(பேராசிரியர் ந.முத்துமோகனின் நேர்காணல் - சென்ற இதழின தொடர்ச்சி)
உ.நூ: ரஷ்யாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்? சோவியத் சமூகம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? அங்கு மார்க்சியம் தொடர்பாக என்னென்ன சிந்தனைப் போக்குகள் இருந்தன? விரிவாகச் சொல்லுவீர்களா?
சோவியத் அனுபவங்கள் இருபத்தைந்து ஆண்டு களுக்கு முந்தியவை.  இப்போது கேட்கிறீர்கள்.  பல விஷயங்கள் மறந்து போயிருக்கும்.  நினைவில் உள்ளதைச் சொல்லுகிறேன்.
சோவியத் யூனியன், சோசலிசம் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது குறிப்பான சில எதிர்பார்ப்புகளுடன் கேட்கிறீர்கள்.  1989க்குப் பிறகு சோவியத்துக்களின் தகர்வுக்கான மொத்தப் பதிலையும் என்னிடமிருந்து பெற்றுவிடவேண்டு மென்ற ஆசை உங்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.  இந்த வகையில் இது ஒரு மிகப்பெரிய அரசியல் கேள்வி.  ஆனால் நான் அப்படிப்பட்ட ஒரு நிலையில் நின்றுகொண்டு பதில் சொல்லுவது நியாயமாக இருக்காது எனக் கருதுகிறேன்.  எனது, என்னுடன் அங்கு அப்போது வாழ்ந்த மாணவர் களின் அனுபவ நிலையிலிருந்து பதில் சொல்ல முயலுகிறேன்.
1976 செப்டம்பரிலிருந்து 1987 ஏப்ரல் வரை மாஸ்கோவில் இருந்தேன். பல நல்லவை, கெட்டவை எனக்கு அங்கு நடந்து முடிந்தன.  மாஸ்கோவில் தமிழ் மாணவர்கள் சுமார் 30 பேர் சேர்ந்து செவ்விளம் தமிழர்கள் என்ற பெயரோடு ஓர் அமைப்பு வைத்திருந்தோம்.  தோழர்கள் பாஸ்கரன், பேச்சியப்பன், ஜெயசிரி, சுப்புராமன், ஜெயபால், சுப்பிரமணி, உதயச்சந்திரன், கோபால், பூமிநாதன், ஜவகர், நயினார், அதிகமான், அஜந்தா, ஜீவா எனப் பலர்.  செவ்விளம் தமிழர் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும்.  தமிழ் உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிவரை ஒருவர் உரைவழங்க மற்றவர்கள் கலந்துகொண்டு விவாதங்கள் நடத்துவோம்.  அவ்வப்போது கிடைக்கும் இந்திய, தமிழ்நாட்டுச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுவோம்.  எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, தோழர் ஞானையா, தோழர் டி.ராஜா இன்னும் தமிழ் நாட்டிலிருந்து வந்து போகும் தோழர்கள் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  பேராசிரியர் நா.  தர்மராஜன், முகம்மது ஷெரிப் போன்றோர் அங்கு மொழி பெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்தனர்.  இது தவிர, இந்திய மாணவர்களுக்கென இளம் கம் யூனிஸ்ட் கழகம் (Young Communist League) என்றொரு அமைப்பு உண்டு.  அதற்கு நானே ஒருமுறை செயலாளராக இருந்தேன்.  கட்சியின் சர்வதேச விஷயங்களோடு தொடர்புகொண்ட தோழர்கள் சாரதா மித்ரா, ராஜசேகர ரெட்டி போன்றோர் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள்.  கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லா வக்கியா, பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர் களுக்கு 20 நாட்கள் அளவில் கட்சி வகுப்புகளும் நடந்திருக்கின்றன.  இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றின் வழியாகவும் சோவியத் வாழ்க்கை, சோசலிசம், மார்க்சியம் குறித்த எங்கள் விவாதங்கள் நடந்தன.  சோசலிசத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்து பவர்கள் எங்களிடையில் இருந்தார்கள்.  பல தீவிர விமர்சனங்களை எழுப்பியவர்களும் இருந்தார்கள்.  இந்த விவாதங்களுக்கு வெளியில் எங்கள் ஆசிரியர் களோடு, பிற ரஷ்ய மாணவர்களோடு நாங்கள் விவாதித்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு.
தனிப்பட்ட முறையில் ஏராளமான ஆசை களோடு நான் சோவியத் யூனியன் சென்றேன்.  மாஸ்கோ புறப்படுவதற்கு முன் பேராசிரியர் நாவா சில எச்சரிக்கைகளை வழங்கியிருந்தார்.  ரொம்பவும் கற்பனாரீதியாக சோவியத் யூனியனைக் குறித்த எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாதே என்று அவர் சொல்லியிருந்தார்.  முதல் இரண்டு வருடங் களுக்கு எல்லாமே எனக்குப் பிரும்மாண்டமாகத் தான் தெரிந்தன.  பெரிய கட்டடங்கள், விரிந்த பெரிய வீதிகள், அற்புதமான நினைவுச் சின்னங்கள், லெனின் மொசொலியம், செஞ்சதுக்கம், ஓவியக் கண்காட்சிகள், தியேட்டர்கள், குறைந்த விலையில் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள், வாகனக் கட்டணங்கள், அற்புதமான நூலகங்கள், அரசியல் தத்துவார்த்தப் பத்திரிகைகள், கல்விமுறை எல்லாமே சிறப்பானவையாகத்தான் தெரிந்தன.  கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளில் பல்கலைக்கழகத்திலிருந்தே குறைந்த செலவில் பல நகரங்களுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்வார்கள்.  நான் படித்த லுமும்பா பல்கலைக்கழகத்தில் சுமார் 104 ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளி லிருந்து மாணவர், மாணவிகள் படித்தார்கள் என்று ஒரு கணக்கு சொல்வார்கள்.  ஒவ்வொரு நாட்டு மாணவர்களுக்கும் மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் உண்டு.  ஆண்டுவிழாக்கள், கலை விழாக்கள் எனப் பல்கலைக்கழகம் பொதுவாக கலகலப்பாக இருக்கும்.  உலகின் பல்வேறு பகுதி களின் ஆட்டபாட்டங்களைக் காணக் கிடைத்த வாய்ப்பு மிக அற்புதமானது.  எனவே சோவியத் வாழ்க்கை என்பது தவிர, உலக நாடுகள் பலவற்றில் நடக்கும் சம்பவங்கள்பற்றிய தகவல்கள், அந்த மாணவர்களின் வாழ்க்கை ஆகியவையும் எங்களுக்கு அறிமுகமாகியிருந்தன.  நான் அங்கேயிருந்த காலத்தில் எத்தியோப்பியப் புரட்சி, அங்கோலாவில் நடந்த புரட்சி, நிக்குராகுவாவில் தொடர்ந்த போராட்டம், ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் என்ற பல சம்பவங்கள், அவை குறித்த விவாதங்கள் எனது நினைவில் நிற்கின்றன.  நான் மாஸ்கோவில் இருந்த நாட்களில்தான் செர்னோபில் அணு உலை விபத்தும் நடந்தது.  லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து ஓர் இளைஞன், கத்தோலிக்கன், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவதற்காகக் கூட பெற்றோர்களோடு அல்லது சகோதரியோடு சொந்தநாட்டோடு தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாத படி அவன் நாட்டின் அரசியல் கெடுபிடிகள்.  கண்ணீரோடு அவன் எங்களோடு அமர்ந்திருப்பான்.  ஈராக் அல்லது யேமன் நாட்டிலிருந்து ஒரு பெண்.  ஐந்து, ஆறு வருடங்களில் ஒருமுறை கூட அவளது நாட்டுக்குச் சென்றுவர முடியாதபடி அவளது குடும்பமே அரசியல் அடக்குமுறைக்குள் சிக்கிக்கொண்டிருக்கும்.  பல நாட்டு மாணவர்களின் கவலைகளை நாங்கள் கேட்டு அறிந்திருக்கிறோம்.  80களில் ஈழப் பிரச்சினை பற்றிய செய்திகள்.  ரஷ்யாவுக்குள் ஒரு மூன்றாம் உலகச் சூழல் எங்களுக்கு அமைந்திருந்தது.
1917 அக்டோபர் புரட்சியிலிருந்து 1980கள் வரையிலான ரஷ்யா என எடுத்துக்கொண்டால் அது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட தூரம் பயணம் செய்திருந்தது என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.  ஏழ்மையும் சமூகச் சிக்கல்களும் மலிந்த ஒரு மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் எனது பார்வையில் சோவியத் யூனியனின் அறுபதாண்டுச் சாதனைகள் ஒரு கணிசமான விஷயமாகப் பதிந் திருக்கும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது ஆகும்.  60 ஆண்டு களில் சோவியத் யூனியன் ஒரு மிகப் பெரிய பொருளாதாரப் பேரரசாக உருவாகியிருந்தது.  கனிம வளங்கள், எந்திரத் தொழில், மின்சார உற்பத்தி, விஞ்ஞான வளர்ச்சி, ராணுவத் துறை, மருத்துவம், கல்வி, நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய பல வட்டாரங் களில் அது மிகப் பெரும் சாதனைகளைப் புரிந்திருந்தது.  இவை ஒரு மலைப்பை எங்களுக்கு ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
ஆயின், படிப்படியாக சில பிரச்சினைகள் எங்கள் கண்களில் தென்படத் தொடங்கின.  சிலவற்றைச் சொல்லுகிறேன்.  சோவியத் ந்த வேறுபாடும் தெரியாத ஒரு நிலை இருந்தது.  இன்னொருபுறம், மக்கள் அவற்றைப் பற்றி அக்கறைப் படாத ஒரு பெரிய இடைவெளியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் நிலவியது.  கட்சி மாநாடுகள், விழாக்கள், ஊர்வலங்கள், தேர் தல்கள் ஆகியவை எந்தப் பரபரப்பும் இல்லாமல் ஒரு மந்த கதியில் திட்டமிட்ட வடிவில் அரசு நிகழ்ச்சிகள் நடப்பதுபோல நடந்து முடியும்.  1976-1987 ஆண்டுகளில் பிரஷ்னேவ், அந்த்ரபோவ், செர் னென்கோ, கர்பச்சேவ் ஆகிய நால்வரது தலைமை களை நான் பார்த்திருக்கிறேன்.  பிரஷ்னேவின் காலம் நீண்டது.  அவரது காலத்தில்தான் அதிக மான அதிருப்திகள் மக்களிடம் தேங்கத் தொடங்கின என்று எனக்கு நினைவு.  எந்த மாற்றமும் எங்கிருந்தும் ஏற்படப்போவதில்லை என்பது போன்ற நிலை அங்கு நிலவியது.  மந்தகதியில் ((Inertia) எல்லாமே நகருகின்றன என்று பலர் பேசுவதைக் கேட்டிருக் கிறேன். மேற்கு நாடுகளைப் பற்றிய அரசியல் ரீதியான மதிப்பீடுகளைச் சுமந்து வரும் பத்திரிகைச் செய்திகள் ஒருபுறமிருக்க, ஜீன்ஸ், டீ ஷர்ட், கொக்ககோலா, ஃபான்டா, மேற்கத்திய இசை அல்லது திரைப்படம் போன்ற மேற்கத்தியச் சரக்குகள் மீது மக்களிடையில் பரவலான மோகம் தென்பட்டது.  அவை எங்காவது ஒரு கடையில் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் விற்கப்படுகின்றன எனில் நீண்ட கியூவில் மக்கள் உடனடியாகக் குவிந்துவிடுவார்கள்.  சோவியத் சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் ஒரேவிதமான நுகர்வுப் பொருட்கள் ஒரே விதமான பேப்பர்களில் அல்லது பாக்கெட்டுகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால் ஒருவர் ஆர்வத்தோடு அவற்றில் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்து எடுத்தார் என்று சொல்லக்கூடிய வகையில் பலவகைப் (Variety) பொருட்கள் அங்கே இருக்காது.  தேர்வுகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகவே இருக்கும்.
மக்களிடையில்  தென்பட்ட மந்தகதி குடிப்பழக்கம், குடும்பங்களின் உடைவு, குழந்தைகள் புறக்கணிக்கப் படுவது, பொதுப் பிரச்சினைகளில் அக்கறையின்மை ஆகியவற்றில் அதிகமாக வெளிப்பட்டது.  அந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கட்சி அதிகமாகப் பேசியது.  ஆனால், அந்தப் பேச்சுக்கள் மேலோட்டமாக இருந்தனவே தவிர அடிப்படையாகப் பிரச்சினையை அணுகித் தொட்டதாகத் தெரியவில்லை.  கிராமப் புறங்களுக்கு நாங்கள் பயணம் செய்திருக்கிறோம்.  மல்தாவியாவில் திராட்சை, மற்றும் ஆப்பிள் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலைகளைச் செய்ய கோடை விடுமுறையில் மாணவர்கள் செல்லு வார்கள்.  வருடத்தில் 40 நாட்கள் உக்ரைன், பேலோ ருஷ்யாவின் சிறுநகரங்களில் ரசாயன தொழிற் சாலையில் தொழிற்பயிற்சிக்காகச் சென்றிருக் கிறேன்.  கிராமப் புறங்களில் நான் மேலே சொன்ன மந்தகதியும் அக்கறையின்மையும் அதிகமாகத் தென்படும்.  மதுப்பழக்கம், குடும்பங்களின் சிதைவு ஆகியவற்றையும் அங்கு அதிகம் சந்திக்க வேண்டி வரும்.  கிராமங்களின் பாதிப்பில் நகரங்களைப் பேணுகிறார்களோ என்ற தோற்றம் ஏற்பட்டதுண்டு.
