குஜராத் கலவரத்தின்போது நரோடா பாட்டியா பகுதியில் 97 முஸ் லிம்களை படுகொலை செய்தும், எரித்தும் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று குஜராத் விரைவு நீதிமன்றத் தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் குஜராத்தின் முன்னாள் பெண் அமைச்ச ரான மாயா கோத்னானியும், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கியும்! இதில் பாபு பஜ்ரங்கிக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்திருந்தது நீதிமன் றம். இதனையடுத்து பாபு பஜ்ரங்கி அஹ மதாபாத்திலுள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப் பட்ட பாபு பஜ்ரங்கி சிறைவாசிகளால் கடு மையாக தாக்கப்பட்டிருக்கிறார்.

பஜ்ரங்கியை தாக்கியது யார் என்று பார் த்தால்... கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தி லும், 2008 அஹமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் என்று குஜராத் போலீசாரால் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள்தான்! பஜ்ரங்கியை சிறைவாசிகள் பின்னியெ டுக்கும் தகவல் அறிந்து சிறை அதிகாரிகள் அவரை காப்பாற்றியிருக்கின்றனர். இந்தத் தகவலை சபர்மதி சிறை அதிகா ரிகளே தெரிவித்துள்ளனர். அதே சமயம், இதனால் பிரச்சினைகள், விசாரணைகளை சந்திக்க நேரிடும் எனக் கருதிய சிறைத்துறை இந்த தகவலை மறுத்துள்ளது.

பாபு பஜ்ரங்கிக்கும், முஸ்லிம் சிறைவாசி களுக்குமிடையில் சூடான வாக்குவாதங்கள் தான் நடைபெற்றன என்றும், பாபு பஜ்ரங்கி இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் மழு ப்பியுள்ளது சிறைத்துறை. ஆனால் இதே சிறைத் துறை இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டி ருப்பதாகவும் முரண்பட்டு பேசுகிறது. சம்ப வம் நடக்கவில்லை என்றால் விசாரணை எதற்கு என்று புரியவில்லை.

சம்பவம் நடந்த தினத்தன்று சிகிச்சைக் காக பாபு பஜ்ரங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கி றார். எதற்காக பாபு பஜ் ரங்கி மருத்துவமனை க்கு கொண்டு செல் லப்பட்டார் என் றால்... "அவருக்கு காய்ச்சல். அதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு இரத்தப் பரி சோதனைக்கு உள் ளாக்கப்பட்டார். அப் போது தற்செயலாக கோத்ரா ரயில் எரிப்பு வழக் கில் சம்மந்தப்பட்டிருக்கும் சிறை வாசிகளில் சிலர் அங்கே (மருத்துவமனையில்) இருந்த னர். அப்போது பாபு பஜ்ரங்கிக் கும் மற்ற சிறைவாசிகளுக்கும் இடை யில் வாக்குவாதம் நிகழ்ந் தது...” என்று முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டுகிறது சிறைத்துறை.

தற்செயலாக அங்கே முஸ்லிம் கைதிகள் வரக் காரணம் என்ன? அவர்கள் ஏன் மருத்துவமனைக்கு வந்தார்கள் என்பதற்கு சிறைத்துறை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பாபு பஜ்ரங்கி தாக்கப்பட் டதை செய்தியாக வெளி யிட்டிருக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில ஏடு, "பாபு பஜ்ரங்கியை கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சிறை வாசிகள் தாக்கிய போது அவர்களுடன் அஹ்மதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந் தப்பட்ட சிறைவாசிகளும் சேர்ந்து கொண்டு சிறைக்குள்ளேயே பஜ் ரங்கியைத் தாக்கினர்...' என கூறுகிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த் தால் பாபு பஜ்ரங்கியை சிறைவாசிகள் பின்னியெடுத்திருக்கிறார்கள் என் பது தெளிவாகத் தெரிகிறது.

பஜ்ரங்கி தாக்கப்பட்ட செய்தியை அறிந்த விஷ்வஹிந்து பரிஷத்தின் அகில உலக (?) செயல் தலைவரான பிரவீன் தொகா டியா சபர்மதி சிறைச்சாலை வாசலில் தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார். அதோடு, “உயர் பாதுகாப்பு போடப்பட் டிருக்கும் சிறைச்சாலைகள் உள்பட குஜராத் தில் எங்கும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து நாங்கள் சொல்லி வருகிறோம்...” எனக் கூறி பாபு பஜ்ரங்கிக்கு சிறையில் அடி விழுந்திருப் பதை தன் பங்கிற்கு உறுதிபடுத்தியிருக்கி றார்.

குஜராத்தில் முஸ்லிம் படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது வெளியே உள்ள முஸ்லிம்களுக்கு இருக்கும் கோபத்தைப் போலவே, சிறைக்குள்ளே இருக்கும் முஸ் லிம்களுக்கும் இருக்கும். அந்த கோபத்தைத் தான் பஜ்ரங்கி மீது வெளிப்படுத்தியிருக்கி றார்கள் முஸ்லிம் சிறைவாசிகள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

- ஃபைஸ்

Pin It