மது விற்பனையில் தமிழகம் முதலிடம். 1 சனவரி 2014-இல் தமிழகத்தில் ஒரே நாள் விற்பனை சாதனை ரூ.251 கோடி; 22.10.2014 மற்றும் 23.10.2014 இருநாளில் விற்பனை ரூ.440 கோடி. இவ்வளவு தொகையும் உண்மையில் உழைப்பாளி களின் உழைப்பேயாகும். வியர்வை சிந்தி உழைப் பது எதற்கு? பிச்சை எடுக்காமல் சமுதாயத்தில் மான மரியாதையுடன் வாழவும் பிள்ளைகளுக்கு முன்னேற வழிகளைக் காட்டவும் நல்ல மனிதனாக வாழவும் தான் உழைக்கின்றனர்.

இவ்வளவு கேடான ஒரு வியாபாரத்தைத் தொடர்ந்து நம்மை ஆளும் கட்சிகள் நடத்துகின்றன. ஆட்சி செய்பவர்கள் உழைப்பாளிகளின் நலனில், முன்னேற்றத்தில் சிறிதும் அக்கறை காட்டுவது இல்லை. “உழைப்பாளிகளைச் சிந்திக்கவிட்டால், நாம் ஆட்சி செய்ய முடியாது” என்று ஆளும் கட்சிகள் நினைக்கின்றன.

நான் மக்கள் தலைவன்; மக்கள் முதல்வர்; மக்கள் தொண்டன் என்று பொய் சொல்கின்றனர். நன்மை தரும் திட்டங்களில் அக்கறை காட்டுவதில்லை. வளர்ச் சித் திட்டங்கள் என்று பொய் சொல்லி; கொள்ளை யடிக்கும் திட்டங்களையே தீட்டுகின்றனர். உண்மை யில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மதுவில் மயங்கிக் கிடப்பதால் ஏற்படும் தீமைகள் சிலவற்றை காண்போம்.

மது அருந்தினால் நினைவுகள் மங்கிவிடுகின்றன; நரம்புகள் தளர்ந்து விடுகின்றன; உடல் வலுவிழந்து விடுகிறது; முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திக்க வைப்ப தில்லை; குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இப்படி அக்கறைக் காட்டாத குடும் பத்தில் பிறந்த குழந்தையும் இதுபோன்ற சூழலில் வளர்ந்து வருவதால் அந்தத் தலைமுறையும் அப்படியே இருக்கும்.

மது அருந்தியவன் குடும்பத்தைப் பற்றி ஒருவர் தேநீர்க் கடையில் பேசியது : “சின்னப்பையன் இவனு டைய அப்பன் மாதிரியே குடிக்கின்றான். இவனுக்குத் திருமணமாகிவிட்டது. குடிப்பதால் தாம்பத்ய உறவில் திருப்தி அடையாத இவனுடைய மனைவி பக்கத்து வீட்டுப் பையனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இரண்டு பிள்ளைகள் பெத்துட்டா. இரண்டும் இவனுக்கு பிறக்கவில்லை. பட்டா குடிகாரன் பெயரில்; உற்பத்தி அடுத்த வீட்டுப் பையன்” என்று பேசிக் கொண்டிருந் தனர். இதுபோன்ற இழிசெயல் நிகழாவண்ணம் இருக்க மதுவை அருந்தி மயங்காமல் இருக்க வேண்டும்.

செய்தித்தாள்களில் கண்ட செய்தி ஒன்று. வேலைக் குப் போகாமல் குடித்துவிட்டு வீட்டைத் திறந்து வைத்து விட்டு மயங்கியவன் வீட்டில் இருந்த உணவுகளை நாய்களும் குரங்குகளும் தின்று சீரழித்தன. குழந் தைகள் பட்டினியானது. போதாக்குறைக்கு திருடர்கள் வேறு நுழைந்து, கிடைத்ததை எடுத்துச் சென்று விட்டனர் என்றும், மனைவியும் குழந்தைகளும் உழைத்துக் கொண்டுவரும் கூலித் தொகையைக் கொடுக்கவில்லை என்றால் உதைத்து வாங்கிக் கொண்டு சென்ற கணவனை, தாயும் பிள்ளையும் கூடி உதைத் தனர். அடிதாங்காமல் காவல்நிலையத்தில் புகார் என்று வருகின்றன.

இப்பொழுது தமிழ்நாடு அரசு விற்பனை செய்யும் மதுவில்கூட வேதிப்பொருட்கள் கலந்து உற்பத்தி பெருக்கி விநியோகம் செய்கின்றனர். ஒரு நல்ல அரசு, மக்கள் மீது அக்கறை காட்டும் அரசு, போலித்தனம் இல்லாத அரசு மதுவை ஒழிக்க வேண்டும். மதுவை ஒழிக்காத அரசு மக்கள் விரோத அரசே! மதுவினால் ஏற்படும் தீமைகளை மதுக்கடைகளில் பெரிய எழுத் தில் பலகைகள் மூலம் வைத்து விற்க வேண்டும்.

இனிவரும் அரசியல் கட்சிகள் மதுவை ஒழிப் போம் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும். மக்கள் நலன் காப்போம்! மனிதவளம் பெருக்குவோம்!

தமிழ்நாட்டில் முழுமையான மது ஒழிப்பிற்காகக் கடந்த அக்டோபர் 2 கன்னியாகுமரியில் தொடங்கி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மூன்று நாள் நடைப்பயணமாக பிரச்சாரம் செய்து 2015 சனவரி 12ஆம் தேதி சென்னையில் முடிவுற இருக்கிறது. போதை பொருள் ஒழிப்புக் கூட்டமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் சி.பெரியசாமி, மக்கள் மறுமலர்ச்சி மன்றமும் ஓர் அங்கம் ஆகும்.

- உழவர் மகன் ப.வ.

Pin It