ஆண்டுதோறும் மார்ச் 8 அனைத்து நாட்டு மகளிர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும், இந்நாளில் பெண்கள் முன்னேற்றம், விடுதலை, சாதனைகள் சார்ந்த நிகழ்ச் சிகள், விழாக்கள் ஏற்பாடு செய்து நடத்தப் பெற்று வருவதும் பலரும் அறிந்த செய்தியே.

இன்று பெண்கள் பல துறை யிலும் முன்னேறியிருப்பதும், இதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் சார்பற்று தனித்து நின்று வாழும் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் ஆணுக்கு நிகரான சமத்துவம், சட்ட, சமூக ரீதியான பாது காப்பு உரிமைகள் அனைத்தும் வழங்கப்பெற்று, எல்லாத் துறையிலும் ஆணுக்கு நிகராகப் பெண்கள் பணி யாற்றியும் வருகிறார்கள்.

பொதுவாக பெண்களுக்கு சாத்தி யமற்ற துறை என்று பரவலாகக் கருதப் பட்ட காவல், ராணுவம், கனரக வாகனமோட்டுதல் முதலான பல்வேறு துறைகளிலும் இன்று பெண்கள் பங் கேற்று அப்பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

காவல் துறையில் சாதாரண காவலர் பணியிலிருந்து உயரதிகாரிகள் பணி வரை பார்ப்பது, ராணுவத்தில் ஆணுக்கு நிகரான சிறப்புப் படை யணிகளில் பங்கு பெற்று மிளிர்வது, தானி, பேருந்து ஓட்டுதல், கனரக வாக னங்கள் ஓட்டுதலுடன், முழுக்க முழுக்க அனைத்துப் பணிகளையும் பெண்களைக் கொண்டே நடத்தப் படும் - அதாவது விமானமோட்டி, துணை விமானமோட்டி, பிற பணி யாளர்கள் அனைத்தும் பெண்களே - விமானப் பயணச் சேவைகள், பெண் ஓட்டுநர்களைக் கொண்டே தொடர் வண்டிகளை இயக்குவது என மலைப் பூட்டும் சாதனைகளைப் பெண்கள் செய்து வருகின்றனர்.

என்றாலும் இத்தனைப் பெருமை கள் ஒருபுறம் இருந்தாலும் இந்த சாதனைகள் அளவுக்கு அவர்களுக்கு சமூகத்தில் பெருமை, மதிப்பு இருக் கிறதா? அவர்களுக்குரிய சமத்துவம் வழங்கப்படுகிறதா, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு புறம் ஆணா திக்க சமூகம், ஆணாதிக்கக் கருத்தியல் அவர்களை அடிமைப்படுத்துகிறது. இழிவுபடுத்துகிறது. சமூகத்தில் சம உரிமை அளிக்க மறுக்கிறது என்றால், மறுபுறம் பெண் கள் மீதான பாலியல் மற்றும் இதர கொடுமைகள் வன்முறை கள் நிகழ்த்தப்படுவதும், பெண்கள் இதற்குப் பலியாவதும் ஒருபுறம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஆண்டு கடந்து போன இதே மார்ச் 8 உலகெங்கும் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண் டாடப்பட்டு வரும் அதே நாள் தில்லி யில் ஒரு சம்பவம். தில்லி பல்கலைக் கழக தெற்கு வளாகத்தில் அமைந்திருக் கும் ராம்லால் கல்லூரியில் பயிலும் ராதிகா தன்வர் என்கிற ஒரு மாணவி, 22 வயது, பேருந்தை விட்டு இறங்கி சத்யா நிகேதன் அருகேயுள்ள நடை மேம்பாலத்தில் ஏறி நடக்கும்போது, பின்னால் வந்த ஒரு இளைஞன் தௌலாகான் என்பான் அவளைப் பின்புறமிருந்து சுட்டுவிட தன்வர் ரத்தச் சகதியில் சரிந்து மரணமடை கிறார். காரணம் தெரிய வில்லை. ஒரு தலைக் காதலாயிருக்குமோ என்கிற சந்தேகம்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சம்பவம். கல் மனத் தையும் கலங்கடிக்கக் கூடிய நிகழ்வு. அருண் தன்பக் என்னும் பெண், 22 வயது, கே.இ.எம். மருத்துவ மனையில் செவிலியராகப் பணி புரிந்து வந்தவர். மருத்துவ மனையிலேயே பணியாற்றும் சோகன்லால் வால்மீகி என்பவனால் கொடூரமான முறையில் நாய் சங்கிலி யால் கட்டிப் போட்டு பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். இந்தக் கட்டு அவருடைய மூளைக்கு உயிர் வாயு கொண்டு செல்லும் நரம் பில் தடை ஏற்படுத்த, அவர் பார்வை யிழந்து, செவியோசை இழந்து, உணர் வற்ற நிலையை அடைகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட சோகன் லால் கொலை முயற்சிக்காக வழக்கு தொடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விடுகிறான். பாதிக்கப் பட்ட அருண் மட்டும் கடந்த 38 வரு டங்களாக இதே நிலையில் இருந்து வர அவரைக் கருணைக் கொலை செய்துவிடலாம் என உறவினர்கள் கோரிக்கை வைக்க சட்டம் அதற்கு இடம் தரவில்லை என அவரை அதே நிலையில் வைத்திருக்கிறார்கள்.

இவை யிரண்டும் மாதிரிக்குச் சில தகவல்கள்தானே தவிர, பெண்கள் மீதான வன்முறையும், தாக்குதலும் நாளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் கிராமப் புறங் களை விடவும் நகர்ப்புறங்கள், பெரு நகரங்கள் பெண்களுக்குப் பாதுகாப் பற்ற¬வாக இருக்கின்றன. எல்லா பெருநகரங்களிலும் பெண் மீதான வன்முறைத் தாக்குதலில், தில்லி முத லிடம் வகிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசும் சமூக நிறு வனங்களும் பெண்கள் தினம் என்பதை ஏதோ ஆண்டுக்கு ஒருமுறை சடங்கு போல் கொண்டாடிக் கடனைக் கழிக்காது இவற்றையும் இதுபோன்ற பல வன்முறை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, பெண் களைப் பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். சமூகமும் இதுசார்ந்த விழிப்புணர்வைப் பெற்று பெண்களைச் சமூகச் சொத்தாக மதிக்க வேண்டும்.

Pin It