ஆந்திர மாநிலம், ஹைதரா பாத் தில்சுக் நகர் பகுதியில் கடந்த 21ம் தேதி நடை பெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. தில்சுக் நகரில் மக் கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் பகு தியிலும், கொனார்க் மற்றும் வெங்கடடிரி தியேட்டருக்கு அருகிலும் இந்த குண் டுகள் வெடித்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட் டுள்ளனர். 118 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆந் திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள் ளார்.

சைக்கிளில் கட்டப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண் டுகள் வெடித்ததில் 1.5 கிலோ மீட்டர்வரை குண்டு வெடிப்பு சப்தம் கேட்டிருக்கிறது. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளிலிருந்து தடயங்களை சேகரிக்கும் பணிகளில் தேசிய புலனாய்வு நிறுவனம், தேசிய பாதுகாப்பு படையின் தடயவியல்துறை மற் றும் மாநில காவல்துறை ஆகியவை ஈடுபட்டு முதல் கட்ட விசாரணையை வேகமாக முடித்துள்ளன.

இந்த முதல்கட்ட விசாரணையில் இரட்டை குண்டு வெடிப்பில் ஈடுபட்டது இந்தியன் முஜாஹித் தீன் என்கிற அமைப்பாக இருக்கும் என சந்தேகப்படு வதாக விசாரணை அமைப்புகள் கடந்த 22ம் தேதி மாலை தெரிவித்துள்ளன. இதன் மூலம், முதல் கட்ட விசாரணையே கோணலாக செல்கிறது என் பது தெரிகிறது.

இந்தியன் முஜாஹித்தீன் என்கிற இல்லாத அமைப்பை வைத்துக் கொண்டு இதுபோன்ற குண்டு வெடிப்புகளின்போது முதல்கட்ட விசாரணையி லேயே இந்தியன் முஜாஹித்தீன் மீதுதான் சந்தேகம் இருக்கிறது என்று முஸ்லிம்களைத் தொடர்புபடுத் தும் அரசியல் சதியை விசாரணை அமைப்புகள் அதி கார மையங்களின் ஆணைப்படி தொடர்ந்து அரங் கேற்றியே வந்திருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் நீட்சிதான் தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திலும் இந்தியன் முஜாஹித்தீன் என்ற கற்பனை அமைப்பை சம்மந்தப்படுத்தியிருப்பது.

இந்தியன் முஜாஹித்தீன் சிமியின் நிழல் அமைப்பு என்றெல்லாம் டெல்லி போலீஸ் பரப்புரை மேற் கொண்டு வருகிறது. ஆனால், இந்த அமைப்பே டெல்லி போலீஸின் மூளையில் உதித்த கற்பனை அமைப்புதான் என்று எழுத்தாளர் அருந்ததி ராய் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு டெல்லி போலீஸாரிடத்திலிருந்து இது வரை பதிலில்லை.

இதேபோல, மிகச் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந் தித்த முஸ்லிம் எம்.பி.க்கள், இந்தி யன் முஜாஹித்தீன் அமைப்பின் தலைவர் யார்? அந்த அமைப் பின் அலுவலகம் எங்கிருக்கிறது? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். அத ற்கு பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.

இந்த அமைப்பு மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யால் முஸ்லிம் இளைஞர்களை துன்புறுத்துவ தற்காக உருவாக்கப்பட்டது என் றுதான் முஸ்லிம்களும், மனித உரிமை ஆர்வலர்களும்கூட நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

பிப்ரவரி 23, 2005ல் நடை பெற்ற வாரணாசி குண்டு வெடிப் பின்போதுதான் முதன் முதலில் இந்தியன் முஜாஹித்தீன் என்கிற பெயரை உச்சரித்தன விசாரணை அமைப்புகள்.

வாரணாசி குண்டு வெடிப்புக் குப் பின்னர் நிகழ்ந்த பெங்களூர் தொடர் குண்டு வெடிப்புகள், டெல்லி ஜும்மா மஸ்ஜித் துப் பாக்கிச் சூடு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மஹாராஷ் டிரா மாநிலம் நான்டெட் மற் றும் மாலேகான் ஆகிய பகுதி களில் நடந்த குண்டு வெடிப்புகள் என அனைத்திலும் இந்தியன் முஜாஹித்தீன் சம்மந்தப்பட்டி ருக்கிறது என்றுதான் முதலில் விசாரணை அமைப்புகள் அல றின. முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தன.