அந்தச் சமயத்தில் எங்களிடையில் நடந்த சில விவாதங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.  மிகப் பெரிய ஒரு சோசலிசப் புரட்சியை நடத்திய இந்த மக்களை, இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய தியாகங்கள் செய்த இந்த மக்களைக் காலுக்குள் கிடக்கும் கந்தல் துணி போன்ற ஜீன்ஸ்களுக்காக இப்படி கியூவில் நிற்கவைத்துவிட்டார்களே என்று அந்த நாட்களில் பேசியதுண்டு.
“சோசலிசம் என்றால்
உள்ளுக்குள் போராட்டம் இல்லாமல்
போய்விடும் என நினைத்தாயா?
எல்லா நேரங்களிலும் தான்
நாம் போராடவேண்டும்.
மார்க்சியத்துக்காக எப்போதும்
போராடிக் கொண்டிருக்கத் தான் வேண்டும்.”
சில பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க சோவியத் ரஷ்யாவின் செழிப்பான கனிம வளங் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சமாளிக் கிறார்கள் என்ற விஷயம் குறித்துப் பேசியுள்ளோம்.  சில ஆப்பிரிக்க நாடுகளில், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சோவியத் ராணுவம் அதிகம் தலையிடு கிறது என்பது குறித்துப் பேசியிருக்கிறோம்.  கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் என்பவை சுதந்திர மாகச் செயல்படவில்லை என்ற உணர்வு இருந்தது.  இன்னும் கொஞ்சம் சீரியசாக, சோவியத் ஐந்தாண்டுத் திட்டங்கள் மிகவும் இறுக்கமாக வரையறுக்கப்படு கின்றன; மாறாக, ஐந்தாண்டுகளுக்குள்ளாக ஒவ் வொரு ஆண்டும் புது விஷயங்களுக்கு இடமளிக்கக் கூடிய விதத்தில் நெகிழ்வான திட்டமிடல் வேண்டும் எனப் பேசியிருக்கிறோம்.  அரசு நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மை அற்றவையாகப் பட்டன.  எனது ஆய்வு நெறி யாளர் பேராசிரியர் சூப்கோவுடன் சோசலிசத்தின் பிரச்சினைகளைப்பற்றி ஒருமுறை கோபத்தோடு பேசிக்கொண்டிருந்தேன்.  அதே அளவு கோபத் தோடு அவர் பதில் சொன்னார்: “சோசலிசம் என்றால் உள்ளுக்குள் போராட்டம் இல்லாமல் போய்விடும் என நினைத்தாயா? எல்லா நேரங் களிலும் தான் நாம் போராடவேண்டும்.  மார்க் சியத்துக்காக எப்போதும் போராடிக் கொண்டிருக்கத் தான் வேண்டும்.” என்றார்.  ஐந்தாவது அல்லது ஆறாவது ஆண்டில் என நினைக்கிறேன், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு இந்த சோசலிசம் எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதினேன்.  அடுத்த சில மாதங்களில், தோழர்
து.ராஜா ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாஸ்கோ வந்தார்.  அவரிடம் நான் எழுதிய கடிதம் பற்றித் தோழர் நல்லகண்ணு சொல்லி, மோகனிடம் பேசிவிட்டு வாருங்கள் என அனுப்பியிருந்தார்.  தோழர் ராஜா மாஸ்கோவில் என்னைச் சந்தித்துப் பேசினார்.
எப்படியிருப்பினும் அந்தக் காலத்தில் சோவியத் அமைப்பு குறித்த எங்கள் விமர்சனங்கள், இருக் கின்ற அமைப்பில் சில தீவிர மாற்றங்கள் செய்யப் படவேண்டும் என்ற வகையில்தான் அமைந்திருந்தன.  அடிப்படையாக அந்த அமைப்பே மாற்றப்பட வேண்டும் என்பதாக இருக்கவில்லை.  சோவியத் யூனியன் பற்றிய எங்களது விமர்சனங்கள் மார்க் சியத்தின் அடிப்படையில்தான் அமைந்திருந்தன.  மார்க்சியத்தைத் தாண்டிய தத்துவம் எதுவும் எங்கள் கண்களுக்குப் படவில்லை.  பிரஷ்னேவின் மரணத்திற்குப் பிறகு அந்த்ரபோவ் வந்தபோது மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின.  ஆயின் அவர் அதிக காலம் இருக்கவில்லை, செர் னென்கோ வந்தார்.  பழமைச் சக்திகள் திரும்பி வந்துவிட்டதாக உணர்ந்தோம்.  மீண்டும் கர்பச் சேவ் வந்து பெரிஸ்த்ரோய்க்கா (மறுகட்டுமானம்) பற்றிப் பேசினார்.  மாற்றங்கள் மேலிருந்துதான் துவங்கப்படவேண்டும் என்ற நிலை இருந்ததுவே சிக்கலானது.  கர்பச்சேவ் காலத்தில் சீர்திருத்தங் களுக்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டன.  ஆனால் அவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.  பல திசைகளிலிருந்து, எதிர்பாராத திசைகளி லிருந்து மக்கள் திரளத் தொடங்கினர்.  மீண்டும் சொல்லுகிறேன், கர்பச்சேவ் அந்தச் சூழலைச் சரியாகக் கையாள ஆற்றல் இல்லாதவராகிவிட்டார்.  அதை அவர் உணர்ந்த தறுவாயில் ஏல்த்சென் அவரை அப்புறப்படுத்திவிட்டார்.  சோசலிச அமைப்பே சிதறடிக்கப்பட்டுவிட்டது.  சோவியத் யூனியனை விட சீனா சோசலிசத்தின் உட்பிரச்சினைகளை எச்சரிக்கையாகக் கையாளுவதாகத் தோன்றுகிறது.  சீனப் புரட்சிக்குப் பிறகு சோவியத்-சீன உறவுகள் உடைந்ததே சோசலிசத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பிளவு எனக் கருதுகிறேன், எப்பாடுபட்டேனும் சோவியத்-சீன உறவுகளைச் சரிப்படுத்தியிருக்க வேண்டும்.  சமீபத்தில் சீனக் கம்யூனிஸ்ட் அறிஞர் ஒருவரின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.  சந்தை என்ற விஷயமே முதலாளியத்துக்குச் சொந்தமானது என நாம் கருதிக் கொண்டிருக்கிறோம், ஆனால் சோசலிச உற்பத்தி என்பது உள்ளது போலவே சோசலிசச் சந்தை என்ற ஒன்றும் உண்டு.  சோசலிசச் சந்தை பற்றிய புரிதல் இன்றி அதனை சோசலிசப் பகிர்வு எனப் பொதுவாகப் புரிந்துகொண்டதால், அந்தப் பகிர்வை நிர்வகிப்பது அரசு அல்லது கட்சி என முடித்துவிட்டதால், அரசு சார்ந்த அதிகார மையம் வலுப்பட்டுவிட்டது, உற்பத்தியாளர்களின் மற்றும் நுகர்வாளர்களின் இடம் மறுக்கப்பட்டு விட்டது என்று எழுதுகிறார்.  சோசலிச சந்தை எப்படிப்பட்டது? அதன் பண்புகள் யாவை? அது சோசலிசச் சந்தையாகத் தொடர்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? சோசலிசச் சந்தையில் உற்பத்தியாளர், நுகர்வாளரின் பங்கு என்ன? என்ற விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்கத் தவறி விட்டோம் என்று அக்கட்டுரை பேசுகிறது.  சோசலிச சந்தைச் சக்திகள் பற்றிய அங்கீகாரம் இல்லாத சூழல்களில் அவை தன்னிச்சையாகச் செயல்பட முனையும்போது அவை எதிர்ப்புரட்சி சக்திகளாக நம் கண்ணில்படும்.  இப்படித்தான் சோசலிசத்திற்குள் சந்தை என்ற ஒன்று தோன்றிவிட்ட சூழலை எதிர் மறையாகப் பார்க்கத் தொடங்கினோம்.  இந்த எதிர்மறை உணர்வு அது குறித்து நம்மைச் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது என்று எழுதுகிறார்.
20ஆம் நூற்றாண்டு வரலாற்றுரீதியாக மிக அடர்த்தியான நூற்றாண்டு.  பல நூற்றாண்டுக் கால வரலாற்றை மிக அடிப்படையாக வேறு திசையில் திருப்புவதற்கான பணி இந்த நூற்றாண்டில் தொடங் கியது.  அந்த வரலாற்றின் முழுச் சுமையையும் நாம் ரஷ்யாவின் மீது சுமத்திவிட்டோம்.  19ஆம் நூற்றாண்டில் ரஷ்ய ஆன்மா பற்றிய பேச்சுக்கள் அங்கே நிகழ்ந்த போது, ஐரோப்பாவையும் மொத்த வரலாற்றையும் காப்பாற்றப்போவது ரஷ்யாதான் என்று அங்கே பேசப்பட்டது.  தஸ்தயேவ்ஸ்கி அப்படித்தான் கருதினார்.  பல ரஷ்யர்கள், ரஷ்யக் குடியானவர்கள் கூட அப்படித்தான் நம்பினார்கள்.  லெனின் கூட அப்படி நம்பியிருப்பார் எனத் தோன்று கிறது.  ரஷ்யாவால் அந்தப் பளுவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பாட்டாளி வர்க்கம்தான் புரட்சியை நடத்தும் என மார்க்ஸ் சொன்னபோது அவரும் அப்படித்தான் நம்பினாரோ என எண்ணத் தோன்றுகிறது.  திரும்பத் திரும்ப உடைமைச் சமூக வரலாறு நம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறது.  நாம் விரிந்து பரவ வேண்டும்; பெருக வேண்டும்; ஆழ மாகவும் அகலமாகவும் நாம் செல்லவேண்டும் அப் போதுதான் நாம் வெற்றி பெறுவோமாக இருக்கலாம்.
ஐரோப்பிய மார்க்சியம் குறித்து உங்கள் மதிப்பீடுகள், நிலைப்பாடுகள் என்ன?
மார்க்சியம் ஐரோப்பியச் சூழல்களில்தான் தோன்றியது.  நாம் அதனைச் சுவீகரித்துக் கொண் டோம்.  20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மார்க் சியம் அதன் தோல்விகளிலிருந்து பேசுகிறது என பெரி ஆன்டர்சன் என்ற அறிஞர் கூறுகிறார். ஐரோப் பாவில் புரட்சிகள் நடைபெறவில்லை, அந்தத் தோல்வியின் காரண காரியங்களைத் தேடுவது தான் மேற்கத்திய மார்க்சியம் என்கிறார் அவர்.  அந்தத் தோல்விகளை, அவற்றுக்கான காரணங் களைக் கொண்டு நியாயப்படுத்துகிறார்கள் என்றும் அவர் சொல்லுகிறார்.  எனவே மேற்கத்திய மார்க் சியத்தில் தோல்வி மனப்பான்மையின் சாயல் படிந் துள்ளது எனக் கூறுகிறார்.  இந்த மதிப்பீடு ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம்.  ஐரோப்பிய மார்க் சியர்கள் தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளி யேறவேண்டும் என்ற அறிவுறுத்தலாக அது இருக் கலாம்.  எப்படியோ 20-ஆம் நூற்றாண்டில் மார்க் சியம் மார்க்சிய வரலாறாக ஆகிவிட்டது.  இந்த வரலாற்றில் முன்னும்பின்னுமாக நாம் நகர வேண்டும்.  புதிய பிரச்சினைகள், புதிய கேள்விகள் நம்மிடையில் தோன்றியிருக்கின்றன.  புதிய பதில்களையும் நாம் தேடித்தான் ஆக வேண்டும்.  ஒவ்வொரு புதிய கட்டத்தின்போதும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனின், மாவோ ஆகியோரின் எழுத்துக்களை மீண்டும் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.  இதைத்தான் முன்னும் பின்னுமாக என்று குறிப்பிடுகிறேன்.
ஜியார்ஜ் லுகாச், பிராங்பர்ட் மார்க்சியம், கிராம்சியின் மார்க்சியம், அல்த்தூசரிய மார்க்சியம், பின்னைநவீனத்துவச் சூழல்கள் என முரண்பட்ட பிரதேசங்களின் ஊடாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.  புதிதாக வாய்த்தவற்றை வாசித் தறியும்போது, மார்க்சியத்தின் முதல்நிலைகளைத் தவறவிட்டுவிடக்கூடாது.  முதல் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்கள் விரிந்துகொண்டு போகலாம், ஆழப்படலாம், சில புதிய கருத்தாக்கங் களேகூட உருவாகலாம்.
மார்க்சியமல்லாத தத்துவங்களும்கூட வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தை, ஏதோ ஒரு பக்கத்தை எடுத் துரைக்கின்றன என்று லெனின் கூறுவார்.  ஆனால் அந்த ஒரு பக்கத்தை ஒற்றைப்படையாக, அவை முழுத்தத்துவமாக மாற்றிவிடுகின்றன என்பார்.  எனவே, மார்க்சியன், குறிப்பிட்ட அந்தத் தத்துவம், வாழ்வின் எந்த அம்சத்தை ஒற்றைப்படையாக மிகைப் படுத்தியது என்பதை அறியக் கடமைப்பட்டவன்.  முட்டாள்தனமான பொருள்முதல்வாதத்தைவிட, அறிவுள்ள கருத்துமுதல்வாதம் மார்க்சியத்துக்கு நெருங்கியது என்று லெனின் எழுதினார்.  டெர்ரி ஈகிள்டன் பின்னை நவீனத்துவம் பற்றி இதுபோல ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்: மார்க்சியன் பின்னை நவீனத்துவத்தின் ஊடாகப் பயணப்பட்டு அதனை மறுபுறமாக உடைத்துக் கொண்டு வெளியேறி வந்துவிடவேண்டும் என்பார் அவர்.
