ஆதிகாலச் சமூகம் சீர்கேடுகள் நிறைந்ததாக இருந்தது. அச்சீர்கேடுகள் சாதி - மத - இன - பால் ஆகியவற்றின் அடிப்படையில் உருவெடுத்தன. உலக நாடுகளில், பெரும்பான்மையாக அது இனத்தின் பெயரால் நடக்கலாயின. இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை, மதக் கோட்பாடுகளே மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டமைப்பதில் விஞ்சி நின்றது. அவற்றில் இந்து மதமே, முதன்மைப் பாத்திரம் வகிக்கிறது. இந்தியக் கட்டமைப்பும், இந்துத்துவ தத்துவமும் ஒன்றையொன்று சார்ந்த கருதுகோள்களே.

   ambedkar 267உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனித சமூகத்தை நேர் செய்வதற்கே தோன்றின என்று அழுத்தமாகக் கூறிவருகின்றன. இந்துமதமும் அதையே தான் வலியுறுத்தி வருகின்றது. இந்துமதக் கட்டமைப்பின் அடிப்படை நாதமாக சாதியமும், புராண - இதிகாசங்களும் கோலோச்சி வருகின்றன. அக்கொடிய சாதியமே சமத்துவத்தைத் தகர்த்;தெறியும் வெடிமருந்தாக இன்றும் வினையாற்றி வருகிறது. சாதியம,; ஏணிப்படி போன்ற படிநிலை அடுக்குகளைக் தாங்கி நிற்கிறது. அந்த ஏணிப்படியின் உச்சத்தில், நின்று கொண்டு, பார்ப்பனர்கள் சுரண்டிக் கொளுத்து வருகிறார்கள். உழைக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் ஏணிப்படியின் அடிப்படியாக இருந்து கொண்டு, உழைத்துத் தேய்ந்து, இதர “மேல்சாதி”யினரிடம் தங்கள் உரிமைகளை இழந்து வருகிறார்கள். இந்துமதம், சாதியக் கட்டமைப்பில் தனக்குக் கீழ்நிலையிலுள்ள சாதியினரை ஒடுக்குகின்ற அதீத வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதைப் பயன்படுத்தித்தான் சாதியவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையைத் திணித்து வருகிறார்கள். சாதியச் சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு துன்பத்திற்கும் - ஒடுக்குமுறைக்கும் ஆளாகிறார்களோ - அதேபோல, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்துமதமே அதற்கும் வழிவகை செய்து, ஆண்களுக்கு அத்தகைய அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.

   பாலினப்பாகுபாட்டின் அடிப்படையில் தோன்றிய ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கால் ஆட்கொள்ளப்பட்டு பெண்கள், தங்கள் உரிமைகளை இழந்தார்கள். பெரும்பான்மை உழைக்கும் மக்கள், மதங்கள் விதைத்த மூடத்தனத்தில் சிக்குண்டு தங்கள் மதியை இழந்தார்கள்.

   இவ்வாறாக அறிவியல் அரும்பாத அன்றைய காலத்தில் நடந்தேறிய இத்தகைய சமூகச் சீரழிவுகள் இன்றும் தொடருவது அறிவியலுக்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலே.

           அன்று தோன்றிய இத்தகைய கேடூக்கிகளுக்கெல்லாம் காரணம் மேல்தட்டு வர்க்கத்து ஆண்டைகளிடம் குடியேறிய இரண்டு ஆதிக்கங்களே மூலகாரணிகள் எனலாம். ஒன்று சாதி ஆதிக்கம் - பிறிதொன்று ஆணாதிக்கம்;;. இவ்விரண்டு ஆதிக்கத்திற்கும் இந்துமதமே அரணமைத்துக் கொடுத்தது.

  இவ்வாறாக மதமும், சாதியமும் தோன்றி மனித சமூகத்தையும், மகத்தான பெண்ணினத்தையும் கொடுமைப்படுத்திக் கோலோச்சிய அந்தக் காலத்திலேயே சாதியத்திற்கு எதிராகவும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் கருத்துக்களங்களும், கருவிக்களங்களும் தலைகாட்டத் தொடங்கின.

   இந்துமதம் விதைத்த சாதியாதிக்கம், பெண்ணடிமைத்தனம், மூடச்சடங்குகள் முதலான கட்டமைப்புகளுக்கு எதிராகவும், சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களைக் கட்டமைத்ததிலும், கருத்துப் பரப்பல் செய்ததிலும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு பெரும்பங்குண்டு. அம்பேத்கரின் இத்தகைய செயல்கள் இந்துமதவாதிகளை ஆட்டம் காணச் செய்தது, இந்துமதத்தால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த பலதரப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலையும், புது உந்ததலையும் தந்தது.

  பார்ப்பனிய - இந்துமத - சாதிய சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக, புரட்சியாளர் அம்பேத்கர் பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூகசீர்திருத்த முன்னோடிகள் பலர் தோன்றி, அத்தகைய சீர்கேட்டிற்கெதிராகப் போராடியிருக்கிறார்கள்.

  இந்துமதத்தின் மூலவேரை, அதன் அடியாழம் வரை சென்று, ஆணிவேரைப் பிடுங்கி எறியும் அறுவைச் சிகிச்சையில் அம்பேத்கரது களப்பணி பலதப்பட்ட மக்களாhலும் அங்கீகரிக்கும்படியாகவும், பாராட்டும்படியாகவும் இருந்தது. அவர் தீண்டாமை பற்றிக் குறிப்பிடும் போது, “தீண்டாமை என்பது, சாதிவெறியின் ஒரு வளர்ந்த நிலை. எனவே, சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பது என்பது நடக்காத ஒன்று” என்று அறுதியிட்டுக் கூறினார்.

  புரட்சியாளர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை முன்னெடுத்துக் செல்லும்போது காந்தி போன்றவர்களால் தொடுக்கப்பட்ட பல்வேறு தடைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அக்காலத்தில் மக்களால் மதிக்கக்கூடிய பெருந்தலைவராக விளங்கிய காந்தியார், “தீண்டாமை தனது முடிவுகாலத்தை எட்டிவிட்டது” என்று கற்பனை வாதம் செய்தார். இன்றும் தொடரும் தீண்டாமைக் கொடுமையை, காந்தியவாதிகள் எப்படிதான் சீரணித்துக் கொண்டு வாழ்கிறார்களோ தெரியவில்லை! காந்தியாரின் இவ்வகையான தவறான கருத்திற்குக் காரணம், அவரைப்பீடித்திருந்த இந்துமத மேல்சாதி மோகமே! இதையே அம்பேத்கா,; “காந்தி உயர்சாதிக்காக பிரசங்கிக்கிறார்” என்றார்.

