“தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை” என்றும் “வாக்களியுங்கள்” என்றும் மட்டுமே பரப் புரை கொண்டு இருந்த முதலாளித்துவ அரசும் ஊடகங்களும், இந்த 2016ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் ஒரு வளர்ச்சியைத் திணித்து உள்ளன. இப்பொழுது “வாக்களிப்போம்” அதுவும் “100 விழுக்காடு நேர்மையாக வாக்களிப்போம்” என்று மக்களே கூறுவதாகப் பரப்புரை செய்கிறார்கள்.

வழக்கம் போல மாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்ச லைட்டுக் குழுக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றும், மக்கள் புரட்சிக்கு அணியம் ஆகும்படியும் அறைகூவல் விடுத்துள்ளன.

மக்களும் வழக்கம்போல் நக்சலைட்டுகளின் அறை கூவலைக் கண்டுகொள்ளாமல், பெருவாரியாக வாக் களித்து உள்ளனர். மேற்குவங்கத்திலும் அஸ்ஸாமி லும் 80 விழுக்காட்டுக்கும்  அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. இது மிகப்பெரும்பான்மையான மக்கள் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் தேர்தல் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று நம்பு வதைக் காட்டுகிறது; அல்லது தேர்தல் என்பதன் உட் பொருளைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு திருவிழா என்று நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

முதலாளித்துவ அமைப்பின்கீழ் நடக்கும் தேர்தல் களின் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா? முடியும் என்று ஸ்டாலினுடைய மரணத்திற்குப் பின் சிலர் வாதிட்டனர். முடியாது என்றும் சிலர் எதிர் வாதம் செய்தனர். இந்த விவாதம் நடந்துகொண்டு இருக்கையில், 1970ஆம் ஆண்டில் சால்வடார் அல்லெண்டே தேர்தலில் சிலி நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றாமல், முதலாளித்துவ அமைப்புக்குக் கட்டுப் பட்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபராய்ப் பதவி ஏற்றதால், உழவும் தொழிலும் உழைப்ப வர்க்கே சொந்தம் என்று உடனடியாக, ஒரே நாளில் சட்டம் இயற்ற முடியவில்லை.

ஆனால் அதற்கான பாதையைச் செப்பனிடத் தொடங்கினார். உள்நாட்டு எதிரிகளும், வெளிநாட்டு எதிரிகளும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கை களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வில்லை. எதிர்ப்பாக இருந்தாலும் அதை ஜனநாயக முறையில்தான் எதிர்க்க வேண்டும் என்றும் நினைக்க வில்லை. உள்நாட்டு எதிரிகள் வெளிநாட்டு (அமெரிக்காவின்) உளவுத் துறை மற்றும் இராணுவ உதவி யுடன் “ஜனநாயக” அரசைக் கவிழ்த்துவிட்டு, ஒரு பொம்மை அரசை நிறுவினர்.

அதாவது முதலாளிகளுக்கு / முதலாளித் துவத்திற்கு ஆதரவானவர்களைத் தேர்ந்தெடுக் கத் தான் இந்தத் தேர்தலே ஒழிய, உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அல்ல என்று இந் நிகழ்வு தெளிவாகக் காட்டியது / காட்டுகிறது.

அப்படி என்றால் தேர்தலினால் எவ்விதப் பயனும் இல்லையா? நக்சலைட்டுக் குழுவினர்கள் கூறுவது போல் தேர்தலை முற்றிலுமாக நிராகரிப்பதுதான் தீர்வா?

அப்படி எல்லாம் ஒரேயடியாகச் சொல்லிவிட முடி யாது. லெனின் வழக்கமாகக் கூறியதுபோல் சூழ்நிலையைப் பொறுத்துதத்தான் எது சரி என்று சொல்ல முடியும். இரஷ்யாவில் போல்ஷிவிக்குள் தேர்தலில் / நாடாளுமன்றத்தில் பங்கு கொண்டார்கள். நாடாளுமன் றத்தைத் தங்கள் கொள்கைகளை மக்களிடம் சொல் வதற்கான மேடையாகப் பயன்படுத்தினார்கள்; நாடாளு மன்றச் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தார்கள்; இறுதியில் அதைக் கலைக்கவும் வழிவகுத்தார்கள். அந்த அளவிற்கு போல்ஷிவிக்குள் புரட்சிகரத் தத்து வத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருந்தார்கள்.

இந்தியாவில் உள்ள நிலை என்ன? இங்கு தேர்த லில் பங்குகொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகளும் உள்ளன. தேர்தலை நிராகரிக்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் உள்ளன. தேர்தலில் பங்குகொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகளுக்குக் “கூலி உயர்வு” என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அக்கட்சி களில் உள்ள தொண்டர்கள் (அல்லது வேறு யாரோ கூட) அதைத் தாண்டிப் பேசிவிட்டால், “நக்சல் வாடை வீசுகிறது” என்று கூறி, மற்றவர்களை “அச்சுறுத்தி” விடுவார்கள். இந்தப் பொதுவுடைமைக் கட்சிகளுக்குச் சோஷலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது மட்டும் அல்ல; சிறு சிறு சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையும் இல்லை. அவர்களுக்குத் தெரிந் தது எல்லாம் கூலி உயர்வு மட்டுமே.

