Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

மிருகவதை பற்றி...

1. மிருகவதை பற்றிப் பேசினால் யாரும் வீட்டுப் பிராணிகள் வளர்க்கக் கூடாது.

2. மிருகவதை என்று ஒரு பிரிவினையே சாத்தியமில்லாதது.

3. தொழில் பயன்பாடு, பொழுதுபோக்குப் பயன்பாடு, உணவுப் பயன்பாடு என்றே பிரிக்கமுடியும்.

4. இதில் பொழுதுபோக்குப் பயன்பாடு மட்டுமே தவிர்க்க முடியும்.

jallikattu 393

சாதியும் தேசியப் பண்பாடும்

5. ஜல்லிக்கட்டுக் காளைகள் இனப்பெருக்கம் மற்றும் தமிழர் பண்பாட்டு வாழ்வியலோடு தொடர்புடையதாக உள்ளது.

6. ஒருவர் பண்பாட்டு வாழ்வியல் இப்படி இருக்கக் கூடாது என்றும் இது விளையாட்டல்ல என்றும் கூட மாறுபட உரிமையுண்டு. ஆனால் தாம் மாறுபடுவதற்காகவே அதை தடைசெய்யச் சொல்வது ஏற்கவியலாதது.

7. சாதியம் இதில் நிலவுகிறது என்று சொன்னால் அது இருப்பது உண்மைதான். ஆனால் எதில் சாதி இல்லை, சாதியம் நிலவுவதற்காக தடைசெய்வது என்று சொன்னால் முதலில் உணவையே தடை செய்ய வேண்டியிருக்கும்.

8. இப்போது அரசு தலையிட்டு நடத்துவதன் பின்னணியில் தற்போது யாரும் காளையை இறக்கலாம்; யாரும் ஏறுதழுவலாம். மருத்துவப் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் சாதி கடந்து பல்வேறு சமுகத்து இளைஞர்களும் விளையாடுகிறார்கள். பள்ளர், பறையர் சமுகத்து இளைஞர்களும் விளையாடுகிறார்கள். இந்த வளர்ச்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும். தேசியப்பண்பாடாக அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்கா.. பீட்டாவும்..பார்ப்பனியமும்

9. உலகம் முழுக்க வேளாண்மைத்துறையை கைப்பற்றும் யுத்தம் நடந்து வருகிறது. புதிய காலனியமயமாக்கம் இதுவே. முதலில் விதைகள் கைப்பற்றப்பட்டன. இன்று தமிழகத்தில் 95 சதவீதம் அமெரிக்க மான்சாண்டோ பருத்தி விதைகளே விதைக்கப்படுகின்றன. மரபார்ந்த உரங்கள் ஒழிக்கப்பட்டு கம்பெனி உரங்களால் அவை கைப்பற்றப்பட்டன. கால்நடைகளும் கைப்பற்றப்பட்டுவிட்டன. இது போன்ற கம்பெனிகளுக்கு எதிர்கால அச்சுறுத்தலாக மாறக்கூடிய பண்பாட்டு எச்சங்கள் கூட திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. என்ஜிஓக்களின் சதிபற்றி பேசுபவர்கள் கூட பீட்டா என்ற அமெரிக்க என்ஜிஓவின் சதிபற்றி பேசத் தவறுவது ஏன்? இது ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, ரேக்ளா உட்பட பல்வேறு மரபார்ந்த நிகழ்வுகளும் தடை செய்யப்படுவதை கவனத்தில் கொள்வோம்.

10. பீட்டா சைவ அரசியலை அமெரிக்காவில் பேசுகிறது. இது இந்தியாவில் மாமிச உணவு சாப்பிடும் மக்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலின் பார்ப்பன அரசியலோடும் கைகோர்க்கிறது. பொழுது போக்குக்காக செல்லப்பிராணி வளர்ப்பதை ஊக்குவிக்கும் இக்கும்பல் அதில் மிருகவதை பற்றிப் பேசுவதில்லை. அந்த பிராணிகளை வைத்து காசு பார்க்கிறது.

11. இது அமெரிக்க பால் மற்றும் கால்நடை மருத்துவ நிறுவனங்களின் உளவுப்படையாகவும் செயல்படுகிறது.