ஐரோப்பிய மார்க்சியத்தைப் படிப்பது இங் கிருந்து புறப்பட்டுப் போய் அங்கே புரட்சியை நடத்துவதற்காக அல்ல; நம்மூர்ப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதற்காகத்தான்.  இந்தியச் சமூகம் இன்னும் நமக்குச் சிக்கலாகவே உள்ளது.  இதன் பல பிரச்சினைகளுக்கு இன்னும் நம்மிடம் தீர்வு இல்லை.  புரிதலில் போதாமைகள் உள்ளன.  மார்க்சியக் கருத்தாக்கங்களின் விரிவு, செழுமை நமக்குத் தேவைப் படுகிறது.  ஐரோப்பிய மார்க்சியம் கருத்தாக்கச் செழுமைக்கு உதவுகிறது.  ஐரோப்பிய மார்க் சியருக்கிடையில் நிகழ்ந்துள்ள விவாதங்கள் நம்மை விரிவான பரப்புகளை நோக்கி இட்டுச் செல்லும்.  ஏங்கெல்ஸ் ஒருமுறை சொன்னார்: “தத்துவம் படிப்பது எப்படி? தத்துவங்களின் வரலாற்றைப் படிப்பதுதான் தத்துவப் பயிற்சி பெறுவதற்கான வழி.  தத்துவங்கள் அடுத்தடுத்து ஒன்றையொன்று மறுத்து எப்படிச் செழுமை பெற்றன என்பதை அறிவதுதான் தத்துவ வரலாறு.  மார்க்சியம் சம கால வளர்ச்சிகளைப் பற்றிய உணர்வின்றி, தனது முதல் அடிப்படைகளை மட்டுமே சூத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தால், முழுவதும் நிராகரிக்கப் பட்டுவிடும்.”
மாஸ்கோவில் படித்துக்கொண்டிருந்த நாட் களிலேயே நான் ஐரோப்பிய மார்க்சியத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.  அங்கே முதலில் இருத்தலியத்தோடும் ஃபிராய்டியத்தோடும் மார்க் சியம் விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தது.  பின்னர் அமைப்பியலோடு விவாதத்தைத் தொடங் கியது.  லேவி ஸ்ட்ராஸ், அல்த்தூசர் வரையிலான நூல்கள் (1987 வரை) அங்கு எனக்குக் கிடைத்தன.  ரஷ்ய உருவவியல், மிகயில் பக்தீனின் எழுத்துக்கள் குறித்த முன் அனுபவம் ரஷ்யர்களுக்கு இருந்ததால் அமைப்பியல், பின் அமைப்பியலை அவர்கள் எளிதில் கையாள முடிந்தது.  சோவியத் எழுத்துக்கள், நாம் இங்கே பேசிக்கொள்ளுவது போல், அப்படியொன்றும் சூத்திரவாதமானவையோ பழமைவாதமானவையோ அல்ல.  நாலைந்து ஆண்டுகள் பழக்கப்பட்டுவிட்டால் சரியான ஆழமான, நூல்களைக் கண்டுபிடித்து விடலாம்.  பத்திரிகைகளில் கூடத் திறந்த விவாதங்கள் நடக்கும் பத்திரிகைகளைக் கண்டுபிடித்துவிடலாம்.  அதாவது சோவியத் மார்க்சியர்களின் உள்வட்டங் களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.  சோவியத் ஆசிரியர்களின் நூல்களை வாசிப்பது ஒரு நுட்ப மான அனுபவம்.  முரட்டு நிராகரிப்புகளெல்லாம் குறிப்பிட்ட ஓர் அளவில்தான்.
மார்க்சியம் குறித்த விவாதங்கள்,
மேற்கிலும் கிழக்கிலும் நடந்தவை,
ஏதாவதொரு வகையில்
மூன்றாம் உலக நாடுகளை
நெருங்கித்தான் வந்துள்ளன.
இப்போது இந்தியச் சூழல்களுக்கான
மார்க்சியம் என்று நாம் கூறும்போது,
மேற்படி நிகழ்வுப் போக்கினை
நாம் உணர்வுபூர்வமாக, உறுதியாகத் தொடர்ந்து
செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறோம்.
விமர்சனமாக, விவாதமாக அமைந்த நூல்களும் கூட மிக லாவக மாக எதிராளிகளின் கருத்துக்களை மார்க்சியத்துக்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளும்.  இதனைச் செய்வதற்குச் சம்பந்தப்படும் இரண்டு தத்துவங்களோடும் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும்.  அவை குறித்து வெகுநேரம் சிந்திக்க வேண்டும்.  மனதை அடைத்து வைக்கக் கூடாது.  இது ஓர் அற்புதமான வித்தை.  இது ஓர் இயங்கியல் வித்தை.  இதனைக் கற்றுக்கொள்ள நான் முயன்றிருக்கிறேன்.  இருபது வருடங்களுக்கு ஒரு புதிய தத்துவம் மேற்கில் தோன்றத்தான் செய்யும்.  மார்க்சியர்கள் அதனைப் பேசவிட்டு, உழைக்கும் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து அதனை உள் வாங்க முடியும்.  தமிழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் இந்தக் கலையை அவராகவே செய்திருப் பதை உணர்ந்திருக்கிறேன்.  மேற்கத்திய கருத்தாக்கங் களை நமது தேவைகளுக்காக வேலை செய்ய வைப் பதில் பேராசிரியர் ராஜ்கௌதமனும் வல்லவர்.  அப்படியொன்றும் ஒருவர் பிடித்துத் தள்ளியவுடன் சரிந்து விழுந்துவிடும் என்பதுபோலப் பலவீனமான நிலையில் மார்க்சியத் தத்துவம் இல்லை.  மார்க்சியம் ஒரு செழுமையான தத்துவம்.  சார்த்தரும் தெரிதாவும் ஒரு சுற்று பேசிமுடித்து விட்டு, பிறகு மார்க் சியத்திற்கு அணுக்கமாகவே வந்து சேர்ந்தார்கள்.
கீழை மார்க்சியம்/கட்சி சார்ந்த மார்க்சியம் என்ற சொல்லாட்சிகள் தொடர்பாகக் கூறப்படும் கருத்துக்கள் எந்த அளவுக்குப் பொருத்தமானவை?
இந்தியச் சூழல்களுக்கான மார்க்சியம் (With India Specifics) என்றுதான் இப்போது கட்சிகளும் பேசுகின்றன.  இந்தியச் சூழல்கள் என்பதில் தொழி லாளர்கள், விவசாயிகள் தவிர இந்தியச் சாதிச் சமூகம், தேசிய இனப் பிரச்சினை, கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள் ஆகியோரின் பிரச்சினைகள் உள்ளடங்குமாக இருக்கலாம்.  உலகமயமாக்கம் என்ற பெயரில் முதலாளியம் தன்னைப் பரப்பி வரும் சூழலில் அதற்கு எதிரான அரசியல் உருவாக்கத்தை அது குறிக்குமாக இருக்கலாம்.  மார்க்சியம் அதன் வரலாற்றில் படிப்படியாக, மேலும் மேலும் அதிக மாகக் கீழைநாடுகளை நோக்கி நகர்ந்து வந்துள்ளது என்றே கருதுகிறேன்.  ஐரோப்பியச் சூழல்களி லிருந்து ரஷ்யாவிற்கு, பின் சீனாவிற்கு, இன்னும் தேசிய விடுதலை இயக்கங்களையும் ஆப்பிரிக்க அரேபிய நாடுகளையும் அது பற்றிப் பிடித்தது.  லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவியது.  மார்க் சியம் குறித்த விவாதங்கள், மேற்கிலும் கிழக்கிலும் நடந்தவை, ஏதாவதொருவகையில் மூன்றாம் உலக நாடுகளை நெருங்கித்தான் வந்துள்ளன.  இப்போது இந்தியச் சூழல்களுக்கான மார்க்சியம் என்று நாம் கூறும்போது, மேற்படி நிகழ்வுப் போக்கினை நாம் உணர்வுபூர்வமாக, உறுதியாகத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறோம்.
20 ஆம் நூற்றாண்டு நெடுக சோசலிச முகாம்/முதலாளிய முகாம், சோவியத் யூனியன்/அமெரிக்கா, இரண்டு உலக யுத்தங்கள், கெடுபிடி யுத்தம் போன்ற முரண்பாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டு, நமது சொந்தப் பிரச்சினைகளை நேரடியாகப் பேச இய லாமற் போய்விட்டது.  இப்போது ஏற்பட்டிருப்பது முக்கியமான திருப்பம்.  இந்தத் திசையில் நாம் ஏராளமாக வேலை செய்யவேண்டியுள்ளது.
ஆயின் கீழை மார்க்சியம் என்ற பெயரில் பேசப்பட்ட எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி போன்றோரின் நிலைப்பாடுகளில் அடிப்படையாகச் சில பிரச்சினைகள் உள்ளன எனக் கருதுகிறேன்.  அவர்களது கிழக்கு நோக்கிய குவிமையத்தை, பிரச் சினைகளின் தேர்வை நான் குறைகூறமாட்டேன்.  அவர்கள் மேற்கு/கிழக்கு என்ற முரண்பாட்டை விஞ்ஞானம்/ஆன்மிகம் என்பதாக மாற்றிக் காட்டு கிறார்கள்.  மேற்கத்திய சிந்தனை முறையிலிருந்து விலகிய ஒன்றாக மாவோயிசத்தை முன்நிறுத்து கின்றனர்.  மாவோயிசத்தை விசிட்டாத்வைதம், வைணவம், கைங்கர்யம், அன்புவழி ஆகியவற்றுக்கு இணையாக வைக்கின்றனர்.  இந்தியத் தத்துவ மரபில் ஒருமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது, போராட்டம் இரண்டாம் பட்சமானது என் கிறார்கள்.  இது தத்துவார்த்தமாக வன்முறையற்ற நிலை என்று சொல்ல முனைகிறார்கள்.
நில உடைமையாளன்/உழைக்கும் மக்கள் என்ற நேரடி முரணுக்குப் பதிலாக இங்கு நான்கு வருணங்கள், பல சாதிகளைக் கொண்ட படிநிலை அமைப்பு நிறுவனப்பட்டு முரண்பாடு சிதறடிக்கப் பட்டுள்ளது.  “சிதறடிக்கப்பட்டுள்ளது” என்ற சொல் கூட சரியானதாக இருக்காது.  பரவலாக்கப் பட்டுள்ளது எனலாம்.  ஆனால் இதனால் முரண் பாடு வன்முறையற்றதாக ஆகிவிட்டது என்ற முடிவு சரியானதல்ல.  முரண்பாடு பொருளாதாரச் சுரண்டல் எனக் குறிப்பாக அடையாளப்படுத்த முடியாதபடி, பிறப்பு, முற்பிறவி, கரும வினை, தாமச குணம், தெய்வ விதி எனப் பலவகைகளில் சிதறலாக நிறுவப் பட்டுள்ளது.  சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஆணாதிக்கத்தையும் நியாயப்படுத்திப் பாதுகாக்கும் பலமுனை முயற்சிகள் இங்குச் செய்யப்பட்டுள்ளன.  பொருளாதார முரண்பாடு இங்குச் சமயம், பண்பாடு, பிரபஞ்சவியல் எனப் பல தளங்களில் பரவலாக்கப் பட்டு நிறுவப்பட்டுள்ளது.  பொருள்வகை உறவு மான வேறுபாடுகள் நிலைப்படாத காலத்திலிருந்தே பொருள்வகைச் சுரண்டலுக்கு ஆதாரமாகக் கருத் தியல் இழிவுநிலை கற்பிக்கப்பட்டுள்ளது.
முரண்களின் சிதறிய நிலைபற்றி மேற்கத்திய சிந்தனையாளர்கள் பேசவில்லை.  சிதறிய முரண் களைத் தொடக்கக் கட்டம், வளர்ச்சியடையாத கட்டம் என அவர்கள் பேசியிருக்கலாம்.  ஆனால் இந்திய நிலை அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை.  இங்குச் சிதறிய நிலை என்பது பரவிய நிலை, வாழ்வின் எல்லாக் கூறுகளையும் ஊடுருவி நிற்கும் நிலை.  வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கிடையில் ஒருமித்த கருத்துநிலை.  சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அனுபூதித்தளம் உட்பட, ஒவ்வொரு தளத்திலும், சுயாதீனமான அடிப்படைகள் உருவாக்கப்பட்டிருக் கின்றன.  முரண்பாடுகள் “சிதறடிக்கப்பட்டிருப் பதால்” அதன் உக்கிரம் குறைந்திருக்கிறது என்று எஸ்.என்.நாகராசன் கருதிவிட்டார்.  இல்லை; முரண் களின் உக்கிரம் பலமடங்கு கூடிவிட்டது என நான் கருதுகிறேன்.  முரண்களுக்குப் பல கோணங்களி லிருந்து பல அடுக்குகளாக அரண்கள் கட்டப் பட்டுள்ளன.  இரண்டு வர்க்கங்கள் என்ற இடத்தில் நான்கு வருணங்கள் காட்சியளிக்கும்போது முரண் பாடு குறைவதில்லை.  ஒவ்வொரு வருணமும் அல்லது சாதியும் தனக்கு அடுத்து அமைந்திருக்கும் சாதியை முரண்பாட்டின் முழு உக்கிரத்துடன் தான் கையாளும்.  சுரண்டலோ ஒடுக்குமுறையோ குறைவதற்கு, மிதப்படுவதற்கு, சாதிச் சமூகத்தில் எந்த முகாந்தரமும் கிடையாது.  இந்தக் கணக்குப் படி, முரண்பாட்டின் தீவிரம் பலமடங்கு கூடுமே தவிர குறைவதில்லை.  அதாவது ஒருபுறம் எதிர்ப்பின் ஆற்றல் பலவீனப்படுத்தப்பட்டு, மறுபுறம் சாதி ரீதியான முரண்பாட்டின் செயல்பாடு தீவிரப்படுத்தப் பட்டு, இரண்டு வகைகளில் சாதி அமைப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.  இதுவே சாதி அமைப்பின் நீடித்த தன்மைக்குக் காரணம்.  முரண்பாடு சிதறடிக்கப்பட்டிருப்பதால் வன்முறையற்ற சமூகம், பகைமையற்ற முரண்பாடு, அன்பு வழி என எந்திர கதியில் நாகராசன் யோசித்துவிட்டார்.  முரண் பாட்டின் உக்கிரத்தை நடைமுறையில் எதிர் கொள்ள இயலாமல் போனதால்தான் நம்ம வர்கள் அன்பு வழி, மறைஞானம், அனுபூதி என முட்டுச்சந்துகளுக்குள் போய்ச் சேர்ந்தார்கள்.
இந்தியச் சூழல்களிலான, இந்தியத் தனித் தன்மைகளுக்கு ஏற்ற மார்க்சியம் என்ற வேலைத் திட்டத்தோடு நாம் வெகுதூரம் போகவேண்டும்.
உங்கள் நூலகத்திற்காக நேர்கண்டவர்:
சா. ஜெயராஜ்

