சிறந்த இலக்கிய மொழியாகவும், கவிதை மொழியாகவும் கருதப்படும் உருது மொழி முஸ்லிம்களுக்குரியது என்று பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டுள்ளனர். உண்மையில் இது முஸ்லிம்களுக்குச் சொந்தமான மொழி அல்ல. உருது என்பது துருக்கி மொழியின் ‘ஒர்து' என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை. ‘ஒர்து' என்றால் இராணுவம், முகாம் என்ற அர்த்தத்தில் இராணுவம் சம்பந்தப்பட்டவற்றைக் குறிக்கும் ஒரு சொல் என்கின்றனர் உருது மொழி ஆய்வாளர்கள். உருது மொழியை இராணுவ வீரர்களின் பாஷை என்று சொல்லலாம்.

முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் காலத்தில் இம்மொழி ஏற்றம் பெற்றது. பாரசீக மற்றும் அதன் உள்ளூர் மொழிகள் இணைந்த பாஷை தான் உருது.

அரபு, துருக்கி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கிடையே இலகுவாக தகவல் பரிமாறிக் கொள்வதற்காக இந்திய துணை கண்டத்தின் தில்லி மற்றும் மேற்கு உத்திரப் பிரதேச வட்டார மொழியான கரிபோலியை அடிப்படையாகக் கொண்டு உருவான மொழி உருது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுமார் 900 ஆண்டுகள் பாரசீகம், அரபி மற்றும் துருக்கி மொழிகள் மற்றும் அதன் உள்ளூர் வட்டார மொழிகள் உருதுவில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருந்து வந்துள்ளது. அதிகளவில் அரபி மற்றும் பாரசீக வார்த்தைகளை உருதுவில் காணலாம்.

டெல்லி சுல்தான்களின் ஆட்சியின்போது தான் (கி.பி. 1206-1527) தற்போது உத்திரப் பிரதேசத்தில் பேசப்படும் வகையில் உருது மொழி வடிவம் பெற்றுள்ளது. அதன் பின்னர் முகலாயப் பேரரசின் கீழ் (கி.பி. 1526-1858) உருது மொழி அபார வளர்ச்சி கண்டது.

பாரசீக மொழி, அரபி மொழியைப் போலவே உருது மொழியும் வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருக்கிறது.

உருது மொழி 39 அடிப்படை எழுத்துகள், 13 கூடுதல் எழுத்துகள் என 52 எழுத்துகளுடன் உள்ளன. இதில் பெரும்பாலும் அரபு எழுத்துகளும் மிகச் சொற்ப அளவில் பாரசீக எழுத்துகளும் இணைந்துள்ளன. உருது மொழியின் சிறப்பு என்னவெனில் உலகில் பேசப்படும் மொழிகளின் ‘ஒலி' வடிவம் உருதுவில் வெளிப்படும் என்பது தான்.

(வங்காள தேசம் பிரிக்கப்படுவதற்கு முன்) மேற்கு வங்கத்தில் பாரசீக மொழிப் பத்திரிகைகள் முதலிடத்திலும், உருது செய்தித்தாள்கள் இரண்டாம் இடத்திலும் இருந்தன. பாரசீக மொழி அரசின் அதிகார மொழி இல்லை என்றான பின் உருது மொழி முக்கியத்துவம் பெற்றது.

உருதுவின் முதல் செய்திப் பத்திரிகை ஜாம்-இ-ஜஹான் நுமா. ஹரிஹர் தத்தா என்பவர் 1822ல் இப்பத்திரிகையை தொடங்கியுள்ளார். பிரபல பெங்காலி பத்திரிகையாளரும் ‘சம்பத் கொவ் முடி' என்கிற வங்காளப் பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவருமான தாரா தத்தாவின் மகன்தான் ஹரிஹர் தத்தா.

1850 முதல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947வரை உருது இதழியல் வளர்ச்சி கண்டிருக்கிறது.

டெல்லியின் முதல் உருது பத்திரி கைகளான ஃபவய்த் உல் நஸôரேன் மற்றும் கிரன் உஸ் சதாய் 1852ல் ராமச்சந்திரா என்பவரால் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் துவக்கப்பட்ட உருது பத்திரிகைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு ஆளாகின. அவற்றில் குறிப்பிடத்தக்கது உருது அக்பார் (உருது நியூஸ்) என்கிற பத்திரிகைதான்.

