ஓமன் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்குச் சென்று இரண்டு மாத கால மாக துன்பத்தை அனுபவித்து வந்த சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹசீனா என்ற பெண்மணியை மீட்டு அவ ரது கணவரிடம் ஒப்படைத்திருக்கிறது ஐஎன்டிஜே.

கடந்த 12ம் தேதி சென்னைக் குத் திரும்பிய ஹசீனா தன் கணவர் கமால் பாட்ஷாவுடன் நம்மை அலுவலகத் தில் சந்தித்து நடந்தவற்றை இப்படி விவரித் தார்...

“என் கணவர் இருதய நோயாளி. என் பிள்ளைகள் அவ ரவர் குடும்பத்தை கவனிக்கின்ற னர். வீட்டு வாடகை தரவும் கஷ் டமான சூழ்நிலை. அதனால் பணிப்பெண் வேலைக்கு ஓமனுக் குச் செல்ல முடிவெடுத்தேன். செங்கல்பட்டைச் சேர்ந்த ஆரீஃப் என்பவர் மூலம் விசாவிற்கு என் கணவர் ஏற்பாடு செய்தார். ஆரீஃப் மஸ்கட்டில் இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கிறார்.

ஆரிஃப்பின் நண்பரான கேரளா வைச் சேர்ந்த ஜோசப் என்பவர் மஸ்கட்டில் கே.எம்.ஆர். ரெக்ரூட் மெண்ட் என்ற பெயரில் வேலை வாய்ப்பு ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவர்கள் இருவரிடம் 29 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஓம னுக்குச் சென்றேன். மஸ்கட்டில் சூர் என்ற புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் என்னை வேலைக்கு சேர்த்து விட்டனர்.

அந்த வீட்டில் ஓய்வில்லாத வேலை. என் உடல் நலன் குன்றி விட்டது. நெஞ்சு வலி, கால் வலி என்று அவ திப்பட்டேன். மயக்கம் வரும் அளவுக்கு செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்யச் சொன்னார்கள். எனக்கு சரியாக சாப்பாடும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை. என்னால் வேலை செய்ய முடியவில்லை என்று நான் அழுது கெஞ்சும் போதெல்லாம் உனக்காக 300 ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 34,500 ரூபாய்) ஏஜென்ட்டிடம் கொடுத்திருக்கிறேன். மரியாதை யாக வேலை செய்... என மிரட்டி னார்கள்.

எனக்கு அப்போதுதான் புரிந்தது இவர்களிடம் ஜோசப் 300 ரியால் வாங்கியிருக்கிறார் என்று! நான் வேலை செய்த வீட் டிற்கு அருகிலிருக்கும் என் முத லாளியின் மூத்த மகன் சையத் வீட்டில் என்னைக் கொண்டு போய் விட்டு கடுமையாக வேலை வாங்கினார்கள். பிறகு மீண்டும் முதலாளி வீட்டிற்கே கொண்டு வந்தார்கள். இப்படியே இரண்டு மாத காலம் அங்கும் இங்குமாக வேலை வாங்கினார்கள். சம்பளம் கூட எனக்குத் தரவில்லை. கடை சியாக ஏஜெண்ட் ஜோசப் ஆபிசுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏஜெண்ட் ஜோசப்போ, “50 ஆயிரம் கொடு. உன்னை ஊருக்கு அனுப்புகிறேன். இல்லையென்றால் இங்கேயே ஆடு மேய்க்க அனுப்பிடுவேன்...'' என்று மிரட்டி திரும்பவும் என் முதலாளி வீட்டிற்கே அனுப்பிட் டார்.

எல்லா விஷயத்தையும் போனில் என் கணவரிடம் சொல்லி அழுவேன். அவரும் எனக்கு போன் செய்து ஆறுதல் சொல்வார். நான் இந்தியா வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பிருந்து எனக்கு சாப்பாடு கொடுத்தார்கள். நன்றாக கவனிக்கத் தொடங்கினார்கள் என் முதலாளி குடும்பத்தினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ மனசு மாறி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

பின்னர்தான் எனக்குப் புரிந்தது என் கணவர் என்னை மீட்க முயற்சி செய்வதும், அதன் காரணமாக அவர்கள் என்னை நன்றாக கவனித்தார்கள் என்பதும்...'' என்று விவரித்தவாறே தனது கணவரைப் பார்த்து “நீங்கள் சொல்லுங்கள்...'' என்பதுபோல் தலையசைத்தார்.

