தன் பயண வேகத்திலும்
பள்ளங்களை
மணல் அள்ளி
நிரப்பி விட்டுப் போகிறது
காற்று.

நேற்று தோண்டிய
பள்ளங்களைத் தேடுவதிலும்
புதிய பள்ளங்களைத்
தோண்டுவதிலுமாய்
பயணம் தொலைக்கிறான்
மனிதன்!

 

மதிப்பெண் குறைந்த
மாணவர்களின்
மன உளைச்சல்...

இடம் பிடிக்கும் பதற்றத்தில்
பெற்றோர்களின்
அலைச்சல்....

சுயநிதிக்
கல்லூரிகளுக்கோ
நல்ல விளைச்சல்!

- கவி. வெற்றிச்செல்வி சண்முகம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.