   மேலும், பார்ப்பனர்கள் உருவாக்கிய அறிவுக்கொவ்வாத புராணப்புழுகுகளை அழிக்க வேண்டும் என்பதிலும் மாறாத உறுதியுடன் அம்பேத்கர் இருந்தார். அதன்படியே குளத்துக்கொரு நீதி பேசும் மனு அதர்மதத்தை நெருப்பிட்டுக் கொழுத்தி அதனை மக்கள் போராட்டமாக்கியுள்ளார். 1927-இல் மகாத் என்ற இடத்தில் நடந்தது.

  பகவத்கீதைக்கு எதிரான கருத்துச் சொன்னாலே, அதனைச் சமூகக் குற்றமாகக் கருதும் அடாவடியானதொரு காலச்சூழலில், சாதியத்தைப் பாதுகாக்கும் - நால்வருணக் கோட்பாட்டிற்கு நியாயம் கற்பிக்கும் பகவத்கீதையை, “முட்டாள்களின் ஊழல்” என்று கூறி இந்துமதவாதிகளுக்குச் சிம்மசொப்பனமாய் விளங்கினார்.

  1927 - இல், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதை மறுக்கும் மனு தர்மத்தை தீயிட்டுக் கொழுத்தினார். அரசியல் சுதந்திரத்தைவிட சமூக சீர்திருத்தத்தையே மிகமுக்கியமெனக் கருதினார் அம்பேத்கர். அவரது சமூக சீர்திருத்த போராட்டங்களில் கோவில் நுழைவுப் போராட்டமும் - குடிநீர் எடுப்பு மறுப்புக்கு எதிரான போராட்டமும் அடங்கும். 1927-இல் நடந்த “சவுதார் குளப்” போராட்டமும், “நாசிக்” கோவில் நுழைவுப் போராட்டமும் அம்பேத்கரின் சமூக சீர்திருத்தப்போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க பேரெழுச்சிகளாகும்.

   பெண்களுக்கான கல்வி முற்றலுமாக மறுக்கப்பட்ட காலத்தில், புரட்சியாளர் அம்பேத்கர், “பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்” என்றார். “பெண்கள் தங்கள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிற மூடநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை, பயம் ஆகியவற்றைக் களைத்தெறிய வேண்டுமானால் அவர்கள் அவசியம் கல்வி பயில வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

  மேலும், “கல்வி என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் தான் பெருமளவில் போதிக்கப்படுகிறது. அறிவுக்கல்வியைப் புறக்கணித்து, அறியாமைக்கு நிலைக்கலனாகவுள்ள மதம் சார்ந்த கல்வியை இந்த நாட்டை விட்டே ஒழிந்தாக வேண்டும் என்று முழக்கமிட்டார்.

  பெண்களுக்கு இழைக்கப்பட்ட ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறுதல் என்னும் சமூகக்கேடு பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிடும் போது, “அகமணமுறையைக் கட்டிக்காப்பதற்காகவே, ‘உடன்கட்டை ஏறுதல்’ போன்ற கொடுமைகள் பெண்களின் மேல் திணிக்கப்படுகின்றன” என்றார். எனவே சாதியை ஒழிக்க முதலில் அகமணமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று உறுதிபடக் கூறினார்.

  இந்திய சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக, மக்களை அணிதிரட்டி நெஞ்சுறுதிமிக்க போராட்டக்களங்களைக் கட்டடைத்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு முன்னரே பல சீர்திருத்தவாதிகள் தோன்றி இம்மண்ணில் சமத்துவம் தழைக்க குரலெழுப்பியிருக்கிறார்கள் அவ்வகையில் எழுந்த முதல் குரலுக்கான அகவை பல நூறாண்டுகள் ஆகும்.

  மனித சமூகம், என்றைக்கு பிறப்பின் அடிப்படையின் பேதங்களைச் சுமந்ததோ அன்றே அப்பேதங்களைத் தகர்த்தெறிந்து, சீர்த்திருத்தத்தை இயற்றுவதற்கான போராட்டங்களும் அரங்கேறத் தொடங்கின.

  கி.மு.6-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த புத்தரின் குரலே, பார்ப்பனிய இந்துமத மூடத்தனத்திற்கு எதிரான முதற்குரலாக இருக்கக்கூடும். புத்தர் இந்துமதத்தின் சாதிமுறையை வன்மையாக எதிர்த்தார். “மனிதர்கள் ஏழை - பணக்காரர் என்ற வேறுகளைக் கடந்து, சமத்துவமாக வாழ வேண்டும்” என்று பொதுவுடைமைச் சமூகம் படைக்க விரும்பினார். மக்களை மூடக்குழியில் தள்ளும் ‘நரகம்’, ‘மோட்சம்’ போன்ற நம்பிக்கையை அறிவே வெறுத்தார். ஆணாதிக்கத்தைக் கண்டு கொதித்தார். புத்தரின் காலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டு என அகழ்வாய்வு முடிவுகள் கூறுகின்றன.

  கி.மு.7-ஆம் நூற்றாண்டில் எழுந்த சாங்கியமும், கி.மு.6-ஆம் நூற்றாண்டில் எழுந்த பௌத்தமும் சாதியத்தின் கொடூரத்தனங்களுக்கு எதிராக வலிமையான குரலை முன்மொழிந்தன.

  இந்துத்துவ சாதிய கட்டமைப்பின் அடிப்படையில் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு, தம்மை, தமக்குக் கீழான சாதியினரை அடக்கி “ஆளவந்தோர்”; என்று ஆணவமாகப் பேசித் திரிந்தோரை, சித்தர்கள் கடுமையாகச் சாடினார். சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர், “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்! சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்” என்று சாதிவெறியர்களுக்கு அன்றே எச்சரிக்கை மணியடித்தார். சித்தர்கள் கி.பி.10 - ஆம் நூற்றாண்டு தொடங்கி சுமார் 700 ஆண்டுகள் இம்மண்ணில் கிளர்ச்சி செய்ததாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

    “சித்தர்கள் என்போர் பதினெட்டுப்பேர் என்ற தவறான கணக்கு மக்கள் மனதில் பதிந்து போனது. உண்மையில் நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்” என்று தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார்.

   14-ஆம் நூற்றாண்டில் “சமூகச்சீர்திருத்தம்”; காணப் போராடிய கபீர்தாசா,; “கடவுளை அடைய தாங்கள்தான் முகவர்கள்” என்று அழைத்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் - புரோகிதர் போன்ற இடைத்தரகர்கள்; தேவையில்லை” என்றார். ஒடுக்கப்பட்ட மக்கள் இச்சமூக அமைப்பில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் அம்மக்களிடத்தே சென்று நம்பிக்கைத் ஒளியினை ஊட்டினார்.

