சென்னை

05.11.12 இரவு திருச்சி சிறையிலிருந்து பிணையில் விடுதலையான சென்னைத் தோழர்கள் ரயில் மூலம் சென்னை சென்றனர்.  06.11.2012 அன்று காலை 8.30 மணிக்கு கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் துரைசாமி தலைமையில் திரண்ட சென்னைத் தோழர்கள் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.  ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பாக "வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்'' என்று சுவரொட்டி ஒட்டி பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்ட வீரர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

மீசாபேட் மார்க்கெட்டிலிருந்து ராயப் பேட்டை தந்தை பெரியார் சிலை வரை தோழர்கள் ஊர்வலமாக நடந்து கொள்கை முழக்கமிட்டு வந்தனர். சிறை மீண்ட தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  கழகத் துணைத் தலைவர் துரைசாமி தோழர்களை வரவேற்று உரையாற்றினார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வை. இளங்கோவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் செ. குமரன், துணைத் தலைவர்மு. வெங்கடேசன், அமைப்பாளர் சுப்பிரமணி, வடசென்னை மாவட்டச் செயலாளர் வி. ஜனார்த்தனன், சைதை அமைப்பாளர் ராஜி. திலீபன், கொளத்தூர் அமைப்பாளர் ஜெயவேல் ஆகியோரோடு பல்வேறு பகுதிக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.  சிறையிலிருந்து விடுதலையான தோழர் களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப் பட்டது.

கழக பொதுச் செயலாளருக்கு கோவையில் எழுச்சி வரவேற்பு!

பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று 19 நாட்களுக்குப் பிறகு கடந்த 09.11.2012 அன்று விடுதலையாகி திருச்சியிலிருந்து மாலை கோவை வந்த கழக பொதுச் செயலாளருக்கு காந்திபுரத்திலுள்ள கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் கழகப் பொறுப்பாளர்களும், ஆதரவாளர்களும், தோழர்களும் மேளம் கொட்டி, பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பளித்தார்கள்.  பின்னர் பெரியார் படிப்பகம் அருகிலுள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்தார் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன்.  அப்போது தோழர்கள் எழுச்சி முழக்க மிட்டனர்.  பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.  அதில் "பெரியார் தொண்டர்கள் நடத்திய போராட் டத்தின் பலனாக பிராமணாள் கபே மூடப் பட்டது.  தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்தில் பிராமணாள் கபே திறந்தாலும் அதைத் தடுத்து நிறுத்துவோம்'' என்றார். கோவையில் பிராமணர்களுக்கென்று தனி மின் மயானம் செயல்படுவது மற்ற சமூகத்தினரை இழிவு படுத்துவது போலாகும்.  உடனடியாக பிராமணர் தனி சுடுகாட்டை எதிர்த்து கழகம் போராட்டம் நடத்தும் என்றும் கூறினார். 

வரவேற்பு நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி போராட்டத்தில் சிறையேகிய கோவை மாநகர கழகத் தலைவர் வே. கோபால், செயலாளர் இ.மு. சாஜித், பொருளாளர் இரா. ரஞ்சித்பிரபு, அலுவலகப் பொறுப்பாளர் சா. கதிரவன், தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, மேட்டுப்பாளையம் சந்திரசேகர், இராசன், சிங்கை மனோகரன், பார்த்தசாரதி மற்றும் தோழர்களும் வடக்கு மாவட்டத் தலைவர் ராமசாமி, தெற்கு மாவட்டப் பொருளாளர் அகில் குமரவேல், பொ.நா. பாளையம் சீனிவாசன், வழக்கறிஞர் கள் சண்முகசுந்தரம், சி. முருகேசன், மது சூதனன், டென்னிஸ், பிரகாசு தோழர்களின் விடுதலைக்காக உழைத்த வழக்கறிஞர் ப. ஜீவா, லலிதா மற்றும் குமணன், தம்பு, பிரவீன், சிவா, தங்கதுரை உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு பங்கேற்றார்கள்.

கோபி

09.11.2012 அன்று விடுதலையான கோபி தோழர் ஜெகநாதனுக்கு கழக மாவட்ட அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் கோபியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.  தந்தை பெரியார் சிலைக்கு ஜெகநாதன் உள்ளிட்ட தோழர்கள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல அமைப்பாளர் கா.சு. நாகராஜன், கோவை தெற்கு மாவட்டப் பெருளாளர் அகில் குமரவேல், நகர அமைப்பாளர் ஜெயராமன், நாகப்பன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Pin It