முஸ்லிம்களை பயங்கரவாத நடவடிக்கைக ளோடு சம்மந்தப்படுத்தி முஸ்லிம் சமுதா யத்திற்கு மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை உண்டு பண்ணும் வேலையை இந்தியாவில் காவல்துறை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. காவல் துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத் தில் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்ட பின்பும் முஸ் லிம் இளைஞர்களை துன்புறுத்தும் புதிய புதிய வழி முறைகளைத் தேடித் திரிகிறது காவல்துறை.

மும்பை தாக்குதல் வழக்கிலி ருந்து சில நாட்களுக்கு முன் ஃபஹிம் அன்சாரி மற்றும் சபா ஹுத்தீன் இருவரையும் மும்பை நீதிமன்றம் விடுவித்தது. நீதிமன் றம் இவ்வழக்கில் மும்பை காவல் துறையின் முகத்தில் ஓங்கி அறைந் திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் ஃபஹிம் அன்சா ரிக்கும் சபாஹுதீனுக்கும் மும்பை தாக்குதல் சம்பவத்தில் பங்கிருக் கிறது என்பதை நிரூபித்துவிட வேண்டும் என சட்ட விரோத மான அத்தனை காரியங்களிலும் ஈடுபட்டது மும்பை காவல்துறை.

ஹைதராபாத் மக்கா பள்ளிவா சல் குண்டு வெடிப்புச் சம்பவத்தி லும் முஸ்லிம் இளைஞர்கள் பொய்யாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இறுதியில் நீதிமன்றம் அவர்களை நிரப ராதி என்று விடுதலை செய்த போது, ஆந்திர அரசு செய்த காரி யம் அந்த இளைஞர்களிடத்தில் மன்னிப்பு கேட்டது!

பின்னர் அந்த இளைஞர்களுக்கு இழப்பீடு தந்தது ஆந்திர அரசு. இதோடு அது நிறுத்திக் கொள்ளவில்லை. காவல்துறை தவறு செய்து விட்டது. அதற்கா கவும் ஆந்திர அரசு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தது.

ஆந்திர அரசின் இந்தச் செயல் பாராட்டப்பட வேண்டியது தான் என்பதில் மாற்றுக் கருத் தில்லை. அதே சமயம், அந்த முஸ் லிம் இளைஞர்களின் தவறான கைதுக்கு காரணமானவர்கள், அந்த இளைஞர்கள் வருடக்க ணக்கில் சிறையில் வாடவும், சமூ கத்தில் தீவிரவாதிகள், பயங்கர வாதிகள் என்ற முத்திரையோடு மீதி வாழ்நாட்களை கழிக்கவும் காரணமான காவல்துறையினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற மும் இக்காவல்துறையினரை தண்டிக்கவில்லை. ஆந்திர அரசு காயத்திற்கு களிம்பு தடவியிருக்கி றதே தவிர நீதியை நிலை நாட்ட வில்லை.

இப்பொழுது நாட்டு மக்கள் எல்லோருடைய பார்வையும் பெங்களூரு காவல்துறையின் மீது பதிந்திருக்கிறது. ஆகஸ்டு மாத இறுதியில் கட்டமைக்கப் பட்டிருந்த ஒரு பயங்கரவாதச் சதித் திட்டத்தை கண்டு பிடித்து விட்டதாகக் கூறி 11 முஸ்லிம் இளைஞர்களை அண்மையில் கைது செய்தது பெங்களூரு காவல் துறை, இந்த வழக்கில் குறிப்பிட்டுக் கூறும்படியான அம்சம் என்னவென்றால் இந்த வழக்கில் குறிப்பிட்டுக் கூறும்படியான அம்சம் என்னவென்றால் இந்த 11 இளைஞர்களும் உயர் கல்வி கற்றவர்கள்.

இந்த வழக்கில் புதுத் திருப்பம் கொடுக்க முயற்சிக்கும் பெங்க ளூரு போலீஸ்; கைது செய்யப் பட்ட இளைஞர்கள் அனை வரும் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந் தவர்கள் எனக் கூறுகிறது.

குறிப்பிட்ட வகுப்பினர் என்பதால் அவர்கள் பயங் கரவாதிகள். அதனால் தான் அவர்களைக் கைது செய்தோம் என்பதுதான் இதன் அர்த்தம். முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப்படும்போ தெல்லாம் அனைத்து முஸ்லிம்க ளும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு குரலெழுப்பி வந் துள்ளனர்.