    “புரோகிதங்கள் செல்லும் பொய்களை நம்பி ஏமாறக் கூடாது” என்றுரைத்த கபீர்தாசர், எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், சந்தேகப்படும் வழக்கத்தையும், துணிச்சாலான எதிர்க்கோள்வி கேட்கும் பண்பையும் கொண்டவராக விளங்கினார். பொதுவுடமை மூலவர் காரல்மார்க்ஸ் சொன்ன, “எல்லாவற்றையும் சந்தேகி” என்ற கருத்துரை இங்கு நம் நினைவுக்கு வருகிறது.

  12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதியை ஒழித்து சமத்துவம் தழைக்க கிளம்பிய பசவர்கள்; இந்துத்துவ சாதியத்தை ஒழிக்கவும், அர்த்தமற்ற மூடச்சடங்குகளைக் கைவிடும்படியும் மக்களிடத்தே அறிவுறுத்தி சீர்;திருத்தப் பணியை மேற்கொண்டது. மூடத்தனத்தின் பெயரால், சமூகத்தில் நிலவிய அநீதிகளிலிருந்து மக்களை காப்பாற்றி நம்பிக்கையூட்டியது. விதவை மறுமணத்தை ஆதரித்தது, குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடியது. மதுதரும் போதையில் இருந்து மக்களைக் காக்க எண்ணிய பசவர் இயக்கம், மதுவை அருந்தக்கூடாது என்பதைக் கட்டாயமாக்கியது. புலால் உண்ணுகிற காரணத்தால் மக்களை ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதும் நிலையினை அறிந்த பசவர் இயக்கம், “புலால் உண்ணுதலைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. கர்நாடக மண்ணில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பசவர் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.

வள்ளலாரும் சமரச சன்மார்க்க இயக்கமும்:

   19-ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த சமூகச்சிந்தனையை எளியமுறையில் மக்களிடத்தே விதைத்த வள்ளலார் வாழ்ந்த காலம் வெறும் 51 ஆண்டுகளே! அவர் இந்துமதத்தில் மலிந்து கிடந்த மூடத்தனத்தை மக்களிடத்தே சுட்டிக்காட்டி சீர்திருத்தங்கள்; மேற்கொண்டார். அவரது காலத்தில் நிலவிய மூடச்சடங்குகளை அவரைப் போல் சாடியவர் எவறுமில்லை எனலாம். அவரது காலத்தில் மதங்கள் தங்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு மனிதர்களைப் பிரித்தாளும் செயல்களில் ஈடுபட்டன. இதனை கண்டுவெதும்பிய வள்ளலாh,; “மதங்களை அழித்தாலன்றி உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றுபடச் சாத்தியமில்லை” என்று சிங்கம் போல் முழங்கினார்;. மேலும் -

    “சாதியலேமதங்களிலே சமயநெறிகளிலே         

சார்ந்திருந்த மதங்களிலே கோத்திரச்சண்டையிலே

  ஆதியிலே அபிமானித்துஅலைகின்ற உலகில்

  ஏலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” -

என சாதி பெருமை பேசி அதனடிப்படையில் மோதிக் கொள்ளும் மூடர்களைப் பார்த்து விலாசுகிறார்.

“அன்பே கடவுள்” என்றார். ‘அன்பு என்னும் நட்பாயுதத்தின் துணை கொண்டு, உயிர்களனைத்தையும் தன்வயப்படுத்த முடியும்” என்றார். அதற்காக, சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தைத் தோன்றுவித்து, சாதி, மதம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்து மூடத்தனங்களையும் புறம்தள்ளினார். பெண்களைப் பாலினப்பாகுபடுத்தி, இயற்கையாக நிகழும் உடல் மாற்றங்களை வைத்து ஒதுக்கித் தள்ளக் கூடாது என்றும், பெண்களுக்கு கல்வியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

  உயிர்கள் அனைத்தையும் எவ்வித வேறுப்பாட்டின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டது, சமமாகப் பாவிக்கும் பண்பே அவரது சன்மார்க்க இயக்கத்திற்கான தலையாய குறிக்கோளாக இருந்தது. அதில் சாதி, மத பேதத்திற்கு கிஞ்சின்றும் இடம் கிடையாது.

   சாதி சமயத்திற்கான குப்பைகளை எவ்வித தயவு தாட்சன்யமின்றித் தூக்கி எறிந்தார். “புராணங்களெல்லாம் இந்துத்துவத்தின் பொய்யான தத்துவங்களை விளக்க, மனித சமூகத்தின் புகுந்த கற்பனை கதைகளே” என்றார்.

  இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் எப்படியாவது பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் கட்சி தலைவரிடத்து கூணிக்குறுகி வழிபடுவதைப் பார்த்து தமிழகமே வெட்கி நிற்கிறது. சில மனிதர்களின் இம்மாதிரியான போக்கை வள்ளலார் அன்றே எதிர்த்திருக்கிறார்.

   அவர் வெறும் உபதேசங்களோடு தன் சீர்திருத்ததை முடித்துக் கொள்ளவில்லை. தனது உபதேசங்களின் படியே சாதி மத வேறுபாடுகளை முற்றிலும் கடந்தவராக வாழ்ந்து நிலைபெற்றாh.;

   இன்றும் கூட கல்வி நிறுவனங்களில் சாதிவெறிகளால் சாதி ஆதிக்கம் வெளிப்படுவதைக் காண்கிறோம். அவரது காலத்தில் கல்விக் கூடங்களிலே நடந்த உயர்சாதி ஆணவப் போக்கை கண்டு வருந்தினார்.

  தெய்வங்களுக்கு மனிதர்களைப் பலி கொடுக்கும் “நரபலி” போன்ற கொடிய பழக்கத்தை எதிர்த்து, தொடர்ந்து முயற்சித்து, வெற்றியும் கண்டவர் வள்ளலார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதைத் தடுக்கும்படியான சாதிவெறி பிடித்த ‘மனநோயாளிகள்’ கூட்டம் அக்காலத்திலும் இருந்தது. இதனைக் கண்டு பதறிய வள்ளலார், அனைத்து சமூக மக்களும் வழிபடும்படியான “சத்திய ஞானசாலக் கோவிலை”க் கட்டி சகோதரத்துவம் மலர வழிபடைத்தார். குறிப்பாக, தாம் வாழ்ந்த காலத்தில் சீர்திருத்தத்திற்கு போதித்த மற்ற அனைத்துச்சமூக சீர்திருத்தவாதிகளையும் விட, துடிப்புமிக்கவராகவே வள்ளலார் விளங்கினார் என்றால், அது மிகையில்லை.

பிரம்ம சமாசமும் பிற சமாசங்களும்:

   தொடக்கத்தில் வங்காளத்தில் கால்பதித்த இச்சமூக சீர்திருத்த இயக்கம், பின்னாளில், இந்தியக்துணைக்கண்டம் முழுக்கப் பரவும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்று விளங்கியது.