(பேராசிரியர் ந.முத்துமோகனின் நேர்காணல் - சென்ற இதழின தொடர்ச்சி)

உ.நூ: ரஷ்யாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்? சோவியத் சமூகம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? அங்கு மார்க்சியம் தொடர்பாக என்னென்ன சிந்தனைப் போக்குகள் இருந்தன? விரிவாகச் சொல்லுவீர்களா? 

சோவியத் அனுபவங்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தியவை.  இப்போது கேட்கிறீர்கள்.  பல விஷயங்கள் மறந்து போயிருக்கும்.நினைவில் உள்ளதைச் சொல்லுகிறேன்.சோவியத் யூனியன், சோசலிசம் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது குறிப்பான சில எதிர்பார்ப்புகளுடன் கேட்கிறீர்கள்.  1989க்குப் பிறகு சோவியத்துக்களின் தகர்வுக்கான மொத்தப் பதிலையும் என்னிடமிருந்து பெற்றுவிடவேண்டு மென்ற ஆசை உங்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.  இந்த வகையில் இது ஒரு மிகப்பெரிய அரசியல் கேள்வி.  ஆனால் நான் அப்படிப்பட்ட ஒரு நிலையில் நின்றுகொண்டு பதில் சொல்லுவது நியாயமாக இருக்காது எனக் கருதுகிறேன்.  எனது, என்னுடன் அங்கு அப்போது வாழ்ந்த மாணவர்களின் அனுபவ நிலையிலிருந்து பதில் சொல்ல முயலுகிறேன்.

