இணையத்தில் இயங்கிவரும் Tride மற்றும் Raytas பற்றித் தெரியுமா?

இந்தியாவில் தற்போது வலதுசாரி சிந்தனையுடன் தொடர்புடைய இரண்டு பெரிய குழுக்கள் ஆன்லைனில் இயங்கி வருகின்றன. ஒன்று ‘ட்ரைட்ஸ்’ மற்றொன்று ‘ராய்தா’.

‘ட்ரைட்ஸ்’ என்பது ‘Traditionalist’ (பாரம்பரியவாதி) என்பதன் சுருக்கமான வடிவம். அதாவது அவர்கள் இந்தியாவின் பழைய மரபுகளின்படி வாழ்வதே சரி என்று கருதுபவர்கள். சதி, குழந்தைத் திருமணம், முக்காடு போன்றவற்றை சரி என்று கருதுகிறார்கள்.

சாதி அமைப்பில் பிராமணர்கள் முதலிடத்தில் இருப்பதே சரி என்பவர்கள் இவர்கள். பெண்கள் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பார்கள்.

அவர்கள் நரேந்திர மோதியின் ஆதரவாளராகவோ, பா.ஜ.கவினராகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இவர்கள் ஒன்றிரண்டு பேர் அல்ல. 20-23 வயதுக்குட்பட்ட இவர்கள், பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மத்தியில் ஒரு இரக்கமற்ற தலைவர் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

சாதி அமைப்பை நம்புவதோடு, ஆணவக் கொலைகளையும் போற்றுகிறார்கள். இந்தியாவில முஸ்லிம்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ யாரும் இருக்கக்கூடாது என்பார்கள்.

டிவிட்டரில் இயங்கும் ஒரு நபர், தானும் ஒரு 'ட்ரைட்'ஆக இருந்ததாக பிபிசியிடம் கூறினார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் இன்ஸ்டாகிராமின் ‘ட்ரைட்’ குழுவில் சேர்க்கப்பட்டார். இந்து மதத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பரப்புவதே இந்தக் குழுவின் நோக்கம் என்று அவரிடம் சொல்லப்பட்டது. அதனால் அதில் சேர்ந்தார்.

“நான் இந்து மதத்தின் பழைய பாரம்பரியங்களான சதி, குழந்தை திருமணம், தீண்டாமை போன்றவற்றை சரி என்று நம்பினேன். அந்த வரலாற்றில் நான் பெருமைப்பட்டேன். அதனால் நான் அந்தக் குழுவில் சேர்ந்தேன்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர். 14-15 வயதுக்குட்பட்ட இந்து இளைஞர்களை இந்தக் குழுவில் சேர்க்கும்படி அவரிடம் சொல்லப்பட்டது.

போகப்போக குழுவுக்குள் நடந்த விஷயங்கள் அவருக்கு அதிர்ச்சி அளித்தன. குழுவில் மேலோட்டமாக புனித நூல்களைப் பற்றி பேசினாலும், அதன் உறுப்பினர்கள் வெறுப்பு நடவடிக்கைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் முக்கியத்துவம் தருவது அவருக்குப் புரிந்தது.

மேலும், அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தலித்துகளை இந்துக்களாகக் கருதவில்லை. இந்து தேசத்தை உருவாக்க முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வது தொடர்பாக பேசுவது, குழந்தைகளின் கொலைகளைக்கூட நியாயப்படுத்துவது போன்றவற்றை பார்த்து அதிர்ச்சியடைந்தார் அவர்.

சாதி பெருமைக்காக செய்யப்படும் ‘ஆணவக் கொலை’களை ஊக்குவிப்பதையும், கலப்புத் திருமணம் செய்பவர்களை மிரட்டுவதையும் கவனித்தார்.

சில பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு துன்புறுத்தல் இருந்தது என்கிறார்.

இந்த ‘ட்ரைட்’ சித்தாந்த குழு பெண்களை அடக்குமுறை செய்வதை ஆதரித்தாலும், இந்தக் குழுவில் பெண்களும் இருந்தார்கள். முகத்தை மூடிக்கொள்ளும் நடவடிக்கையை அவர்கள் ஆதரித்தார்கள்.

“நான் அவர்களுக்கு விளக்கினேன். ஆனால் அவர்கள் எதையும் கேட்க தயாராக இல்லை. சில நேரங்களில் அவர்களுக்கு இதயமே இல்லை என்று தோன்றியது. 'யாருடைய வார்த்தைகளையும் பொருட்படுத்தாத, தன் கருத்தை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆணாக இருங்கள்' என்று என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை” என்றார்.