பிரிட்டிஷ் அரசின் உள்ளாட்சி நிர்வாகத்தை அதிகமதிகம் விமர்சித்தது உருது அக்பார். சையத் ஹசன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட இந்த இதழ், கழிவுநீர் வடிகால், சுகாதாரம், உணவுப் பொருட்களில் கலப்படம், ஊழல் இருந்த உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தின் குறைபாடுகளையும் விமர்சித்து எழுதியது.

1877ல் அஞ்சுமனே - இஸ்லா மியா என்கிற இஸ்லாமிய அறிவு சார் மற்றும் அரசியல் இயக் கத்தை துவக்கியதோடு, அவ்வ மைப்பின் சார்பில் நுஸ்ரதுல் அக்பார், நுஸ்ரதுல் இஸ்லாம், மிஹிர் ரே தரக்ஷன் ஆகிய மூன்று உருது பத்திரிகைகளைத் துவக்கினார் மவ்லவி நசீர் அலி. இந்த மூன்று பத்திரிகையும் இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருந்த போதிலும் அவை சமகால சிவில் மற்றும் அரசியல் விவகாரங்களையும், விமர்சன செய்திகளையும் வெளியிட்டதோடு முஸ்லிம்களின் (அரசியல்) அதிகாரத்திற்காகவும் மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்தது.

1877ல் அவுத் புஞ்ச் என்கிற நகைச்சுவை பத்திரிகை உருது மொழியில் சாஜித் ஹுûஸன் என்பவரால் தொடங்கப்பட்டது. அதே கால கட்டத்தில் பெண்களுக்கான முதல் உருது இதழான அக்பார் உன் நிசாவும் தொடங்கப்பட்டது.

19ம் நூற்றாண்டில் முக்கிய செய்திப் பத்திரிகைகளில் ஒன்றாக "தாருல் சுல்தானட்' என்ற உருதுப் பத்திரிகை கல்கத்தாவிலிருந்து வெளி வந்தது. அசனுல்லாஹ் சந்தாகிரி என்பவரால் 1881ல் இப்பத்திரிகை துவக்கப்பட்டது.

இப்பத்திரிகை துவக்கத்தில் வார இதழாகவும், பின்னர் வாரமிருமுறை இதழாகவும், அதன் பின்னர் வாரம் மும்முறை இதழாகவும் வெளியானது. இன்றைய வாரமிருமுறை இதழ்களுக்கு முன்னோடி என்று இதனைச் சொல்லலாம்.

20ம் நூற்றாண்டின் கடைசியில் தேசிய அளவிலான கவனத்தை உருது பத்திரிகைகள் ஈர்த்தன. ‘ஜமீன்தார்' என்ற பத்திரிகை லாகூரில் 1903ல் துவங்கப்பட்டது. செய்தி முகவர்களை தனக்கென ஏற்படுத்திய முதல் உருது பத்திரிகை இது. முழுக்க முழுக்க தீவிர தேசியவாத சிந்தனைகளை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டது இப்பத்திரிகை. அதனால் இதன் சர்குலேஷன் 30 ஆயிரம் பிரதிகளைத் தொட்டது.

1902ல் மவ்லவி சனாவுல்லாஹ் கான், வதன் (தாய்நாடு) என்ற பத்திரிகையை துவக்கினார். இதுவும் தேசியவாத பத்திரிகையாக தொடர்ந்து 33 ஆண்டுகள் வெளிவந்தது. மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர், நசீப் யே ஹம்தர்த் என்கிற உருது பத்திரிகையை 1912ல் ஆரம்பித்தார்.

அதேபோல, இக் கால கட்டத்தில் மதினா என்ற பருவ இதழ் பிரபல அசியல் பத்திரிகையாக வெளி வந்தது. ஹமீது அன்சாரி என்பவர் இதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இதே காலகட்டத்தில் அல் ஹிலால் (பிறை) என்கிற உருது பத்திரிகையை வார இதழாக மௌலானா அபுல் கலாம் ஆஸôத் துவக்கினார். இந்தப் பத்திரிகை முஸ்லிம்களுக்கு மத்தியில் அரசியல் மற்றும் மத விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதால் இது பிரபலப் பத்திரிகை யாக உருவெடுத்தது.

பத்திரிகையின் கட்டமைப்பு, டிசைன் உள்பட அதன் உள்ளடக் கம், விளக்கக் காட்சிகள் (பிரசன் டேஷன்) போன்றவற்றிற்கு முக்கி யத்துவம் கொடுத்து அல் ஹிலால் வெளி வந்தது அதன் சிறப்பம்சமாக பேசப்பட்டது.

