கைபர்போலன் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத் தில் நுழைந்த ஆரியர்கள், பிறப்பின் பெயரால் மனிதர் களில் தீண்டாமையை கடை பிடிப்பதையும், கடவு ளின் பெயரால் கற்பனை யான மூடநம்பிக்கைகளை விதைப்பதையும் கண்ணுற்ற பெரியார், அதை ஒழிப்பதற் கான பகுத்தறிவு முயற்சியில் ஈடுபட்டு ஒரு முடிவெடுத் தார். 'மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக' கடவுளின் பெயரால் நடக்கும் அக் கிரமங்களை ஒழிக்க கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தை அவர் முன்வைத்தார். அதே பெரியாருடன் பகுத்தறிவு பாதையில் பயணித்து 'ஆரிய மாயை' கண்ட அண்ணா, பின்னாளில், தி.க.வை உடைத்து தி.மு.க., ஆனவுடன் 'ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்ற தத்துவத்தை முன் வைத்தார். (இதுதான் இஸ்லாமிய கடவுள் கொள்கையாகும்) பிறகு தி.மு.க. பிரிந்து அண்ணா தி.மு.க. உதயமானவுடன், எம்.ஜி. ஆர். மூகாம்பிகையை வழிபட்டார். கருணாநிதியோ மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார்.

மேலும், சாய் பாபாவுடனும், அமிர்தானந்தமயியுடனும் மேடை யில் காட்சி தந்து மகிழ்ந்தார். அத்துடன் கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பதைவிட கட வுள் என்னை ஏற்றுக் கொள்ளக் கூடிய பணியை நான் செய்கி றேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். ஜெய லலிதாவைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் அண்ணா தி.மு.க.வை, அத்வானி தி.மு.கவாக நடத்தி வருபவர்.

இப்படியான இவர்களின் பகுத் தறிவின் பரிணாம வளர்ச்சியாக இந்த ஆண்டும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற... அதில் ஆளுங்கட்சி மந்திரிகள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் சமபந்தி விருந்தை ஒரு கட்டு கட்டியுள்ள னர். கோயிலை நம்பக் கூடிய ஒரு வர் எப்படி தனது பிறந்தநாள், திரு மண நாள், மற்றும் விசேஷ நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வாரோ, அன்னதானங்கள் வழங்குவாரோ அதே போன்று அண்ணாவின் பிறந்த நாள் அதே கோயிலில் அதே சிறப்பு வழிபாடுகள், அன்னதா னங்களுடன் அரங்கேறுகிறது. அண்ணா பிறந்த நாளுக்குக் கும் கோயிலுக்கும் என்ன சம்மந் தம் என இந்த பகுத்தறிவு தடுமாற் றத்தை கண்டிக்க வேண்டிய கி.வீரமணியோ கண்டுகொள்ளா மல் இருக்கிறார்.

இந்த சிறப்பு வழிப்பாடு-மற்றும் சமபந்திவிருந்து நடைபெறும் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்றும், நாத் திகரான அண்ணாவின் திதியை கோவில்களில் நடத்துவது ஆலய விதிமுறைகளுக்கு முரணானது என்றும், கடந்த ஆண்டு அறிவித்த இந்து மக்கள் கட்சி, இந்த ஆண்டு 'கப்சிப்'. ஒருவேளை, கடந்த ஆண்டு இந்த நிகழ்வை நடத்தியது திமுக., ஆனால் இந்த ஆண்டு நடத்து வது அம்மா கட்சி என்பதாலோ என்னவோ இந்து மக்கள் கட்சி அமைதி காக்கிறது.

ஆக, தவறான கொள்கைக ளில் உறுதியிருக்காது என்ற வாக் கிற்கேற்ப, பகுத்தறிவு என்ற மூலாம் பூசிக்கொண்டு பக்தர்க ளாக வலம் வரும் திராவிட கட்சி யினரை உண்மையான பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திற்கு அழைக்கிறோம்.' இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்ற பெரியாரின் வாக்கை உண்மையில் நம்புபவர்களாக, பெரியாரை பின்பற்றுபவர்களாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் உண்மைப்படுத்த முன் வாருங்கள்.

Pin It