கீற்றில் தேட

periyar_pathai_logo_100

பழைய எண் 5, புதிய எண் 11, ஆதிசேசா நகர் 4வது தெரு, பெரம்பூர், சென்னை - 12
பேச: 9941018868, 9003226947,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., வளர்ச்சி நிதி ரூ.150

தயாராகுங்கள் தோழர்களே!

டிசம்பர் 24ஆம் தேதி சென்னை கபாலீசுவரர் கோவில் 'கருவறை நுழைவுப் போராட்டத்தைக்' கழகம் அறிவித்தது முதல் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் குறித்து சுவர்களில் விளம்பரம் செய்துவருகிறார்கள். சென்னையில் கழகத் தோழர்களுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரும் ஓவியருமான தோழர் பரந்தாமன் அவர்கள் கருத்துப் படங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமாக சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளார். இது பார்ப்பனர்களை கதிகலங்கச் செய்துள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கருவறை நுழைவுப் போராட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று பேசியுள்ளார். இது 27-11-2012 தினத்தந்தி நாளிதழில் மூன்று கால தலைப்புச் செய்தியாக வந்துள்ளது. தோழர்களின் உழைப்பு வீண் போகவில்லை, செய்தி எட்ட வேண்டிய இடத்துக்கு எட்டி விட்டது.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் பார்ப்பான் பின்புத்திக்காரன் என்று, இது எக்காலத்துக்கும் பொருந்தும். 1973ஆம் ஆண்டு அய்யா அவர்கள் அறிவித்த இன இழிவு ஒழிப்பு மாநாட்டிற்குப் போதுமான விளம்பரம் இல்லாமல் இருந்தது. தோழர்கள் அய்யா அவர்களிடம் சென்று மாநாட்டிற்கு விளம்பரம் இல்லை. இன்னும் கொஞ்சம் சுவரொட்டி அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அய்யா பொறுங்கள் பொறுங்கள் பார்ப்பனர்கள் நமக்கு விளம்பரம் கொடுப்பார்கள் என்றார். அய்யா சொன்னது போல மாநாடு நடக்க ஒரு வாரம் இருந்த நிலையில் மாநாட்டைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் பெரியாருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று பார்ப்பனர்கள் அறிவித்தார்கள். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பத்திரிகை களிலும் வெளிவந்தது. பெரியாருக்கு கருப்பு கொடியா? என்று அனைத்து கழகத் தோழர் களும் குடும்பம் குடும்பமாக சென்னைக்கு வந்துவிட்டார்கள். கோவில் கருவறையே பார்ப்பனர்களின் சாதி நிலைகொண்டுள்ள இடம் என்பதாலும் சாதி ஒழிக்கப்பட்டது என்று அரசியல் சட்டம் திருத்தப்பட்டால் மொத்த ஆதிக்கமும் தகர்ந்துபோய்விடும் என்பதாலும் இப்போது இராம.கோபாலன் துடிக்கிறார்.

தருமபுரியில் நூற்றுக்கணக்கான ஒடுக்கப் பட்ட மக்கள் (இவர்களும் இந்துக்கள்தான்) ஆதிக்கச் சாதியினரால் (வன்னியர்களால்) கொடூரமாகத் தாக்கப்பட்டபோது பேசாத இந்த இராமகோபாலன், கருவறையை மட்டும் காக்கத் துடிக்கிறார். தருமபுரியில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர்களின் வீடு களின் முகப்புச் சுவர்களில் இந்துக் கடவுள் களின் படங்களைத்தான் பதித்து வைத்திருக் கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் (வன்னியர்கள்) கடவுள் படங்களையும் சேர்த்தே கொளுத்தி யிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இந்துக்களுக் காகவும் பேசவில்லை, இந்து கடவுள்களின் படங்கள், சிலைகள் கொளுத்தப்பட்டதற்காக வும் பேசவில்லை, இதனைக் கண்டிக்காத இராமகோபால அய்யர் பார்ப்பனர்களின் கருவறையை காக்கப் போகிறாராம்...

தர்ப்பைப் புல் ஏந்திய பார்ப்பனர் கூட்டம் பெரியாரின் கருஞ்சிறுத்தைகளைத் தடுக்குமாம். கருஞ்சட்டைப் படையே களம் காண திரண்டு வா டிசம்பர் 24 சென்னைக்கு.

இத... இத... இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்!

