பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அருகே கடந்த 17ம் தேதி குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மே மாதம் 5ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர் தலை சீர்குலைக்க சதி என்ற கோணத்தில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

மல்லேஸ்வரத்தில் கர்நாடக பாஜகவின் தலைமை அலுவலகம் மட்டுமல்ல, கர்நாடக ஜனதா கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் கூட அங்கே இருக்கின்றன. ஆனால் குண்டு வெடித்தது பாஜக அலுவலகம் அருகே என்ப தால் பாஜக அலுவலகத்திற்கு வரும் தலைவர்களை குறி வைத்தே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகி றது.

“பாஜக தலைவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு இது; பாஜக தலைவர்களை கொலை செய்யும் நோக்கத் தில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் கூட அப்படித் தான்...'' என்கிறார் கர்நாடக மாநில துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான அசோக்.

இவையெல்லாம் பாஜக ஆடும் நாடகம் என்றே தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பு என்பது பாஜக அலுவலகத்தின் வாசலிலோ அல் லது அலுவலகத்தையொட் டியோ நடைபெறவில்லை. பாஜக அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள விநா யகர் கோவிலுக்கு அருகில் நிறுத் தப்பட்டிருந்த பைக் ஒன்றில் குண்டு வெடித்திருக்கிறது.

இதனால், குண்டு வெடித்த பைக்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சில தீப்பற்றி எரிந்துள்ளன.

விநாயகர் கோவிலுக்கு அரு கில் குண்டு வெடித்திருந்தும் வழக்கம்போல கோவிலை தகர் க்க தீவிரவாதிகள் சதி என்ற ரீதி யில் செய்திகள் வெளியாகவி ல்லை. மறந்தும் கூட பாஜகவினர் இதனை சொல்லவில்லை என் பது கவனிக்கத்தக்கது.

பாஜகவினரும் இந்த கோணத் தில் செய்தி பரப்பாமல் அக்கட்சி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது என்பதை பூதாகரப்ப டுத்துவதன் மூலம், அக்கட்சியின் மீதே சந்தேகம் எழுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்த குண்டு வெடிப்பு நடத்தப் பட்டிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரி வித்திருப்பதில் உண்மையில்லா மல் இல்லை.

கர்நாடகாவில் பாஜகவின் செல்வாக்கு பெருமளவில் சரிந்து போயிருக்கிறது. பாஜக தலைவர் களின் மெகா ஊழல்கள், அதை யும் தாண்டிய பாலியல் குற்றச் சாட்டுகள் கர்நாடக மக்களை அக்கட்சியின் மீது காறித் துப்ப வைத்துள்ளன.

மேலும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா, கர்நாடக பாஜகவிலி ருந்து விலகி புதுக் கட்சியைத் தொடங்கியதிலும் பாஜகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள் ளது.

கர்நாடக முஸ்லிம்களின் வாக் குகளைக் குறி வைத்து வேகமாக இயங்கி வருகிறார் எடியூரப்பா. முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு மத் தியில் பேசும் எடியூரப்பா, “நான் ஆட்சியில் இருந்த காலத்தில் சிறு பான்மையினருக்கு சலுகைகள் வழங்க பாஜக தலைமை எனக்கு தடை போட்டது...'' என்று பகிரங் கமாக சொல்லி வருகிறார்.

தன்னை மதச்சார்பற்றவனாக முன்னிறுத்தி, தனது கட்சிப் பொறுப்பில் முஸ்லிம்களை இணைத்திருப்பதும், சட்டமன் றத் தேர்தலின்போது முஸ்லிம்க ளுக்கு அதிக பிரதிநிதித்துவம் தருவேன் என்று அவர் சொல்லி வருவதும் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

மே மாதம் நடைபெறவிருக் கும் சட்டமன்றத் தேர்தலில் ஏனைய மாநிலக் கட்சிகளைவிட பாஜகவிற்கு கடுமையான போட் டியாளராக எடியூரப்பாதான் இருப்பார் என்று கவலைப்படும் பாஜக, கர்நாடகத்தில் இழந்த செல்வாக்கை பெற வேண்டுமா னால் கர்நாடக மக்கள் பாஜக பற் றிய பழைய விவகாரங்களை தற் காலிகமாக மறக்க வேண்டும். அதற் கென அதிர்ச்சிகரமான நிகழ்ச்சி நிரல் நடந்தேற வேண்டும் என்ற பின்னணியில்தான் இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கக் கூடும் என்று கணிக்க முகாந்திரம் இருக் கிறது. அதனால்தான் தேர்தலை யொட்டி இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது பைக் வெடி குண்டு என்பதும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா சக்திக ளின் மீதான சந்தேகத்தை வலுப் படுத்துகிறது. பைக் வெடிகுண்டு, சைக்கிள் வெடிகுண்டு மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்வது இந்துத்துவாவினரின் பாணி.

