பிரெஞ்சு மார்க்சிய விவாதம்: 

1945 - 55களில் மொத்த பிரெஞ்சு அறிவுல கமே நிகழ்வியம் - மார்க்சியம் உறவுகளை ஆய்வு செய்வதிலும் இரண்டையும் இணைவாக்கம் செய்யும் முயற்சியிலிருந்தது. மரபு மார்க்சியம் மற்றும் அதன் நிறுவன அமைப்பான பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி குறித்தும் ஒருவித ஏமாற்றமும், விரக்தியும் ஐம்பத்து அய்ந்துகளில் நிலவ ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் அறிவுலக விவாதங்களும் மாணவப் பேரியக்கத்தின் ஆர்வமும் ஈடுபாடும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்திலிருந்தும் நிகழ்விய தத்துவத்திலிருந்தும் விட்டு விலகி இருத்தலியம் குறித்த சிந்தனை, கருத்தாக்கம் போன்றவற்றிற்குச் சென்றது. இதனால் என்ன கிடைத்தது அல்லது உருவானது என்றால் அமைப்பிய மொழியியல் கண்டு பிடிப்பை மாதிரியாகக் கொண்டு பல்வேறு புதிய ஆய்வுமுறைகள், பகுப்பாய்வுகள் - உதாரணமாக, உறவின்முறை, வம்சாவளி, இலக்கியம் மற்றும் தொன்மம் குறித்து லெவி-ஸ்ட்ராஸ், பார்த், லக்கான், மற்றும் அஸ்தூஸ்ஸர் என்று அறிவுலக பெரும் ஜாம்பவான்கள் உருவாகினர். மனித வாதத்திற்கு எதிரானவர்கள், தன்னிலை வாதத் திற்கு எதிரானவர்கள் என்று உலகிற்குச் சொன்ன இவர்களுடைய பல வடிவ பகுப்பாய்வு முறைகள் எல்லாமே சமூக கலாசார நிகழ்வுகளை அமைப்பிய முறையில் அணுகி ஆராயப்பட்டவை

என்றும் அமைப்பியப் பகுப்பாய்வின் பலதரப் பட்ட வடிவங்கள்தாம் இவை என்றும் புரிந்து கொள்ளப்பட்டது. அமைப்பியல்வாதம் உரு வானதே நிகழ்வியத்தை அப்புறப்படுத்தியும் பல் வேறு அறிவுலகக் கண்டுபிடிப்புகளை வேக வேகமாக உடனுக்குடன் நிஜமாக்கவுமே. ஸ்டாலி னியமும் மனித(மைய)வாதமும், ‘பயங்கரமும் தன்னிலையும்’ போன்றவற்றிலிருந்து மார்க் சியத்தை மீட்டெடுக்கும் முகமாகப் பெரும் போராளி அல்தூஸ்ஸருடைய ‘மார்க்ஸை மிக நெருக்கமாக வாசித்தல்’ ‘பகுப்பாய்வு முறையை மறுவடிவமைத்தல்’ போன்ற ஒரு புதிய வாசிப்பு முறையை வலியுறுத்திச் சொன்னது அமைப்பியல் வாதத்திற்குச் சிறந்ததோர் காட்டாகும். அமானுஷ்ய நிகழ்வியவாதம் ஓய்ந்தவுடன், அழிந்த பிறகு, ஹைடேக்கருடைய பொருள் கொள்ளுதல் முக்கியத்துவம் பெற்றது. நிகழ்வியத்தில் மனிதன், பொருள் தரும் (அர்த்தமுள்ள) தன்னிலையாகக் கருதப்பட்டான். ஆகவேதான் பொருள் தருவதில், அர்த்தம் உருவாக்கிக் கொடுப்பதில் தன்னிலைக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் ‘பொருள் கொள்ளுதல் பகுப்பாய்வு’ பொருளை மட்டுமே, அர்த்தத்தை மட்டுமே வலி யுறுத்துகிறது. அதன் தளமோ சமூக - வரலாற்று கலாசார நடைமுறைகளிலும் பிரதிகளிலும் இருந் தது. அதாவது வெறும் பொருள்தரும் தன்னிலை என்ற அளவுக்குச் சுருக்கிவிடாத பரந்த சமூகத் தளம்.