கழகத்தின் போராட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு இந்து மகா சபா மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியும் தமிழ்நாடு இந்து மகா சபாவும் அனைத்து இந்துக்களையும் கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று கருவறைக்கு வெளியே நின்று பூஜை செய்யாமல், கருவறைக்கு உள்ளே சென்று பூஜை செய்யுங்கள். அந்த உரிமைக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.

கடவுள் இல்லை என்று சொல்கிற எங்களை விட கடவுள் உண்டு என்று சொல்கிற நீங்களே கருவறைக்குள் நுழையுங்கள். நாங்கள் அதை வரவேற்போம். அதுதான் எங்கள் போராட்டத்திற் கான வெற்றி.

Pin It

சாதி மறுப்பு காதல் திருமணத்தை மைய மாக வைத்து சாதி வெறியர்கள் தங்களது வெறி யாட்டத்தை தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றம் கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் நடத்தியது மனிதாபிமானமுள்ள அனைவரை யும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. சாதி ஒழிப்பிற்காக இயக்கம் கண்டு சமூக இழிவுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழி நடத்திய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடந்த இக்கொடூரம் வேதனையளிப்பதோடு, சாதி ஒழிக்கப்பட வேண்டியதன் தேவையை, அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சாதியை மறுத்து இருவர் காதல் மணம் செய்து கொண்டதால் எழுந்த கோபம் என்றால் சம்பந்தப்பட்ட இருவர் வீடுகள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகும். அதிகபட்சமாக அவர் களின் உறவுகள், நண்பர்கள் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். இதுதான் வழக்கத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் கொளுத்தப்பட்டு, இடிக்கப்பட்டுள்ளனவே, இதற்குக் காரணமாக சாதி மறுப்பு காதல் திருமணம் இருக்க முடி யாது என்பது ஓரளவுக்கு சமூகத்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட புரியக்கூடிய உண்மை.

காதல்மணம் புரிந்தவர்களின் ஊர்களில் உள்ள நிலைமைகளை கவனித்தும் கவனியாது இருந்த காவல்துறையின் முதல் கோணல் இதில் முற்றிலும் கோணலாக மாறிவிட்டது. உளவுத் துறை மூலம் எதை எதையோ கண்டுபிடித்துத் தடுக்கும் ஆற்றல் உடையது தமிழ்நாடு காவல் துறை என்று புகழ்கிறார்களே, அந்தத் துறை என்ன செய்தது? காவல்துறையிலும் சாதி உணர்வோடுதான் இப்பிரச்சனையைக் கையாண்டு உள்ளனர் சில கருப்பு ஆடுகள் என்று இப்போது செய்தி வருகிறது. ஆக, காவல்துறையின் ஒத்துழைப்போடுதான் இக்கலவரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

உணர்ச்சி வேகத்தில், ஆத்திரத்தில், கொந் தளித்த மக்களின் வெளிப்பாடாக இருந்தால் இவ்வளவு வெறித்தனம் இருந்திருக்காது, சேதம் ஏற்பட்டிருக்காது. பல காலமாக தாழ்த்தப் பட்ட மக்களின் கல்வியும், பொருளாதார முன்னேற்றமும், அது தந்த விடுதலை உணர்ச்சி யும் ஆதிக்கச் சக்திகளை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. காலங்காலமாக நமக்கு அடிமை வேலை செய்த கூட்டம் அரசு வேலையும், தொழிலும் செய்து வசதியாக வீடுகள் கட்டி தங்களை விடவும் வளமாக வாழ்கிறார்களே என்கிற எரிச்சல் ஆதிக்கச் சாதிகளைத் தூங்க விடாமல் அரித்தெடுத்திருக்கிறது.

காத்திருந்த சாதிவெறியர்கள் காலம் கனிந்துவிட்டதாகக் கருதி தாழ்த்தப்பட்டவர் களைக் கருவறுக்கத் துணிந்திருக்கிறாரக்ள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஏனோதானோ என்று தாக்கக் கூடாது. அடிக்கிற அடியில் இரண்டு மூன்று தலைமுறைக்குத் தாழ்த்தப் பட்டவர்கள் பொருளாதாரரீதியில் பின்தங்கிப் போக வேண்டும். மேல் சாதியான தம் மீது பயம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வீடுகளைக் கொளுத்தத் தேவையான மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியவற்றையும் வீடுகளை இடிக்கத் தேவையான ஆயுதங்களை யும் தயார் செய்துகொண்டே இத்தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அத்தோடு, தாழ்த்தப்பட்ட மக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சேமித்த பணத்தையும், தங்க நகைகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் குறிவைத்தே கொள்ளையடித்து இருக்கிறார்கள்.

