அனைத்துத் தமிழ்ப் பெருமக்களுக்கும் அன்பான வேண்டுகோள்!

1.            ‘சிந்தனையாளன்’ இப்போது 38ஆம் ஆண்டில் வெளிவருகிறது.

2.            ‘சிந்தனையாளன்’ இதழின் சாதனைகள் என, 4 செய்திகளை நினைவு படுத்துகிறோம்.

ஒன்று :

                1978ஆம் ஆண்டில் வடமாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரி, அடைமழை போல் பரப்புரைப் பயணம் மேற் கொண்டதால்தான், “மண்டல் குழு” 01-01-1979இல் அமைக்கப்பட்டது.

இரண்டு :

                19-08-1979இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நானும் தோழர் சேலம் அ. சித்தய்யன் அவர்களும் பேசியதனாலும், எங்கள் இருவரின் வேண்டுகோளை ஏற்று அன்றைய அமைச்சர் பண்ணுருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் 7-10-1979 முதல் இடைவிடாது முதலமைச்சருக்கு அழுத்தம் தந்ததாலுமே தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 01-02-1980இல் 50 விழுக்காடு ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மூன்று :

                1988 மார்ச்சு முதற்கொண்டு, இந்தியாவில் மார்க்சியம் - லெனினியம் வெற்றி பெற்றிட, “பெரியார் - அம்பேத்கர் பாதையே தீர்வு” என்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் முடிவைத் தமிழரிடையே பரப்பி வருகிறது.

நான்கு :

                தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு இலட்சக்கணக்கான தமிழர்களைக் காவு கொடுக்க வேண்டும். அதற்கு நாம் ஆயத்தம் செய்ய இயலவில்லை. எனவே மக்கள் நாயக வழிமுறையில் பல மாநிலங்களை ஒன்றுதிரட்டி, ‘இந்தியாவை உண்மையான மதச்சார்பற்ற ஒரு கூட்டாட்சியாக உருவாக்கும்’ முயற்சியில் 18-10-1991 முதல் தொடர்ந்து முயற்சித்திட, “சிந்தனையாளன்” உதவுகிறது.

“சிந்தனையாளன்” இதழை அனைத்துத் தமிழரும் வளர்த்தெடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

-    வே.ஆனைமுத்து

Pin It