1976 செப்டம்பரிலிருந்து 1987 ஏப்ரல் வரை மாஸ்கோவில் இருந்தேன். பல நல்லவை, கெட்டவை எனக்கு அங்கு நடந்து முடிந்தன.  மாஸ்கோவில் தமிழ் மாணவர்கள் சுமார் 30 பேர் சேர்ந்து செவ்விளம் தமிழர்கள் என்ற பெயரோடு ஓர் அமைப்பு வைத்திருந்தோம்.தோழர்கள் பாஸ்கரன், பேச்சியப்பன், ஜெயசிரி, சுப்புராமன், ஜெயபால், சுப்பிரமணி, உதயச்சந்திரன், கோபால், பூமிநாதன், ஜவகர், நயினார், அதிகமான், அஜந்தா, ஜீவா எனப் பலர்.  செவ்விளம் தமிழர் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும்.தமிழ் உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிவரை ஒருவர் உரைவழங்க மற்றவர்கள் கலந்துகொண்டு விவாதங்கள் நடத்துவோம்.  அவ்வப்போது கிடைக்கும் இந்திய, தமிழ்நாட்டுச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுவோம்.  எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, தோழர் ஞானையா, தோழர் டி.ராஜா இன்னும் தமிழ் நாட்டிலிருந்து வந்து போகும் தோழர்கள் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  

பேராசிரியர் நா.  தர்மராஜன், முகம்மது ஷெரிப் போன்றோர் அங்கு மொழி பெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்தனர்.  இது தவிர, இந்திய மாணவர்களுக்கென இளம் கம்யூனிஸ்ட் கழகம் (Young Communist League) என்றொரு அமைப்பு உண்டு.  அதற்கு நானே ஒருமுறை செயலாளராக இருந்தேன்.  கட்சியின் சர்வதேச விஷயங்களோடு தொடர்புகொண்ட தோழர்கள் சாரதா மித்ரா, ராஜசேகர ரெட்டி போன்றோர் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள்.கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லாவக்கியா, பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர் களுக்கு 20 நாட்கள் அளவில் கட்சி வகுப்புகளும் நடந்திருக்கின்றன.இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றின் வழியாகவும் சோவியத் வாழ்க்கை, சோசலிசம், மார்க்சியம் குறித்த எங்கள் விவாதங்கள் நடந்தன.  சோசலிசத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்துபவர்கள் எங்களிடையில் இருந்தார்கள்.  பல தீவிர விமர்சனங்களை எழுப்பியவர்களும் இருந்தார்கள்.இந்த விவாதங்களுக்கு வெளியில் எங்கள் ஆசிரியர்களோடு, பிற ரஷ்ய மாணவர்களோடு நாங்கள் விவாதித்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு.தனிப்பட்ட முறையில் ஏராளமான ஆசைகளோடு நான் சோவியத் யூனியன் சென்றேன்.  மாஸ்கோ புறப்படுவதற்கு முன் பேராசிரியர் நாவா சில எச்சரிக்கைகளை வழங்கியிருந்தார்.ரொம்பவும் கற்பனாரீதியாக சோவியத் யூனியனைக் குறித்த எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாதே என்று அவர் சொல்லியிருந்தார்.  

முதல் இரண்டு வருடங்களுக்கு எல்லாமே எனக்குப் பிரும்மாண்டமாகத்தான் தெரிந்தன.பெரிய கட்டடங்கள், விரிந்த பெரிய வீதிகள், அற்புதமான நினைவுச் சின்னங்கள், லெனின் மொசொலியம், செஞ்சதுக்கம், ஓவியக் கண்காட்சிகள், தியேட்டர்கள், குறைந்த விலையில் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள், வாகனக் கட்டணங்கள், அற்புதமான நூலகங்கள், அரசியல் தத்துவார்த்தப் பத்திரிகைகள், கல்விமுறை எல்லாமே சிறப்பானவையாகத்தான் தெரிந்தன.  கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளில் பல்கலைக்கழகத்திலிருந்தே குறைந்த செலவில் பல நகரங்களுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்வார்கள்.  நான் படித்த லுமும்பா பல்கலைக்கழகத்தில் சுமார் 104 ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து மாணவர், மாணவிகள் படித்தார்கள் என்று ஒரு கணக்கு சொல்வார்கள்.  ஒவ்வொரு நாட்டு மாணவர்களுக்கும் மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் உண்டு.  ஆண்டுவிழாக்கள், கலை விழாக்கள் எனப் பல்கலைக்கழகம் பொதுவாக கலகலப்பாக இருக்கும்.  உலகின் பல்வேறு பகுதிகளின் ஆட்டபாட்டங்களைக் காணக் கிடைத்த வாய்ப்பு மிக அற்புதமானது.  எனவே சோவியத் வாழ்க்கை என்பது தவிர, உலக நாடுகள் பலவற்றில் நடக்கும் சம்பவங்கள்பற்றிய தகவல்கள், அந்த மாணவர்களின் வாழ்க்கை ஆகியவையும் எங்களுக்கு அறிமுகமாகியிருந்தன.

நான் அங்கேயிருந்த காலத்தில் எத்தியோப்பியப் புரட்சி, அங்கோலாவில் நடந்த புரட்சி, நிக்குராகுவாவில் தொடர்ந்த போராட்டம், ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் என்ற பல சம்பவங்கள், அவை குறித்த விவாதங்கள் எனது நினைவில் நிற்கின்றன.  நான் மாஸ்கோவில் இருந்த நாட்களில்தான் செர்னோபில் அணு உலை விபத்தும் நடந்தது.  லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து ஓர் இளைஞன், கத்தோலிக்கன், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவதற்காகக் கூட பெற்றோர்களோடு அல்லது சகோதரியோடு சொந்தநாட்டோடு தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாதபடி அவன் நாட்டின் அரசியல் கெடுபிடிகள்.  கண்ணீரோடு அவன் எங்களோடு அமர்ந்திருப்பான்.  ஈராக் அல்லது யேமன் நாட்டிலிருந்து ஒரு பெண்.  ஐந்து, ஆறு வருடங்களில் ஒருமுறை கூட அவளது நாட்டுக்குச் சென்றுவர முடியாதபடி அவளது குடும்பமே அரசியல் அடக்குமுறைக்குள் சிக்கிக்கொண்டிருக்கும்.பல நாட்டு மாணவர்களின் கவலைகளை நாங்கள் கேட்டு அறிந்திருக்கிறோம்.  80களில் ஈழப் பிரச்சினை பற்றிய செய்திகள்.  ரஷ்யாவுக்குள் ஒரு மூன்றாம் உலகச் சூழல் எங்களுக்கு அமைந்திருந்தது.1917 அக்டோபர் புரட்சியிலிருந்து 1980கள் வரையிலான ரஷ்யா என எடுத்துக்கொண்டால் அது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட தூரம் பயணம் செய்திருந்தது என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.  

ஏழ்மையும் சமூகச் சிக்கல்களும் மலிந்த ஒரு மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் எனது பார்வையில் சோவியத் யூனியனின் அறுபதாண்டுச் சாதனைகள் ஒரு கணிசமான விஷயமாகப் பதிந் திருக்கும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது ஆகும்.  60 ஆண்டுகளில் சோவியத் யூனியன் ஒரு மிகப் பெரிய பொருளாதாரப் பேரரசாக உருவாகியிருந்தது.  கனிம வளங்கள், எந்திரத் தொழில், மின்சார உற்பத்தி, விஞ்ஞான வளர்ச்சி, ராணுவத் துறை, மருத்துவம், கல்வி, நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய பல வட்டாரங் களில் அது மிகப் பெரும் சாதனைகளைப் புரிந்திருந்தது.  இவை ஒரு மலைப்பை எங்களுக்கு ஏற்படுத்தியது என்பதும் உண்மை.ஆயின், படிப்படியாக சில பிரச்சினைகள் எங்கள் கண்களில் தென்படத் தொடங்கின.  சிலவற்றைச் சொல்லுகிறேன்.  சோவியத் தந்த வேறுபாடும் தெரியாத ஒரு நிலை இருந்தது.  இன்னொருபுறம், மக்கள் அவற்றைப் பற்றி அக்கறைப்படாத ஒரு பெரிய இடைவெளியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் நிலவியது.  கட்சி மாநாடுகள், விழாக்கள், ஊர்வலங்கள், தேர் தல்கள் ஆகியவை எந்தப் பரபரப்பும் இல்லாமல் ஒரு மந்த கதியில் திட்டமிட்ட வடிவில் அரசு நிகழ்ச்சிகள் நடப்பதுபோல நடந்து முடியும்.  1976-1987 ஆண்டுகளில் பிரஷ்னேவ், அந்த்ரபோவ், செர் னென்கோ, கர்பச்சேவ் ஆகிய நால்வரது தலைமை களை நான் பார்த்திருக்கிறேன்.  பிரஷ்னேவின் காலம் நீண்டது.  அவரது காலத்தில்தான் அதிக மான அதிருப்திகள் மக்களிடம் தேங்கத் தொடங்கின என்று எனக்கு நினைவு.  எந்த மாற்றமும் எங்கிருந்தும் ஏற்படப்போவதில்லை என்பது போன்ற நிலை அங்கு நிலவியது.  மந்தகதியில் ((Inertia) எல்லாமே நகருகின்றன என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

மேற்கு நாடுகளைப் பற்றிய அரசியல் ரீதியான மதிப்பீடுகளைச் சுமந்து வரும் பத்திரிகைச் செய்திகள் ஒருபுறமிருக்க, ஜீன்ஸ், டீ ஷர்ட், கொக்ககோலா, ஃபான்டா, மேற்கத்திய இசை அல்லது திரைப்படம் போன்ற மேற்கத்தியச் சரக்குகள் மீது மக்களிடையில் பரவலான மோகம் தென்பட்டது.  அவை எங்காவது ஒரு கடையில் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் விற்கப்படுகின்றன எனில் நீண்ட கியூவில் மக்கள் உடனடியாகக் குவிந்துவிடுவார்கள்.  சோவியத் சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் ஒரேவிதமான நுகர்வுப் பொருட்கள் ஒரே விதமான பேப்பர்களில் அல்லது பாக்கெட்டுகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால் ஒருவர் ஆர்வத்தோடு அவற்றில் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்து எடுத்தார் என்று சொல்லக்கூடிய வகையில் பலவகைப் (Variety) பொருட்கள் அங்கே இருக்காது.  தேர்வுகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகவே இருக்கும்.

