போலி என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரிக்க வேண்டும்

திருடன் கையும் களவுமாக அகப்படும்போது, பக்கத்தில் உள்ளவனையும் சேர்த்துக் காட்டிக் கொடுப்பதுபோல் என்கவுண்ட்டர் விசயத்தில் ஏனைய மாநிலங்களையும் சிக்கலில் மாட்டி விட்டுள்ளது மோடி அரசு. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை நடந்த 22 போலி என்கவுண்ட்டர்கள் தொடர் பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கண்காணிப்பு ஆணையத் தலைவரை தன்னிச் சையாக நியமித்த விசயத்தில் மோடி அரசு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்கான செய்தி யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. இந்த வழக்கினால் நிலைகுலைந்துள்ள மோடி அரசு, யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என ஏனைய மாநிலங்களையும் மாட்டி விட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள மனு வில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டிலேயே குஜராத் போலீ சார் மட்டும் போலி என்கவுண்ட் டர் செய்வது போன்ற தவறான எண்ணத்தை நாட்டு மக்களி டையே ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். குஜராத்தில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டர்கள் எல் லாமே போலி என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில், நாடு முழுவ தும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டர் களில் பல போலியானவை என்று புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகார்கள் பற்றி விசாரணை நடத்த தக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

குஜராத்தில் உள்ளதுபோல் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத் தப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். அந்த குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

அப்போதுதான், போலி என்கவுண்ட்டர் புகார் பற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான விசா ரணை நடத்த முடியும். இதன் மூலம், மனித உரிமைகளை காக்க முடியும். அதேநேரத்தில் குஜராத் போலீசாரின் மன உறுதி குலையா மல் பார்த்துக் கொள்ள முடியும். நேர்மையான போலீஸ் அதிகாரி கள் தங்கள் மீது வீண்பழி சுமத் தப்படும் என்ற அச்சம் இல்லாமல் தைரியமாக செயல்பட வழி பிறக்கும்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குஜராத் அரசின் மனுவில் கூறப்பட்டிருந் தது.

இந்த மனுவை விசாரித்த நீதி பதிகளான ஆப்தாப் ஆலம், ரஞ் சனா பிரகாஷ் ஆகியோர் கூறுகை யில், "நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த என்கவுண் ட்டர்கள் தொடர்பாக வந்த புகார் களை சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

இதுவரை நடந்த என்கவுண்ட் டர்கள் குறித்த விவரங்களை மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும். என்கவுன்டர்கள் குறித்து தங்கள் நிலை என்ன என் பதை தெரிவிக்க மத்திய அரசுக் கும் மாநில அரசுகளுக்கும் நோட் டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்'' என்றனர்.

நீதிபதிகளின் இந்த உத்தரவின் மூலம் இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களிலும் குஜராத் பாணியில் நடந்த போலி என்க வுண்ட்டர்கள் குறித்த உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும் என நம்பலாம். இந்த கோரிக்கையை முன்வைத்த மோடி அரசை பாராட்டலாம்.

காவல்துறை நினைத்தால் யாரை யும் தீவிரவாதியாக்கி என்கவுண்ட்டரில் கதை முடிப்பது சுல பமே என்பதை மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட ஏராளமான என்கவுண்ட்டர் சம்பவங்கள் கண் முன்னால் விரியும் சான்று களாக உள்ளன.

ஆனாலும் போலி என்க வுண்ட்டர்கள் செய்த அதிகாரிகள் மீது பெரிய அளவிலான நடவ டிக்கை இல்லாத காரணத்தினால் என்கவுண்ட்டர் எண்ணிக்கை எகிறிக் கொண்டு செல்கிறது.

எனவே குஜராத்தில் உள்ளது போன்று போலி என்கவுண்ட்டர் கள் கண்காணிப்பு ஆணையம் அமைத்தால் மட்டும் போதாது. அடுத்தவன் உயிரை அற்பமாக நினைத்து குருவியை சுடுவது போல் சுடும் அதிகாரிகளை சட்டம் கடுமையாக தண்டித்தால் தான் போலி என்கவுண்ட்டர்கள் ஒழியும்.

அதோடு அதிகாரிகளின் போலி என்கவுண்ட்டர்களுக்கு அனுமதியளிக்கும் உயரதிகாரிக ளையும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல் வரையும் இந்த கண்காணிப்பு ஆணைய விசாரணை வளையத் திற்குள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பாய்ந்த அம்பை மட்டுமல்ல; எய்தவரையும் தண் டிக்க முடியும் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- அபு ஃசைப்

Pin It