இந்திய, இலங்கை அரசியல் தலைவர்கள் எந்த விஷயத்திற்காக சந்தித்துக் கொண்டாலும் அதில் தவறாமல் இடம் பெறுவது இலங்கை இனப் பிரச்சினைதான். இதைப்பற்றி பேசாமல் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு முழுமை பெறாது. இலங்கையில் அதிகாரப் பரவ லாக்கல் முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்தை தொடர்ந்து இந்தியாவின் தரப்பி லிருந்து வலியுறுத்தப்படும். அதற்கு இலங்கை தலைவர்கள் இசைவு தெரிவிப்பார்கள்.

இந்தியாவிற்கு மட்டுமல்ல... ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் அதிகாரப் பரவல் முறை பயன்படுத்தப்படும், பலப் படுத்தப்படும் என்றெல்லாம் இலங்கைத் தலைவர்கள் வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? இலங்கை அரசாங்கமே வெளியிட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளிலும் அதிகாரப் பரவலாக்கல் முறை பலப்படுத்தப் பட வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப் பரவலாக்கல் என்பது இந்தியாவுடன் இல ங்கை செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத் திருத்தத் துடன் சம்மந்தப்பட்டது. (இது தொடர்பாக கடந்த 04-06, 2012 தேதியிட்ட நமது இதழில் முகப்பு செய்தியாக வெளியிட்டிருந் தோம்)

இந்த சூழலில்தான் 13வது சட் டத் திருத்தம் ஒழிக்கப்பட வேண் டும் என முதல் குரல் எழுப்பினார் இலங்கை பாதுகாப்பு அமைச்ச ரும், இலங்கை அதிபரின் சகோத ரருமான கோத்தபய ராஜ பக்சே.

இவரை அடுத்து, இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக் கின்ற தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் 13வது சட்டத் திருத் தத்திற்கு எதிராக கருத்துகளைக் கூற, இவர்களைத் தொடர்ந்து அதிபர் ராஜ பக்சேவின் இன் னொரு சகோதரரும், அபிவிருத்தி துறை அமைச்சருமான பசில் ராஜபக்சேவும் 13வது சட்டத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று பேசியதால் இப்பிரச்சினை பெரும் சர்ச்û சயை கிளப்பியுள்ளது.

அதிகாரப் பரவலாக்கலை பொது வாக சிங்களத் தலைவர்கள் விரும் பவில்லை என்பதை அவர்கள் பல் வேறு தருணங்களில் வெளிப்ப டுத்தியே வந்துள்ளனர்.

13வது சட்டத் திருத்தத்தை இல்லாது ஆக்க வேண்டும் என்று தனது கூட்டணிக் கட்சிகளையும், கோத்தபய மற்றும் பசில் ராஜபக் சேக்களையும் ஒருபுறம் தூண்டி விட்டு, பிரச்சினை சர்ச்சையைக் கிளப்பியவுடன் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை வைத்து பத்திரி கையாளர் சந்திப்பை நடத்தி, “13வது சட்டத் திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. ஆளுந்தரப்பில் உள்ளவர்கள் தான் இப்படி கூறி வருகிறார்கள். 13வது சட்டத் திருத்தம் என்பது அரசியல் அமைப்பின் ஓர் அங்கம். அதனை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என் கிற ரீதியில் எங்க ளுக்கு கடமை இருக்கிறது...'' என அவரை பேச வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு.

இதற்கிடையில், மாகாண சபைகளுக்கான நிதி ஆதாரத்தின் அதிகாரங்களை குறைக்கும் அல் லது பறிக்கும் வகையில் அண் மையில் சிங்கள அரசு திவிநெகும என்ற சட்டத்தை பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் நிறைவே ற்றியுள்ளது. தமிழ் தரப்பினர் இச் சட்டத்தைகாக எதிர்த்து வருகின் றனர். நீதிமன்றத்தில் இச்சட்ட மூலத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குகளையும் அவர்கள் தொடுத்திருக்கின்றனர்.