    ‘இராசாராம் மோகன்ராய்’ என்பவரால் 1828-இல் நிறுவப்பட்ட ‘பிரம்ம சமாசம்’ அக்காலத்தில் இருந்த - சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கை உள்ளிட்ட ஏனைய தீமைக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. யார் வேண்டுமானாலும் இவ்வியக்கத்தில் உறுப்பினராகலாம் என்ற நிலை இருந்தது. இவ்வியக்கம் ஒருபோதும் மதப்பகைமை பாராட்டியது இல்லை என்று, வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் நடைமுறையில் இருந்த ‘உடன்கட்டை ஏறுதல’; என்றும் கொடிய பழக்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தது எனலாம்.

  பிரம்ம சமாசம், வங்காள மண்ணில் புரையோடிப்போயிருந்த சாதியத்தால் நிலவிய ஒடுக்குமுறைகளைக் களைந்து மனிதம் தளைக்கப் போராடியது. இந்திய சமூகத்தில், ஆண்டாண்டுகாலமாய் பாலினத்தின் பெயரால் மறுக்கப்பட்ட பெண்களுக்கான கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, சமவேலை வாய்ப்பு, சம ஊதியம் போன்ற உரிமைகளை பெற்றுத் தர பிரம்ம சமாசம் குரலெழுப்பி இருக்கிறது. சமூக சீர்திருத்தத்தை நோக்கிப் பயணப்பட்டுத் தொடங்கிய பிரம்ம சமாசம் பின்னாளில் பலவாறாகப் பிளவடைந்தது வரலாற்றின் சோகம்.

   பிரம்ம சமாசிகளின் அரசியல் ஈடுபாட்டால் சமூக சீர்திருத்த செயல்கள் காணமல் போய்க்கொண்டிருந்த காலத்திலேயே, தயானந்தரால் 1875-இல் ‘ஆரிய சமாசம்’ என்ற சீர்தீருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் உத்திரப்பிரதேசத்திலும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. பிரம்ம சமாசத்தைப் போன்றே இவ்வியக்கமும் பால்யவிவாகத்தைக் கண்டித்ததோடு, விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று வாதித்தது. இவ்வாறு பல இயக்கங்களும் சீர்திருத்தக் கொள்கைகளைப் பேசினாலும,; “வேதகால வாழ்க்கைக்குத் திரும்பச் செல்வது சிறப்பு” என்று சிலாகித்து வந்தன. மேலும் இந்துமதத்தை புதுப்பித்து அதற்குத் தொண்டாற்றுவதே அவ்வியக்கத்தின் தலையாயக் கடமையாக இருந்து வந்தது. காந்தியார் போலவே, இந்து மதத்திற்குக்; கிஞ்சின்றும் சேதம் ஏற்படாமல், சாதியை ஒழித்து விட வேண்டும் என்று மிகவும் அபத்தமாகவும், “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்கிற நிலைபாட்டுடன்தான் இவ்விரு இயக்கங்களும் செயல்பட்டன. வேதகாலத்தை உள்ளடக்கிய சமூகத்தைச் சமைப்பதே இவ்வியக்கங்களின் கொள்கையாகக் கருக்கொண்டது. அதனாலேயே அவ்வியக்கம் மேல்த்தட்டு மக்களைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்துவது என்ற சிந்தனையை நோக்கிச் செல்லவில்லை. மேலும் சாதி ஒழிப்பு தொடர்பான திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லை.

  19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயலாற்றத் தொடங்கிய “சத்ய மகிம தர்ம இயக்கம்”, ஒரிசா, ஆந்திரா, வங்காளம், அசாம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த பட்டியலின, பழங்குடியான மக்களிடையே செல்வாக்கு பெற்று சிறப்புடன் செயல்பட்டது. இவ்வியக்கம் வழிப்பாட்டையும், பாhப்;பணிய மூடச்சடங்குகளையும், சாதிமுறைகளையும் கடுமையாக எதிர்த்தது.

   அதேபோல 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹென்றி ஓல்காட், எலினி பெட்ரோவ்னா, பிளாவெட்ஸ்கி என்ற இரசியா மங்கைகளால் இணைத்து தொடங்கப்பட்ட பிரம்ம ஞானசபை, உலக சகோதரத்துவத்தை நோக்காய் கொண்டு செயல்பட்டது. கிறித்தவம் அதைத் தருவாய மக்களின் உணர்வைப் பிரிந்து அதற்கேன்றவாறு சமூகப் பணியாற்றவில்லை என்று கருதி, அவ்வெற்றிடத்தை நிரப்பும் வகையில்தான் அவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இவ்வியக்கத்தார் தயானந்தாரைச் சந்தித்து, ஆரிய சமாசத்துடன் தாங்கள் இணைந்து செயல்படுவதாகக் கூறியதால், தாயானந்தர் அதை ஏற்றுக் கொண்டார். அவர்களின் இணைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. பிரம்ம ஞான சபையின் பௌத்த கருத்துக்களை ஆரிய சமாசத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. 1907-இல் பிரம்மஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான ஓல்காட்டின் மறைவுக்குப் பிறகு அன்னிபெசன்ட் அதன் தலைவரானார். அவர் பிரம்மஞான சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகளை விதித்தார். சாதி வேறுபாடு பார்க்க மாட்டேன், பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணம் செய்து வைக்க மாட்டேன், விதவை மறுமணத்தை ஆதரிப்பேன் என்பன முக்கிய விதிகளாகும்.

 இவ்வியக்கமே சமூகத்தின் கடைநிலையில் வாழும் ஒடுக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் 1894 - இல் அடையாறில் முதல்முதலில், ஒரு பறையர் பள்ளியைத் தொடங்கியது. நான்காம் வகுப்பு வரையிலான அப்பள்ளியில், 55 பறையர் சமூகக் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. 1898-இல் மற்றொரு பறையர் பள்ளியும், 1899- இல் தாமோதர் மாவ்லாங்கள் பெயரில் ஒரு பள்ளியும், 1902-இல் திருவள்ளுவர் பெயரில் ஒரு பள்ளியும் தொடங்கப்பட்டன. இது சமூக சீர்திருத்த வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய நிகழ்வுகளாகும்.

வைகுந்தசாமி இயக்கமும் அய்யாவழியும்:

  சாதிக் கொடுமைகளால் நாடார் சமூக மக்கள் அடைந்த துன்பதுயரங்களை வார்த்தைகளால் வடிக்க இயலாது. தற்போது வள்ளுவர் வானுயர நிமிர்ந்து நிற்கும் கன்னியாகுமரிப்பகுதி, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தோடு இணைக்கப்பட்டதாக இருந்தது. இதுவே, உயர்சாதி மலையாளிகள் அவர்கள் மீது சாதிவெறியாட்டம் நடந்த தக்க வாய்ப்பாகவும் மாறிப்போனது. ஒரு நாயர் இருக்குமிடத்திலிருந்து 13 எட்டுகளுக்கு அப்பால்தான் நாடார்கள் நிற்க வேண்டும். இது நாடார் சமூக மக்களின் மீதான வன்கொடுமை மட்டுமல்ல, மலையாளிகள் தமிழர்களின் மீது நடத்திய இனவெறித் தாக்குதல் ஆகும்.