ஆனால், இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கள் நிரபராதிகள் என்று கூறி பல வருட கால சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றங்கள் விடுதலை செய்தன. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது இந்துத்துவா அமைப்பினர் என்பதும் புல னாய்வு நிறுவனங்களால் கண்ட றியப்பட்டன.

ஆயினும், இந்தியன் முஜா ஹித்தீன் அமைப்புதான் குண்டு வெடிப்புகளை நடத்தியது என்று புலனாய்வு நிறுவனங்கள் புளுகி யது ஏன் என்று எந்த அரசும் கேள்வியெழுப்பவில்லை.

ஏனெனில், முஸ்லிம்களை துன்புறுத்தவும், அரசியல் நெருக்கடிகளின்போது பயன்படுத்தவும் அதிகாரப் பீடங்களுக்கு ஆயுதமாக இந்தியன் முஜாஹித்தீன் வாய்த்திருப்ப துதான்.

தற்போது ஹைதராபாத் தில்சுக் நகரில் நடைபெற்றிருக்கும் இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டிருப்பார்களோ என்று சந்தேகிக்க முகாந்திரம் இருக்கிறது.

ஹைதராபாத்தில் தொடர்ந்து வகுப்புப் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிற சங்பரிவார அமைப்புகள், ஹைதராபாத் முஸ்லிம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

வழக்கம்போல நாடு முழுவதும் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போடுவதுபோல, ஹைதராபாத்திலும் குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டு, தனது பொய் பிரச்சாரத்தை நிரூபிக்க முயற்சி எடுத்து இருக்கின்றன இந்துத்துவா சக்திகள் என்று தான் விளங்க முடிகிறது.

ஹைதராபாத் குண்டு வெடி ப்பை பொறுத்தவரை வழக்கத் திற்கு மாறாக தேசிய ஊடகங்கள் அடக்கி வாசிக்க... தெலுங்கு மீடியாக்கள் மட்டும் பரபரப்பை கிளப்பின. குண்டு வெடிப்பு நடந்த தில்சுக் நகர் பகுதியிலும் அதன் அருகாமையிலும் முஸ்லிம் கள் கணிசமாக வசிக்கின்றனர் என்று தெலுங்கு ஊடகங்கள் செய் திகளை வெளியிட்டன. இதன் மூலம் முஸ்லிம் பகுதிகளில் விசா ரணையை துவக்குங்கள் என்று விசாரணை அமைப்புகளுக்கு அவை சிக்னல் கொடுத்திருக்கின் றன.

அப்சல் குருவின் தூக்கு தண்ட னைக்கு பழிவாங்கவே இந்த நட வடிக்கை என்றும் இந்த மீடியாக் கள் செய்தி வெளியிட்டு இஸ்லா மிய அமைப்புகளின் பக்கம் விசா ரணை அமைப்புகளை திசை திருப்புகின்றன.

அப்சல் குருவிற்கு தூக்கு தண் டனை கொடுத்ததற்கும் ஹைதரா பாத்தில் குண்டு வைப்பதற்கும் என்ன சம்மந்தம்? அஜ்மல் கசாப் புக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டபோது குண்டு வெடிக்கவில் லையே என்ற அறிவுகூட இல் லாமல் சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள் அலப்பரை பண்ணத் துவங்கின மீடியாக்கள்.

ஆந்திராவின் ஒரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனமோ, குண்டு வெடிப்பு நடந்ததற்கு முந் தைய தினம் ஒருவர் வந்து அந்த ஸ்பாட்டை ஆராய்ந்து விட்டு போனார் என்று செய்தி வெளி யிட்டது.

இதை முன்கூட்டியே காவல்து றையிடம் அந்த தொலைக்காட்சி ஏன் சொல்லவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் தில்சுக் நகர் முஸ்லிம்கள்.

ஹைதராபாத் பகுதியில் மத மோதலை உருவாக்கும் சக்திகள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் என்று நீண்ட காலமாக கூறி வருகின்றனர் ஹைதராபாத் வாசிகள்.

முஸ்லிம்கள் மீது பழியைப் போடும் இந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்ச்சி என்று தான் தில்சுக் நகர் குண்டுவெடிப்பையும் பார்க்க முடிகிறது.

திசை திருப்பப்பட்ட விசாரணை

ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததை தொடர்ந்து விசாரணை அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதியைக் கொண்டு வந்தன.

இங்கு அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் கடைசி நேரத் தில் சாய் பாபா கோவிலை விட்டு விட்டு பஸ் நிலையத்தில் குண்டு வைத்துள்ளனர் என ஆரம்பத்தில் தெரிவித்தனர் விசாரணை அதிகாரிகள்.

