'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகைகளில் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அண்மையில் மரபணு மாற்று வேளாண்மை, அணுமின் சக்தி உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் 'பூவுலகின் நண்பர்கள்' தீவிரமாக ஈடுபட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள். 

'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு ஜனநாயக ரீதியிலும், இந்திய நாட்டின் சட்டவிதிகளின்படியும் இயங்கும் ஒரு வெளிப்படையான அமைப்பு. சுற்றுச்சூழல் குறித்த ஆவணப்பதிவுகள், வெளியீடுகள், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல், தேவையான இடங்களில் சட்டரீதியான தலையீடு போன்ற வெளிப்படையான செயல்பாடுகளில் மட்டுமே 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும்  வசிக்கும் தமிழர்களிடமும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பிற்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் தொடர்பு கொள்வதாகக் கூறிக் கொண்டு பல்வேறு உதவிகளையும், தகவல்களையும் கோருவதாக தகவல்கள் வருகின்றன.  'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பிற்கு தமிழ் மக்களிடம் உள்ள நன்மதிப்பை தவறாக பயன்படுத்தி பலன் பெறவும், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் பெயரை கெடுக்கவும் சில சமூகவிரோதிகள் இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது.

மேலும் சிலர் 'பூவுலகின் நண்பர்கள்' பெயரில் பல்வேறு சர்ச்சைக்குரிய துண்டுபிரசுரங்களை வெளியிடுவதாகவும், அலைபேசி குறுந்தகவல் வழியாகவும் சில சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதாகவும் தெரிகிறது. 

'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் தொடக்க கால அமைப்பாளர்களான கோவை சி.மா. பிரிதிவிராஜ், புதுவை தமிழ்மணி ஆகியோருடன் சென்னையில் இருக்கும் சில தோழர்கள் மட்டுமே பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் இயங்கும் அதிகாரம் பெற்றவர்கள்.  எனவே 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சார்பில் தங்களை யாரேனும் தொடர்பு கொண்டால், அவர்கள் உண்மையிலேயே 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

பூவுலகின் நண்பர்கள் சார்பாக,
பொறியாளர் கோ.சுந்தர்ராஜன்

தொடர்புகளுக்கு:

பொறியாளர் கோ. சுந்தர்ராஜன் – 98410 31730
வழக்குரைஞர் பி. சுந்தரராஜன் – 90945 96699
ஆர். ஆர். சீனிவாசன் – 94440 65336

Pin It