தேர்தலை நிராகரிக்கும் பொதுவுடைமைக் கட்சி கள் பல குழுக்களாக உள்ளன. இக்கட்சிகள் மன உறுதி கொண்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு உள்ளன. இவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் கேட்டுக் கொள்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பெருந்திரளாகச் சென்று வாக்களிக்கின்றனர். இக்குழுக்களில் எந்த ஒரு குழு வும் தாங்கள் சொல்வதை மக்கள் ஏன் கேட்பது இல்லை என்று சுயவிமர்சனம் செய்து கொள்வதே இல்லை.

தேர்தலில் பங்குகொள்ளும் பொதுவுடை மைக் கட்சிகள் “கூலி உயர்வு” வட்டத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், தேர்தலில் ஈடுபடாத பொதுவுடைமைக் கட்சிகள் நடக்க வாய்ப்பு இல்லாத புரட்சிக்குத் “தலைமை தாங்கும்” கனவில் சிக்கித் தவிக்கிறார்கள்.

புரட்சி நடக்க வேண்டும் என்றால் அங்கே புரட்சி கரத் தத்துவம் இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார். இந்தியாவில் மிக மிக.... மிகப் பெரும்பான் மையான மக்களுக்குப் புரட்சிகரத் தத்துவத்தின் அரிச் சுவடியே தெரியாது.

தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டத்தின் போது, அவர்களை ஒடுக்க இந்திய அரசு இராணுவ வீரர்களையும், ஆயுதங்களை யும் போராட்டக் களத்திற்குத் தொடர் வண்டிகளின் மூலம் கொண்டு சென்றது. இதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின் புரட்சிகர உணர்வை ஒரு சிறு பகுதியில் வளர்த்து எடுத்ததற்கு மாறாக நாடு முழுவதும் வளர்த்து எடுத்து இருந்திருந்தால், தொடர் வண்டித் தொழிலாளர்கள் தெலுங்கானா போராட்டப் பகுதிகளுக்கு, இராணுவத் தையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்வதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய முடிந்து இருக்கும் அல்லவா என்று கேட்டார்.

தேர்தலில் பங்குகொள்ளும் கட்சிகளும் சரி! பங்கு கொள்ளாத கட்சிகளும் சரி! ஸ்டாலினுடைய இந்த வினாவிற்க விடை தேடப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டு இருக்கின்றன.

இன்று நம் முன் உள்ள பணி நம்முடைய பிரச்சினைகள் அனைத்துக்கும் சோஷலிச அமைப்பில் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று மக் களுக்குப் புரிய வைப்பதுதான். அப்பணி பெரும் அளவிற்குச் செய்து முடிக்கும் வரையில் தேர்த லில் பங்கு கொள்வதால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவது இல்லை. “மேற்கண்ட யாரும் இல்லை” (None of the above - NOTA) என்று வாக்களிப்பதும்கூட வீண் முயற்சியே.

பொதுவுடைமைத் தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு உள்ள தோழர்களே! புரட்சிகரத் தத்துவம் மக்களி டையே நிலவாமல் புரட்சி வராது. ஆகவே மக்களி டையே புரட்சிகரச் சிந்தனையைப் பரப்புங்கள். இன்று மக்களை அழுத்திக் கொண்டு இருக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் முதலாளித்துவமே மூல காரணமாக உள்ளது; சோஷலிசமே அதற்குத் தீர்வாக உள்ளது. இதை மக்களுக்கு உணர்த்தி அவர்களைப் புரட்சிகரத் தத்துவத்தின்பால் ஆற்றுப்படுத்துவதை முதன்மை யான பணியாகக் கொள்ளுங்கள்.

பொது மக்களே! கடந்த 68 ஆண்டுகளாகத் தேர்தலில் வாக்களிக்கின்றீர்களே! ஏதாவது முன்னேற்றத் தைக் கண்டு இருக்கிறீர்களா? தேர்தலில் வாக்களிப்ப தன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர் கள்? ஆளும் வர்க்கமாக உள்ள முதலாளிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சேவகம் செய்வதற்கு, அவர்களு டைய நலன்களைக் காப்பதற்காக உங்களை அடக்கி ஒடுக்குவதற்கு வேலை ஆணையை (AppointmentOrder) கொடுக்கிறீர்கள்.

இது தேவையா? சிந்தித்துப் பாருங்கள்! தேர்தலைப் புறக்கணியுங்கள்!

Pin It