“அவர்கள் கும்பல் கொலைகளின் படங்களை பகிர்ந்து கொண்டனர், தங்கள் பகுதியில் முஸ்லிம் பையனை எப்படி அடித்தார்கள் என்பதைப் பற்றி தற்பெருமை பேசிக்கொண்டனர்” என்கிறார் அவர்.

இறுதியில் அந்த தலித் இளைஞர், குழுவையும், ‘ட்ரைய்ட்’ சமூகத்தையும் விட்டு வெளியேறி தன்னைப் போன்ற பிறருடன் இணைந்து, ‘ட்ரைட்ஸ்’ ஐ நிறுத்தும் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளார்.

ட்ரைட்ஸ் Vs ராய்தா : ‘ட்ரைட்ஸ்’கள், தங்கள் கருத்துடன் உடன்படாத வலதுசாரிகளை ‘ராய்தா’ என்று அழைக்கத் தொடங்கினர். சுiபாவ றiபேநசள என்பதன் சுருக்கமாக இது கருதப்படுகிறது.

மோனா ஷர்மா ஒரு இந்து, வலதுசாரி. ட்ரைட் மற்றும் ராய்தாவுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிய மோனா, “‘ராய்தாக்கள்’ என்பவர்கள் ஆர் எஸ் எஸ், பாஜக, வலதுசாரி, இந்துத்துவ கொள்கையின் ஆதரவாளர்கள். யோகி, மோதி போன்ற தலைவர்களை விரும்புகிறார்கள். ஆனால் ட்ரைட்களுடன் ஒப்பிடுகையில், ‘ராய்தாக்கள்’ சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்,” என்றார்.

தனது “முற்போக்கான” பார்வையால், தான் ‘ட்ரைட்ஸ்’ஆல் குறிவைக்கப்பட்டதாக மோனா ஷர்மா கூறுகிறார். “ரண்டி” (விபச்சாரி) போன்ற வார்த்தைகளால் இழிவுபடுத்தப்பட்டார். அவரது கணவரின் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து தாராளவாத மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களைக் கொண்டவர்களுடன் ட்ரோல் செய்வதை மோனா ஒப்புக்கொள்கிறார். ஆனால் ‘ட்ரைட் பிரிவு’ மிகவும் ஆபத்தானது என்கிறார் மோனா.

“பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், முக்காடு அணிய வேண்டும், அதிகம் படிக்கக் கூடாது, காதல் திருமணங்களைச் செய்யக்கூடாது என்ற தாலிபன்களின் கருத்துகளைப் போலவே அவர்களது கருத்தும் உள்ளது. அவர்கள் வலுப்பெற்றால், சட்டம் - ஒழுங்கு முடிவுக்கு வந்துவிடும், பெண்களின் வாழ்க்கை 16 ஆம் நூற்றாண்டுக்குத் திரும்பிவிடும்” என்று பிபிசியுடன் பேசிய மோனா குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டில், முதல் பொதுமுடக்கம் அமலான நேரத்தில், இதுபோன்ற ‘ட்ரைட் கணக்குகள்’ மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கின.

“முதலில் அவர்கள் பாஜக ஆதரவாளர் போலவே தோன்றினார்கள். எங்களைப் போலவே, இஸ்லாம், கலவரம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசினார்கள். ஆனால் என்னைப் போன்ற வலதுசாரி இந்துப் பெண்கள் அவர்களுடைய பழங்கால சித்தாந்தத்தை கேள்வி கேட்கத் தொடங்கியபோது, அவர்கள் எங்களையே குறிவைக்கத் தொடங்கினர். மது அருந்தும், மேற்கத்திய ஆடைகளை அணியும் நவீன படித்த பெண்களை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் ஆதரிக்காததால் அவர்கள் எங்களை முழுமையான இந்துக்களாக கருதுவதில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“ட்ரைடுகளுக்கு', பிரதமர் மோதியைக்கூட பிடிக்காது. இந்து நாட்டை உருவாக்குவதில் அவருக்கு திறமையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அவரை ‘மௌலானா மோதி’ என்று அழைக்கிறார்கள்” என்கிறார் மோனா.

- விடுதலை இராசேந்திரன்

Pin It