   மேலும் நாடார் சமூக மக்களுக்கு அக்காலத்தில் நீர் எடுக்கவும், மாடி வீடுகட்டிக் குடியேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடார் சமூகப் பெண்கள் தன் மார்பை மேலாடை கொண்டு மறைக்கக் கூடாது. பெண்களின் மார்பகங்களின் அளவிற்கு ஏற்ப வரிவிதிக்கப்படும் என்ற குரூர ஆணாதிக்க சாதிவெறிச் சிந்தனையுடன் செயல்பட்டது மலையாளி இன சாதிவெறிக் கூட்டம். இவ்வாறான சாதிவெறிக் கொடுமைகள் உச்சகட்டத்தில் கோலோச்சிய காலத்தில் வைகுந்தசாமி இயக்கம் செயல்படத் தொடங்கியது. மார்பை மறைக்கும் வகையிலான ஆடையை அணியும் உரிமை வேண்டி வைகுந்தர் அவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘தோல் சிலை போராட்டம்’ வரலாற்றுச் சிறப்புமிக்கது. வைகுந்தர் அவர்கள் சாதி மத வேறுபாடுகளுக்கு எதிராக பரப்பரையில் ஈடுபட்டார். அதற்காகவே “சமத்துவ நிலையம்”என்ற அமைப்பையும் தோற்றுவித்தார்.

 “ஒவ்வொரு சாதி மக்களும் தனித்தனி கிணறுகளில் தண்ணீர் எடுத்துப் பருக வேண்டும்” என்ற தீண்டாமை, திருவாங்கூர் சமஸ்தான பகுதிகளில் நிலவியது. அதனை முறியடிக்க, மதத்தால் பிளவுற்றுக்கிடந்த இந்து நாடார்களையும்,கிறித்துவ நாடார்களையும் ஒன்றிணைந்து, “தமிழர்” என்கிற இன அச்சில் அணி சேர்ந்து மலையாள இனவாதிகளின் சாதிவெறிகளுக்கு எதிராகப் போராடினார். மேலும் அப்பகுதியில் வாழ்ந்த சாணார், பரவர், உள்ளிட்ட 18 சாதியினர் மேலாடை அணிய இருந்த தடையை தகர்த்தெறிய வைகுந்தர் போராடினார். “நிழல் தாங்கள்கள்” என்ற அமைப்பையும் ஏற்படுத்தினர். வைகுந்தரது தத்துவக் கோட்பாடுகள் “அய்யா வழி” மும்மையாகப் பின்பற்றப்படுகின்றன.

ஸ்ரீமான் நாராயண பரிபாலன சங்கம்:

  இச்சங்கம் 1903-ஆம் ஆண்டு நாராயண குருவால் நிறுவப்பட்டது. வைகுண்டர் இயக்கத்தைப் போலவே இவ்வியக்கம் கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் போராடியது. அது ஈழவ சமூக மக்களுக்கான சமூகவிடுதலைக்காவும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் பாடுபட்டது. இந்துக் கோவில்களில் ஈழவ சமூக மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட போது, தானே முன்னின்று ஈழவ மக்களுக்கென தனிக் கோவிலை அமைத்துக் கொடுத்து, அங்கே உயர்சாதியினராக வலாட்டிய நம்பூதிரிகளுக்கு அதிர்ச்சியளித்தன. மேலும், அக்கோவிலின் வாசலில், “சாதி பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாராண தலமிது” என்று எழுதி வைத்தார். நாராயண குரு பாரதியரால், “விழிப்பு முன்னோடி” என்ற வர்ணிக்கப்பட்ட வள்ளலாருக்கும் இவருக்கும் ஒற்றுமையைக் கண்டு அவரை, “கேரளத்து வள்ளலார்” என்ற அழைத்து பெருமை சேர்த்தார் போராசிரியர் மா.இளையபெருமாள். தீண்டப்படாத மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்ட அக்காலத்தில் நாராயண குழு வேதங்களையும், உபநிடதங்களையும் கற்றறிந்தது ஆதிக்கச்சாதி கும்பலுக்கு வியப்பைத்; தந்தது.

  குருட்டுத்தனமான பக்தியையும், மூடத்தனங்களையும் எதிர்த்துக் குரல் எழுப்பினார். தெய்வ வழிப்பாட்டில் நிகழ்ந்த உயிர்ப்பலிகளை நிறுத்தச் செய்தார். ஈழமக்கள் செய்து கொண்ட திருமண சீர்திருத்தம் “கல்வி அறிவு பெறுவதன் மூலமே ஒரு சமூகம் அடைய முடியும.; நமக்கு சமூக முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை இருக்குமானால் மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வாய்ப்பளிக்க வேண்டும். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கல்வியறிவு பெற வேண்டும். அவர்கள் ஒதுக்கலாகாது” என்றார் நாராயண குழு ஈழவ சமூக மக்கள் இன்று தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்றார், அதற்கு நாராயணகுரு அவர்களின் சமூகப் போராட்டமே காரணமாகும்.

அய்யங்காளியும் புலையர் புரட்சியும்:-

   “பைத்தியர்காரர்களின் கூடாரம்” என்று விவேகானந்தரால் வர்ணிக்கப்படும் அளவிற்கு, கேரளா சாதிவெறி நச்சுப் பூமியாக இருந்தது. அத்தகைய நச்சுப் பூமியில் வாழ்ந்த புலைவர் சமூக மக்கள், எத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறுவயதியிலேயே சாதியத்தின் கோரதாண்டவத்தினை அனுபவித்து உணர்ந்த அய்யங்காளி, சாதியின் பெயரால் நடந்த அத்தனை ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து தீர்மூடன் களம் கண்டார். அந்தக் கால கட்டத்தில் புலையர் சாதிமக்கள் பொதுசாலையில்கூட நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் உடலை மறைக்க நல்ல உடை, காலில் காலணி, தலைப்பாகை போன்ற அணிகலன்கள் கூட அணிய, அன்றாடம் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. முறையாகக் கல்வி பயிலாத அய்யங்காளி, சாதியில் சுரண்டப்படும் மக்களை ஒருங்கிணைக்க, தானே பாடல்கள் இயற்றி விழிப்புணர்வுண்டாக்கினார். இந்நிலையின்தான் தைக்காடு அய்யாவுசாமிகள் என்பவரிடம் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்கச் சொன்ற இடத்தில்தான் நாராயணகுருவின் தொடர்புண்டாயிற்று. பொதுச்சந்தையில் சென்று பொருட்களை வாங்க புலையர்களுக்கு இருந்த தடையை உடைத்து, சந்தையைப் பொதுமையாக்கினார்.