இந்த திவிநெகும சட்டத்திற்கு 13வது திருத்தச் சட்டம் தடையாக இருந்தால் அதனை பொது மக்க ளின் கருத்துக் கணிப்புக்கு விட வேண்டும் என பசில் ராஜபக்சே வும், 13 சட்டத் திருத்தத்தை அப்பு றப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரான விமல் வீரவன்சவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

13வது திருத்தச் சட்டம் வட கிழக்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதும், திவிநெகும சட்ட மூலம் மாகாண பொருளாதார அபி விருத்தி, புனர் வாழ்வு, வறுமை ஒழிப்பு போன்ற மாகாண சபைகளுக்குரிய உரி மைகளை மத்திய அரசு கைப்பற் றும் வகையிலும் - மாகாண சபை களுக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரங்களை குறைத்து, பொது நிதியை கையாளும் அதிகாரம், காணி அதிகாரம் போன்றவற்றை யும் பறிக்கும் விதத்திலும் வடிவ மைக்கப்பட்டிருப்பதும்தான் இவர்கள் இருவரும் இப்படி கருத்து கூறக் காரணம்.

ஆனால் வட கிழக்கில் ஓரள விற்கு செல்வாக்குடன் திகழ்ந்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் கட் சியோ, 13வது சட்டத் திருத் தத்தை இல்லா மல் ஆக்க வேண் டும் என தெரிவிக் கப்படும் கருத்து களை கண்டித் திருப்ப துடன், இப்படி பேசுவது வட கிழக்கு மக்கள் தங் கள் சுதந்திரம் திடீரென பறி போய் விட்டது என்று பீதியடையும் நிலைமைக்கு அவர்களை ஆளாக்குவதாகும் என தெரிவித்துள்ளது.

அத்தோடு, 13வது சட்டத் திருத்தத்தை ஒழிக்க பொது ஜன வாக்கெடுப்பை நடத்த வேண் டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது வடக்கு - கிழக்கு மக்கள்தானே தவிர தெற்கிலுள்ள (சிங்கள பிரதேச) மக்கள் அதை தீர்மானிக்க முடியாது. மாகாண சபைகள் எங்கு தேவையோ அங் குதான் கருத்துக் கணிப்பு நடத் தப்பட வேண்டும். ஒட்டுமொத்த மாக தேசிய அளவில் நடத்தப்ப டக் கூடாது. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக இவ் வாறு கருத்துக் கணிப்பு பற்றி கூறுவது ஆரோக்கியமானதல்ல எனவும் தெரிவித்துள்ளது.

எப்படிப் பார்த்தாலும் வட கிழக்கில் தமிழர்களுக்கு அதிகா ரம் கிடைக்கக் கூடாது என்கிற திட்டங்களை தீட்டி இலங்கை அரசு செயல்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

“இந்திய - இலங்கை ஒப்பந்தம் வழிகாட்டுகின்ற 13வது சட்டத் திருத்தத்தை இல்லாமல் ஆக்கி இன்று ஒட்டுமொத்த இலங்கை யில் இருக்கின்ற ஒன்பது மாகா ணங்களின் எல்லைகளை புதிதாக வகுத்து 5 மாகாணங்களாக மாற்றி, அதன் மூலம் தமிழர்களுக்கு அர சியல் அதிகாரம் கிடைக்க விடா மல் செய்யவே இலங்கை அரசு துடிக்கிறது. இந்த இலக்கை வைத்தே அது காய் நகர்த்துகி றது...'' என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

முழு நாட்டையும் சிங்கள, பௌத்த நாடாக மாற்ற வேண் டும் என்பதுதான் இலங்கை அரசின் கொள்கைத் திட்டம். இதன் முதற்கட்டமாக மாகாண சபைகளை ஒழிக்க 13வது சட்டத் திருத்தம் ஒழிக்கப்படும். அடுத்த கட்டமாக நாட்டின் ஒன் பது மாகாணங் கள் மாற்றிய மைக்கப்பட்டு ஐந்து மாகாண ங்களாக வரைய றுக்கப்படும்.

அதன் பின் வட மாகாணத்தில் தமிழர்க ளும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருக்க மாட்டார்கள். இரு பெரும் சமூகமும் சிறு பான்மையாக மாற்றப்பட்டு - இந்த ஐந்து மாகாணங்களில் இரு சமூக அரசியல் பிரதிநிதித்துவமும் குறைக் கப்படும்.

இதைத்தான் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அரசு கருதுகிறது. அதை நோக்கித்தான் அதன் நகர்வுகளும் இருக்கிறது என்பது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வகை யில் புரிந்து கொள்ள முடிகிறது.

வட கிழக்கின் அதிகாரத்தை பறிக்கும் சிங்கள அரசின் மறை முகத் திட்டத்தை வட கிழக்கின் முஸ்லிம்களும், தமிழர்களும் முழு பலம் கொண்டு எதிர்க்க வேண்டும். அரசியல் காரணங் களுக்காக இவற்றை அலட்சியம் செய்து விடக் கூடாது.

- அபு

Pin It