எகிப்திய பத்திரிகைகளைப் பின்பற்றி அல் ஹிலால் வடிவ மைக்கப்பட்டது. ஆனாலும் இதன் பலமே அது வெளியிட்ட செய்திகள்தான். புதிய பாணியில் செய்திகளை வெளியிட்டு வாசகர் களை கவர்ந்தது அல் ஹிலால் பத்திரிகை.

1923ல் ஆர்ய சமாஜம் "மிலாப்' என்ற உருது பத்திரிகையை லாகூரில் தொடங்கியது. தேசிய வாத சிந்தனைகளை தலையங்க மாக எழுதியதால் (நம் ஊர் தினமணி போல) பிரபலமானது. ஜவஹர்லால் நேரு "கவ்மி அவாஸ்' (மக்கள் குரல்) என்ற பத்திரிகையை 1945ல் தொடங் கினார்.

இப்படியாக சமூக அரசியல் தளங்களில் பெரும் பங்களிப் பைச் செய்த உருது பத்திரிகைகள் இந்தியா பாகிஸ்தான் பிரிவி னைக்குப் பின் கடுமையான பாதிப்புக்குள்ளாயின.

லாகூரில் நடந்த கலவரங்க ளின்போது ஆர்ய சமாஜ் நடத் திய மிலாப் பத்திரிகை அலுவல கம் கலவரக்காரர்களால் சூறை யாடப்பட்டது. சில வாரங்கள் நின்றுபோன இப்பத்திரிகை டெல்லிக்கு இடம் மாறி இயங்கத் தொடங்கியது.

பிரிவினையின்போது தின, வார, மாத, மாத மிருமுறை என 415 உருது மொழி பத்திரிகைகள் இயங்கி வந்தன. பிரிவினைக்குப் பின் 345 பத்திரிகைகள் இந்தி யாவில் தொடர்ந்து இயங்கின. 70 பத்திரிகைகள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தன.

1951ம் ஆண்டு பத்திரிகை பதிவு அலுவலகமான ஆர்.என்.ஐ. வெளியிட்ட அறிக்கையின்படி 513 உருது பத்திரிகை கள் 7.48 லட்சம் ரூபாய் அளவிற்கு சர்குலேஷன்க ளைக் கொண்டிருந்தன. 50 வருடங்களுக்குப் பிறகு 3168 உருது பத்திரிகைகள் வெளியாயின. இதன் ஒருங் கிணைந்த சர்குலேஷன் மதிப்பு 1.7 கோடிகளாகும். இது ஆர்.என்.ஐ. அலுவல கம் தந்த 2007ம் ஆண்டுக் கான அறிக்கையாகும்.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் சில குறிப் பிட்ட உருது பத்திரிகை கள் இயங்கி வருகின்றன. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நடத்தும் தாவத் (அழைப்பு) வார இதழாக இருந்து தற்போது வாரமிருமுறை இதழாக வெளி வருகிறது.

இதேபோல, மௌலானா அப்துல் வாஹித் சித்தீகி துவக்கிய நயி துனியா (புதிய உலகம்). இது மிகப் பிரபல உருது பத்திரிகை யாக வலம் வருகிறது. தற்போது மௌலானாவின் மகன் ஷாஹித் சித்தீகி இப்பத்திரி கையை நடத்தி வருகிறார்.

சஹாரா செய்தி நிறுவனம் ஆலமி சஹாரா, ரோஸ்நாமா ராஷ்ட்ரிய சஹாரா ஆகிய உருது வார இதழ்களை நடத்தி வருகி றது.

ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் மிக அதிக அள விலான உருது பத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றில் சியா சத்தின சரி மிகப் பிரபலம். முன் னணி பத்திரிகையாக இது திகழ் கிறது. சியாசத்தைப் போலவே, தி முன்சிப், இந்தியன் ஏதேமாத் அன்ட் ரெஹ்னுமாயே தெக்கான் போன்ற உருது பத்திரிகைகளும் ஆங்கிலத் தலைப்பில் வெளியா கின்றன.

