nalankilli 2017-01-07 13:21
அரசெழிலனின் மின்னஞ்சல் வழியாக எனக்கு கீற்று நந்தனின் சல்லிக்கட்டு மறுப்புக் கட்டுரை கிடைத்தது. நான் அரசெழிலனுக்குச் சுருக்கமாக ஒரு பதிலளித்தேன். அந்தப் பதிலை இங்கம் பகிர்ந்து கொள்கிறேன் --

உங்களின் கட்டுரை கடுமையாகக் கண்டிக்கத்தக்கத ு. பாமர மக்களின் உரிமைகளை மறுக்கும் மேட்டுக்குடி வாதம் இது. பகுத்தறிவு என்பதன் பெயரால் நடத்தப்படும அராஜகம், சனநாயக மறுப்பு. சல்லிக்கட்டை எதிர்க்கும் திராவிடப் பகுத்தறிவுவாதிக ள் எத்தனை பேர் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் . ஆனால் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ள என் போன்ற, தியாகு, மணியரசன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள்தான ் சல்லிக்கட்டையும ் ஆதரிக்கிறோம். ஏதோ, சல்லிக்கட்டை எதிர்க்கும் நீங்கள்தான் பெரிய சாதி எதிர்ப்புப் போராளிகள் போலவும், சல்லிக்கட்டை ஆதரிக்கும் நாங்கள் எல்லாம் சாதி வெறியர்கள் போலவும், பகுத்தறியத் தெரியாத முட்டாள் பசங்க, சின்ன பசங்கள் போலவும் கூறி எள்ளி நகையாடுவதுதான் பகுத்தறிவு என்றால், அந்தப் பகுத்தறிவே எங்களுக்கு வேண்டாம்.

அடுத்துப் பெரியார் நாம் காட்டுமிராண்டித ் தன்மையிலேயே இருக்கிறோம் எனக் கூறியதால் நாம் சல்லிக்கட்டைத் தவிர்க்க வேண்டும் என்கிறீர்கள். ஆமாம், பெரியார் எங்கள் தாய்மொழியாம் தமிழைக் கூடத்தான் காட்டுமிராண்டி மொழி என்றார், வீட்டில் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றார், தமிழ்வழிக் கல்வியை ஆதரிப்பவன் பெரியாரிஸ்டு எனச் சொல்லிக் கொள்ளக் கூடாது என்றார். அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆங்கிலம் பேசி அலைவதுதான் உங்களின் பகுத்தறிவு என்றால், எங்களுக்கு அந்தப் பகுத்தறிவே வேண்டாம்.

சல்லிக்கட்டுக்க ு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள ், ஆனால் அதனை விளையாட முன்வரமாட்டார்க ள் என்கிறீர்கள். ஆமாம், பாமர மக்களுக்கு உள்ள சனநாயக உணர்வு கூட உங்களைப் போன்றவர்களுக்கு இல்லை என இதிலிருந்து புரிகிறது. ஒரு கருத்தை நாம் ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அந்தக் கருத்தைப் பேச ஒருவருக்கு உள்ள யாரும் மறுத்தால் அவர்களுக்காகவும ் குரல் கொடுப்பதுதான் சனநாயகம். உங்களைப் போல் பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல் பின்னால் ஒளிந்து கொண்டு, அவர்களின் தயவில் தடை கேட்கும் குறுக்குப் புத்திக்குப் பின்னால் ஒளிந்து வேலை செய்வதுதான் சனநாயக என்றால், அந்தப் பாழாய்ப் போன சனநாயகம் எங்களுக்குத் தேவையில்லை.

அடுத்து சல்லிக்கட்டு நிலப்பிரபத்துவ விளையாட்டு எனும் மார்க்சிய அறிவுஜீவிகளின் வாதம். விளையாட்டில் முதலாளித்துவ விளையாட்டு சோசலிச விளையாட்டு என்றெல்லாம் இல்லை. கால்பந்து உட்பட எல்லாமே நிலப்பிரபத்துவ விளையாட்டுத்தான ்.