12. இதில் பிஜேபி உள்ளிட்ட பார்ப்பனிய வெறியர்கள் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் ஆகிய உழைப்பார்ந்த பண்டிகையில் பார்ப்பனர்களுக்கு எந்தவித பாத்திரமோ தனிகவனிப்போ இல்லை என்பதுதான். உச்சநீதிமன்றத்தை மதிப்பது போல் நாடகம் ஆடுகிற இவர்கள், உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்த இவர்கள், ஜல்லிக்கட்டை காட்டிக் கொடுப்பதற்கு காரணம் பார்ப்பனிய வன்மமும் அமெரிக்க அடிமை சேவகம் செய்யும் மோடியின் அடிவருடித்தனமும் தான். அவர் ‘பாலையும் மாட்டையும் இறக்குமதி செய், பின் இந்தியாவில் தயாரி’ என்கிறார்.

13. தேசிய அரசியல்

எதிரி எதன் பெயரால் ஒதுக்குகிறானோ போராட்டம் அதன் பெயரால் வெடிக்கும். தமிழ் மக்களிடையே நிலவும் ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லும் ஒரு கும்பலை எதிர்த்து இது தமிழரின் பெருமைமிகு கலாச்சாரம் என்று எதிர்ப்பு கிளம்பவே செய்யும்.

 தென்மாவட்டங்கள் சிலவற்றில் கொண்டாடப்படும் பண்பாடு எப்படி தமிழர் பண்பாடு ஆகும் என்று கேட்டால் பல உலகளாவிய பண்பாடுகள் உலகில் எங்கோ ஓர் ஓரத்தில் தோன்றியவைதான். காதலர் தினம், ஆங்கிலப் புத்தாண்டு. பெண்கள் தினம், மே தினம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தென்மாவட்ட விளையாட்டாக இருந்தாலும், அதை எதாவது ஒரு பிரிவு மட்டும் சொந்தம் கொண்டாடவில்லை, முடியாது. அது தமிழ்த் தேசியப் பண்பாட்டு அடையாளமாக இந்தப் போராட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.

நமது போராட்டத்தின் நண்பர்கள் & எதிரிகள்,

பீட்டா + பார்ப்பனிய மோடி + ஊழல் சசிகலா + ஓபிஎஸ்

\எதிர்\

 தமிழர்கள் ( அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் + பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் + ஊழல் எதிர்ப்பாளர்கள் + ஜனநாயக சக்திகள் அனைவரும்) என்ற எல்லையில் தான் இந்த அரசியல் போராட்டம் குவிக்கப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தின் ஊடான நமது ஒற்றுமையை காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் தற்கொலைப் போராட்டங்களோடு ஒருங்கிணைப்போம்.

புதிய காலனியாதிக்க எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி அரசியல், நண்பர்களிடையே பரிசுத்தம் தேடுவதில் வெற்றியடையப் போவதில்லை. எதிரியின் மீதான இலக்கை தவற விடாமல் குறிவைத்துக் கொண்டே நமது நண்பர்களுக்கு புத்தரசியலிட்டு உரமுட்டுவதில் தான் இருக்கிறது.

- தங்கப்பாண்டியன், சோசலிச மையம், தமிழ்நாடு

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 kans 2017-01-19 09:48
People had assembled in protest from Tuesday night, but the “national media” didn’t live-broadcast it. Perhaps because this was not Delhi and hence didn’t matter to the “nation”.

If they had tried to understand Tamil Nadu from the Tamil standpoint and not from the Delhi's, they would have found that the present protests, in their spontaneity, intensity and popularity come close to the anti-Hindi imposition protests of 1965 when the Union government tried to forcibly shove Hindi down the throats of non-Hindi citizens of the Indian Union.

While protests against the Hindi imposition happened in various states, the Tamils took the lead. The response from New Delhi was swift and the central forces killed nearly 400 Tamil protesters that year. In 1967, the Congress was voted out and never again has any Delhi-headquart ered party ever held power in Tamil Nadu.

Since 1967, Tamils have politically opted for their own representatives and not Tamil agents of Delhi. It is because Tamil Nadu stood up against Hindi imposition that all non-Hindi states have been able to protect their cultural and linguistic turf against homogenisation ordered from Delhi, that is designed to benefit a certain ethnolinguistic group that holds huge sway on power in Delhi.

The Tamils gave up their autonomous rights over their land, resources and people when they signed up for the Indian Union. Any giving up of rights have to come with concomitant compensatory benefits. That has not happened.

While deciding to hang Afzal Guru, in spite of many grounds for reasonable doubt about the case, the Supreme Court of India said, “The collective conscience of the society will be satisfied only if the death penalty is awarded to Afzal Guru.” If the “collective conscience” of the society has already been admitted by the Supreme Court to be a decider in handing out judgements, what prevents it from listening to the “collective conscience” of Tamils regarding jallikattu that is on display in the protests all over their land today?

