"இலஞ்சத்தை ஒழிக்க இளைஞர்களே முன் வாருங்கள்'' என்று இளைஞர் காங்கிரசுக் கட்சி மாநாட்டில் ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார்.

Rahul-Gandhi_370மகிழ்ச்சி! நல்ல அழைப்பு! உண்மை நிலை என்ன? 1993 ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் தலைøயிலான காங்கிரசுக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளு மன்ற உறுப்பினாகளுக்குத் தலா ரூ.1.00 கோடி லஞ்சம் பெற்றதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சார்ந்த சைலேந்திர மகதோ டெல்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் என்றும்.

2008 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசுக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீõமமானம் கொண்டு வந்தபோது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக மாநிலங்களவை உறுப்பினரும். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான அமர்சிங் கைது செயப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் நாம் அறிந்ததே.

இலஞ்சம் கொடுத்து ஆட்சி அதி காரத்தைத் தக்க வைத்துக்கொள்ள தயங்காத கட்சி காங்கிரசு கட்சி. இவர்கள் தான் இலஞ்சத்தை ஒழிக்கப் போகிறார்களாம்... நல்ல வேடிக்கை.

Pin It