2006ம் ஆண்டு வரை தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே படி ஆந்திரப் பிரதேசத்தில் மட் டும் அதிகபட்சமாக 506 உருது பத்திரிகைகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

மும்பையில் பிரபல இன்கு லாப் மற்றும் உருது டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கல்கத்தாவிலும் ஆஸôத் ஹிந்த், ரோஸôனா ஹிந்த், அக்பாரே மஷ்ரிக்கி, ஆப் ஷார், ஆகாஸ் ஆகியவை குறிப் பிடத்தக்க பத்திரிகைகளாக வெளியாகின்றன.

1980களுக்குப் பின் உருது பத்திரிகைகள் படிப்படியான சரிவை சந்தித்து வந்துள்ளன என் பதையும் குறிப்பிட வேண்டியுள் ளது. மேற்கு வங்கத்தில் பெங் கால் ஷானே மில்லத், இம்ரோஸ், அஸ்ரே ஜதீத் காஸி, இக்ஃரா போன்ற உருது இதழ்கள் மூடு விழாவைக் கண்டிருக்கின்றன.

இருந்தபோதிலும், இந்த புதிய புத்தாயிரம் ஆண்டின் முதல் தசாப்தத்தில் புதிய பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் வருகை யால் உருது ஊடகம் புத்தெழுச்சி யைப் பெற்றுள்ளது. பெரிய ஊடக நிறுவனங்கள் தங்களின் இருப்பை உருது மீடியாக்களின் மூலம் உணர வைத்துள்ளன.

முக்கிய உருது பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்களை, மிகப் பெரிய செய்தி நிறுவனங் கள் நடத்தி வருகின்றன. 2006ம் ஆண்டு ராஷ்டிரிய சஹாரா என்ற உருது சேனல் சஹாரா நிறுவனத் தால் துவக்கப்பட்டு பெரும் நேயர்கள் வட்டத்தை கொண்டு இயங்கி வருகிறது.

மும்பையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் இன்கிலாப் என்ற உருது பத்திரி கையை ஜாக்ரான் குழுமம் 2010ல் சொந்த மாக்கி தொடர்ந்து நடத்தி வருகி றது. ஈ.டி.வி. உருது, ஆலமி சஹாரா, ஜீ சலாம், ஆஸôத் ஹிந்த், ஹிந்த் சமாச்சார் போன்ற சேனல் களும் பிரபல செய்தி நிறு வனங்களால் நடத்தப் பட்டு வருகின்றன.

2011ல் ஹைதராபாத்தி லிருந்து வெளியாகும் முன்சிப் உருது நாளிதழ், புதிய செய்திச் சேனலைத் துவக்கியது. அதே சமயம், மும்பையிலிருந்து வெளி யாகும் உருது டைம்ஸ் நாளிதழ் அதன் டெல்லி மற்றும் லக்னோ பதிப்பு களை விரைவில் துவக்க உள்ளதாக அறிவித்துள் ளது.

பல்வேறு உருது பத்திரி கைகள் தங்களது இணைய தளப் பதிப்புகளையும் துவக்கி இருக்கின்றன. ஹைதராபாத்திலி ருந்து வெளியாகும் சியாசத் உருது நாளிதழ்தான் 90களின் இறுதியில் இணைய தளப் பதிப் பைத் துவக்கி வைத்த முதல் உருது பத்திரிகை என்ற பெருமை யைப் பெறுகிறது.

உருது இதழியல் அல்லது உருது மீடியாக்கள் மூலம் உருது மொழி மறுமலர்ச்சியை பெற்று வந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு, கேரளா, கர்நாடகாவில் உருது மொழி சரிவை சந்தித்து வருகிறது.

இம்மாநிலங்களில் உருது மொழி பெரும்பாலான மக்க ளால் பேசப்படாததும் உருது மொழியின் சரிவுக்கு ஒரு கார ணம் என்றாலும், இப்பிரதேசங்க ளில் உருது பள்ளிக் கூடங்கள் மூடு விழாவைக் கண்டு வருகின் றன. இந்த மாநில அரசுகள் உருது மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டாதது மிக முக்கிய கார ணம்.

தமிழகத்திலும் நூற்றுக்கணக் கான உருது பள்ளிகள் மூடப்பட் டுள்ளன. தமிழகத்தில் உருது மொழி பேசுவோர் கணிசமாக இருந்த போதிலும் அரசு உருது மொழி வளர்ச்சியில் போதிய கவனம் செலுத்துவதில்லை. உருது மொழியை வேண்டாத மொழியாக தமிழக அரசு கருது கிறதோ என்னமோ?

 - ஃபைஸ்

Pin It