guruswamy 350சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தேவகோட்டைக் கிளையின் சார்பாக 09.01.2016 சனிக்கிழமையன்று பேராசிரியர் நா.தர்மராசன் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் அவரது படைப்புகள் குறித்த திறனாய் வரங்கமும் நடத்தப்பட்டது. பள்ளி மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் காலை 10.00 மணிக்கு விழா தொடங்கியது.

செல்வி கு.சுனந்தா ஜெயசூர்யா கவிஞர் ஜவஹரின் பாடலுக்கு பரத நாட்டியமாட, பாரதியின் ‘பாரத சமுதாயம் வாழ்கவே!’ பாடலை செல்வி நா.அபிராமி பாட, பாரதியின் ‘நல்லதோர் வீணை செய்தே’ பாடலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் சிவகங்கை மாவட்டத் துணைத்தலைவர் திருமதி லதா தனது இனிய குரலில் பாட, அனுஷம் நா.பாலசுப்பிரமணியன் வரவேற்க, பேராசிரியர்

ச.ஆறுமுகம் முன்னிலை வகிக்க, கவிஞர் வி.ச.மணிபாரதி அறிமுகவுரையாற்றினார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய நாவலாசிரியர் சந்திரகாந்தன், Ôபேராசிரியர் நா.தர்ம ராஜன் மனபலத்தோடும் உடல் வளத்தோடும் இருக் கிறார். அவர் தொடர்ந்து செயல்படவேண்டும் என தனது கோரிக்கையினை முன்வைத்தார்.

அடுத்துப் பேசிய சிவகங்கை மன்னர் பள்ளியின் நூலகர் எஸ்.செல்ல மணி, இன்றைய நவீன இலக்கியவாதிகளான எஸ்.இராம கிருஷ்ணன் போன்றவர்களும் நினைவுகூரத்தக்க எழுத்தாளராக இருப்பது பேராசிரியரின் சிறப்பு என்றும், மேலும் இதற்குக்காரணம் ஷேக்ஸ்பியரை அவர் மொழிபெயர்த்ததுதான் என்றும், இவர் அதை மொழிபெயர்த்தது ஒரு சாதனை என்பதுபோலவே சிறு பதிப்பகமான மதுரை பாரதி பதிப்பகம் அதனை வெளியிட்டதும் வரலாற்றில் நினைவு கூரத்தக்க சாதனையாக விளங்கும்’ என்றார்.

அடுத்துப் பேசிய புதுக்கோட்டையினைச் சேர்ந்த டாக்டர் என்.ஜெயராமன், ‘அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் நூல்களை பேராசிரியர் மொழி பெயர்க்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அடுத்துப் பேசிய, சிவகங்கை வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணன், நாட்டில் நிலவும் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டினார்.

அடுத்துப் பேசிய என்.ஆர்.ராமச்சந்திரன், ‘கல்லூரியில் ஆங்கில வகுப்பு முடிந்ததும் அதே பாடத்தை சக மாணவர்களுக்கு தர்மராஜன் நடத்திக் காண்பிப்பார். அவர் அவ்வாறு ஆங்கிலப் பாடத்தினை நடத்தியிராவிட்டால் நானெல்லாம் தேர்ச்சி யடைந்திருக்க முடியாது’ என தனது சக மாணவ நண்பரான பேராசிரியருடனான கல்லூரி நினைவுகளை நன்றியோடு பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பி.ஆர்.சந்திரன் பேசும்போது, ஆர்.ஹெச்.நாதன், எம்.எஸ்.நாடார், எஸ்.ஆர்.கே என அழைக்கப்படும் சங்கரநாராயணன் போன்ற நா.தர்ம ராஜனின் முன்னோடிகளாக விளங்கியவர்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியவாதிகளையும் நினைவுகூர்ந்தார். மொழிபெயர்ப்புப்பணியில் உள்ள சிரமங்களைக் கோடிட்டுக் காட்டியதோடு சிவகங்கை மன்னர் கல்லூரியை மீட்டு அரசிடம் ஒப்படைத்த மாபெரும் போராட்டத்தில் முன்நின்று செயலாற்றிய பேராசிரியரின் போராட்ட குணத்தையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்துப் பேசிய, Ôசர்வோதயம்Õ இதழின் ஆசிரியர் கா.மு.நடராஜன், ‘காந்திய சிந்தனையின் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்றார். அதன் பிறகு கவிஞர் பூபதி, பேராசிரியர் குறித்த கவிதை ஒன்றைப் பாடினார்.