மேற்சொன்ன ஒவ்வொரு முறையியல் அணுகுமுறையினின்றும் பூக்கோவின் படைப்பு வித்தியாசப்படுத்திப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிகழ்வியம் பொருளை, அர்த்தத்தை தேடிப் போகாது, சுயாட்சித் தன்னிலையின் செயல்பாடே பொருள் தருவதுதான் என்கின்ற எண்ணத்துக்கே இடமில்லை. ‘பொருள் கொள் ளுதல்’ முறைக்கோ உள்ளார்ந்த உண்மை ஒன் றுண்டு. அதை மீட்டே ஆக வேண்டும் என்ப தில்லை. அமைப்பியலிலோ பொருளும் தன் னிலையும் சிதறிக் கிடக்கின்றன, மையமற்றிருக் கின்றன. ஆனால் மனித குணமே இப்படித்தான் என்று கட்டமைக்கவும் முனைப்பு கொள்ளாது.

விவாதங்கள் : 1. மார்க்சியத்தின் இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும் ஒவ்வாமை உள்ளது. இக்கருத்தாக்கத்தில் பொருள் முதல் வாதத்திற்கும் இயங்கியல் பொருள் முதல்வாதத்திற்கும் எந்த ஓர் இடமும் மிச்சமிருக்கவில்லை. மார்க்சியம் முழுவதுமே வரலாற்றுப் பொருள்முதல்வாத மாக்கப்படுகிறது. சமூக ஜனநாயகவாதிகளின் பொருள் முதல்வாத மறுப்பையும் தேசீய மறுப்பையும் பிரெஞ்ச மார்க்சிய விவாதத்தில் அரங்கேறின. 2. பிரெஞ்சு நாத்திகர்கள், பகுத்தறி வாளர்கள், பொருள்முதல்வாதிகள் ஆகியோரின் கருத்துக்கள் மார்க்சியர்களால் விவாதிக்கப் பட்டன. 3. 1955-இல் மிர்லுபொன்ட்டி. ‘இயங்கி யலின் சாசங்கள்’ என்னும் நூலில் சார்த்தரின் தத்துவத்தையும், அரசியலையும் விமர்சனம் செய் தும் ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரது படைப்பில் விஞ்ஞானவாதம், இயல்புவாதம், யதார்த்தவாதம் ஆகியவைதான் மேலோங்கி நிற்கின்றனவேயன்றி இயங்கியல் தத்துவம் இல்லை என்றார். 4. 1960 களில் மார்க்சியத்தை சார்த்தரிடமிருந்தும் அல் தூசரிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்துக் கட்சிக்கும் பிரெஞ்சு மார்க்சியருக்குமிடையில் விவாதம் நடந்தன. 5. 1965-66இல் அல்தூசரின் ‘மார்க்சியமும் - மனித மையவாதமும்’ கட்டுரை மீதான கடுமையான விவாதங்கள் நடந்தன. மார்க்சியத் தத்துவம் கோட் பாட்டு நடைமுறை குறித்த கொள்கையுடையது. 6. இருத்தலியலாளருக்கும் மார்க்சியருக்கும் விவாதம் நடந்தது.

1960-களுக்குப் பிறகு அமைப்பியலாள ருக்கும் மார்க்சியருக்குமான விவாதம் நடந்தது. மார்க்சியத்தில் மனிதமையவாதம் உண்டு என அமைப்பியலாளர் குற்றம் சுமத்தினர். 7. நேர்க் காட்சி வாத முறையியலிலிருந்தும் இருத்தலியத் தின் தனிமனித உளவியல் சார்ந்த விளக்கங்களி லிருந்தும் தமது துறைகளை விடுவித்து கறாரான அறிவியல் தளத்திற்குக் கொண்டுசெல்வதை அமைப்பியலாளர் நோக்கமாகக் கொண்டி ருந்தனர். 8. மார்க்சியத்திற்கு உள்ளும் புறமும் இருத்தலியமும் அமைப்பிய வாதமும் விவாத மேற்றனர். இருத்தலியலாளர்களுக்கும் அமைப் பியலாளருக்குமான காரசாரமான விவாதம் குறிப்பிடத்தக்கது. மொழியியல், மானுடவியல், தொன்மவியல் போன்ற வளர்ச்சிபெற்ற துறை சார்ந்த சமூகவியலாளருக்கும் விவாதம் பல தெளிவுகளை ஏற்படுத்திற்று. அமைப்பியலாளருக் கும் அல்தூசருக்குமான ஒற்றுமையை பிரெஞ்சு மார்க்சியர் மறுப்பர், விவாதித்தனர். 9. 1974-இல் ‘நூவெல்கிரிடிக்’ பத்திரிகை வரலாறும் மானுட வியல் விஞ்ஞானங்களும் என்ற தலைப்பில் விவாதங்களைத் தொடர்ந்தது. அமைப்பியலாளர் வரலாறு இல்லாத அமைப்புகளைப் பற்றிப் பேசினர்; நேர்க்காட்சியாளரும் இருத்தலியரும் அமைப்புகளற்ற வரலாற்றைப் பற்றிப் பேசினர். மார்க்சியம் அமைப்புகளையோ வரலாற்றையோ மறுப்பதில்லை. 10. பூக்கோவின் சொற்களும் பொருட்களும் ஆர்டர்ஆப் திங்க்ஸ் நூலுக்கான விவாதங்களை பான்சே, நூவல் கிரிடிக் பத்திரி கைகள் நடத்தின.