சாதி மறுப்புத் திருமணங்களால் சாதிக் கட்டுமானங்கள் உடைக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாத - சாதி கட்டுப்பாட்டில் பொறுக்கித் தின்னும் சுயநலவாத அரசியல் வாதிகளும் அடிமை வேலை செய்பவன் அடிமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு அதிகாரியாக, முதலாளியாக வாழக்கூடாது என்று ஆதிக்கச் சாதி வெறியர்களும் கூட்டாகச் சேர்ந்து ஆயிரக் கணக்கில் திரண்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையைச் சூறையாடியிருக் கிறார்கள்.

நாகரிகத்திலும் பண்பாட்டிலும் உயர்ந் துள்ளோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அனைவரும் வெட்கப்பட வேண்டிய இக்கொடூரக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்தும், இதற்குக் காரணமான சாதி வெறியர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குகள் பதிந்து தண்டனை வழங்கக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16-11-2012 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன் உள் ளிட்ட கழக முன்னணியினர் கலந்துகொண்டு தர்மபுரி வெறியாட்டத்தைக் கண்டித்தும் சாதி வெறியர்களை உடனே தமிழக அரசு கைது செய்து அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சென்னை

16-11-2012 வெள்ளியன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரில் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சு.குமாரதேவன், வழக்கறிஞர் வை.இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, ஒருங் கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பாளர் எ.கேசவன், வழக்கறிஞர் ப.அமர்நாத், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ச.குமரன், மாவட்டத் தலைவர் செ.குமரன், வடசென்னை மாவட்டத் தலைவர் சொ.அன்பு, மாவட்டச் செயலாளர் வி.ஜனார்த்தனன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ர.பரந்தாமன், அசுவத் தாமன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாதி வெறியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டு வலியுறுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் பெரியார் சிலை அருகில் புதுச்சேரி மாநிலத் தலைவர் வீர.மோகன் த¬மையில் 16-11-2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன், மாநிலத் துணைத் தலைவர் ம.இளங்கோ, மாநிலச் செயலாளர் சுரேசு, பொருளாளர் பால முருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இளைஞரணித் தலைவர் தீனா, பொறுப் பாளர்கள் பெருமாள், சிவமுருகன், இரவி, பாஸ்கரன், கிருட்டிணன், தேஜா, இராஜசேகர், பன்னீர்செல்வம், சிவஞானம் உள்ளிட்ட தோழர்களுடன் சாதிவெறியர்களுக்கு எதிரான மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கோவை

கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு 16-11-2012 அன்று மாலை 5 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டி ணன் தலைமையில் நூற்றுக் கணக்கான தோழர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கழகச் செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, மாநகரச் செய லாளர் இ.மு.சாஜித், மாநகரப் பொருளாளர் இரா.ரஞ்சித் பிரபு, அலுவலகப் பொறுப்பாளர் சா.கதிரவன், தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் மு.வேலுச்சாமி, பொருளாளர் அகில் குமரவேல், வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் சந்திரசேகர், பெரியநாயக்கன் பாளையம் சீனிவாசன், அன்னூர் கழகப் பொறுப்பாளர்கள் ஜோதிராம், ஈசுவரன், சதீசு, அர.இராசன், தி.க. சம்பத், சிங்கை மனோகரன், ஜீவா, தம்பு, ஆனைமலை முருகானந்தம், அரிதாசு, செல்வம், செபாஸ்டியன், தங்கதுரை, கண்ணன், சசிகுமார், உதயகுமார், திருப்பூர் தியாகு, சித்தாபுதூர் ஆறுமுகம், ஆச்சிபட்டி பாலு, நவநீதன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கக் தோழர்கள் தமிழி, பாண்டியரசன் மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் முருகேசன், வடக்கு மாவட்டத் தலைவர் து.இராமசாமி, கோப்மா கருப்புசாமி, பெரியார் மாணவர் கழகப் பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

பெரம்பலூர்

15-11-2012 அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இலட்சுமணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெயவர்த்தனா, பாலமுருகன், ஊமைத்துரை ஆகிய தோழர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட் டத்தில் க.செல்வம், பாலசுப்பிரமணியன், பி.குமார், பி.மாரிமுத்து, பிரபு, பார்த்திபன், தினேஷ்குமார், முத்துவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

Pin It

சூத்திரர் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியலிச)க் காரியமே தவிர, இதில் அரசியல் எதுவும் இல்லை. மற்றும் இதில் பலாத்காரம் என்பதும் இல்லை.