மேலும், சாதி ஒழிந்தால்தான் சல்லிக்கட்டு விளையாடலாம் என்கிறீர்கள். ஆகா... இந்த வாதத்தைக் கேட்டு எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. முதலில் ஒலிம்பிக் விளையாட்டைப் பார்ப்பதற்குக் கூட பெண்களுக்கு அனுமதியில்லை, பிறகு அவர்கள் விளையாடுவதற்கு அனுமதியில்லை, கறுப்பின மக்களுக்கு அனுமதியில்லை, இப்படி பல தடைகளை மீறி அவர்களுக்குரிய உரிமையை உலகம் பெற்றதே தவிர, இதைச் சொல்லி ஒலிம்புக்கு எந்த புத்திசாலியும் தடை கோரவில்லை. சொல்லப் போனால் இன்றைக்கும் ஒலிம்பிக்கில் நிறவெறியும் ஆணாதிக்க வெறியும் கோலாச்சுகிறது என்ற பல குற்றச்சாட்டுகள ் உண்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள ை வைக்கும் எவரும் ஒலிமபுக்குக்குத ் தடை கோருவதில்லை. இப்படிப்பட்ட அதி புத்திசாலிகளைத் தமிழ்நாட்டில் மட்டுந்தான் காண முடியும்.

வாழ்க உங்கள் பகுத்தறிவு!

மற்றபடி, நன்றி தோழர்.
Report to administrator
0 #3 p.vedamoorthy 2017-01-08 11:38
நவீனத்தை வரவேற்க கட்டுரையாளர் கோக் கொண்டுவரும் புதிய பாலுக்கும்,மரபண ு மற்றுப் பயிரான கத்திரிக்கா கடுகு என்று... தனது மிதமிஞ்சிய பகுத்தறிவை பயன்படுத்துவார் போலிருக்கிறது.
Report to administrator
0 #4 நிம்மதி தரும் ஆலோசனைகள் 2017-01-24 22:01
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டின் மூலம் மாடுகள் வதைக்கப்படுகின் றன அல்லவா! என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
விலங்குகளை வதைப்பது கொடுமை; மாட்டை துன்புறுத்துவது அநியாயம் என்று PETA அமைப்பு கூறுவதை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டா ல், லட்சக்கணக்கான மாடுகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை இந்தியர்கள் அரசு அனுமதியோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்களே! அது இதைவிட கொடுமை அல்லவா? அரசாங்கத்துக்கு விலங்கினங்களின் மீது ஜீவ காருண்ணிய சிநேகம் இருக்குமானால், அவற்றை கொன்று காசாக்குவதை அல்லவா முதலில் தடை செய்யவேண்டும்?

ஜல்லிக்கட்டில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு
ஜல்லிக்கட்டை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவேண்டும் என்பதற்கு கீழ்காணும் வசனத்தை “கிறிஸ்தவர்கள் ” என்று அழைக்கப்படுகிறவ ர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும். நீதிமொழிகள் 14:4

இங்கே காளை மாடுகளை உழவுத்தொழிலுக்க ு (நிலத்தை உழுவதற்கு) பயன்படுத்துவதால ் விளைச்சல் உண்டாகும் என்றுதானே பார்க்கிறோம். மாட்டுக்கு கொம்பு சீவி விட்டு அந்த கொம்பால் குத்துபட்டு செத்துப் போவதைப் பற்றியா கூறுகிறது? அது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது அல்லவா! அருமையான வேத விசுவாசியே! இந்த வசனத்துக்கும் மாட்டோடு யுத்தம் பண்ணும் ஜல்லிக்கட்டுக்க ும் என்ன சம்பந்தம்?

1கொரி 10:31-ல் நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள் என்று வாசிக்கிறோம். ஜல்லிக்கட்டின் மூலம் இயேசுவின் பெயருக்கு எப்படி புகழ் உண்டாகும் என்று நீங்களே சிந்தியுங்கள்.

இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதே என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் ஜல்லிக்கட்டு நடத்தாததால் அல்ல. காளை மாடுகளை பயன்படுத்தி மாட்டுவண்டி, ஏர், செக்கு போன்றவற்றைப் பயன்படுத்திக்கொ ண்டிருந்த நாம் குட்டியானை, Tractor போன்ற மின்சார தானியங்கிகளுக்க ு மாறிவிட்டோம். உழவுத்தொழிலையும , மாடு வளர்ப்பதையும் கேவலமான தொழிலாக நினைக்கத் தொடங்கியதால்தான ் மாடுகள் குறைந்துவிட்டன. இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அத்தகைய மனப்பான்மை மாறவேண்டும். ஜல்லிக்கட்டால் நூறு மாடுகளை காப்பாற்ற முடியுமானால், குட்டியானை போன்ற சரக்கு வண்டிகளை புறக்கணித்துவிட ்டு தமிழ் கலாச்சார மாட்டுவண்டிக்கு மாறுவதால் பல கோடி மாடுகளை காப்பாற்றலாம். மாட்டு வம்சத்தை காப்பாற்ற விலையேறப்பெற்ற மனித உயிரை காவு வாங்கும் ஜல்லிக்கட்டு தேவை என்னும் கூற்று அர்த்தமற்றது. ஜல்லிக்கட்டின் மூலம்தான் தரமான பாலை நாம் அருந்தமுடியும் என்பது “பத்து பேரு செத்தாத்தான் என் பொழப்பு நடக்கும், அதனால எப்படியாவது 10 பேரை கொன்றுவிடு கடவுளே!” என்று ஒரு வெட்டியான் சொல்வதுபோல் இருக்கிறது.