பிரெஞ்சு இடதுசாரிகள் : ஜுல்ஸ் - டி - கால் டியர் - பிரெஞ்சு தத்துவவாதி; சார்த்தர் - பின்னா ளில் மார்க்சியர்; ஆந்திரே கோர்ஸ் - ஆஸ்த்ரிய பிரெஞ்சு சமூக தத்துவவாதி; பால் நிஸான் - கட்சி யின் தீவிர கொள்கைவாதி; அல்தூசர் - மார்க் சியத்திற்குச் செழுமை சேர்த்தவர்; லூசியன் சேவ் - பிரெஞ்சு தத்துவவாதி, கட்சியின் மத்தியகுழு உறுப்பினர். டிபோர்டு - ‘பொதுக் காட்சியின் சமூகம்’ என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை முன்வைத்த மார்க்சியர்; பென்னிலெவி - பிரெஞ்சு மார்க்சியர்; பிரெஞ்சு முன்னணி தத்துவவாதி களான கங்குயிலெம், சார்த்தர், பூக்கோ, அல் தூசர், டெல்யூஸ், தெரிதா ஆகியோர் முக்கிய மானவர். அனுபவம், உணர்வு, தன்னிலை சார்ந்த தத்துவ மேதைகளான சார்த்தர், மிர்லு - பொன்டி மற்றும் அறிவு, ஞானம், கருத்தாக்கம் சார்ந்த தத்துவவாதிகளான கவேய்லெஸ், பேச்சலர்டு, கங்குயிலெம் புகழ்பெற்றவர்களாவர். கங்குயிலெம் என்ற அறிவுத் தோற்ற ஞானியின் ‘இயல்பானதும் நோய் ஆய்வும்’ என்ற புகழ்பெற்ற நூலைப் படித்துப் புரிந்துகொள்ளாமல் அல்தூசர் மற்றும் அல்தூசரிய விவாதங்களை, 1968 பிரெஞ்சு மார்க்சியருக்குள் நடந்த விவாதங்களைப் புரிந்து கொள்ள முடியாது.

* ஆங்கிலம் பேசும் உலகில் பூக்கோ ஒரு பின் அமைப்பியவாதியாகக் கருதப்படுகிறார்; அவ ருடைய கருத்துக்களை தெரிதா, லகான் இவர் களுடைய பார்வையினடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தனர். பின் அமைப்பியவாதச் சூழலில் பூக் கோவை வைத்துப் பார்ப்பதற்குப் பல காரணங் களிலிருந்தாலும், மார்க்சிய மரபின் தொடர்ச்சி யாகவும், மார்க்சிய தளத்தை விட்டு விலகியவரா கவும் அவரைப் புரிந்துகொள்ள முடியும். மேற் கத்திய மார்க்சியத்தின் சுயசிந்தனையாளராகவும் அரசியல் பொறுப்புணர்வுடன் ‘ஒழுங்குபடுத்து தலும் தண்டனையும்’, ‘பாலியல் வரலாறு’ என்ற நூல்களை மே 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சி யின் புதிய இடதுசாரி விமர்சனமாக எவருக்கும் இதுவரை வாய்க்காத பார்வையைப் படைத்தார். மரபான முதலாளித்துவம் குறித்த விமர்சனமும் தொழிலாளி வர்க்கத்தின் காத்திரமான பங்கு பற்றியும் அவற்றில் சொல்லப்பட்டிருக்காது முதல் உலகப் போரிலிருந்து உள்நாட்டுப் போர் வரைக்குமான வரலாற்று நிகழ்வுகளுக்குக் கோட் பாட்டு விமர்சனத்தை முன்வைக்கும் வேகத்தில் எழுந்த மேற்கத்திய மார்க்சியம் சந்தித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 1960களின் வரலாற்று எழுச்சிக்கு சரியான மதிப்பீடுகளைச் சொல்ல முடியாமல் முரண்பட்ட நிலையில், கண்முன் நடக்கும் சமூக மாற்றங்களுக்குக் கோட்பாட்டு வரையறைகளை வைக்கமுடியாத, குழம்பிப்போன மேற்கத்திய அறிவாளிகளுக்கு பூக்கோ சொன்ன கருத்தாக்கங்களும், கொள்கைபூர்வ விமர்சனத் தெளிவும் பெரிதும் கைகொடுத்தது.