அதிலும் இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை - மானம் பெற வேண்டும் என்பதற்கு ஆக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எந்தவித வகுப்புத் துவேஷமோ வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் இந்துக்கள் என்னும் சமுதாயத்தில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள் - அதிலும் படித்தவர்கள், செல்வவான்கள்; உயர்தர அய்க்கோர்ட் நீதிபதிகளாகவும், கலெக்டர்களாகவும், உப அத்தியட் சர்களாகவும் (துணைவேந்தர்கள்); மடாதிபதிகளாகவும், சமீப காலம் வரை மகா ராஜாக்களாகவும், அரசர் களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்தவர்கள், இருப்பவர்கள் பல கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர்களான பிரபுக்கள் உட்பட உள்ளவர் கள் சமுதாயத்தில் கீழ்ப்பிறவியாக, கீழ் மக்களாக, கடவுள் என்கின்ற (அதுவும் அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியில் நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ் மக்களாக ஆக்கப் பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால், இது இதுவரைச் செய்யாமலிருந்ததுதான் மானங்கெட்டத் தன்மையும் இமாலயத் தவறுமாகுமே ஒழிய, இப்போது கிளர்ச்சி செய்வது என்பது ஒரு நாளும் - ஒரு விதத்திலும் தவறாகவோ, கூடாததாகவோ ஆகாது, ஆகவே ஆகாது.

நீக்ரோக்களுக்கும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவிபேதம் - நிற பேதம் - நாகரிக பேதம் நமக்கும், பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேத முள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான ஆளும் ஜாதியாரான பிரபுக்களான வெள்ளையர்களோடு எல்லாத் துறையிலும் சரிசமமாகக் கலந்து உண்பன - உறங்குவன - பெண் கொடுக்கல், வாங்கல் உட்பட கலந்து புழங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு மூன்று பேரே உள்ள கூட்டம், பிச்சை எடுப்பதையும், உழைக்காத தையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்க் கொண்ட - பிழைப்பாய்க் கொண்ட கூட்டம் மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக நாணயமாக இருக்க வேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எது வேண்டு மானாலும் செய்து பிழைக்கலாம் என்கிற அனுபவத்தில் இருக்கிற கூட்டம் தங்களை 'மேல் பிறவி' என்றும், நம்மைக் கீழ்ப்பிறவி, - இழிபிறவி - பொது இடமாகிய கடவுள் என்கிற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக் கூடாத மிக மிக இழித்தன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நாம் ஏற்றுக்கொண்டு, கட்டடத்திற்கு - அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை நிலைக்க விடலாமா? என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.

வேறு நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமையான, இழிவான தன்மை எந்த சமுதாயத்திற்கு இருக்குமானாலும் எவ்வளவோ கொலை, பலாத்காரம், நாச வேலைகள் நடத்தி ஒழிக்கப்பட்டிருக்கும்? அப்படிக் கொடுமை இந்த நாட்டில் இருந்து வருகிறதென்றால், இது யாருடைய தவறு? யாருடைய மானங் கெட்ட ஈனத்தனம்? என்று ஒவ்வொரு தமிழனையும் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன் மற்றும் இது விஷயத்தில் நாம் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றால், அதனால் யாருக்கும் எந்த நபருக்கும் ஒரு தூசி அளவு நட்டமும், கேடும் இல்லாத ஒரு காரியமாகும். கடவுள்களைப் பூசை செய்கிற பூசாரி வேலை, பார்ப்பனருக்குத்தான் - மேல் ஜாதிக்காரருக்குத் தான் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கோயில் பூசை செய்பவன் பார்ப்பானல்ல - மேல் ஜாதிக்காரனுமல்ல . குருக்கள் என்கின்ற ஒரு ஜாதியானாவான் என்றும் சொல்லப்படு கிறது, ஆதாரங்களிலும் இருக்கிறது.

அந்தக் குருக்கள் என்பவர்கள் பார்ப்பன ரல்லாத சைவர்களே ஆவார்கள் என்றும் சில ஆதாரங்களில் இருக்கின்றன. மற்றும் ஒரு குறிப்பிட்ட ஜாதியார்தான் பூசாரியாக இருக்க வேண்டுமென்கின்ற நிபந்தனை எந்த ஆதாரத் திலும் இல்லை.