  1904-ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசு தனது ஆட்சிக்குட்பட்;ட மக்கள் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் புலையர் சமூக மக்கள் மண்ணின் மக்களாக இருந்தும,; அவர்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. அய்யங்காளி செய்த தொடர்முறையீட்டின் காரணமாக, திவாங்கூர் அரசர் புலையர் சாதிக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் வகையில் ஆணை பிறப்பித்தார்.

  புலையர் சாதிப் பெண்கள், தங்கள் மார்புகளைத் துணியால் மூடிக் கொள்ளும் உரிமையை உயர்சாதி இந்துக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தபடி இருந்தார்கள். அய்யங்காளியின் அஞ்சாத போராட்டத்தினால் பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெற்று தெருக்களில் நாணமின்றி நடமாடத் தொடங்கினார்கள். “ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையே உண்மையான விடுதலை” என்று உரத்து முழங்கிய அய்யங்காளி, புலையர் சமூகத்தின் விடுதலைக்கு மட்டுமல்ல அனைத்து சமூக மக்களுக்குமான போராட்டக் குறியீடாக விளங்கினார் என்றால் அது மிகையில்லை.

ஜோதிராவ் பூலேயும் சத்திய சோதக் சமாசமும்:

  மாராட்டிய மண் புரட்சியாளர்கள் பலரைப் ஈன்றெடுத்த மண். அத்தகைய பெருமையை வரலாறு நெடுகவே அது சுமந்து கொண்டு வருகிறது. அவர்களுள் முதன்மையானவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. அவர் தனது இளமைக்காலம் முதற்கொண்டே, சீர்திருத்த எண்ணத்துடன் செயல்படும,; துடிப்புமிக்கவராக விளங்கினார்.

  அக்காலக் கட்டத்தில் ஆதிக்க சாதியினரால் அவர் குடும்பம் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அதுவே அவர,; பின்னாளில் புரட்சியாளராகப் பரிணமிக்கக் காரணமாக இருந்தது எனலாம். இங்கே வாழ்கின்ற ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பெரும்பான்மை எண்ணிக்கையுடையவராக இருந்தாலும், “மேல்சாதி”மக்களின் ஆளுகைக்கும், அதிகாரக் கோலோச்சலுக்கும,; சாதிய மேலாண்மைக்கும் ஆட்படுவதற்கான ஒரே காரணம், அவர்களிடம் மேலோங்கியிருந்த படிப்பறிவே என்பதை உணர்ந்த பூலே, “ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் கல்விக் கேள்வியைப் பெறுவதன் மூலமே, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்;: வறுமையின் பிடியிலிருந்தும் விடுபட முடியும்”; என உறுதியாக நம்பினார்.

“கல்வியின்மையால் அறிவை இழந்தோம்;

அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;

வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்;

சொத்தை இழந்ததால்; சூத்திரர் ஆனோம்” ;

   என கல்வியின்மையால் நாம் எவ்வாறு சகலத்தையும் இழந்து, சாதிய நச்சுக்குழிக்குள் சிக்கித் தவிக்கிறோம் என்பதை மக்களிடத்தே எடுத்து விளக்கி, அவர்களுக்கு கல்வி போதிப்பதையே தன் வாழ்க்கை முறையாய் ஆக்கிக் கொண்டார்.

  அதன்படி, 1848-ஆம் ஆண்டு மகாராஸ்டிராவில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களாய் வாழ்ந்து வந்த சூத்திர சாதிப் பெண்களுக்கென பள்ளி ஓன்றை நிறுவினார். அப்பள்ளியில் முதல் மாணாக்கராய் தன் மனைவி சாவித்திரியைக் கற்கச் செய்து, பின்னாளில் அப்பள்ளிக்கு அவரையே ஆசிரியராகவும் நியமனம் செய்தார.;

  இதற்கு முன்பு, ஓடுக்கப்பட்ட மக்கள் பலரின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, ஆங்கில அரசால் 1815-இல் பம்பாய் இராசதானியில் ஏற்படுத்தப்பட்ட பள்ளிதான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கென தொடங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

   பூலே அவர்களால் நிறுவப்பெற்ற கல்வி நிறுவனங்கள்,“சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது” என்ற இந்து மதத்தின் நால்வருணக் கோட்பாட்டிற்கு எதிராக இருந்ததால், இந்து மத “மேல்சாதி” வெறியர்கள் ஜோதிராவ் பூலேவின் தந்தையை மிரட்டிப் பணியவைக்கும் அற்பச்செயல்களில் ஈடுபட்டார்கள். ஆனால் ஜோதிராவ் பூலே சாதிவெறியர்களின் உருட்டல்- மிரட்டல்களுக்கு அஞ்சுவதாக இல்லை. மாறாக, முன்பை விட தனது நடவடிக்கைகளில் வேகம் காட்டினார். பெண் குழந்தைகளுக்கென மேலும் இரண்டு பள்ளிகளையும,; மகார், மாங் போன்ற ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களும்-மாணவிகளும் இணைந்து பயிலுகின்ற வகையிலான பள்ளிகளையும் தொடங்கினார்;.

    “ஆங்கில அரசு கல்விக்கெனச் செலவிடும் தொகை முழுவதையும், ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையில் அரசின் இயக்கங்களில் பங்காற்றி வரும், பார்ப்பனர்கள் மற்றும் இதர உயர்சாதியினரே அபகரித்து வருகின்றனர்;. ஆனால் ஆங்கில அரசுக்குக் கிடைக்கும் வருவாயினங்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் உழைப்பிலிருந்து பிறந்ததாகும்” எனக் குமுறினார் மகாத்மா பூலே.

   பார்ப்பனர்களின் இத்தகைய அதிகார ஆக்கிரமிப்புகளால்தான் ஓடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அறியாமைச் சகதியில் உழன்று வருகிறார்கள் என்பதை ஆங்கில அரசுக்கு அறியச் செய்தார்.

    “மனுவின் பாழாய்ப்போன தத்துவத்தைச் சபிப்பதை உங்கள் உள்ளத்திலிருந்து விட்டொழியுங்கள். நீங்கள் கல்வி பெற்றால் நிச்சயம் மகிழ்ச்சியாயிருப்பீர்கள் எனது இந்தப் புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஓடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை நல்கி வழிகாட்டினார்,

  ஜோதிராவ் பூலே, சிலை வழிபாடுகளையும், வேதங்களின் புனிதங்களையும், புராணக்கட்டுக்கதைகளையும், போலியான இதிகாசங்களையும் தனது ஆழ்ந்த பகுத்தறிவின் மூலம் மக்களிடத்தே தோலுரித்தார்.

  பார்ப்பனர்களின் ஆதிக்க வரலாற்றையும், மனிதத்தன்மையற்ற கொடிய சட்டமான மனு(அ)தர்மம் செய்யும் கேடுகளையும் மக்களுக்கு எடுத்தியம்பி விழிப்புறச் செய்தார்.

