நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படத்தை எதிர்த்து இரு வார காலமாக உலக முஸ்லிம்கள் கொந்தளித்த நிலையில் உள்ளனர். தங்களது உணர்வுகளை ஆக்ரோஷ அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களாகவும், அமெரிக்க கொடிகளை எரித்தும், ஒபாமாவின் உருவ பொம்மைகளை எரித்தும், ஆர்ப்பாட்டங்கள் மூலம் கண்டன முழக்கமிட்டும் பலவாறாக வெளிப்படுத்தி வருகின்றனர் உலக முஸ்லிம்கள்.

இவை அறவழிப் போராட்டங்களாகவும், சில இடங்களில் வன்மு றைப் போராட்டங்களாகவும் வெளிப்பட்டு வரும் நிலையில், டெல்லியிலிருந்து இயங்கும் குதாய் கித்மாக்கர் (இறை சேவையாளர்கள்) என்ற அமைப்பினர் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான உணர்வுகளை சாத்வீகமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள அமெ ரிக்க சென்ட்டருக்கு வெளியே கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கூடிய 10க்கும் மேற்பட்ட இவ்வமைப்பினர், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூல்களை அமெரிக்க சென்டரில் பணியாற்றுபவர்களுக்கும், அவ்வழியே சென்ற பாதசாரிகளுக்கும் இலவசமாக வழங்கியுள்ளனர்.

இந்த இளைஞர்கள் குழுவிற்கு தலைமையேற்றிருந்த ஃபைஸல் கான், “நபிகள் நாயகத்தைப் பற்றி பேராசிரியர் கே.எஸ். ராவ் எழுதிய "இஸ்லாம் கே பயகாம்பர் ஹஸரத் முஹம்மது (இஸ்லாத்தின் இறைத் தூதர் நபிகள் நாயகம்) என்ற நூலின் 125 பிரதிகள் அரை மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்பட்டு விட்டன. அலுவலகம் முடிவுற்ற நேரம் என்பதால் படித்த மக்கள், ஆண் கள், பெண்கள் மற்றும் அமெரிக்க சென்டருக்கு அருகாமையிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றுபவர் களும் சந்தோஷமாக இந்த நூல்களைப் பெற்றுச் சென்றனர்...” என்கிறார்.

இவர்கள் நூல்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்த போலீஸ், அவர்கள் வைத்திருந்த கேமிராவை பிடுங்கி அதிலிருந்த போட்டோக்களை அழித்திருக் கிறது.

“அமெரிக்கன் சென்டருக்கு வெளியே காவல்துறை எங்களை அனுமதிக்காது என்பதை நாங்கள் அறிந்தே வைத்திருந்தோம். அத னால் நாங்கள் சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டி ருந்தோம். சரியாக (அலுவலகம் முடிவடையும் நேரமான) 6 மணி க்கு அமெரிக்கன் சென்ட்டரின் நுழைவு வாயிலில் நின்று கொண் டோம். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது நாங்கள், "நூல்க ளைத்தானே விநியோகித்துக் கொண்டிருக்கிறோம். எவ்வித சட்ட மீறலிலும் நாங்கள் ஈடுபட வில்லையே' என காவல்துறையின ரோடு வாதம் செய்தோம்.

மேலும் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதே டெல்லியின் பாலிகா பஜார் பகுதியில் அவர்களது வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு நாள் முழுக்க இந்து மத நூல்கûளை விநியோகம் செய்து கொண்டிருந்தார்களே அவர்களை ஏன் நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை...? என்றும் கேள்வியெழுப்பினோம். அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் நாங்கள் நூல்கள் விநியோகித்துக் கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்தார். உடனே பாய்ந்து வந்த போலீசார் கேமிராவைப் பிடுங்கி அதிலிருந்த புகைப்படங்களை அழித்தனர்...” என்கிறார் பைசல்கான்.

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி விடுபவர்களை கண்டு கொள்ளாத காவல்துறை, முஸ்லிம்கள் எதிர் வினையேற்றும்போது மட்டும் அதை தடுக்க முற்படுவது தான் வன்முறை நெருப்பு நெஞ்சில் சுடர்விட்டெறிய வாய்ப்பாக அமைகிறது.

எதிர்ப்புகளை ஆவேசமாக வெளிப்படுத்தினாலும், வன்முறையாக வெளிப்படுத்தினாலும் தடுக்கும் காவல்துறை, சாத்வீக முறையில் எதிர்ப்புகளை பதிவு செய்தாலும் பாசிடிவ் அணுகுமுறையை கடைபிடித்தாலும் அதையும் தடுக்கிறது. இந்த நிலையில் என்னதான் செய்வது?

மதச்சார்பற்ற, ஜனநாயக நாட் டில் இந்த உரிமைகளை மறுத்து, பல நேரங்களில் வன்முறைகளுக்கு காரணமாக அமைகின்ற காவல்து றையைத்தான் முதலில் தடை செய்ய வேண்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

- அபு

Pin It