மாலேகான் முதல் கோவா குண்டு வெடிப்புவரை பைக் வெடிகுண்டு சம்பவங்களில் அபினவ் பாரத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்ச ரான சுஷில் குமார் ஷிண்டே, இந்த குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்து இது வரை எந்த முடிவுக்கும் வர வில்லை. விரிவான விசாரணைக் குப் பின்னர்தான் தெரிய வரும் என்கிறார்.

ஆனால் அன்றைய தினமே கர்நாடக டி.ஜி.பி. பச்சாவுவும், கமிஷ்னர் அவ்ராக்கரும், “குண்டு வைத்தது இந்தியன் முஜாஹித் தீன் அமைப்பைச் சேர்ந்தவர் களா என்பது குறித்து விசாரணை க்கு பின்னர்தான் தெரிய வரும்...'' என மீடியாக்களிடம் கூறியிருப் பது வேடிக்கை மட்டுமல்ல... இது காவல்துறை உயர் அதிகாரிக ளின் பொறுப்பற்றதனத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

தேசிய புலனாய்வு நிறுவன மும், பெங்களூர் சிட்டி குற்றப்பி ரிவு போலீசாரும் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். “குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என்பதை கண்ட றிய தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் தடயவியல் நிபுணர்க ளுக்கு எங்களது காவல்துறை சிறப்புக் குழுவினர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்...'' என்கிறார் பெங்களூர் உயர் காவல் அதிகாரி ஒருவர். ஆனால் அதற்குள் இந்தியன் முஜாஹித்தீனை மீடியாக்களுக்கு நினைவுபடுத்தியிருக் கின்றனர் பெங்களூரூ டி.ஜி.பி. யும், கமிஷ்னரும்!

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் நொறுங்கிக் கிடக்கும் பைக் மற்றும் வாகனங்களின் இடிபாடுகளிலிருந்து தடயவியல் நிபுணர்கள் திரட்டிய ஆதாரங்க ளின்படி, அமோனியம் நைட் ரேட் போன்ற இரசாயனப் பொருட்களும் லித்தியம் அல்கா லைன் பேட்டரிகளும் கிடைத் துள்ளன.

வெடிமருந்தை வெடிக்கச் செய்யும் ஐ.இ.டி. கருவி இந்த வெடிப்பில் பயன்படுத்தப்பட் டுள்ளதா என்பது சந்தேகத்திற்கு ரியது என தெரிவித்துள்ளனர் தடயவியல் நிபுணர்கள்.

மேலும், இந்த வெடிகுண்டில், பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத் தும் இரும்புத் தகடுகள், ஆணி கள், பால் பேரிங்குகள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டி ருக்கவில்லை. அதற்கான தடயங் கள் குண்டு வெடித்த இடத்திலி ருந்து கண்டெடுக்கப்படவில்லை என்றும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடம் பாஜக அலுவல கத்தை விட்டு தூரம் என்பதால், பாஜக அலுவலகத்தில் பொருத் தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக் களில் குற்றவாளிகளின் உருவங் கள் தெளிவாக பதிவாகவில்லை என்கின்றனர் தடயவியல் நிபு ணர்கள்.

தீவிரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியிருந்தால் அல்லது பாஜ கவினர் சொல்வதைப்போல, அக் கட்சியின் தலைவர்களைக் கொல்ல சமூக விரோதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தால் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையல் லவா பயன்படுத்தியிருக்க வேண் டும்? அதுவும் பாஜக அலுவலகத் திற்கு அருகில் அல்லவா அவ ற்றை வைத்திருக்க வேண்டும்?

ஆக, இந்த குண்டு வெடிப்பில் அந்த நோக்கம் இல்லை என் பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பைக்கில் குண்டுகள் பொருத்தி - அதை இத்தனை தூரத்தில் வைத்தால்தான் பாஜக அலுவல கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிராவில் உருவங் கள் பதிவாகாது என்பதை நன் றாக அறிந்தவர்கள்தான் இந்த குண்டு வெடிப்புக்கு பின்னணி யில் செயல்பட்டிருக்க வேண்டும்.

குண்டு வெடிப்பினால் பெரும் உயிர் சேதம் ஏற்படக் கூடாது; அதே சமயம் பெரிய குண்டு வெடிப்பாகவும் இருக்க வேண் டும். அதை தமக்கு சாதகமாக ஆக் கிக் கொள்ள வேண்டும் என்பது தான் குண்டு வெடிப்பின் பின்ன ணியாக பார்க்க முடிகிறது.

விநாயகர் கோவிலுக்கு அருகில் குண்டு வெடித்தும் கோவிலை தகர்க்க சதி என்ற ரீதியில் செய்தி வெளியாகாதது ஒன்றே இது அரசியல் காரணங்களுக்காக அரசியலில் செல்வாக்கிழந்தவர்க ளின் அரக்கத்தனமான வேலை என்பதை வெளிப்படுத்துகிறது.

Pin It