இதன் மூலம் இந்த இளைஞர்க ளுக்கு சட்ட உதவிகள் கிடைத் துள்ளன. முஸ்லிம்கள் நீதிமன் றத்தை அணுகியதால் காவல்து றையினரால் குற்றம் சாட்டப் பட்ட முஸ்லிம்கள் பலர் அப்பா விகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் கைதின் தொடர் சம்பவங்களைப் பார்த்தால்... முஸ் லிம்களுக்கு கெட்டப் பெயரை அல்லது இழிவை ஏற்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றே தெரிகிறது.

இதுபோன்ற முயற்சிகள் காவல்துறை தனது வேலையை சுலபமாக செய்ய ஏதுவாக அமை ந்து விடுகின்றன. இந்திய முஸ் லிம்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவி னரை பயங்கரவாதிகளாக அடை யாளப்படுத்தினால் ஏனைய நாடு களில் வாழும் முஸ்லிம்கள் இவர் களை விட்டு விலகியிருப்பார்கள்.

இப்படி நடக்கும்பட்சத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் காவல்துறையும், பாதுகாப்பு அமைப்புகளும் அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை இலக்காக்க, சிறந்த வாய்ப்பாக்கிக் கொள்ள முடியும் என்கிற செயல் தந்திர த்தை இந்திய காவல்துறை மேற் கொண்டு வருகிறது என்கிறது சியாசத் உருது நாளிதழ்.

இந்தியாவெங்கும் முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறையின ராலும் பாதுகாப்பு அமைப்புகளி னாலும் பயங்கரவாதிகளாக சித் தரிக்கப்பட்டு வரும் வேலையில் முஸ்லிம் சமுதாயம் தமது பொறு ப்புகளை அலட்சியப்படுத்தி விட முடியாது.

ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் குழுவினரை பயங்கரவாதிகள் என்று காவல்துறை குற்றம் சாட் டும்போது அது கண்டிப்பாக எதிர்காலத்தில் மற்றொரு முஸ் லிம் குழுவினரையும் பயங்கர வாதி என்று நிச்சயமாக குற்றம் சாட்டும். ஒரு பிரிவு முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக அடையாள ப்படுத்தப்படும்போது பொது வாக இன்னொரு பிரிவு அல்லது இயக்கம் சார்ந்த முஸ்லிம்கள் அமைதி காக்கிறார்கள். இதன் மூலம் நாட்டிலுள்ள முஸ்லிம்க ளுக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டு தங்களுக்குள் சிறு பிரிவுகளாக அவர்கள் பிரிந்து நிற்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயம் இப்படி பிளவுபட்டு நிற்கும்போது முஸ் லிம்கள் மீது தீய எண்ணங்களை செயல்படுத்தும் முயற்சிகள் முஸ் லிம்களின் எதிரிகளுக்கு சுலபமா கிவிடுகிறது. இப்படிப்பட்ட நிகழ் வுகளின்போது நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, முஸ்லிம் எதிரிகளின் அடக் குமுறைகளையும், தீங்கு தரும் முயற்சிகளையும் முறிய டிக்க முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் முஸ்லிம்க ளுக்கு மத்தியில் இருக்கும் அமை தியின்மை, பய உணர்வு, குழப்பம் போன்றவற்றை களைய மார்க்க அறிஞர்கள் முன் வர வேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை விரட்டியடிக்க ஒரு பொது திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

இஸ்லாத்தில் பயங்கரவாதத் திற்கு இடமில்லை என்பதில் சந் தேகமில்லை. வாய்ப்புக் கேடாக ஒரு முஸ்லிம், அவன் எந்த பிரி வைச் சேர்ந்தவனாக இருந்தா லும் அவன் பயங்கரவாதத்தில் ஈடுபட்டானென்றால்... தேச நலனுக்கு சேதம் விளைவிக்க கார ணமாகிறான் என்றால் அவ னுக்கு எதிராக சட்ட நடவடி க்கை எடுக்கப்பட வேண்டும் என் பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. அவனுக்கு கடுமையான தண்டனை வழங் கப்பட வேண்டும் என்பதிலும் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதே சமயம், ஒரு அப்பாவி முஸ்லிம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டால்... அவன் எந்த பிரிவை - இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் முஸ்லிம் சமுதாயத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற சூழலில் அனைத்து முஸ்லிம்களும் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள், இயக்க மாறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஒருமுகத் தன்மையையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது.

தமக்கிடையேயான உட்பிரச்சினை சாதகமாக பயன்படுத்தப்பட்டு தம்மையே தொல்லை கொடுக்க முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு அனுமதிக்க கூடாது.

- ஹிதாயா

Pin It