அமெரிக்காவின் இன்றைய மக்கள் தொகை 32.4 கோடி.

அந்நாட்டின் முதலாவது அதிபராக (President)) ஜார்ஜ் வாஷிங்டன் 30.04.1789இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது 10 மாகாணங்கள் மட்டுமே தேர் தலில் பங்கேற்றன.

8.11.2016 செவ்வாயன்று நடைபெற்ற தேர்தலில் 50 மாகாணங்கள் பங்கேற்றன. இந்த ஒவ்வொரு மாகாணத்துக்கும் - மக்கள் தொகை அடிப்படையில் “வாக்காளர்கள் தொகுதிகள்” - “Electoral Colleges” இத்தனை என்று சட்டப்படி பிரித்திருக்கிறார்கள்.

donald trump 263மொத்தம் உள்ள 50 மாகாணங்களையும் 538 வாக்காளர் தொகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய மாகாணமான கலிஃபோர்னியா - 55 வாக்காளர் தொகுதிகளைக் கொண்டுள்ளது. மிகச் சிறிய மாகாணங்களான வயாமிங், அலாஸ்கா இவை தலைக்கு 3 வாக்காளர் தொகுதிகளைப் பெற்றுள்ளன.

இந்த 538 தொகுதிகளிலும் தேர்ந்தெடுப்போர் - “தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்” - (“Members of Electoral College”) என்று அழைக்கப்படுவர். இவர்கள் பெற்றிருப்பது - அதிபரைத் தேர்வு செய்வதற் கான வாக்குரிமை மட்டுமே. அதிபர் தேர்தல் முடிந்த வுடனே இந்த அவை சட்டப்படி கலைக்கப்பட்டுவிடும்.

இவர்களுக்குப் பதவிக்காலமும் கிடையாது; இவர் கள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்லர்; ஊதியம் ஏதும் இல்லை.

இந்தத் தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் 538 பேர்களுள், 310 பேர் அமெரிக்கக் குடிஅரசுக் கட்சியின் (Republican Party) வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump)புக்கு வாக்களித்தனர்; 228 பேர் மக்கள் நாயகக் கட்சியின் (Democratic Party) வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனுக்கு (Hillary Clinton) வாக்களித்தனர்.

வெற்றி பெறத் தேவையான 270க்குமேல் 40 வாக்குகள் அதிகமாகப் பெற்ற டொனால்டு டிரம்ப் 20.1.2017இல் அமெரிக்காவின் 45ஆம் அதிபராகப் பதவி ஏற்பார்.

டிரம்பும், ஹில்லாரியும் - போட்டி போட்டுக் கொண்டு 512 நாள்கள் பரப்புரை செய்தனர்.

உலக அளவிலான ஊடகங்களும் இந்திய ஊடகங் களும் ஹில்லாரி என்கிற பெண்மணி வெற்றி பெறப் போகிறார் என ஆரவாரமாகச் செய்தி பரப்பினர்.

அவை எல்லாமே தவறானவை ஆகிவிட்டன. ஏன்?

(1)          டிரம்புக்கு வாக்களித்தோரில்

                வெள்ளையரில் வாக்களித்தோர்         58%

                வெள்ளையர் அல்லாதாரில்    24%

                ஆண்களில் அதிகம் பேர், பட்டம் பெறாதோரில் அதிகம் பேர், அரசு அலுவலில் உள்ள ஆடவர், மகளிரில் அதிகம் பேர்.

                வழக்கமாக 1996 முதல் மக்கள் நாயகக் கட்சிக்கே வாக்களித்த மிச்சிகன், விஸ்கன்சின், பெனிசில் வேனியா மாகாணங்களின் “தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்களுள்” அதிகம் பேர்.

                மற்றும் அமெரிக்கப் பெரும் பணக்காரர்கள் 400 பேர்களின் பேராதரவு மற்றும் பணச்செலவு - 5 அமெரிக்க இந்தியப் பணக்காரர்களின் பணச் செலவு இவ்வளவும் டிரம்பின் வெற்றிக்கு முகாமை யான காரணங்கள் ஆகும்.

(2)          ஹில்லாரிக்கு வாக்களித்தோர்

                வெள்ளையரில்           37%

                வெள்ளையர் அல்லாதோரில்  74%

                மக்கள் நலத் திட்டங்களை அமெரிக்க அரசு மேற் கொள்ளக்கூடாது என்போரில் அதிகம் பேர்.

                மக்கள் நாயகக் கட்சியின் வாக்கு வங்கியாக 1996 முதல் இருந்த-மிச்சிகன், விஸ்கன்சின், பெனிசில் வேனியா மாகாணங்களின் “தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்களில்” அதிகம் பேரின் பிறழ்ச்சி. இவற்றால் ஹில்லாரி கிளிண்டன் தோல்வியுற்றார்.

இவ்வளவு விவரங்களையும் நாம் ஒவ்வொரு வரும் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

நேற்றும், இன்றும் உலகத்தை ஆட்டிப்படைக்கும் நாடு அமெரிக்கா.

உலக நாடுகளில் உள்ள எண்ணெய் வளநாடு களை ஆக்கிரமிப்பது, ஏழை நாடுகளில் உள்ள மலிவான கூலி அறிவு உழைப்பைச் சுரண்டுவது, எந்த மூலை யிலும் இனவழி, மொழிவழித் தேசிய விடுதலை எழுச்சி பீறிட்டு எழாமல் பார்த்துக் கொள்வது - இவ்வ ளவையும் செய்வது, 1945க்குப் பிறகு அமெரிக்கா தான்.