  பார்ப்பனர்கள் நம்மைத் தொடர்ந்து சாதி என்னும் அடிமைச்சிறைக்குள் நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே புராணப் புழுகுகளை உண்டாக்கினார்கள் என்றார்.

  “ஆங்கிலேயர்களை விட பார்ப்பனர்கள் மிகவும் மோசமான சுரண்டல் பேர்வழிகள்” என்று “மேல்சாதி” வெறிக்கு எதிராக, அஞ்சாது உரத்து முழங்கினார்.

  பார்ப்பனர்களின் சாதி துவேசத்தால் துவண்டு கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி, மராட்டிய மாநிலத்தில் வாழ்கின்ற பார்ப்பனரல்லாத எல்லா சாதியினரையும் ஒன்று திரட்டி, “உண்மை தேடுவோர் சங்கம்”(பச்சன் சமாச்) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பார்ப்பனியச் சுரண்டலிருந்து சூத்திரசாதி மக்களை விடுவிப்பதையே இவ்வமைப்பின் அடிப்படைக் கேட்பாடாக முன்மொழிந்தார்

   ஜோதிராவ் பூலே அவர்கள், இந்துத்துவ எதிர்ப்பை ஏட்டளவோடு- உதட்டளவோடு மட்டும் முடித்துக் கொள்ளவில்லை. கல்வி பரப்பல், விதவை மறுமணத்தை ஊக்குவித்தல், புரோகித மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல், உழவுத்தொழிலை மேம்படுத்தல் - என நாவால் சொல்வதைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தும் செயல்வீரராகவும் விளங்கினார்.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோர், அநாதைகள் ,விதவைகள், ஏழைகள், கந்துவட்டிக்கொடுமைக்கு ஆளான விவசாயப் பெருங்குடிகள் போன்ற பலதரப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பு செய்தார் மகாத்மா ஜோதிராவ் பூலே.

   மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சாதியொழிப்பு, பெண்கல்வி, பார்ப்பனிய எதிர்ப்பு முதலான அரசியல் இலட்சியத்தை முன்னெடுத்துப் போராடும் இன்றைய தலைமுறையினருக்கு சிறப்பானதொரு இலட்சிய வாழ்க்கை வரலாறாகும்.

அயோத்திதாச பண்டிதரின் சமுகப்போராட்டம் :

   இவரின் போராட்டம,; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவுத்தளத்திலும், அரசியல் உரிமைத் தளத்திலும் புதிய எழுச்சியை உண்டாக்கியது. இவர் தனது 25-ஆவது வயதிலேயே அத்வைதானந்த சபை ஒன்றைத் தொடங்கி உழைப்பையே நம்பிவாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், மலைவாழ் - பழங்குடியின மக்களையும் ஒருங்கிணைத்து அங்கே முளைவட்ட சாதிக் கொடுமையை ஒழிக்கப்பாடுபட்டார். வெள்ளை ஏகாதிபத்தியம், இந்தியாவில் மக்கள் தொகை கணக்கொடுப்பு நடத்திய போது, பட்டியலின – பழங்குடியிலனமக்கள் “பூர்வ ஆதித் தமிழர்” என்று பதிவு செய்யக் கேட்டுக் கொண்டு, மண்ணின் மைந்தர்களுக்கு மகுடம் சூட்ட விழைந்தார்.

  பிரம்ம சமாசம், ஆரிய சமாசம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தை வலிமைப்படுத்துவதையே தங்கள் நோக்கங்களாகக் கொண்டு, கிறித்துவர்கள், இசுலாமியர்கள் அல்லாத அனைவரையும் “இந்துக்கள்” என்று பதிவுசெய்யச் சொன்ன இந்து மதத்திணிப்பை எதிர்த்தார். தம்மை ‘இந்து மதத்தவன்;’ என்று அறிவித்துக் கொள்வதன் மூலம் சாதிய நோயையும் சேர்த்து இழுத்துக் கொள்ள நேரிடும் என்றுணர்ந்து, இந்து என்ற அடையாளத்தை ஏற்கக்கூடாது என்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்

  சாதியைச் சொல்லி அழைப்பதையே பெருமையாய் பீற்றிக் கொள்ளும் காலத்தில், தமிழ் உறவுகளை “சாதியற்ற தமிழர்களாய்” பதிவு செய்ய வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகமக்களின் சமூக முன்னேற்றத்திற்காகத் தீவிர தொண்டாற்றிய அயேத்திதாச பண்டிதர், நிலைமைக்கும், தேவைக்கும் ஏற்ப, இரட்டைமலை சீனிவாசன், ஜான்ரத்தினம், மதுரை எம்.சி. இராஜா ஆகியோரை இணைத்துக் கொண்டு செயலாற்றினார். அதன்படி, 1882-இல் ஆதிதிராவிடர் ஜனசபை, 1892-இல் ஆதிதிராவிடர் மகாஜனசபை, 1928-இல் இந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபை ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

  அயேத்திதாசர் பண்டிதர் சென்னை மாகாண சங்கம் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியுரிமை, நில ஒதுக்கீடு ஆகிய உரிமைகளைக் கேட்டு, அப்போதைய ஆங்கிலேயே அரசுக்கு கோரிக்கை வைத்துப் போராடினார். இதன் அடிப்படையில், அரசாணை 65-இன் மூலம் “பட்டியிலின மக்களுக்கு கல்வி பயிலவிக்கப்பட வேண்டும்”; என அறிவித்து. இப்போது கோரும் பஞ்சமி நிலம் மீட்புப் போராட்டம், அவருடைய போராட்டத்தின் நீட்சியே ஆகும். “ஆதித்தமிழர்கள் இம்மண்ணின் பூர்விகக் குடிமக்கள் அவர்கள் இந்துக்கள் அல்ல” என்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தை அறிவித்து, சாதி இந்துக்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

  1907- சூன் 19-இல் கோடித்தமிழர்கள் இருந்தும் தமிழனுக்கென்று ஓர் ஏடு இல்லையே என்ற இயலாமையைப் போக்க “ஒரு பைசா தமிழன்” என்ற வார இதழை நடத்தி, அவ்விதழின் வாயிலாக, பார்ப்பன எதிர்ப்பு – சாதிஒழிப்பு – பகுத்தறிவு - மூடநம்பிக்கை ஒழிப்பு – மொழியின் பற்று – சமூகநீதி போன்ற சாரத்தையொட்டிய செய்திகளை எழுதி தமிழர்களிடையே இனவுணர்வூட்டினார். பின், 1908-இல் அவ்விதழை ‘தமிழன்’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

  1892 - இல் சென்னை விக்டோரியா அரங்கத்தில், மகாஜன சபையின் சார்பாக மாநாட்டில் நீலகிரி பகுதி உறுப்பினராகக் கலந்து கொண்டு, “ஒடுக்கப்பட்ட மக்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார், அம்மாநாட்டில் கலந்து கொண்ட ஆதிக்க சாதியினரை கேள்வி;களால் துளைத்தெடுத்தார். அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்கத் திராணியற்ற ஆதிக்கசாதிவெறியர்கள் அவரது கோரிக்கைகளுக்கு எதிராக கண்டனக் குரல் கொடுத்தார்கள்.