மக்களிடையில்  தென்பட்ட மந்தகதி குடிப்பழக்கம், குடும்பங்களின் உடைவு, குழந்தைகள் புறக்கணிக்கப் படுவது, பொதுப் பிரச்சினைகளில் அக்கறையின்மை ஆகியவற்றில் அதிகமாக வெளிப்பட்டது.  அந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கட்சி அதிகமாகப் பேசியது.  ஆனால், அந்தப் பேச்சுக்கள் மேலோட்டமாக இருந்தனவே தவிர அடிப்படையாகப் பிரச்சினையை அணுகித் தொட்டதாகத் தெரியவில்லை.  கிராமப்புறங்களுக்கு நாங்கள் பயணம் செய்திருக்கிறோம்.  மல்தாவியாவில் திராட்சை, மற்றும் ஆப்பிள் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலைகளைச் செய்ய கோடை விடுமுறையில் மாணவர்கள் செல்லுவார்கள்.  வருடத்தில் 40 நாட்கள் உக்ரைன், பேலோ ருஷ்யாவின் சிறுநகரங்களில் ரசாயன தொழிற் சாலையில் தொழிற்பயிற்சிக்காகச் சென்றிருக் கிறேன்.  கிராமப் புறங்களில் நான் மேலே சொன்ன மந்தகதியும் அக்கறையின்மையும் அதிகமாகத் தென்படும்.  மதுப்பழக்கம், குடும்பங்களின் சிதைவு ஆகியவற்றையும் அங்கு அதிகம் சந்திக்க வேண்டி வரும்.  கிராமங்களின் பாதிப்பில் நகரங்களைப் பேணுகிறார்களோ என்ற தோற்றம் ஏற்பட்டதுண்டு.அந்தச் சமயத்தில் எங்களிடையில் நடந்த சில விவாதங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.  

மிகப் பெரிய ஒரு சோசலிசப் புரட்சியை நடத்திய இந்த மக்களை, இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய தியாகங்கள் செய்த இந்த மக்களைக் காலுக்குள் கிடக்கும் கந்தல் துணி போன்ற ஜீன்ஸ்களுக்காக இப்படி கியூவில் நிற்கவைத்துவிட்டார்களே என்று அந்த நாட்களில் பேசியதுண்டு.“சோசலிசம் என்றால்உள்ளுக்குள் போராட்டம் இல்லாமல்போய்விடும் என நினைத்தாயா?எல்லா நேரங்களிலும் தான்நாம் போராடவேண்டும்.மார்க்சியத்துக்காக எப்போதும்போராடிக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.”சில பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க சோவியத் ரஷ்யாவின் செழிப்பான கனிம வளங் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சமாளிக்கிறார்கள் என்ற விஷயம் குறித்துப் பேசியுள்ளோம்.  சில ஆப்பிரிக்க நாடுகளில், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சோவியத் ராணுவம் அதிகம் தலையிடு கிறது என்பது குறித்துப் பேசியிருக்கிறோம்.  கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் என்பவை சுதந்திர மாகச் செயல்படவில்லை என்ற உணர்வு இருந்தது.  இன்னும் கொஞ்சம் சீரியசாக, சோவியத் ஐந்தாண்டுத் திட்டங்கள் மிகவும் இறுக்கமாக வரையறுக்கப்படு கின்றன; மாறாக, ஐந்தாண்டுகளுக்குள்ளாக ஒவ்வொரு ஆண்டும் புது விஷயங்களுக்கு இடமளிக்கக் கூடிய விதத்தில் நெகிழ்வான திட்டமிடல் வேண்டும் எனப் பேசியிருக்கிறோம்.  

அரசு நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மை அற்றவையாகப் பட்டன.  எனது ஆய்வு நெறி யாளர் பேராசிரியர் சூப்கோவுடன் சோசலிசத்தின் பிரச்சினைகளைப்பற்றி ஒருமுறை கோபத்தோடு பேசிக்கொண்டிருந்தேன்.  அதே அளவு கோபத்தோடு அவர் பதில் சொன்னார்: “சோசலிசம் என்றால் உள்ளுக்குள் போராட்டம் இல்லாமல் போய்விடும் என நினைத்தாயா? எல்லா நேரங் களிலும் தான் நாம் போராடவேண்டும்.  மார்க்சியத்துக்காக எப்போதும் போராடிக் கொண்டிருக்கத் தான் வேண்டும்.” என்றார்.  ஐந்தாவது அல்லது ஆறாவது ஆண்டில் என நினைக்கிறேன், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு இந்த சோசலிசம் எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதினேன்.  அடுத்த சில மாதங்களில், தோழர் து.ராஜா ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாஸ்கோ வந்தார்.  அவரிடம் நான் எழுதிய கடிதம் பற்றித் தோழர் நல்லகண்ணு சொல்லி, மோகனிடம் பேசிவிட்டு வாருங்கள் என அனுப்பியிருந்தார்.  தோழர் ராஜா மாஸ்கோவில் என்னைச் சந்தித்துப் பேசினார்.எப்படியிருப்பினும் அந்தக் காலத்தில் சோவியத் அமைப்பு குறித்த எங்கள் விமர்சனங்கள், இருக்கின்ற அமைப்பில் சில தீவிர மாற்றங்கள் செய்யப் படவேண்டும் என்ற வகையில்தான் அமைந்திருந்தன.  அடிப்படையாக அந்த அமைப்பே மாற்றப்பட வேண்டும் என்பதாக இருக்கவில்லை.  சோவியத் யூனியன் பற்றிய எங்களது விமர்சனங்கள் மார்க் சியத்தின் அடிப்படையில்தான் அமைந்திருந்தன.  மார்க்சியத்தைத் தாண்டிய தத்துவம் எதுவும் எங்கள் கண்களுக்குப் படவில்லை.  

பிரஷ்னேவின் மரணத்திற்குப் பிறகு அந்த்ரபோவ் வந்தபோது மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின.  ஆயின் அவர் அதிக காலம் இருக்கவில்லை, செர்னென்கோ வந்தார்.  பழமைச் சக்திகள் திரும்பி வந்துவிட்டதாக உணர்ந்தோம்.  மீண்டும் கர்பச்சேவ் வந்து பெரிஸ்த்ரோய்க்கா (மறுகட்டுமானம்) பற்றிப் பேசினார்.  மாற்றங்கள் மேலிருந்துதான் துவங்கப்படவேண்டும் என்ற நிலை இருந்ததுவே சிக்கலானது.  கர்பச்சேவ் காலத்தில் சீர்திருத்தங் களுக்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டன.  ஆனால் அவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.  பல திசைகளிலிருந்து, எதிர்பாராத திசைகளி லிருந்து மக்கள் திரளத் தொடங்கினர்.  மீண்டும் சொல்லுகிறேன், கர்பச்சேவ் அந்தச் சூழலைச் சரியாகக் கையாள ஆற்றல் இல்லாதவராகிவிட்டார்.  அதை அவர் உணர்ந்த தறுவாயில் ஏல்த்சென் அவரை அப்புறப்படுத்திவிட்டார்.  சோசலிச அமைப்பே சிதறடிக்கப்பட்டுவிட்டது.  சோவியத் யூனியனை விட சீனா சோசலிசத்தின் உட்பிரச்சினைகளை எச்சரிக்கையாகக் கையாளுவதாகத் தோன்றுகிறது.  

சீனப் புரட்சிக்குப் பிறகு சோவியத்-சீன உறவுகள் உடைந்ததே சோசலிசத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பிளவு எனக் கருதுகிறேன், எப்பாடுபட்டேனும் சோவியத்-சீன உறவுகளைச் சரிப்படுத்தியிருக்க வேண்டும்.  சமீபத்தில் சீனக் கம்யூனிஸ்ட் அறிஞர் ஒருவரின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.  சந்தை என்ற விஷயமே முதலாளியத்துக்குச் சொந்தமானது என நாம் கருதிக் கொண்டிருக்கிறோம், ஆனால் சோசலிச உற்பத்தி என்பது உள்ளது போலவே சோசலிசச் சந்தை என்ற ஒன்றும் உண்டு.  சோசலிசச் சந்தை பற்றிய புரிதல் இன்றி அதனை சோசலிசப் பகிர்வு எனப் பொதுவாகப் புரிந்துகொண்டதால், அந்தப் பகிர்வை நிர்வகிப்பது அரசு அல்லது கட்சி என முடித்துவிட்டதால், அரசு சார்ந்த அதிகார மையம் வலுப்பட்டுவிட்டது, உற்பத்தியாளர்களின் மற்றும் நுகர்வாளர்களின் இடம் மறுக்கப்பட்டு விட்டது என்று எழுதுகிறார்.  சோசலிச சந்தை எப்படிப்பட்டது? அதன் பண்புகள் யாவை? அது சோசலிசச் சந்தையாகத் தொடர்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? சோசலிசச் சந்தையில் உற்பத்தியாளர், நுகர்வாளரின் பங்கு என்ன? என்ற விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்கத் தவறி விட்டோம் என்று அக்கட்டுரை பேசுகிறது.  சோசலிச சந்தைச் சக்திகள் பற்றிய அங்கீகாரம் இல்லாத சூழல்களில் அவை தன்னிச்சையாகச் செயல்பட முனையும்போது அவை எதிர்ப்புரட்சி சக்திகளாக நம் கண்ணில்படும்.  இப்படித்தான் சோசலிசத்திற்குள் சந்தை என்ற ஒன்று தோன்றிவிட்ட சூழலை எதிர் மறையாகப் பார்க்கத் தொடங்கினோம்.  

