‘மாணவன் என்போன் மாண்புடையோன்' என்பது சான்றோர் வாக்கு. ஆனால் அண் மைக் காலமாக செய்தித் தாள்களில் வெளிவரும் மாணவர்கள் குறித்த செய்திகள் கவலை அளிக்கும் விதத் தில் அமைந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்னால் பேருந்து ஒன்று எழும்பூர் பேருந்து நிலையத்தில் நின்றபோது, அங்கு காத் திருந்தவர்கள் பேருந்தில் வந்தவர்கள் மீது உருட்டுக் கட்டை, கத்தி, அரிவாள் போன்ற கொடிய ஆயுதங்களால் தாக் கினார்கள்.

பேருந்தில் இருந்தவர்கள் இறங்கி ஓட அவர் களை விரட்டி விரட்டி தாக்கினார்கள். அந்தப் பகுதியே போர்க் களமாக காட்சி அளித் தது. பிறகு தான் தெரிந்தது தாக்கியவர்களும், தாக்குதளுக் குள்ளானவர்களும் மாணவர்கள் என்று.

அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்கள் இரண்டு குழுக்களாக மோதிக் கொண்டது தொலைக்காட் சிகளில் ஒளிபரப்பப்பட்டு பார்ப்பவர்களை பதைப தைக்க வைத்தது.

அதேபோன்றதொரு நிகழ்வு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மீண்டும் நிகழவிருந்தது. மாணவர்க ளிடையே ஏற்பட்ட சிறு தகராறு மோதலாக உரு வெடுத்தது. இதனையடுத்து எச்சரிக்கையுணர் வோடு கல்லூரி முதல்வர் நாராயணப் பெருமாள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உதவி கமிஷ்னர் முரளி தலைமையில் கல்லூரி யில் நுழைந்த காவல்துறை இரண்டு பிரிவுகளுக் கும் இடையே அரணாக நின்றனர்.

உதவி கமிஷ்னர் முரளியின் இந்த சமயோசித நடவடிக்கையால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இதுபோன்றதொரு முன்னெச்சரிக்கை நடவடிக் கையை போலீசார் மேற்கொண்டபோதும் கடந்த வாரம் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலை தடுக்க முடியவில்லை.

மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவ ரின் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடிய போது எதிர் தரப்பினர் அவர்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்டனர். உள்ளே புகுந்து அவர்களை கலைத்த போலீசார் கல்லூரியில் சோதனை நடத்தி 15 பட்டா கத்திகளையும், உருட்டுக் கட்டைகளையும் கைப்பற்றினர். இருந்தபோதும் விடுமுறைக்கு பிறகு கல்லூரி துவங்கிய நாளில் ஆயுதங்க ளோடு உள்ளே புகுந்த ஒரு பிரிவினர் எதிர் தரப்பி னர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் கத்தியால் குத்தப்பட்ட இரண்டு மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் மாண வர்கள் வகுப்பறையில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதாக இவ்வளவு நாள் செய்திகளில் பார்த்து வந்தோம். தற்போது தமிழக மாணவர்கள் மத்தி யிலும் இந்தக் கலாச்சாரம் பரவி வருகிறது.

மாணவர்கள் மத்தியில் எதிரி மனப்பான்மை ஏன் என்று ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பல் வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாண வர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். நகர்ப்புறத்தில் வீடுகளில் தங்கி கல்லூரிக்கு வரும் மாணவர்கள் விடுதி மாணவர்களை மதிப்பதேயில்லை. இதனால் விடுதி மாணவர்கள் ஒரு பிரிவாகவும், வீடுகளில் தங்கியிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் செயல்படுகின்றனர்.

ஒரு பகுதியிலிருந்து பஸ்களில் தொடர்ந்து வரும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும், மற்றொரு பகுதியில் இருந்து வருபவர்கள் மற்றொரு பிரிவா கவும் செயல்படுகின்றனர்.

இதில் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத் திற்காக மாணவர்களை பகடைக் காய்களாக்கும் அவலங்களும் உண்டு.

மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் சிற்பி கள். இவர்களை சீரிய முறையில் வளர்த்தெடுக்க வேண்டியது அரசு மற்றும் சமுதாயத்தின் பொறுப் பாகும்.

மாணவர்கள் சமீப காலமாக அதிக அளவு மோதல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற அதே நேரத்தில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் வழங்குவதில் மாண வர்கள் முன்னணியில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆகவே மாணவர்கள் வன்முறையாளர்கள் என்று ஒதுக்காமல் அவர்களுடைய பிரச்சினைக் குத் தீர்வு கண்டு அவர்களை நல்வழிப்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பு.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3 : 104)

Pin It