தீவிரவாதிகள் குண்டு வைக்கும் ஸ்பாட்டை மாற்றியதற்குக் காரணம் ஹைதராபாத் சிட்டி கமிஷ்னர் அனுராக் ஷர்மாதான்.

தீவிர சாய் பாபா பக்தரான சிட்டி கமிஷ்னர் அனுராக் ஷர்மா குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு சற்று முன் சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜையை நிறைவேற்றிக் கொண்டிருந்திருக் கிறார்.

கமிஷ்னர் சாய் பாபா கோவிலில் வழிபட வந்திருந்ததால் அங்கே கோவிலை சுற்றி அதிகளவில் போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் சாய் பாபா கோவிலில் குண்டு வைக்கும் திட்டத்தை மாற்றி, பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறத்தில் வைத்திருக் கின்றனர் பயங்கரவாதிகள். நல்வாய்ப்பாக கமிஷ்னர் உயிர் பிழைத்தார். அவர் வழிபாடு முடித்து விட்டு கிளம்பிய 15 - 20 நிமிடங்களில் முதல் குண்டு வெடித்தது என்கின்றனர் விசா ரணை அதிகாரிகள்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில் அப்பகுதியிலி ருந்து வேகமாக புறப்பட்ட இளைஞர் குழு ஒன்றை காவல்துறை விரட்டிப் பிடித்ததாகவும் அவர்கள் உள்ளூர் இளைஞர்கள் அல்ல என்று தெரிய வந்ததாகவும் ஹைதராபாத் பத்திரிகைகள் அன்றைய தினமே செய்தி வெளியிட்டன.

தில்சுக் நகரில் இரட்டை குண்டு வெடிப்புகள் நடந்தவுடன் அப்பகு தியை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ள விதம் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும், மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பய ன்படுத்தப்பட்ட IED (Improvised Explosive Device) என்று சொல்லப் படுகின்ற சாலையோரங்களில் பைக்குகளில், சைக்கிள்களில் வைத்து குண்டு வெடிப்பை நிகழ்த்தும் கருவிதான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பிலும் பயன்படுத் தப்பட்டிருக்கிறது என்றும் தெரி வித்திருந்தனர்.

அதே சமயம், விசாரணை அதிகாரிகளும், IED கருவியை பயன்படுத்தி இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது, மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பிராக்கிய சிங் தாகூர், முன் னாள் ராணுவ கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் இவர்களது கூட்டாளிகள், இதோடு மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா ரயில் குண்டு வெடிப்புகளில் சிக்கிய சுவாமி அசீமானந்தா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரி கையை நினைவூட்டுவதாக இருக் கிறது என தெரிவித்திருந்தனர்.

இவை குண்டு வெடிப்பு நடந்த அன்றே ஆரம்பகட்ட விசாரணை யின்போது தெரிய வந்த தகவல்க ளாக ஹைதராபாத் மீடியாக்களில் வெளியான செய்திகள். அதன் பின்னரே இந்தியன் முஜாஹித் தீன், லஷ்கரே தெய்பா போன்ற அமைப்புகளோடு குண்டு வெடி ப்பு சம்பவம் தொடர்புபடுத்தப் பட்டு விசாரணை திசைமாற்றப் பட்டது என்பது கவனத்திற்குரி யது.

முன்னதாக, குண்டு வெடிப்பு களை நிகழ்த்துவதற்கு முன் அப்பகுதியிலிருந்த லாட்ஜுகளில் பயங்கரவாதிகள் தங்கியிருந்துள் ளனர் என்றும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்க ளின் வயர்களை அறுத்து அவற்றை செயலிழக்கச் செய்து விட்டு, அதன் பின்னரே பயங்கரவாதிகள் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட னர் என்றும் கூறியது காவல்துறை.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள டிராஃபிக் சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவை மட்டும் பயங்கரவாதி கள் செயலிழக்கச் செய்யத் தவறி உள்ளனர். இந்த கேமிராவில் சில உருவங்கள் பதிவாகியுள்ள தாக கூறும் காவல்துறை, அதில் 5 உரு வங்கள் பதிவாகியிருந்த போதி லும் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் தொங்க விடப்பட்ட ஒரு பையுடன் குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதிக்கு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது என்கின் றனர்.