வெளிநாட்டு மாடுகளின் பால் ஆரோக்கியமற்றது என்று கண்டுபிடித்திரு க்கிறார்களே என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
அயல்நாட்டு ஜெர்சி பசுக்களின் பால் ஆரோக்கியமற்றது என்றும் இந்திய மாடுகளின் பால்தான் ஆரோக்கியமானது என்றும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணமாகிவிட்ட ால், மாடு வளர்த்து பால் உற்பத்தி செய்வோரிடமும், பால் பண்ணை வைத்திருப்போரிட மும் இந்திய மாட்டுப் பாலை வழங்கும் விழிப்புணர்வை உருவாக்கவேண்டும ். ஜெர்சி பசுக்களை இறக்குமதி செய்வதை அரசு தடை செய்யவேண்டும். பால் வளத்துறையினர் வீரியமுள்ள பசுக்களை அரசு வளர்க்கவேண்டும் . அதற்காக அவற்றோடு போராடி மாட்டைவிட விலை உயர்ந்த மனித உயிரை, காளையால் குத்துப்பட்டு இழந்தால்தான் அந்த வம்சத்தை காப்பாற்ற முடியும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டு தமிழரின் கலாச்சாரம் அல்லவா என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
ஒரு பெண்ணின் கணவன் இறந்தால் அந்த பெண்ணின் கணவனை எரிக்கும் சிதையிலேயே அவளையும் உயிரோடு எரிக்க வேண்டும் என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கமும் தமிழரால் கடைபிடிக்கப்பட் ட தமிழ்க் கலாச்சாரமாகத்தா ன் இருந்தது. அதை ஒழித்தது தவறு என்று சொல்கிறீர்களா? ஜல்லிக்கட்டு என்பது பல்லாயிரக்கணக்க ான ஆண்டு பழமையான ஒரு கலாச்சாரம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதன்மூலம் எத்தனை லட்சம் அப்பாவி இளைஞர்கள் ஊனப்பட்டுள்ளனர் ; எத்தனை ஆயிரம் மக்கள் மரணமடைந்துள்ளனர ். எத்தனை ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட ்டுள்ளனர்?என்பத ையும் யோசிக்க வேண்டுமல்லவா? இப்படி ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுவதால் சமுதாயத்தில் என்ன முன்னேற்றம் உருவாகப்போகிறது ? நிதானமாக யோசியுங்கள்! பழங்காலத்தில் மாட்டை அடக்குபவருக்குத ்தான் மணப்பெண் கிடைக்கும் என்னும் சமுதாய சட்டம் இருந்ததால் ஒவ்வொரு இளைஞனும் தன் வீரத்தை நிரூபிக்கும் கட்டாயம் இருந்தது. ஆனால், இன்று அறிவும், அன்பும் அல்லவா முக்கியமாக கருதப்படுகிறது! எனவே, இந்த விஞ்ஞான வளர்ச்சியடைந்த யுகத்தில் இப்படிப்பட ஆபத்தான விளையாட்டுகளை கைவிடுவதே நல்லது.

வாகனங்களை ஓட்டும்போது விபத்துகள் வருவதால் வாகனங்களை ஓட்டாமல் இருக்கலாமா என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
நாம் வாகனம் ஓட்டும்போது ஒரு காரியத்தை சாதிக்க ஒரு இடத்துக்கு போகவேண்டும் என்பதற்காக ஓட்டுகிறோம். அதுவும் அதிக தூரம் போகவேண்டும் என்பதற்காகவும், வேகமாக போய் சேரவேண்டும் என்பதற்காகத்தான ் வாகனங்களை பயன்படுத்துகிறோ ம். மாட்டோடு போராடுவது எதை சாதிப்பதற்காக? நாட்டுப்பற்று உடையவர்களே சிந்தியுங்கள்.

நிம்மதி தரும் ஆலோசனைகள்.
Report to administrator

Add comment


Security code
Refresh