அய்யய்யோ அய்யய்யோ

       அடிவயிறு எரியுதே!

அன்றாடம் அன்றாடம்

       அடிஉதைகள் தொடருதே!

என்ன பா வஞ்செஞ்சோம்

       மீனவராப் பொறக்க?

இப்படியா எங்கசனம்

       கொத்துக்கொத்தா இறக்க?

காக்கா குருவிபோலக்

       கண்டபடி சுடறானே!

கேட்க நாதியில்லே

       வலையக் கிழிக்கிறானே!

உசிரோடு போறமக்க(ள்)

       பொணமாக் கரையொதுங்க

ஒவ்வொரு நாளுமே

       ஒப்பாரி விழிபிதுங்க

கொசுறுப் பய(ல்)தானே

       கொலைகாரச் சிங்களவன்

கோவணம் அவிழ்த்தவனின்

       கொழுப்படக்க ஆளிலையா?

தினம் ஒரு கடுதாசி

       முதல்வர் தீட்டலையா?

திருட்டுத் தில்லிநமை

       இந்தியரா ஏற்கலியா?

இன்னும்இன்னும் எத்தனைநாள்

       நம்மசனம் சாகணுமோ?

மன்மோகன் நார்கிழிஞ்ச

       மட்டையா ஆளணுமோ?

தமிழ்மக்கா... தமிழ்மக்கா...

       துணையா நில்லுங்க!

சாவுகளைத் தடுக்கஒரு

       வழியிருந்தா சொல்லுங்க!
Pin It