கோனார்க் தியேட்டர் அருகி லுள்ள ஆனந்த் டிபன் சென்டரில் முதல் குண்டு வெடிப்பதற்கு 10 நிமிடம் முன்பு காலை 6.38 மணி க்கு அந்த உருவம் அப்பகுதிக்கு சென்றுள்ளதையும், அங்கிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் இரண் டாவது குண்டு வெடித்த இடத் திற்கு காலை 7.01 மணிக்கு சென் றுள்ளதையும் உறுதி செய்துள் ளது போலீஸ். வெடித்த குண்டு கள் பழைய சைக்கிள்கள் இரண் டில் பொருத்தப்பட்டிருந்தது.

தில்சுக் நகர் பஸ் ஸ்டாண்டிற்கு எதிர்ப்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் இந்த உருவம் பதிவாகியிருப்பதாகவும், ஆனால் முகம் மட்டும் தெளிவாக பதிவாகவில்லை என்பதால் அவை நிபுணர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக வும் போலீஸ் சொல்கிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்ப வத்தை விசாரித்து வரும் விசா ரணை அமைப்புகளில் ஒன்றான தேசிய புலனாய்வு நிறுவனம், கண்காணிப்பு கேமிராவில் ஐவர் பதிவாகியிருந்த போதும், பீகார், ஜார்க்கண்ட், உத்திரப் பிரதே சத்தை சேர்ந்த சில சந்தேக நபர் களையும் கண்காணித்து வருவ தாக சி.என்.என். ஐ.பி.என். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள் ளது.

இது, ஹைதராபாத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் சக்திகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஹைதரா பாத்வாசிகள் தொடர்ந்து கூறி வரும் கருத்தின்படி, குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருப்பார் களோ என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரிக்கத் துவங்கியுள்ளதோ என்ற எண் ணத்தையும் ஏற்படுத்துகிறது.

சம்பவ இடத்தில் மஹாராஷ் டிரா தீவிரவாதத் தடுப்புப் படை யும் முகாமிட்டுள்ளதால் கடந்த வருடம் புனேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பயங்கரவா திகள் சமீபத்திய குண்டு வெடிப் புக்கு பின்னணியில் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப் படையில் புனே குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் பற்றிய விவரங் களை மஹாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையால் வழங்க முடி யும் என்று என்.டி. டி.பி. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இப்படி பல்வேறு கோணங்க ளில் ஆரம்பத்தில் விசாரணையை முடுக்கி விட்ட விசாரணை அமைப்புகள் திடீரென யூ டர்ன் அடித்து இந்தியன் முஜாஹித்தீன் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று கூறியிருப்பது மட்டும் மீடி யாக்களில் பரபரப்பாக்கப்பட்டுள் ளது.

யார் காரணம்?

ஹைதராபாத்திலுள்ள சன்சல்குடா மத்திய சிறையில் முந்தைய குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருபுறம் விசாரணையை துவங்கியுள்ள தேசிய புல னாய்வு நிறுவனம், இன்னொருபுறம் இந்த தாக்குதல் திட்டம் பாகிஸ்தா னில் வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறது.

இந்த தாக்குதலுக்கான ஒத்திகையை முன் நின்று நடத்தியவன் என்று ராஜூ என்பவனை கைதும் செய்திருக்கிறது. ஆனால், இவனது பெயர் விபரங்களை வெளியிடவில்லை.

2007ம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் இந்துத்துவா பயங்கரவாதி கள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கி கால் இழந்த அப்துல் வாஹித் என்பவர், தில்சுக் நகர் குண்டு வெடிப்பிலும் காயம் அடைந்துள்ளார். இதனை வைத்து அப்துல் வாஹிதையும் விசா ரித்து வருகிறது புலனாய்வு நிறுவனம். அப்துல் வாஹித், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஏற்பட்ட பாதிப்பிற்காக வருடக் கணக் கில் தொடர்ந்து சிகிக்சை எடுத்து வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த தாக்குதல் தில்சுக் நகரில் இருக்கும் சாய் பாபா கோவிலை தகர்க்கவே நடத்தப்பட்டிருக்கிறது என்றே ஒட்டுமொத்த விசா ரணை அமைப்புகளும் உறுதியாக கூறுகின்றன. இதன்படி பார்த் தால் ஹிந்துத்துவா மீது தான் சந்தேகம் வலுவாக பதிகிறது. இதே ஹைதராபாத்தில் ஏற்கெனவே கோவில்களில் அசுத்தத் தைப் போட்டு அதன் மூலம் முஸ்லிம்கள் மீது பழி போட்டு மதக் கலவரங்களை உருவாக்கி தங்களை பயங்கரவாதிகளாக நிரூபித் துள்ளன இந்துத்துவா சக்திகள்.