இதற்கு பலியானவர்களுள் ஆண்டன் பாலசிங்கம் ஒருவர். இது தனிவரலாறு. நிற்க.

அமெரிக்கா பரந்த நிலப்பரப்பையும், குறைந்த மக்கள் தொகையையும் கொண்ட நாடு.

அந்நாட்டில் வளமான எண்ணெய் ஓட்டங்கள், நிலக்கரித் தேக்கப் படிவங்கள் உள்ளன. அவற்றை இப்போது பயன்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை.

முதலாவது உலகப்போர் (1914-18), இரண்டாவது உலகப் போரில் (1939-45) பல கோடி இந்தியர்களும், 2 கோடி சோவியத் மக்களும், 60 இலட்சம் யூதர்களும் மாண்டனர்.

அப்படிப்பட்ட கொடிய நிகழ்ச்சிகளால் அமெரிக்கா வுக்கு எந்த இயற்கை வள அழிவுகளும், மக்கள் சாவும் நேரவில்லை.

அமெரிக்கா செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தா லும், பெரிய கடன்கார நாடுதான். ஒவ்வொரு அமெரிக் கக் குடும்பத்தின் மீதும் இன்று 8 இலட்சம் டாலர்கள் (ரூபா 5 கோடி) கடன் இருக்கிறது. பட்டம் பெறாதவர் களை அதிகம் கொண்ட நாடுதான்; வெள்ளை நிற வெறி நாடுதான்; ஆண் ஆதிக்கவெறி நாடுதான்.

இவை இப்படி இருப்பது ஏன்?

32.4 கோடி உள்ள அமெரிக்க மக்கள் தொகையில், 30 கோடி அமெரிக்க மக்களிடம் உள்ள சொத்து மதிப்பு எவ்வளவோ அவ்வளவு சொத்து - 2 கோடி அமெரிக் கரிடம் குவிந்து கிடக்கிறது.

உலகத்தில், 115 ஆண்டுகளில், எவ்வளவு பேர் நோபிள் பரிசு பெற்றார்களோ - அதில் 363 பேர் அமெரிக்கர்கள்.

எந்த அமெரிக்க அறிவாளியும் இவ்வளவு பெரிய மூலதனக் குவியல் 2 கோடி அமெரிக்கரிடம் ஏன் இருக்க வேண்டும் என்று கேட்டதில்லை; கொதித்தெழுந்ததில்லை.

2016 அக்டோபரில் அமெரிக்க இதழான “FORBES” - போர்ப்ஸ், அமெரிக்காவின் 400 முன்னணிப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. 23ஆவது ஆண்டாக, அமெரிக்க மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இதில் முதலிடத் தில் உள்ளார்.

இந்தப் பணக்காரர் பட்டியலில் இந்திய வம்சாவளி யைச் சார்ந்த 5 பேர் உள்ளனர்.

அப்படிப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பணக்காரரான ஷலப் ஷாலி குமார் (Shalabh Shali Kumar) பத்து இலட்சம் டாலர் தொகையை டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் நிதிக்கு அளித்துள்ளார்.

அமெரிக்காவில் அவரால் நிறுவப்பட்டுள்ள “ரிபப்ளி கன் இந்து கூட்டணி” (Republican Hindu Coalition - RHC) “டொனால்ட் டிரம்பின் வெற்றி, இந்துக்களுக்கு இரண்டாவது தீபாவளிப் பண்டிகை” என்று பெரிய பூரிப்போடு அறிவித்துள்ளார்.

உலகத்தில் அதிகமாக இராணுவச் செலவு செய்யும் நாடுகளான சீனா, இந்தியா, பிரிட்டன், பிரான்சு, இரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா இவற்றின் மொத்த இராணுவச் செலவு எவ்வளவோ, அதைவிட, அமெரிக்க அரசின் இராணுவச் செலவு அதிகம். இது, ஏறக்குறைய 600 இலட்சம் கோடி டாலர். அம்மவோ!

இவையெல்லாம் இப்படி இருக்கிற வரையில் வறுமை எப்படி ஒழியும்? நோய் பெருகுவது எப்போது குறையும்? “எல்லாருக்கும் எல்லாம்” என்கிற மாபெரும் மக்கள் நல உலகம் எப்படி அமையும்?

அமெரிக்க நாடு மனிதகுல எதிரி நாடு.

அங்கு இயங்கும் மக்கள் அவை - என்கிற அமெரிக்க காங்கிரஸ் (American Congress) 435 உறுப்பினர் களைக் கொண்டது.

மேலவை என்கிற செனட் (Senate) 100 உறுப்பி னர்களைக் கொண்டது. சிறிய, நடுத்தர, பெரிய மாகாணம் என்கிற வேறுபாடு இல்லாமல் - ஒவ்வொரு மாகாணத் துக்கும் 2 பிரதிநிதிகள் இந்த அவையில் உண்டு.

இவற்றுக்கும் குடிஅரசு அதிபர் தேர்தலுக் கும் ஒரு தொடர்பும் இல்லை.

இவ்வகையில் அமெரிக்க அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடியான அமைப்பு!

வீழ்க அமெரிக்கரின் நிறவெறி! ஒழிக அமெரிக்க ஏகாதிபத்தியம்!

- வே.ஆனைமுத்து

Pin It