கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் பட்டியல் குலத்தினர் பேரவை வேலூரில் 21-6-2015 அன்று நடத்திய விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாடு

மாநாட்டின் முற்பகல் நிகழ்ச்சி பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடு: கிரீமிலேயர் ஆணை யை நீக்கு என்னும் கோரிக்கையுடன் நடைபெற்றது. பேரவையின் புரவலர்-தலைவர் வே.ஆனைமுத்து தலைமை தாங்கினர். பேரவையின் பொதுச் செயலாளர் கலச. இராம லிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். அனைத்திந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC)) பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் சி.சேதுபதி, தொடக்கவுரையாற்றினார்.

திருப்பத்தூர் மின்வாரிய ஓய்வூதியர் சங்கச் செயலாளர் மா.ஞானப்பிரகாசம், வேலூர் சாக்கியா குழுமம் பாவலர் முகில், அனைத்திந்திய மய்ய அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் நலச் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலாளர் கு.தனசேகரன், வருமானவரித் துறை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் நலச்சங்கத் தலைவர் கி.குமார், இராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)) பிற்படுத் தப்பட்ட வகுப்பு ஊழியர் நலச் சங்கத் தோழர் வே.இராசேந் திரன், மறைமலை நகர் பெரியார் சமூகநீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் மு.பிச்சைமுத்து, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பொறிஞர் துரை சித்தார்த்தன் ஆகியோர் மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

dalit anaimuthu 600மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைச் செயலாளர் சா.குப்பன் மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார். பேரவையின் திருச்சி ந.கருணாகரன் நன்றி கூறினார்.

பிற்பகல் நிகழ்ச்சியின் தொடக்கமாக புரட்சியாளர் அம் பேத்கர் குழுவினர் மற்றும் காஞ்சிக் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து வகுப்புகளுக்கும் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கொடு என்னும் கோரிக்கையுடன் பிற்பகல் மாநாடு நடைபெற்றது. பேரவையின் புரவலர்-தலைவர் வே.ஆனைமுத்து தலைமை தாங்கினார். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.நடராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒடுக்கப்பட்டோர் பேரவையின் துணைத் தலைவரும் லக்னோ மாநகர முன்னாள் மேயருமான டாக்டர் தாவுஜி குப்தா மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவருடைய ஆங்கில உரையை கலசம் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.

மாநாட்டில் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவுநர் இரா.மங்கையர்செல்வன், தமிழக வண்ணார்குல ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொதுச் செயலாளர் க.தேவராசன், திருச்சி மாவட்ட யாதவ மகா சபையின் துணைத் தலைவர் சீ.இராமலிங்கம், சென்னை பாவ்சார் மராட்டா சமாஜ் இணைச் செயலாளர் க.ஞானேசுவர ராவ் உரூம்கார், தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.இராசமாணிக்கம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் ஏ.சி.நடராசன், காஞ்சிபுரம் முற்போக்கு சமூகநீதிப் பேரவையின் நிறுவுநர் டாக்டர் விமுனாமூர்த்தி, தமிழக இளைஞர் எழுச்சி இயக்கத் தோழர் காஞ்சி அமுதன், ஒடுக்கப்பட்டோர் பேரவையின் திருச்சி மாவட்டத் துணைத்தலைவர், ச.இராதாகிருட்டிணன், மார்ச்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் வாணியம்பாடி நகரச் செயலாளர் நா.மதனகவி, புதுதில்லி பெரியார் அம்பேத்கர் தொண்டு நிறுவனத்தின் தோழர் வழக்குரைஞர் க.லெனின் வினோபர், ஒடுக்கப்பட்டோர் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் இரா.கலியபெரு மாள் ஆகியோர் மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். பேரவையின் வேலூர் மாவட்டத் தோழர் லோ.ர.குமார் நன்றி கூறினார்.

தோழர்கள் ஏ.சி.நடராசன், மோ.சி.சங்கர், லோ.ர.குமார், சா.குப்பன், சாமிநாதன், பொறியாளர் சத்தியநாராயணன், கவிஞர் பொ.காளியப்பன், நா.மதனகவி மற்றும் பல தோழர்கள் மாநாடு சிறப்புடனும் வெற்றிகரமாகவும் நடை பெற்றிட அரும்பாடுபட்டு உழைத்தனர்.