“மனைவியை மீட்க நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்?'' - கமால் பாட்ஷாவிடம் கேட் டோம்.

“என்னை எப்படியாவது ஊருக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்று என் மனைவி போனில் அழுதபடியே சொன்னபோது எனக்கும் அழுகை வந்து விட்டது. என் மைத்துனர் வேறு அப்போது மரணித்து விட்டார். அதை மையப்படுத்தி ஜோசப் மற்றும் ஆரிஃப் இருவரிடமும் பேசினேன். சாவு எல்லாம் சகஜம். ஹசீனாவை அனுப்ப முடியாது. 50 ஆயிரம் ரூபாய் கட்டு; நாளைக்கே உன் மனைவியை அனுப்பி வைக்கிறோம். இல்லை யென்றால் உன் மனைவியை பார்க்க முடியாது என்று கூறி போனை கட் பண்ணிவிட்டார்.

இப்படியே சுமார் ஒன்றரை மாதங்களாக என் மனைவிக்கும், ஜோசப்பிற்கும் போன் செய்தே ஓய்ந்து போனேன். தினமும் 500 ரூபாய் போனுக்கு செலவானது. இந்த நிலையில்தான் ஒருநாள் வின் டி.வி. நி கழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகி ஃபிர்தவ்ஸின் தொடர்பு எண் ணைப் பார்த்து விட்டு அவரைத் தொடர்பு கொண்டேன். என்னை அலுவலகத்திற்கு வரச் சொன்னார். அவரிடம் நடந்த விபரங்களைக் கூறினேன். அவர்தான் என் மனைவியை மீட்டுக் கொடுத்தார்...'' என்றார்.

ஹசீனாவை மீட்டு அவர் கண வரிடத்தில் ஒப்படைத்திருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளரும், வின் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகி வரும் மீடியா வேர்ல்டு நிகழ் ச்சியின் ஒருங்கி ணைப்பாளரு மான பிர்தவ்ஸிடம் பேசினோம்.

“ஹசீனாவின் கணவரான கமால் பாட்ஷா நடந்த விஷயங் களை ஒன்றுவிடாமல் என்னிடம் சொன்னார். அவரிடம், ஜோசப் மற்றும் ஆரிஃபின் தொடர்பு எண் களை பெற்றுக் கொண்டு ஓமனில் இருக்கும் இருவரிடமும் பலமுறை பேசினேன்.

ஹசீனாவை அனுப்ப முடி யாது என்று ஆணவத்துடன் பதிலளித்தனர் இருவரும். பின்னர் இந்தப் பிரச்சினையில் ஜமாஅத் தலையிட்டிருக்கிறது; ஹசீனாவை அனுப்பி வைக்காவிட்டால் வெளி யுறவு அமைச்சகம் மூலம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என எச்சரித்த பின் 50 ஆயிரம் ரூபாய் கட்டுங்கள் என்று ஆரம்பத்தில் சொன்ன ஜோசப் கடைசியாக 20 ஆயிரமாவது கேரளாவிலுள்ள எனது அம்மா வின் அக்கவுண்ட்டில் போடுங்கள். பிறகு ஹசீனாவை அனுப்பி வைக்கிறேன் என்றார்.

ஏறக்குறைய ஆளை கடத்தி வைத்து பிணையத் தொகையை கேட்பதுபோல்தான் நிலைமை. எனவே முதலில் ஹசீனாவை சென்னைக்கு பாதுகாப்பாக வரவ ழைத்து விட்டு, அதன் பின்னர் அந்த இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்வதுதான் புத்திசாலித் தனம் என்ற திட்டத்துடன் 15 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப் புக் கொண்டோம். பல நாட்கள் தொடர் முயற்சிக்குப் பின் நாங் கள் திட்ட மிட்டபடியே கடந்த 12ம் தேதி ஹசீனா சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்.

ஹசீனாவின் கணவர் 29 ஆயி ரம் ரூபாய் செலவு செய்து அவரை ஓமனுக்கு அனுப்பியிருக்கிறார். ஹசின ôவிற்கு 2 மாதச் சம்பளம் கிடைக்கவில்லை. 15 ஆயிரம் பிணையத் தொகை கொடுக்கப் பட்டுள்ளது. ஹசின ôவின் நிலை யைக் கண்டு அவரது கணவர் கமால் பாட்ஷாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து 10 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவச் செலவு செய்தி ருக்கிறார்.

