தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வது என்ற வாசகத்திற்கு பொருத்தமானவராகத் தெரிகிறார் முலாயம் சிங். வார்த்தை ஜாலங்களில் கில்லாடியான சமாஜ்வாதி கட்சியின் சுப்ரீம் லீடராக இருக் கின்ற முலாயம் சிங், கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் முஸ்லிம்களுக்கு வெற்று வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் இதுவரை தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை; முஸ்லிம்களின் நலன் சார்ந்த விஷயங்களை அவர் புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து அவருடனான உறவை சமீபத்தில் முறித்துக் கொண்டார் டெல்லி இமாம் அப்துல்லாஹ் புஹாரி.

அவரை ஒருபுறம் சமாதானப் படுத்திக் கொண்டே இன்னொருபுறம் அத்வானியை புகழ்ந்திருக்கிறார் முலாயம் என்றால் அவர் கில்லாடி அரசியல்வாதி தானே!

கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியென்றில் பேசிய முலாயம் சிங், பாஜக தலைவரான அத்வானி பொய் சொல்ல மாட்டார் என்று நற்சான்று வழங்கி யிருக்கிறார்.

முலாயம் சிங் அத்வானியை புகழ்ந்திருப்பதை கடுமையாக கண்டித்திருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய கமிஷனின் ஒருங்கிணைப்பாளரான தாஜு தீன் அன்சாரி,

“அத்வானியைப் புகழ்ந் திருப்பதன் மூலம் சங்பரி வார் மற்றும் பாஜகவுடன் தனக்கிருக்கும் மறைமுக மான நெருக்கத்தை பகி ரங்கமாக வெளிப்படுத்தி யுள்ளார் முலாயம் சிங். கடந்த வருடம் சமாஜ் வாதி கட்சியை உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் மூலம் அரியணையில் அமர்த்திய மக்களே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதிக்கு சமாதி கட்டுவார்கள்...” என்று தெரிவித்துள்ளார்.

அத்வானியைப் புகழ்வது அதுவும், அத்வானியிடம் இல்லாத பண்பை இருப்பதாகச் சொல்லி புகழ்வது என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை முலாயம் சிங் அறியா தவரல்ல... இருந்தும் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் அது நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜகவோடு கூட்டணி காணப்போகிறார் என்கிற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகி றது. இதனால்தான் மத்திய காங் கிரஸ் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருவதுடன் காங்கிரஸ் மிரட்டியும் வருகிறார்.

இன்னொருபுறம், அத்வானியைப் புகழ்ந்திருப்பதன் மூலம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்க்கு எதிராக பாஜகவுடன் சேர்ந்து சமாஜ் வாதி களமிறங்கக் கூடும். அதனால் எங்களது கோரிக்கைகள், மிரட்டல்களை மத்திய காங்கிரஸ் அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லாமல் சொல்கிறாரோ என்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறது.

எதுவாக இருந்தாலும் யாரோடு கூட்டணி அமைத் தாலும் உத்திரப் பிரதே சத்தை பொறுத்தவரை முஸ்லிம்களோடு கூட்டணி வைக்கும் கட்சிதான் அரியணை ஏறும் என்பது உத்திரப்பிரதேச அரசியலின் அடிநாதம். இதை நன்றாக உணர்ந்திருப்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி.

முலாயம் சிங்கின் அத்வானி தொடர்பான கமெண்ட்டை தொடர்ந்து, முலாயம் சிங் மீது முஸ்லிம்கள் காட்டி வரும் கோபத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாயாவதி நன்றாக பயன்படுத்திக் கொள்வார் என்றே தெரிகி றது.

Pin It