இந்த எதிர்மறை உணர்வு அது குறித்து நம்மைச் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது என்று எழுதுகிறார்.20ஆம் நூற்றாண்டு வரலாற்றுரீதியாக மிக அடர்த்தியான நூற்றாண்டு.  பல நூற்றாண்டுக் கால வரலாற்றை மிக அடிப்படையாக வேறு திசையில் திருப்புவதற்கான பணி இந்த நூற்றாண்டில் தொடங் கியது.  அந்த வரலாற்றின் முழுச் சுமையையும் நாம் ரஷ்யாவின் மீது சுமத்திவிட்டோம்.  19ஆம் நூற்றாண்டில் ரஷ்ய ஆன்மா பற்றிய பேச்சுக்கள் அங்கே நிகழ்ந்த போது, ஐரோப்பாவையும் மொத்த வரலாற்றையும் காப்பாற்றப்போவது ரஷ்யாதான் என்று அங்கே பேசப்பட்டது.  தஸ்தயேவ்ஸ்கி அப்படித்தான் கருதினார்.  பல ரஷ்யர்கள், ரஷ்யக் குடியானவர்கள் கூட அப்படித்தான் நம்பினார்கள்.  லெனின் கூட அப்படி நம்பியிருப்பார் எனத் தோன்று கிறது.  ரஷ்யாவால் அந்தப் பளுவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பாட்டாளி வர்க்கம்தான் புரட்சியை நடத்தும் என மார்க்ஸ் சொன்னபோது அவரும் அப்படித்தான் நம்பினாரோ என எண்ணத் தோன்றுகிறது.  திரும்பத் திரும்ப உடைமைச் சமூக வரலாறு நம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறது.  நாம் விரிந்து பரவ வேண்டும்; பெருக வேண்டும்; ஆழ மாகவும் அகலமாகவும் நாம் செல்லவேண்டும் அப் போதுதான் நாம் வெற்றி பெறுவோமாக இருக்கலாம்.

ஐரோப்பிய மார்க்சியம் குறித்து உங்கள் மதிப்பீடுகள், நிலைப்பாடுகள் என்ன?

மார்க்சியம் ஐரோப்பியச் சூழல்களில்தான் தோன்றியது.  நாம் அதனைச் சுவீகரித்துக் கொண்டோம். 20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மார்க்சியம் அதன் தோல்விகளிலிருந்து பேசுகிறது என பெரி ஆன்டர்சன் என்ற அறிஞர் கூறுகிறார். ஐரோப் பாவில் புரட்சிகள் நடைபெறவில்லை, அந்தத் தோல்வியின் காரண காரியங்களைத் தேடுவது தான் மேற்கத்திய மார்க்சியம் என்கிறார் அவர்.  அந்தத் தோல்விகளை, அவற்றுக்கான காரணங் களைக் கொண்டு நியாயப்படுத்துகிறார்கள் என்றும் அவர் சொல்லுகிறார்.  எனவே மேற்கத்திய மார்க் சியத்தில் தோல்வி மனப்பான்மையின் சாயல் படிந்துள்ளது எனக் கூறுகிறார்.  இந்த மதிப்பீடு ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம்.  ஐரோப்பிய மார்க் சியர்கள் தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளி யேறவேண்டும் என்ற அறிவுறுத்தலாக அது இருக்கலாம்.  எப்படியோ 20-ஆம் நூற்றாண்டில் மார்க்சியம் மார்க்சிய வரலாறாக ஆகிவிட்டது.  இந்த வரலாற்றில் முன்னும்பின்னுமாக நாம் நகர வேண்டும்.  புதிய பிரச்சினைகள், புதிய கேள்விகள் நம்மிடையில் தோன்றியிருக்கின்றன.  புதிய பதில்களையும் நாம் தேடித்தான் ஆக வேண்டும்.

 ஒவ்வொரு புதிய கட்டத்தின்போதும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனின், மாவோ ஆகியோரின் எழுத்துக்களை மீண்டும் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.  இதைத்தான் முன்னும் பின்னுமாக என்று குறிப்பிடுகிறேன்.ஜியார்ஜ் லுகாச், பிராங்பர்ட் மார்க்சியம், கிராம்சியின் மார்க்சியம், அல்த்தூசரிய மார்க்சியம், பின்னைநவீனத்துவச் சூழல்கள் என முரண்பட்ட பிரதேசங்களின் ஊடாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.  புதிதாக வாய்த்தவற்றை வாசித் தறியும்போது, மார்க்சியத்தின் முதல்நிலைகளைத் தவறவிட்டுவிடக்கூடாது.  முதல் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்கள் விரிந்துகொண்டு போகலாம், ஆழப்படலாம், சில புதிய கருத்தாக்கங் களேகூட உருவாகலாம்.மார்க்சியமல்லாத தத்துவங்களும்கூட வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தை, ஏதோ ஒரு பக்கத்தை எடுத் துரைக்கின்றன என்று லெனின் கூறுவார்.  ஆனால் அந்த ஒரு பக்கத்தை ஒற்றைப்படையாக, அவை முழுத்தத்துவமாக மாற்றிவிடுகின்றன என்பார்.  எனவே, மார்க்சியன், குறிப்பிட்ட அந்தத் தத்துவம், வாழ்வின் எந்த அம்சத்தை ஒற்றைப்படையாக மிகைப் படுத்தியது என்பதை அறியக் கடமைப்பட்டவன்.  

முட்டாள்தனமான பொருள்முதல்வாதத்தைவிட, அறிவுள்ள கருத்துமுதல்வாதம் மார்க்சியத்துக்கு நெருங்கியது என்று லெனின் எழுதினார்.  டெர்ரி ஈகிள்டன் பின்னை நவீனத்துவம் பற்றி இதுபோல ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்: மார்க்சியன் பின்னை நவீனத்துவத்தின் ஊடாகப் பயணப்பட்டு அதனை மறுபுறமாக உடைத்துக் கொண்டு வெளியேறி வந்துவிடவேண்டும் என்பார் அவர்.ஐரோப்பிய மார்க்சியத்தைப் படிப்பது இங் கிருந்து புறப்பட்டுப் போய் அங்கே புரட்சியை நடத்துவதற்காக அல்ல; நம்மூர்ப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதற்காகத்தான்.  இந்தியச் சமூகம் இன்னும் நமக்குச் சிக்கலாகவே உள்ளது.  இதன் பல பிரச்சினைகளுக்கு இன்னும் நம்மிடம் தீர்வு இல்லை.  புரிதலில் போதாமைகள் உள்ளன.  மார்க்சியக் கருத்தாக்கங்களின் விரிவு, செழுமை நமக்குத் தேவைப் படுகிறது.  ஐரோப்பிய மார்க்சியம் கருத்தாக்கச் செழுமைக்கு உதவுகிறது.  

ஐரோப்பிய மார்க் சியருக்கிடையில் நிகழ்ந்துள்ள விவாதங்கள் நம்மை விரிவான பரப்புகளை நோக்கி இட்டுச் செல்லும்.  ஏங்கெல்ஸ் ஒருமுறை சொன்னார்: “தத்துவம் படிப்பது எப்படி? தத்துவங்களின் வரலாற்றைப் படிப்பதுதான் தத்துவப் பயிற்சி பெறுவதற்கான வழி.  தத்துவங்கள் அடுத்தடுத்து ஒன்றையொன்று மறுத்து எப்படிச் செழுமை பெற்றன என்பதை அறிவதுதான் தத்துவ வரலாறு.  மார்க்சியம் சம கால வளர்ச்சிகளைப் பற்றிய உணர்வின்றி, தனது முதல் அடிப்படைகளை மட்டுமே சூத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தால், முழுவதும் நிராகரிக்கப் பட்டுவிடும்.”மாஸ்கோவில் படித்துக்கொண்டிருந்த நாட் களிலேயே நான் ஐரோப்பிய மார்க்சியத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.  அங்கே முதலில் இருத்தலியத்தோடும் ஃபிராய்டியத்தோடும் மார்க் சியம் விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தது.  பின்னர் அமைப்பியலோடு விவாதத்தைத் தொடங் கியது.  லேவி ஸ்ட்ராஸ், அல்த்தூசர் வரையிலான நூல்கள் (1987 வரை) அங்கு எனக்குக் கிடைத்தன.  ரஷ்ய உருவவியல், மிகயில் பக்தீனின் எழுத்துக்கள் குறித்த முன் அனுபவம் ரஷ்யர்களுக்கு இருந்ததால் அமைப்பியல், பின் அமைப்பியலை அவர்கள் எளிதில் கையாள முடிந்தது.  

சோவியத் எழுத்துக்கள், நாம் இங்கே பேசிக்கொள்ளுவது போல், அப்படியொன்றும் சூத்திரவாதமானவையோ பழமைவாதமானவையோ அல்ல.  நாலைந்து ஆண்டுகள் பழக்கப்பட்டுவிட்டால் சரியான ஆழமான, நூல்களைக் கண்டுபிடித்து விடலாம்.  பத்திரிகைகளில் கூடத் திறந்த விவாதங்கள் நடக்கும் பத்திரிகைகளைக் கண்டுபிடித்துவிடலாம்.  அதாவது சோவியத் மார்க்சியர்களின் உள்வட்டங் களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.  சோவியத் ஆசிரியர்களின் நூல்களை வாசிப்பது ஒரு நுட்ப மான அனுபவம்.  முரட்டு நிராகரிப்புகளெல்லாம் குறிப்பிட்ட ஓர் அளவில்தான்.  மார்க்சியம் குறித்த விவாதங்கள்,மேற்கிலும் கிழக்கிலும் நடந்தவை,ஏதாவதொரு வகையில்மூன்றாம் உலக நாடுகளைநெருங்கித்தான் வந்துள்ளன.இப்போது இந்தியச் சூழல்களுக்கானமார்க்சியம் என்று நாம் கூறும்போது,மேற்படி நிகழ்வுப் போக்கினைநாம் உணர்வுபூர்வமாக, உறுதியாகத் தொடர்ந்துசெய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறோம்.விமர்சனமாக, விவாதமாக அமைந்த நூல்களும் கூட மிக லாவக மாக எதிராளிகளின் கருத்துக்களை மார்க்சியத்துக்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளும்.  இதனைச் செய்வதற்குச் சம்பந்தப்படும் இரண்டு தத்துவங்களோடும் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும்.  அவை குறித்து வெகுநேரம் சிந்திக்க வேண்டும்.  மனதை அடைத்து வைக்கக் கூடாது.  இது ஓர் அற்புதமான வித்தை.  இது ஓர் இயங்கியல் வித்தை.  இதனைக் கற்றுக்கொள்ள நான் முயன்றிருக்கிறேன்.  இருபது வருடங்களுக்கு ஒரு புதிய தத்துவம் மேற்கில் தோன்றத்தான் செய்யும்.  மார்க்சியர்கள் அதனைப் பேசவிட்டு, உழைக்கும் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து அதனை உள்வாங்க முடியும்.  

தமிழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இந்தக் கலையை அவராகவே செய்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.  மேற்கத்திய கருத்தாக்கங் களை நமது தேவைகளுக்காக வேலை செய்ய வைப் பதில் பேராசிரியர் ராஜ்கௌதமனும் வல்லவர்.  அப்படியொன்றும் ஒருவர் பிடித்துத் தள்ளியவுடன் சரிந்து விழுந்துவிடும் என்பதுபோலப் பலவீனமான நிலையில் மார்க்சியத் தத்துவம் இல்லை.  மார்க்சியம் ஒரு செழுமையான தத்துவம்.  சார்த்தரும் தெரிதாவும் ஒரு சுற்று பேசிமுடித்து விட்டு, பிறகு மார்க் சியத்திற்கு அணுக்கமாகவே வந்து சேர்ந்தார்கள்.

கீழை மார்க்சியம்/கட்சி சார்ந்த மார்க்சியம் என்ற சொல்லாட்சிகள் தொடர்பாகக் கூறப்படும் கருத்துக்கள் எந்த அளவுக்குப் பொருத்தமானவை?

 இந்தியச் சூழல்களுக்கான மார்க்சியம் (With India Specifics) என்றுதான் இப்போது கட்சிகளும் பேசுகின்றன.  இந்தியச் சூழல்கள் என்பதில் தொழி லாளர்கள், விவசாயிகள் தவிர இந்தியச் சாதிச் சமூகம், தேசிய இனப் பிரச்சினை, கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள் ஆகியோரின் பிரச்சினைகள் உள்ளடங்குமாக இருக்கலாம்.  உலகமயமாக்கம் என்ற பெயரில் முதலாளியம் தன்னைப் பரப்பி வரும் சூழலில் அதற்கு எதிரான அரசியல் உருவாக்கத்தை அது குறிக்குமாக இருக்கலாம்.  மார்க்சியம் அதன் வரலாற்றில் படிப்படியாக, மேலும் மேலும் அதிக மாகக் கீழைநாடுகளை நோக்கி நகர்ந்து வந்துள்ளது என்றே கருதுகிறேன்.  ஐரோப்பியச் சூழல்களி லிருந்து ரஷ்யாவிற்கு, பின் சீனாவிற்கு, இன்னும் தேசிய விடுதலை இயக்கங்களையும் ஆப்பிரிக்க அரேபிய நாடுகளையும் அது பற்றிப் பிடித்தது.  லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவியது.  மார்க் சியம் குறித்த விவாதங்கள், மேற்கிலும் கிழக்கிலும் நடந்தவை, ஏதாவதொருவகையில் மூன்றாம் உலக நாடுகளை நெருங்கித்தான் வந்துள்ளன.  

இப்போது இந்தியச் சூழல்களுக்கான மார்க்சியம் என்று நாம் கூறும்போது, மேற்படி நிகழ்வுப் போக்கினை நாம் உணர்வுபூர்வமாக, உறுதியாகத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறோம்.20 ஆம் நூற்றாண்டு நெடுக சோசலிச முகாம்/முதலாளிய முகாம், சோவியத் யூனியன்/அமெரிக்கா, இரண்டு உலக யுத்தங்கள், கெடுபிடி யுத்தம் போன்ற முரண்பாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டு, நமது சொந்தப் பிரச்சினைகளை நேரடியாகப் பேச இய லாமற் போய்விட்டது.  இப்போது ஏற்பட்டிருப்பது முக்கியமான திருப்பம்.  இந்தத் திசையில் நாம் ஏராளமாக வேலை செய்யவேண்டியுள்ளது.ஆயின் கீழை மார்க்சியம் என்ற பெயரில் பேசப்பட்ட எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி போன்றோரின் நிலைப்பாடுகளில் அடிப்படையாகச் சில பிரச்சினைகள் உள்ளன எனக் கருதுகிறேன்.  அவர்களது கிழக்கு நோக்கிய குவிமையத்தை, பிரச் சினைகளின் தேர்வை நான் குறைகூறமாட்டேன்.  அவர்கள் மேற்கு/கிழக்கு என்ற முரண்பாட்டை விஞ்ஞானம்/ஆன்மிகம் என்பதாக மாற்றிக் காட்டுகிறார்கள்.

 மேற்கத்திய சிந்தனை முறையிலிருந்து விலகிய ஒன்றாக மாவோயிசத்தை முன்நிறுத்து கின்றனர்.  மாவோயிசத்தை விசிட்டாத்வைதம், வைணவம், கைங்கர்யம், அன்புவழி ஆகியவற்றுக்கு இணையாக வைக்கின்றனர்.  இந்தியத் தத்துவ மரபில் ஒருமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது, போராட்டம் இரண்டாம் பட்சமானது என் கிறார்கள்.  இது தத்துவார்த்தமாக வன்முறையற்ற நிலை என்று சொல்ல முனைகிறார்கள்.நில உடைமையாளன்/உழைக்கும் மக்கள் என்ற நேரடி முரணுக்குப் பதிலாக இங்கு நான்கு வருணங்கள், பல சாதிகளைக் கொண்ட படிநிலை அமைப்பு நிறுவனப்பட்டு முரண்பாடு சிதறடிக்கப் பட்டுள்ளது.  “சிதறடிக்கப்பட்டுள்ளது” என்ற சொல் கூட சரியானதாக இருக்காது.  பரவலாக்கப் பட்டுள்ளது எனலாம்.  ஆனால் இதனால் முரண் பாடு வன்முறையற்றதாக ஆகிவிட்டது என்ற முடிவு சரியானதல்ல.  முரண்பாடு பொருளாதாரச் சுரண்டல் எனக் குறிப்பாக அடையாளப்படுத்த முடியாதபடி, பிறப்பு, முற்பிறவி, கரும வினை, தாமச குணம், தெய்வ விதி எனப் பலவகைகளில் சிதறலாக நிறுவப் பட்டுள்ளது.  சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஆணாதிக்கத்தையும் நியாயப்படுத்திப் பாதுகாக்கும் பலமுனை முயற்சிகள் இங்குச் செய்யப்பட்டுள்ளன.  

பொருளாதார முரண்பாடு இங்குச் சமயம், பண்பாடு, பிரபஞ்சவியல் எனப் பல தளங்களில் பரவலாக்கப் பட்டு நிறுவப்பட்டுள்ளது.  பொருள்வகை உறவு மான வேறுபாடுகள் நிலைப்படாத காலத்திலிருந்தே பொருள்வகைச் சுரண்டலுக்கு ஆதாரமாகக் கருத் தியல் இழிவுநிலை கற்பிக்கப்பட்டுள்ளது.முரண்களின் சிதறிய நிலைபற்றி மேற்கத்திய சிந்தனையாளர்கள் பேசவில்லை.  சிதறிய முரண் களைத் தொடக்கக் கட்டம், வளர்ச்சியடையாத கட்டம் என அவர்கள் பேசியிருக்கலாம்.  ஆனால் இந்திய நிலை அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை.  இங்குச் சிதறிய நிலை என்பது பரவிய நிலை, வாழ்வின் எல்லாக் கூறுகளையும் ஊடுருவி நிற்கும் நிலை.  வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கிடையில் ஒருமித்த கருத்துநிலை.  சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அனுபூதித்தளம் உட்பட, ஒவ்வொரு தளத்திலும், சுயாதீனமான அடிப்படைகள் உருவாக்கப்பட்டிருக் கின்றன.  முரண்பாடுகள் “சிதறடிக்கப்பட்டிருப் பதால்” அதன் உக்கிரம் குறைந்திருக்கிறது என்று எஸ்.என்.நாகராசன் கருதிவிட்டார்.  இல்லை; முரண் களின் உக்கிரம் பலமடங்கு கூடிவிட்டது என நான் கருதுகிறேன்.  முரண்களுக்குப் பல கோணங்களி லிருந்து பல அடுக்குகளாக அரண்கள் கட்டப்பட்டுள்ளன.இரண்டு வர்க்கங்கள் என்ற இடத்தில் நான்கு வருணங்கள் காட்சியளிக்கும்போது முரண் பாடு குறைவதில்லை.  ஒவ்வொரு வருணமும் அல்லது சாதியும் தனக்கு அடுத்து அமைந்திருக்கும் சாதியை முரண்பாட்டின் முழு உக்கிரத்துடன் தான் கையாளும்.  சுரண்டலோ ஒடுக்குமுறையோ குறைவதற்கு, மிதப்படுவதற்கு, சாதிச் சமூகத்தில் எந்த முகாந்தரமும் கிடையாது.  

இந்தக் கணக்குப்படி, முரண்பாட்டின் தீவிரம் பலமடங்கு கூடுமே தவிர குறைவதில்லை.  அதாவது ஒருபுறம் எதிர்ப்பின் ஆற்றல் பலவீனப்படுத்தப்பட்டு, மறுபுறம் சாதி ரீதியான முரண்பாட்டின் செயல்பாடு தீவிரப்படுத்தப் பட்டு, இரண்டு வகைகளில் சாதி அமைப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.  இதுவே சாதி அமைப்பின் நீடித்த தன்மைக்குக் காரணம்.  முரண்பாடு சிதறடிக்கப்பட்டிருப்பதால் வன்முறையற்ற சமூகம், பகைமையற்ற முரண்பாடு, அன்பு வழி என எந்திர கதியில் நாகராசன் யோசித்துவிட்டார்.  முரண் பாட்டின் உக்கிரத்தை நடைமுறையில் எதிர் கொள்ள இயலாமல் போனதால்தான் நம்ம வர்கள் அன்பு வழி, மறைஞானம், அனுபூதி என முட்டுச்சந்துகளுக்குள் போய்ச் சேர்ந்தார்கள்.இந்தியச் சூழல்களிலான, இந்தியத் தனித் தன்மைகளுக்கு ஏற்ற மார்க்சியம் என்ற வேலைத் திட்டத்தோடு நாம் வெகுதூரம் போகவேண்டும்.

உங்கள் நூலகத்திற்காக நேர்கண்டவர்: சா. ஜெயராஜ்

Pin It