குருக்கள், அர்ச்சகர்கள் என்பவர்கள் வீட்டில், பார்ப்பனர்கள் என்பவர்கள் சாப்பிடவே மாட் டார்கள்; பெண் கொடுக்கல், வாங்கலும் செய்ய மாட்டார்களாம். இந்த நிலையில் இருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்து மக்கள் - பார்ப்பனரல்லாதார் மட்டும் நுழையக் கூடாது என்றால் அது எப்படி நியாயமாகும்?

தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் சாத்தாணி என்கின்ற பார்ப்பனர் அல்லாத வர்கள் பூசை செய்கிறார்கள். பல கோயில் களில் ஆண்டிகள், பண்டாரங்கள் என்கின்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். மற்றும் நாம் மூலஸ்தானம் என்பதற்குள் செல்வதால் அந்த இடத்திற்கோ, சாமிக்கோ எந்தவிதப் புனிதமும் கெட்டுப் போவதில்லை, சிலையைத் தொட வேண்டாம் என்று வேண்டு மானாலும் திட்டம் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நெருங்கக் கூடாது; அந்த அறைக்குள் "படி தாண்டக்கூடாது' என்பது என்ன நியாயம்? உற்சவக் கடவுள்கள், சிலைகள் என்பவற்றிடம் எல்லாம் எல்லா ஜாதியாரும்; எல்லா மக்களும் நெருங்குகிறார்கள்.

மூலஸ்தானத்திற்கு வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக் கிரகங்கள் என்கின்ற கடவுள்கள் முதலிய சிலைகளிடம் எல்லோரும் நெருங்குகிறார்கள்.

எனவே இந்தக் "கர்ப்பக் கிரகம்' என்கின்ற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை, இழிமக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்கப் படுவதற்காகத்தான் இருந்து வருகிறதே அல்லாமல் மற்றபடி வேறு எந்த புனிதத் தன்மையையும் பாதுகாக்க அல்ல என்பதே நம் கருத்து. அன்றியும் நாம் உள்ளே சென்று வணங்குவதால் எந்தப் புனிதத் தன்மையும் கெட்டு விடுவதில்லை என்பதும் நம் உறுதி. மற்றும் உள்ளே செல்ல வேண்டும் என்கின்ற நமக்கும் உண்மையில் எந்தப் புனிதத் தன்மையையும் கெடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லவே இல்லை.

நம் இழிவு நீக்கப்பட வேண்டும் என்கின்ற காரியத்திற்கு ஆகத்தான் செல்லுகிறோம்.

ஆகவே தோழர்களே, இந்தக் கிளர்ச்சி அவசியமா இல்லையா?

என்ன சொல்கிறீர்கள்?

அவசியம் என்றால் வாருங்கள் போகலாம்.

உடனே பெயர் கொடுங்கள்.

(விடுதலை, 15-10-1969)

Pin It

தந்தை பெரியார் 1957ஆம் ஆண்டு சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தபோது அதில் கலந்துகொண்டு சட்டம் எரித்து 6 மாதம் சிறை சென்ற கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திருமூர்த்தி அவர்கள் தனது 96 வயதில் 03-12-12 திங்கள் காலை 4.30 மணிக்கு மரணமடைந் தார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்த ஆனைமலை நரசிம்மன் அவர்களோடு உற்ற துணைவராகச் செயல்பட்ட திருமூர்த்தி அவர்கள் பெரியார் அறிவித்த பல்வேறு போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவராவார். கழகத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் தஞ்சையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டிலும் மறைந்த ஆனைமலை திருமூர்த்தி அவர்களுக்குச் சிறப்புச் செய்யப் பட்டது. தனது இறுதி நாட்கள் வரை தந்தை பெரியாரின் கொள்கை வழி நடந்தவர் ஆனைமலை திருமூர்த்தி அவர்கள். அவருடைய மறைவுக்கு கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

சென்னை ராயப்பேட்டை கழகத்தின் சார்பில் 25.11.2012 அன்று இரவு 12 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட தோழர்களும் பொதுமக்களும் இணைந்து பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் உணவு வழங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வை. இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பாளர் எ. கேசவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் குமரன், மாவட்டச் செயலாளர் டிங்கர் குமரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி. ஜனார்த்தனன், காஞ்சி மாவட்டத் தலைவர் பரந்தாமன் ஆகியோருடன் ராயப்பேட்டைப் பகுதி கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் 26.11.2012 அன்று காலை 10 மணியளவில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது.

போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியைக் கண்டு இனிப்பு பெற்றுச் சென்றனர்.

கழக மாவட்டச் செயலாளர் குமரகுருபரன், ஜெயகுமார், பாண்டியன், கு. மாது உட்பட பல கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். 

எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு

தமிழீழ போரில் வீர மரணம் அடைந்த போராளிகள் நினைவாக மாவீரர் நாள் நிகழ்ச்சி நவம்பர் 27 அன்று கோவை காந்திபுரம் கழக அலுவலகமான தந்தை பெரியார் படிப்பகத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர் களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எரிவாயு மூலம் மாவீரர் நாள் ஜோதி எரிக்கப்பட்டது. நிகழ் விற்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமை வகித்தார். கழகத் தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத் தோழர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். கழகச் செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, கோவை தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, பொருளாளர் அகில் குமரவேல், கோவை வடக்கு மாவட்டத் தலைவர் து.இராமசாமி, அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், கோவை மாநகரத் தலைவர் வே. கோபால், செயலாளர் இ.மு.சாஜித், பொருளாளர் இரா.இரஞ்சித் பிரபு, துணைத் தலைவர் ந. தண்டபானி, அலுவலகப் பொறுப்பாளர் சா. கதிரவன், வழக்கறிஞர்கள் ப. ஜீவா, மதுசூதனன், டென்னிஸ், பிரகாசு, கோவை மாநகர நிர்வாகிகள் சிங்கை மனோகரன், அர.இராசன், தி.க.சம்பத், கணபதி கிருட்டிண மூர்த்தி, தம்பு, லலிதா, பிரவீன், செல்வம், தங்கதுரை, ஜீவா, பு.வே.ரா, இரகுநாத், பெரியார் மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் சீனிவாசன், மணிகண்டன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்கள், தமிழீ, பாண்டியராசன், கவிஞர் இரகுபதி மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்கள். முடிவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சுசி.கலையரசன், வழக்கறிஞர் சி. முருகேசன் உரைக்குப் பின்னர் கழகப் பொதுச் செயலாளர் மாவீரர்களை நினைவு கூர்ந்து பேசினார். ஏராளமான பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டை மேட்டில் மாவீரர் நாள் நிகழ்வு 27.11.2012 அன்று மாலை 6 மணிக்கு நடந்தது. கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன், மாநிலத் தலைவர் வீர. மோகன் மற்றும் 200க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மாவீரர்களின் தியாகங்களை விளக்கிக் கூறினர். சுரேசு, தீனா, பெருமாள், இளங்கோ மற்றும் கிராமப்புற மக்கள் கூட்டமைப்பு சந்திரசேகர் ஆகியோரும் உரையாற்றினர். அரியாங்குப்பம் மாதா கோவிலுக்கு அருகிலிருந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி பெரியார் சிலை வரை சென்று மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட பெரியார் மாணவர் கழகத்தின் சார்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி 27.11.2012 அன்று திருச்செங்கோடு பெரியார் சிலை அருகே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர் கழக அமைப்பாளர் தாமரைக் கண்ணன் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் பூபதி, கார்த்தி, சந்துரு, சுப்பு, சுகன், சிலம்பு, மாணிக்கம் உள்ளிட்ட கழகத் தோழர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் 134ஆவது பிறந்தநாள் விழா கோவை காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் 14.10.2012 ஞாயிறன்று குருதிக் கொடை முகாமுடன் தொடங்கியது. அலுவலகப் பொறுப்பாளர் சா. கதிரவன் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் குருதிக் கொடை முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கழகப் பொதுச் செயலாளரின் ஓயாத உழைப்பையும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை யும் பாராட்டிப் பேசினார். கடந்த 10 மாதத்தில் பெரியார் படிப்பகத்தில் 160 திருமணங்கள் நடந்துள்ளன. ஒரு திருமண மண்டபத்தில்கூட இவ்வளவு திருமணங்கள் நடந்ததில்லை என்று வியந்து பேசினார். விழாவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே. சிவஞானம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசி.கலையரசன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார், கழக செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, கவிஞர் குடியாத்தம் குமணன், கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம. சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். தமிழரசன் நன்றி கூறினார். மதியம் வரை நடந்த குருதிக் கொடை முகாமில் 75 தோழர்கள் குருதிக் கொடையளித்தார்கள். கோவை அரசு மருத்துவ மனை குருதி வங்கி மருத்துவக் குழுவினர் குருதிகளை சேகரித்துச் சென்றார்கள். பின்னர் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