தொடர்ந்து நடைபெற்ற திறனாய்வரங்கினில், பேராசிரியர் பழனி இராகுலதாசன் பேசும்போது, கவிஞர் புஷ்கினின் Ôகேப்டன் மகள்Õ நாவலுக்கான நா.தர்ம ராஜனின் மொழிபெயர்ப்பினை ரதுலனின் மொழி பெயர்ப்புடன் ஒப்பிட்டார். மொழி பெயர்ப்பதிலுள்ள உள்வாங்குதல் மற்றும் நிரவுதல் ஆகிய தன்மைகளுக்கு உதாரணமாக, Ôமார்க்ஸ் பிறந்தார்Õ நூலுக்கான இறுதி வாக்கியத்தில் மார்க்ஸ் மற்றும் லெனின் என்றிருந்ததை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் என சேர்த்து மொழி பெயர்த்திருப்பதைக் குறிப்பிட்டார்.

நயமான மொழி பெயர்ப்பு செய்வதற்கு மூலப்பிரதியினை இரண்டு முறை வாசிக்கவேண்டும் என்னும் ரகசியத்தை பேராசிரியர் தனக்குச் சொல்லிக் கொடுத்தாகவும் கூறிய அவர், பேராசிரியர் தன்னுடைய மொழி பெயர்ப்பு அனுபவங் களை நூலாக எழுதவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அடுத்து, ‘பேராசிரியர் வாழ்விலக்கியம்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிய புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, பதிப்புத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் நடைபெறும் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டினார். பேராசிரியருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கு இருப்பதைக் குறிப்பிட்ட அவர், இந்த அரசாங்கங்கள் கொடுத்து விருது வாங்குவது வேண்டாம் என்றார். விருது பெறும் ஊழலைக் குறிப்பிட்டு விருதுபற்றிப் பேசாமலிருப்பது நல்லது என்றார்.

gurusamy prize 600ஒரு பிரபலமான நாளிதழின் சிறுவருக்கான சென்ற ஆண்டிற்கான இணைப்பில் காந்தியும் டால்ஸ்டாயும் விமான நிலையத்தில் சந்தித்ததாகக் குறிப்பிட்ட அபத்தத்தைத் தான் பத்திரிகைக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் மீண்டும் சென்றவாரம் அதே செய்தி வந்திருப்பதைக் குறிப்பிட்டார்.

மொழி பெயர்ப்பின் சிறப்புகளையும் பூகோள சாத்திரத்தைப் பயின்ற முதல் புலவனான பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம் தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் தேவைப்படுவதின் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

1940 களில் ஜெர்மனியில் இருந்த உலகப்புகழ் பெற்ற மிருகக்காட்சி சாலையில் ஒரு கூண்டில், இந்தியனை அடைத்து வைத்திருந்ததைக் கூறினார். ஹிட்லரின் மீது தீராக்காதல் கொண்டு எழுதித் திரியும் எழுத்தாளர்கள் இதை நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும், மூத்த தமிழ்ப் பதிப்பாளர்களையும் மொழி பெயர்ப்பாளர்களையும் நினைவுகூர்ந்ததோடு பேராசிரியர் நா.தர்மராஜன், தனது சுய சரிதையையும் ரஷ்ய அனுபவங்களையும் எழுத வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

ஏற்புரையாற்றிய பேராசிரியர் நா. தர்மராஜன், தனது கடந்தகால நினைவுகளுக்குள் வலம் வந்தார். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கைக்கொள்ள வேண்டிய எளிமை, கட்டுப்பாடு, விசுவாசம், உறுதி ஆகியவற்றை, தான் மொழிபெயர்த்த ஒரு ரஷ்யச் சிறுகதையின் மூலமும், ஜீவாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலமும் விளக்கிக் கூறி, தன்னைப் பாராட்டி விழா எடுத்ததற்கு நன்றி கூறினார்.

பேராசிரியருக்கு ‘மொழி பெயர்ப்புச் செம்மல்’ என்னும் பட்டமும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. பலர் பொன்னாடை அணிவித்தனர். நல்லாசிரியர் அ.சுந்தரம் நன்றி கூற, விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் உறுப்பினர்கள், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Pin It