கேரளாவுக்கும் பார்ப்பன பிஜேபிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். சில மாதங்களுக்கு முன்னால் மோடி கேரளாவில் பழங்குடியின சமூகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியாவைவிட மோசமாக உள்ளது என தனது கண்டுபிடிப்பை(!) வெளியிட, ஒட்டுமொத்த கேரள மக்களும் மோடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து # po mone modi(Go off modi) என்ற ஹஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் மோடியை சகட்டு மேனிக்கு திட்டி பதிவிட்டார்கள். அந்த எச்சிலின் ஈரம் காய்வதற்குள் மோடியின் கூலிப்படைத் தலைவன் பிரபல தாதா அமித்ஷா, கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையைப் பற்றி தனது ஊத்தவாயைத் திறந்து கருத்து சொல்ல, இப்போது மீண்டும் கேரள மக்கள் # pomoneshaji என்ற ஹஷ்டேக்கில் இந்த நாறவாய்ப் பயலை கழுவி கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

amit shah 190கேரள மன்னன் மாவலியின் நினைவாக கேரள மக்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஓணம் பண்டிகையின் அடிப்படையில் புராணக்கதை ஒன்றும் உள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரியும் என்றாலும், ஒரு முறை அந்தக் கதையை சுருக்கமாகப் பார்த்தோம் என்றால் தான், ஏன் இந்த நாறவாயனை கேரள மக்கள் இவ்வளவு கேவலமாகத் திட்டுகின்றார்கள் என்று தெரியும். கேரளாவை ஆண்டுவந்த மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன், கேட்பவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் ஒரு மாதிரியான ‘சோசலிச அரசை’ அன்றே கேரளாவில் நடத்தி வந்தான். நமக்குத்தான் தெரியுமே, அதுமாதிரி எல்லாம் யாராவது ஆட்சி செய்தால் உடனே சதிசெய்து அவனை வீழ்த்துவதுதான் பார்ப்பன கடவுள்களின் வேலை என்று. அப்படித்தான் பாவம் அந்த மாவலி சக்கரவர்த்தியை ஒழித்துக் கட்ட விஷ்ணு, வாமன அவதரம் எடுத்துவந்து, அந்த மாவலியிடம் மூன்றடி மண்ணைக் கேட்கின்றான். கேவலம் மூன்றடி மண்தானே என்று பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் ஒப்புக்கொண்ட அந்த நல்ல மனிதனை இந்த வாமனன் தன்னுடைய நயவஞ்சகத்தால் காலால் மிதித்துக் கொலை செய்திருக்கின்றான். நந்தனாரையும் வள்ளலாரையும் கொலைசெய்த கதையை தமிழ் நாட்டில் உள்ள சுயமரியாதை உள்ள மக்கள் அறிவார்கள். அதே போன்றதுதான் இந்தப் படுகொலையும்.

மாவலி செய்த ஒரே பாவம் அவன் அசுர குலத்தில் பிறந்ததுதான். அதனால் தான் எங்கே அவன் புகழ் பெற்று விடுவானோ என்ற பயத்தில் இந்திரன், பிரம்மா, தேவர்கள் போன்ற பார்ப்பனக் கும்பல்கள் ஒன்றாக சேர்ந்து விஷ்ணுவிடம் முறையிட தலைமைப் பார்ப்பனான அந்த உச்சிக்குடுமி பார்ப்பனன் வாமன வேடமிட்டுவந்து மாவலி சக்கரவர்த்தியைக் கொல்கின்றான்.

அப்படி படுகொலை செய்யப்பட்ட அந்த மன்னன், தான் இறக்கும் தருவாயில் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் "நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்" என்று அந்தக் கொலைகார பாவியிடம் வேண்டுகோள் விடுத்தான். நயவஞ்சகப் பார்ப்பானும் அவ்வாறே வரம் தந்தான். இதுதான் பார்ப்பான் வில்லன் ஆன கதை.

இந்தக் கதை கேரள மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் கேரள மக்கள் தங்கள் நாட்டு மன்னனை சதிசெய்து கொன்ற வாமனனைக் கும்பிடாமல் மாவலி சக்கரவர்த்தியைக் கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை நாள் அன்று அவனது புகழை நினைவு கூறுகின்றனர். ஆனால் இது எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பார்ப்பன பெருச்சாளிகளின் கண்ணை ரொம்ப நாட்களாக உறுத்திக் கொண்டே இருந்திருக்கின்றது. பார்ப்பன வாண்டுகள் ஆட்சி செய்யும் நாட்டில் ஓர் அசுரனுக்கு விழா எடுப்பதா என உச்சிக் குடுமி வியர்த்துக் கொட்ட யோசித்து இருக்கின்றார்கள். எப்படி இந்திரன், பிரம்மன், தேவர்கள் போன்ற வெட்டி சோறு திங்கும் தொந்திக்கூட்டத்தின் வருத்தத்தைப் போக்க தங்கள் தலைவன் விஷ்ணுவிடம் முறையிட்டார்களோ, அதே போல கேரள ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் பார்ப்பன அடிப்பொடிகளும் இந்த வரலாற்றை மாற்றி எழுதச் சொல்லி, அமித்ஷாவிடம் முறையிட்டு இருக்கின்றார்கள்.

இதை அவசர வழக்காக கையில் எடுத்து பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கமான்ஸை தட்டிவிட்டிருக்கின்றான். ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தியாக கொண்டாட வேண்டும் என கருத்துச் சொல்லி இருக்கின்றான். ஏற்கெனவே கேரளாவில் பி.ஜே.பி-இன் வலிமை என்பது தமிழக பி.ஜே.பியை விட படுமோசம். எப்படி தமிழக மக்கள் இங்கு பி.ஜே.பியை ஐந்து பைசாவுக்குத் தேறாத டூபாக்கூர் கட்சி என்று பார்க்கின்றார்களோ, அதே போலத்தான் கேரளாவிலும் அதன் நிலைமை. அங்கே சீண்டுவார் யாருமின்றி ஒரு குஷ்ட ரோகியைப் பார்ப்பது போலத்தான் பி.ஜே.பியை பார்க்கின்றனர். எதையாவது செய்து ஒரு சீட்டாவது வரமாட்டோமா என்ற அதன் அல்பத்தனமான கனவுதான் அதை இப்படி ஏடாகூடமாக செய்ய வைக்கின்றது. ஆனால் அதன் ஒட்டுமொத்த பலன் என்னவென்று பார்த்தால் ‘போ மோனே மோடி’ தான்.

கேரள மக்கள் சரியான பதிலடி கொடுத்து, மோடியையும், இப்போது அமித்ஷாவையும் அவமானப்படுத்தி அனுப்பி இருக்கின்றார்கள். அதனால் தமிழக மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு மானங்கெட்ட பி.ஜே.பி கும்பல் ஊரை ஏமாற்றி சுற்றிக்கொண்டு இருக்கின்றது. எனவே இந்த வரலாற்றுப் புரட்டர்களை எப்படி கேரள மக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கின்றார்களோ, அதே போல நாமும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும். ஏற்கெனவே பூணூல் அறுப்பு, உச்சிக் குடுமி அறுப்பு போன்றவற்றை செய்து மற்ற மாநிலங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பதால் அது ஒன்றும் சிரமமான காரியமாக இருக்கும் என்று தெரியவில்லை.

- செ.கார்கி

Pin It