கழகத்தின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதும், கோவையிலுள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் குருதிக் கொடையளிப்பதில் கழகம் முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கவை. விழாவில் கோவை மாநகரத் தலைவர் வே. கோபால், மாநகரச் செயலாளர் இ.மு.சாஜித், பொருளாளர் இரஞ்சித்பிரபு, தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, வடக்கு மாவட்டத் தலைவர் து. இராமசாமி, பொருளாளர் அகில் குமரவேல், தோழர்கள் வழக்கறிஞர் ப.ஜீவா, லலிதா, மனோன்மணி, உமா, பரமேசுவரி, சசி, சிங்கை மனோகரன், தி.க. சம்பத், டென்னிசு, குமணன், வழக்கறிஞர் பாலச்சந்தர், அர. இராசன், தம்பு, பிரவீன், மணிகண்டன், பிரபாகரன், பிரகாசு, விஜி, ஜீவா, பத்ரன், ஞானவேல், பல்லடம் திருமூர்த்தி, ராமசாமி, தண்டபாணி மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். 

சேலத்தில் கருவறை நுழைவுப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்

சேலம் நகர கழகத்தின் சார்பாக 14.10.2012 ஞாயிறன்று மாலை 7 மணிக்கு ஜாகீர் அம்மாபாளையம் மெயின் ரோடு, தரும நகர் ஜங்ஷனில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும் கருவறை நுழைவுப் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டமும் பெரும் மக்கள் திரளோடு நடத்தப்பட்டது. சேலம் மாவட்டக் கழக அமைப்பாளர் தங்கராசு தலைமையில் இளங்கோ முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மேற்கு மண்டல அமைப்பாளர் கா.சு. நாகராசு, செயற் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, வழக்கறிஞர் இளங்கோவன் உரையாற்றினார்கள். கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன் நடத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி பொது மக்களைப் பெரிதும் ஈர்த்தது. பொதுக் கூட்டத் திடல் முழுவதும் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்திடையே கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் துரைசாமி, கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் வீரமணி நன்றி கூறினார்.

மிகச் சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெரும் மக்கள் கூட்டத்தைத் திரட்டும் வகையில் விளம்பரமும் செய்து எழுச்சியான நிகழ்ச்சி ஒன்றை கழகத் தோழர்கள் தங்கராசு, இளங்கோ, வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Pin It

குடந்தையருகே எரவாஞ்சேரி என்ற ஊரில் ஒரு ஜோஸியர் இருந்தார். அவரிடம் யார் போனாலும் முன்னதாகவே ரூபாய் 10 கொடுத்துவிட வேண்டும். அவர் 1லிருந்து 9க்குள் ஏதாவது ஒரு நம்பரையும் ஒரு மலரையும் நினைத்துக்கொள்ளச் சொல்வார். சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதுபோல நடித்து இரண்டு மூன்று தவணைகளில் அந்த நம்பரையும் மலரையும் சொல்லிவிடுவார்.

வந்த நபரும் வியந்து போவார். பிறகு கிளி ஜோஸியர்கள் சொல்லுவது போல இன்னும் 17 நாட்களுக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும். உன் வீட்டில் ஒரு தெய்வம் வசித்து வருகிறது. அதற்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வர தன விருத்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். கஷ்டமெல் லாம் தொலைந்துவிடும் என்று சொல்லி 10 ரூபாயைச் சுருட்டிக்கொள்வார். இது நடந்தது 1980களில்.

அந்தக் காலக்கட்டத்தில் கிளி ஜோஸியம் வெறும் 10 பைசாதான். கிளி ஜோஸியக்காரன் ஒரே ஒரு சிறிய புத்தகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிலுள்ள 103 கோடி மக்களுக்கும் ஜோஸியம் சொல்லிவிடுவான். அதுவும் அந்தச் சிறிய புத்தகம் 1920...30களில் அச்சிடப் பட்டதாக இருக்கும்.

உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கை அமைப்பு இன்னொருவருக்கு இருக்க முடியாது. 103 கோடி மக்களுக்கு 103 கோடி பக்கங்கள் உள்ள புத்தகம்தான் சரியானதாக இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, நமது எரவாஞ்சேரி ஜோஸியர் அக்கிரகாரவாசி என்பதால் அவர் இந்தப் புத்தகமெல்லாம் வைத்துக்கொள்ள வில்லை. அதில் சில பக்கங்களை மட்டும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டார். அது போதும் அவருக்குப் பிழைப்பு நடத்த. 10 பைசா கிளி ஜோஸியம் இவரிடம் 10 ரூபாய்.

ஒரு நாள் அதே ஊரைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர் மாஸ்டர் அரங்கராசன் என்கிற தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் அந்த ஜோஸியரைக் கடவுளாக மதித்த 10 பேரை அழைத்துக்கொண்டு போய் ஜோஸியரிடம் 10 ரூபாய் கொடுத்து தனக்கு ஜோஸியம் பார்க்கு மாறு கேட்டார். ஜோஸியர் வழக்கம்போல் 1லிருந்து 9க்குள் ஏதாவது ஒரு எண்ணையும் ஒரு மலரையும் நினைத்துக்கொள்ளச் சொன்னார்.

மாஸ்டர் அரங்கராசன் அவர்களோ ஒரு காகிதம் கொடுங்கள் அதில் நான் நினைத்த இரண்டையும் எழுதிக் கொடுத்து விடுகிறேன். பிறகு நாம் இருவரும் பொய் சொல்ல முடியாது. காகிதத்தில் உள்ள நம்பரையும் மலரையும் நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டால் உங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசாகத் தந்து ஜோஸியம் உண்மை என்பதை எல்லாரிடமும் விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார்.

ஜோஸியரோ கண்ணை மூடிக்கொண்டார். வேடிக்கை பார்க்க வந்த 10 பேரும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜோஸியர் :     நீங்கள் நினைத்தது... 3... ?

மாஸ்டர்   :     இல்லை...

ஜோஸியர் :     அப்படியானால்... 1...?

மாஸ்டர்   :     அதுவும் இல்லை

ஜோஸியர் :     ஐந்து தானே...?

மாஸ்டர்   :     இல்லை

ஜோஸியர் :     9 ஆக இருக்குமோ...?

மாஸ்டர்   :     இல்லவே இல்லை

ஜோஸியர் :     7 தான்...

மாஸ்டர்   :     7 தான் என்று உறுதியாகச் சொல்கிறீர்களா?

பாவம் அந்த ஜோஸியர்... திணறிப் போய் மீதமுள்ள 2, 4, 6, 8 என்ற எல்லா எண்களை யும் சொல்லிவிட்டார்.

அப்போதும் மாஸ்டர் இல்லையென்றார். உடனே அந்த ஜோஸியருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. என்னய்யா காலையில் வந்து கலாட்டா செய்கிறீர்கள்? உங்களிடம் நான் 1லிருந்து 9க்குள் தானே நினைக்கச் சொன்னேன். நான் எல்லா எண்களையும் சொல்லிவிட்டேன். உங்களுக்கு வேறு வேலை கிடையாதா? என்று சாடிக் குதித்தார்.

நமது மாஸ்டர் அவர்களோ மிகவும் பொறுமை யாக, தான் எழுதிய நம்பரை மட்டும் காண்பித்தார். அதில் 11/2 என்று எழுதப்பட்டிருந்தது. பிறகு மாஸ்டர் அவர்கள் பூவையாவது சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். உடனே ஜோஸியர் சினத்துடன் போய்யா உன் 10 ரூபாயும் வேண்டாம். உனக்குச் ஜோஸியமும் சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளே சென்று விட்டார்.

மாஸ்டர் எழுதிய பூ என்ன தெரியுமா? வாழைப் பூ... உடன் வந்திருந்த 10 பேரும் ஜோஸியருடைய பித்தலாட்டத்தைப் புரிந்து கொண்டார்கள். சுயமாகச் சிந்திக்கத் தொடங்கி னார்கள்.

(கொட்டைப் பாக்கு அளவு தலை, பட்டாணி அளவு மூளை, தன் சுதந்திரத்தைப் பறிகொடுத்து, சிறகுகள் வெட்டப்பட்ட கிளியிடம், பூசணைக்காய் அளவு தலை, பப்பாளி அளவு மூளை உள்ள மனிதன் தன் எதிர்காலத்தைப் பற்றி ஜோஸியம் கேட்கிறான்.)

Pin It