ஹைதராபாத்தில் எவ்வித தடையும் இல்லாமல் பேசி விட்டுச் செல்கிறார் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா. சமீபத்தில் குண்டூரில் 60 ஆயிரம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் பயிற்சி எடுத்தனர்.

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த கமலானந்த பாரதி என்ற சாமியார் முஸ்லிம்களுக்கு எதிராக மத மோதலைத் தூண்டி விடும் வகையில் பேசியிருந்தார் இவையெல் லாம் ஆந்திர மாநிலத்தில் இந்துத்துவா சக்திகள் அரசின் ஆதரவோடு வலுவாக காலூன்றியிருப்பதைக் காட்டு கிறது. இந்த பின்னணியில் ஹைதராபாத் முஸ்லிம் களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்த இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்க முகாந்திரம் இருக் கிறது.

ஏற்கெனவே, நவம்பர் 2002ல் இதே சாய் பாபா கோவிலில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் பலியாயி னர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார் என்று ஆந்திர மாநிலம் நிஸாமாபாத்தை சேர்ந்த அப்துல் ரஸ்ஸாக் மசூத் என்பவரை கைது செய்தது காவல்துறை. பினையில் வெளியில் வந்த ரஸ்ஸாக் 2012 அக்டோபர் மாதம் ஹைதராபாத் ஹுமாயூன் நகரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண் டார்.

சாயி பாபா கோவில் குண்டு வெடிப்பு சம்பவத் தில் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருந்த காவல் துறை யின் கண்ணில்பட்டவர்தான் அப்துல் ரஸ்ஸாக். 2005ல் இரானிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய அப்துல் ரஸ்ஸாக்கை டெல்லி விமான நிலை யத்தில் கைது செய்தது காவல்துறை, ரஸ் ஸாக் ஆப்கானிஸ்தானில் குறுகிய காலம் தங்கியிருந்தார் என்றது இந்திய புலனாய்வு நிறுவனம். டெல்லி சி.ஐ.டி. பிரிவு போலீசார் அப்துல் ரஸ்ஸாக்கை டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தது.

2002ல் நிகழ்ந்த சாய் பாபா கோவில் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை தேடிக் கொண்டிருந்த ஹைதராபாத் போலீசார் ரஸ் ஸாக் மீது குண்டு வெடிப்பு வழக்கைப் போட் டது. தடா சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தது. 2005 - 2007வரை சர்ர பள்ளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ரஸ்ஸா க்கை இரண்டு முறைநார்கோ சோதனைக்கு உட்படுத்தி துன்புறுத்தியது ஹைதராபாத் காவல்துறை.

அப்துல் ரஸ்ஸாக் தனது ஹுமாயூன் நகர் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், “சாய் பாபா கோவில் வழக்கில் நீ விடுதலை செய்யப்பட்டாலும், மும்பை போலீஸ் 2006 மும்பைத் தாக்குதல் வழக்கில் உன்னை கைது செய்யும். அதனால், உளவு அமைப்புகளுக்காக இன்ஃபார்மராக நீ செயல்பட வேண்டும் என மனரீதியாக என்னை துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறது. எனக்கு சாய் பாபா கோவில் குண்டு வெடிப்பில் எந்தத் தொடர்பும் இல்லை...'' என்று எழுதியிருந் தார்.

அப்துல் ரஸ்ஸாக்கின் தற்கொலையை அடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த சிவில் உரிமைகள் கண்காணிப்பு குழுவின் சார் பில் உண்மை அறியும் குழு அமைக்கப் பட்டு, இக்குழுவினரால் வெளியிடப்பட்ட அறிக் கையில், முஸ்லிம் இளைஞர்களை என்கவுண்ட்டர் செய்து கொல்வதைவிட அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளுவது சுலபமான வழி என்ற காவல்துறையின் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவே அப்துல் ரஸ் ஸாக்கின் தற்கொலை இருக்கிறது என இக்குழு கருதுகிறது என்றும், இது இந்திய ஜனநாயகம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இழுக்கு என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆக, 2002ல் சாய் பாபா கோவில் குண்டு வெடிப் பில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டு பிடிக்கப் படாத நிலையில், மீண்டும் அதே சாய் பாபா கோவிலை தகர்க்கும் நோக்கில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள் ளது. இது உள்நோக்கத்துடன் ஹைத ராபாத் முஸ்லிம்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்தான்.

Pin It