தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர்.

ஆம்! தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட் சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம்.

மீனாட்சிபுரம் "ரஹ்மத் நகர்' ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர் ளோடு உரையாடினோம்.

“சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலை யினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

அரைவேக்காடு அன்வர் பால சிங்கம் என்னும் ஆணவம் பிடித்தவன், "கருப்பாயி என்ற நூர்ஜஹான்' என்ற புத்தகத்தில் கற்ப னையுடன் பொய்யைக் கலந்து உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட் டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர - சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்...'' என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.

நாம் அங்கு வந்ததை தெரிந்து கொண்ட அப்பள்ளியின் இமாம் மைதீன் பாதுஷா நம்மை அணுகி என்ன விஷயமாக இங்கு வந் துள்ளீர்கள்? எங்கிருந்து வருகி றீர்கள்...?'' என்றார்.

சென்னையிலிருந்து "சமுதாய மக்கள் ரிப்போர்ட்' பத்திரிகை அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று நம்மை அறிமுகப்ப டுத்தியதும்,

“நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்த ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண் டிருக்கிறோம்...'' என்றார் நம்மி டம்.

நாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் கொண் டிருந்தபோது கையில் கம்பு ஊன் றிக் கொண்டு வந்த ஒருவர்,

“பேட்டி எல்லாம் எடுக்குறீங்க ளாமே? எதற்கு எடுக்கிறீர்கள்? இப்படித்தான் ஒவ்வொரு முறை யும் யாராவது பேட்டி எடுக்கி றேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்...'' என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்!

அவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.

“இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.

அதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேத னையாக உள்ளது...'' என்றார்.

“ஏன் இந்த நிலை?'' என்று நாம் கேட்டவுடன், “வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும் பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.

எங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் பெண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்...'' என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.

நாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,

“இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம்! எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்...'' என்று உறுதியுடன் சொன் னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவ தாய் இருந்தது.

இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோ சனை வழங்கினோம்.

ரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மண முடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக் குறையை வெளிப்படுத்துகின்ற னர் ரஹ்மத் நகர் மக்கள்.

ரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புட னும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமை யக் கூடும். அவர்களின் மனக்கு றைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரிய வரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழ கத்து இயக்கங்களின் செயல் பாட்டை விளக்கமாக எடுத்து ரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.

“ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ் பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப் பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதி யுடன் நின்று இஸ்லாமே எங்க ளது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள். இன்று இஸ் லாம் மூலமே நாங்கள் கண்ணி யம் பெற்றோம்.

இழிவு எது வந்தாலும் ஈமானை இழக்க மாட்டோம். அப்படிப் பட்ட எந்த ஒரு இழிவையும் எங் கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிக வும் கருணையாளன்...'' என்று ஒரு மித்த குரலில் கூறியது இஸ்லாத் தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சியாக இருந்தது.

மனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண் டும் என்பதே எமது வேண்டு கோள்.

Pin It