ஓய்வு இல்லாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட் டதால் நெஞ்சுவலி காரணமாக சென்னைக்கு வந்ததும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து மருத்து வம் பார்த்திருக்கிறார் ஹசீனா. இப்படியாக சுமார் 1 லட்சம் வரை ஹசினா குடும்பத்திற்கு இழப்பும், பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

ஆரிஃபுக்கு போன் செய்து ஹசீனாவுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்புகளையும், பாதிப்புகளை யும் எடுத்துச் சொல்லி நஷ்டஈ டாக ஏதாவதொரு தொகையை கொடுக்க முயற்சி செய்யுங்கள்; இல்லையென்றால் சட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டி வரும் என்று சொன்னபோது, “என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; என்னை ஏர்ப் போர்ட்ல கூட அரஸ்ட் பண்ண முடியாது. எனக்கு பல பாஸ் போர்ட் இருக்கு. பல பேர்ல வரு வேன்...'' என்றார் ஆரிப்.

ஜோசப்போ, “நான் கேரளா வைச் சேர்ந்தவன். தமிழ்நாடு போலீஸ் என்னை ஒண்ணும் புடுங்க முடியாது...'' என்று திமி ராகப் பேசினார்...'' என்று நடந்த வற்றைச் சொன்ன பிர்தவ்ஸ்,

“இது சம்பந்தமாக சென்னை கமிஷனர், புது டில்லியிலுள்ள வெளியுறவு அமைச்சக அலுவல கம் (உஷ்ற்ங்ழ்ய்ஹப் அச்ச்ஹண்ழ்ள்), இமிக்ரேஷன் அத்தாரிட்டி (உம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்), ஏர்போர்ட் அத்தாரிட்டி (அண்ழ்ல்ர்ழ்ற் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) என எல்லா இடங்களுக் கும் புகார் மனு அனுப்ப இருக் கிறேன். இந்த விஷயத்தை விடப் போவதில்லை...'' என்றார் தீர்க்க மாக!

ஹசீனாவிற்கான நஷ்டஈட் டைப் பெற்றுத் தரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

ஜோசப், ஆரிஃப் போன்ற போலி ஏஜெண்டுகள் நாடெங்கி லும் வெளிநாட்டு வேலை என்று ஆசை காட்டி பாமர மக்களை அவதிக்குள்ளாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கமும், வெளிநாடுக ளுக்கு வேலைக்குச் செல்வோ ருக்கு அரசாங்கப் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் செல்லுமாறு அறிவுறுத்தினாலும் போலி ஏஜெண்டுகளை நம்பி செல்வோ ரின் எண்ணிக்கை குறைந்தபா டில்லை. குடும்ப சூழல், வறுமை அவர்களை எதையும் நம்பி விடும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விடுகி றது.

போலி ஏஜெண்டுகள் மீது காவல்துறை கடுமையாக நடவ டிக்கையை மேற்கொண்டு அதை வெகுஜன ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினால் போலி ஏஜெண்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்கி றார். சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஸ்பெஷல் பிராஞ்சில் பணியாற்றும் அதிகாரி ஒருவர். அவர் சொல்வது உண் மைதான் காவல்துறை இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

நடவடிக்கை எடுப்போம்! - தூதரக அதிகாரி

நாம் ஓமனிலுள்ள அந்தத் தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆரிஃப் அங்கு வேலை பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். நாம் மருத்துவமனைக்கு பேசிய அரைமணி நேரத்திற்குள் ஓமனிலிருந்து நம் எண்ணைத் தொடர்பு கொண்ட ஷாஜஹான் முஹ்மத் அப்துல் காதர், “நான் மஸ்கட் சூர் பகுதியின் ஹானரரி கவுன்சிலராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். தயவு செய்து மருத்துவமனையின் பெயரை வெளியிட வேண்டாம். (மருத்துவமனை பெயரைத் தவிர்த்துள்ளோம்) அந்த ஆரிஃப் மீது கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணுங்க. நாங்கள் எம்பஸி மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்...'' என்றார் அழகான ஆங்கிலத்தில்!

Pin It