  1890 - இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து நீலகிரியில் ‘திராவிட மகாஜன சபை’ என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அவ்வமைப்பு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பலரை உறுப்பினராக்கி. 1891 - இல் எழுச்சிமிகு மாநாட்டை நடத்தினார்கள். அம்மாநாட்டில், “பறையர்” எனக் கூறுவது குற்றம் எனச் சட்டமிற்ற வேண்டும், பொது இடங்களில் நடக்க அனுமதி வேண்டும், அரசு அலுவலங்களில் நுழைய அனுமதி வேண்டும், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் முதலான முத்தான பத்துக் கோரிக்கைகளுக்கான தீர்மாணங்களை அறிவித்து, அதை ஆங்கிலேயே அரசுக்கு அனுப்பி வைத்தார்.

தேசங்கள் தோறும் சீர்திருத்த இயக்கங்கள்:-

  சமூக சீர்திருத்த இயக்கத்தின் தேவை, இந்தியத் துணைக்கண்டம் முழுக்க அவசியப்பட்டது. எனவே, பல்வேறு தேசங்களில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மக்களிடையே சமூகப்பணியாற்றியுள்ளன. அதற்காகப் போராடியவர்களின் வரலாறுகள் இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. அவை ஆழ்ந்த சமூகப் பற்றினைக் கொண்ட சில அறிவு ஜீவிகளுக்கே வெளிச்சமாக இருக்கிறது. வங்காளத்தில் ‘நாமசூத்திர கிட்டாப் சினி சமிதி’ என்னும் இயக்கம், மண்ணில் பிறந்த அனைவருக்கும் கல்வி, குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், மனிதர்களுக்கிடையே சகோதரத்துவம் வளர்த்தல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போர்ப்பரணி பாடியது. கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த சாந்தல் மக்களிடம், விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே 1902-இல் இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பீகார், உத்திரபிரதேசத்தில் வாழ்ந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியிலின மக்கள் இணைந்து “திருவேணி சங்கமம்” “ராகவ் சமாசம்” என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்கள்.

  வட இந்தியாவில் வாழ்ந்த ‘சாமர்’ என்ற சாதியினர் குரு சாசிதாஸ் என்பவர் நிறுவிய சக்னாமி என்ற சமயப் பிரிவில் சேர்ந்து இந்து பார்ப்பன மேல்சாதி ஆதிக்கத்தை அறுதெறியப் சாமரிய இயக்கம் கட்டிப் போராடியிருக்கிறார்கள். 1860-ஆம் ஆண்டு சாமர் சமூக மக்கள் பூணுல் அணியும் உரிமை கேட்டுப் போராடியதன் ஒரு பகுதியான பூணூல் அனுவிக்கும் விழா நடத்தினார்கள். இதனால், மேல் சாதியின் கோபத்திற்கு ஆளாகி பல சாமனர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் காரணமாக, அவர் போராட்டம் வீறுகொண்டது.

  இராஜஸ்தானில் வாழ்ந்த “டெட்” என்ற பட்டியல் சாதியினருக்காக ராம்தேவ் பந்த் என்பவரும், பங்கி மக்களிடையே நாவங்கரம் என்பவரும் அங்கே குடிகொண்ட வருணாசிரம தர்மத்திற்கு எதிராகப் பரப்புரை செய்தார்கள்.

   இவ்வாறாக இந்தியத் துணைக்கண்டம் முழுக்க உழைக்கும் பட்டியல் சமூக மக்களை சாதியால் பிளவுபடுத்தியும், அடிமை வாழ்க்கைமுறையைப் புகுத்தியும் மூளையில் ஊறிப்போன மூடத்தனங்களால் பெண்களை வஞ்சித்து வந்ததைக் கண்டித்தும், காலங்காலமாக பல்வேறு இயக்கங்கள் போராடியிருக்கின்றன. தொடரும் சாதியக் கொடூரங்களையும், ஆணாதிக்க சாதிவெறித்தனத்தால் கௌரவக் கொலைகளையும் நோக்கும்போது, சமூகசீர்திருத்தப் புரட்சியாளர்கள் இன்றும் தேவைப்படுவதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக சாத்திரக்குப்பைகளையும், சாதியத்தையும் பொசுக்கியெறிய - பொங்கியெழுந்த புரட்சிப்போராளிகளின் வரலாறுகளைப் படித்துணர வேண்டும். “வரலாற்றை அறிந்தவர்களே, வரலாறு படைக்க முடியும்” என்ற சொல்லுக்கிணங்க வரலாற்றை அறிவோம்! தொடர்ந்து கறைபடிந்த சமூகத்தைப் பாதுகாக்க முயலும் பார்ப்பனிய சாதியவாதிகளையும், ஆணாதிக்கவாதிகளையும் எதிர்த்து, தொடர்ந்து போராடுவோம்! புதிய சமூகப் புரட்சியை வென்றெடுப்போம்!!

-    தங்க.செங்கதிர்

 மேற்கோள் நூல்கள் :-

1.    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ். இராமகிருஷ்ணன்.

2.    உருவாகாத இந்தியதேசியமும் உருவான இந்து பாசிசமும் - பழ. நெடுமாறன.;

3.    வாழையடி வாழையான – டாக்டர் ப. சரவணன்.

4.    சாதிமுறையைத் தகர்க்க இயலுமா – டி.ஞானையா.

5.    அண்ணல் அம்பேத்கரின் அரும்பணி - ஒர் ஆய்வு – பேரா.பெ.தங்கராசு.

6.    நூற்றாண்டின் விழிப்பு முன்னோடி வள்ளலார் - முனைவர். இ. சுந்தரமூர்த்தி.

7.    இந்திய சமூகம் - சியாமா சரண்தூபே தமிழில் என் சிறிதரன்

8.    நாம் அறியாத அம்பேத்கர் - என். இராமகிருஷ்ணன்.

9.    சித்தர் பாடல்கள்.

10.   இந்தியாவில் மட்டும் சாதிகள் இருப்பது ஏன்? – முனைவர்.வெ. கண்ணுப்பிள்ளை தமிழில் மு. குமரேசன்.

11.   தமிழர்கள் மேல் நிகழ்ந்த பண்பாட்;டுப் படையெடுப்புகள் - க.ப. அறவாணன்.

12.   ஆதிக்கக்காவி – எம்.எ.சேவியர் சே.ச

13.   சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் - தமிழரசன்.

14.   இந்தியாவில் சாதிகள் - அண்ணல் அம்பேத்கர்.

15.   பண்பாட்டு அசைவுகள் - முனைவர்.தொ.பரமசிவம்

Pin It