--- first post,19/1/17
Report to administrator
0 #2 Thavasankara pandian 2017-01-19 15:28
அருமையான விளக்கம் .ஆனால் இன்னும் மேம்போக்கான விஷயங்கள் அதிகம் இருக்கு .இது உங்களின்கள நிலவர அறிவை காட்டுகிறது . வெறும் புகை மட்டும் படித்துவிடு எழுதினால் அப்படித்தானே இருக்கும். தென் மாவட்டங்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில், சிக்கல் , காஞ்சிரன்குடி , ஒருவயல் ,பனையூர் .போன்ற எண்ணற்ற ஊர்களில் பள்ளர் than காலம் காலமா எருதுகட்டு நத்துகிறார்கள், மதுரை பாலமேட்டில் பள்ளர்கள் காலம் காலமாக குழுவில் ஒரு பகுதியினர் .சல்லிக்கட்டு கென்று காளை தனியாக வளர்ப்பது சில காலத்துக்கு முன்பாகத்தான் இருந்திருக்க வேண்டும் . ஏன் என்றல் கள்ளர் என்ற சமூகத்தை சார்தவர்களுக்கு ம் விவசாயத்திற்கும ் எந்த வித சம்பந்தமும் கெடையாது 100, 150 ஆண்டுகளுக்கு முன்னால்.
எருது கட்டு, சல்லிக்கட்டு போன்றவை முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தது ..அப்படியிருக்க .இங்கு தற்போதைய காலத்தில் நாடைபெறும் ஜல்லிக்கட்டில் பள்ளர்களும் ,பறையர்களும் மே கலந்துகொள்கிறார ்கள் என்று எழுதுவது எவ்வளவு தவறு . நீங்கள் கூறுவது போல பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் களையும் ,பறையர்களையும் இப்ப்பொழுதுதான் அவர்கள் அனுமதித்தது இருக்கிறார்கள் என்றால் .நீங்கள் இவர்களை தவிர்த்து போட்டி நடத்துபவர்களை அல்லவா கேள்வி கேட்டு இருக்க வேண்டும் .உங்களுக்கும் எருத்துக்கட்டுக ்கும் ,சல்லிக்கட்டுக் கும் என்ன சம்பந்தம் என்று ..அப்பொழுது வெளிவரும் பத்துலே உங்களுக்கு உண்மையை உணர்த்திவிடும் . .
Report to administrator
0 #3 sakthigautham 2017-01-22 03:16
இன்னிக்கு புதுசா மொளச்ச போராட்டக்காரனெல ்லாம் கேக்குறான், “மாட்ட வெட்டி திங்குறீங்க, நாங்க மாட்ட அடக்குனா ஏன் எதிர்க்குறீங்க” என்று....டேய், மாட்ட வெட்டி திண்ணா மாடு மட்டும்தாண்டா சாகுது, காளையை அடக்குனா மனுசனும் சேந்து சாகுறாண்டா..... அதான, உனக்கு என்னைக்கு மனுஷ உயிரப்பத்தி கவலை இருந்திருக்கு!! வீர விளையாட்டுன்னு சொல்லிக்கிட்டு உனக்கு மாட்டையும் மனுஷனையும் அடக்கணும், ரெண்டு மேலயும் ஒரே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தனும், அவளோதானே? அத நேரா சொல்லீட்டு போகலாம்ல? இதுக்கு எதுக்குடா தமிழர் வீரம் கலாச்சாரம் பண்பாடு உரிமை மாடு காளை காதல்ன்னு வெட்டியா சீன் போடுறீங்க?
Report to administrator
0 #4 Ramu Ramamoorthy 2017-03-31 21:04
ஆமாம் தவசங்கர பாணடியண் சொலவது உண்மைதான். ஏனென்ரால் கள்ளர்கள் தொலிலே திருடுவதுதான் அவர்கள் பொழுது போக்குவதர்க்காக த்தான் இந்த விளையாட்டை விளையாடினர். அவர்களுக்கும் ஜல்லிக்கட்டிற்க ்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.... ஐல்லிக்ட்டு என்பது உழவர்களின் விளையாட்டு. அதனால் விவசாயத்திற்கும ் அவாஅகளுக்கும் சம்மந்தம் இல்லை.. ஜல்லிக்கட்டின் வரலாற்றுப்பெரும ை பள்ளர்களையே சாரும் என்பதை என் நெஞ்சம் நிமிர்த்தி பெருமையடைகிறேன் .
Report to administrator

Add comment


Security code
Refresh