நீலத்திரை இசைப்பறை
கடல்...
ஊர் சுற்றும் நீர் கூட்டத்
திடல்...
யார் படிக்கக் காத்திருக்கு
மடல்...
வேர் பிடித்தால் ஜீவன்களின்
உடல்...

தொடருரை வீச்சு கடலலை!
சிப்பியும் முத்துவும் சிற்பக்கலை!
நதி பிள்ளை, கடல் பள்ளி
பார்...
தலைகீழாய் தண்ணீரால் ஒரு
தேர்...
ஆழத்தில் லட்சம் உயிர் படி!
ஆளுமை வேண்டும் கடல் குடி!
(நீலத்திரை...)

தூரத்தைச் சுருக்க முதல் வழி!
தூக்கத்தின் நடுவே கண் விழி!
உயிர்க் காற்று, உடல் தண்ணீர்
கேள்...
கடல் ஞானம் பெற்று வந்து
 வாழ்...
சிகரம் தொடவே சிறகாகு!
ஏழை அடுப்புக்கு விறகாகு!
(நீலத்திரை...)

உப்புக் காற்றும் உயிர்தான்
ஊழல் அறுத்து வென்றுவிடு
கடல் அன்னை, கரை திண்ணை
உண்மை...
வலை பின்னும் கலைத் தொழில்
நன்மை...
நம்பிக்கை தின்றே உயிர் வாழ்!
துடுப்பே உனது போர் வாள்!
(நீலத்திரை...)

More articles by ஏகாதசி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.