லெனினியம் மற்றும் இரண்டாம் அகிலத்தின் சமூக ஜனநாயகத்திற்குக் கோட்பாட்டு விளக்க மளிக்க வந்த பின்யுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவ ரான மிர்லு - பொன்டி சொன்ன சொல்தான் ‘மேற்கத்திய மார்க்சியம்’ என்ற கருத்தாக்கம் ஆகும்.

மூலகர்த்தாக்கள் லூகாஸும் கிராம்சியும், ஆனால் கோட்பாட்டுத் தளத்தில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் பள்ளி மார்க்சியரும் பிரான்சின் இருத்தலிய மார்க்சியருமே இரண்டாம் உலகப் போருக்குப் பின்வந்த சிந்தனையாளர்கள். விரிந்த தளத்தில் சொல்வோமானால் உளவிய பகுப்பாய் வும் இருத்தலிய வாதமும் முன்வைக்கும் கருத் தாக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மார்க்சிய நிலைப்பாட்டினை எதிர்த்து மார்க்சிய கோட் பாட்டின்படி ‘தன்னிலை’க்கு மனிதவாதத்திற்கு ஒரு வரையறை இடத்தைக் கொடுக்க எழுந்ததே மேற்கத்திய மார்க்சியம். ஹெகலிய வேர்களி லிருந்து கிளம்பிய மார்க்சிய இயங்கியலின் அறிவுத்தோற்ற பிரச்சினைகளுக்கு ஹெகலியத்தை மறுஆய்வு செய்வதன் மூலம் தீர்வாக ஒரு விளக் கத்தை வைத்தனர். இயங்கியல் சிந்தனையை அதிகம் சூக்குமமாக அனுபுதவியலாகப் பார்ப் பதைத் தடுத்து நிறுத்திய பார்க்ஸின் வழி மேற் கத்திய மார்க்ஸியர் அபௌதிகவாதப் பார் வையை முழுதும் விரட்டியடித்தனர். இறுதியாக விமர்சனக் கோட்பாட்டின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சாதனங்கள் மீதிருந்த பார்வையை அன்றாட வாழ்க்கையின், கலாசாரத்தின் பிரச் சினைகளைக் குறித்துத் திருப்பிவிட்டனர்.

ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு கேள்வி அவர் களை வாட்டியது.

மார்க்சிய விவாத வரைபடம்

1.    பிரெஞ்சு பொருள்முதல்வாதம் + ஜெர்மன் தத்துவமும் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரமும் பிரெஞ்சு சோசலிசமும் = மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உட்கூறுகளும்.

2. உளவியலில் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று சமூகவியல் அணுகுமுறை = ஜார்ஜ் பொலிட்சர் உருவாக்கினார்.

3. இருத்தலியம் X மார்க்சியம்

சார்த்தர்

மனிதமையவாதம் பிரெஞ்சு சமூக ஜனநாயகக் கட்சியினர் பொருள்முதல்வாத மறுப்பு, தேசீய மறுப்பு   X மார்க்சியம் பிரெஞ்சு மார்க்சியர்

4.    மிர்லு - பொன்ட்டியின் இயங்கியல் சாக சங்கள்    X சார்த்தர், மார்க்சியம் இயங்கியல் பொருள் முதல் வாதம்

5.    மிர்லு பொன்டியும் சார்த்தரும் இயற்கையின் இயங்கியல் X மார்க்சியம் இயங்கியல் பொருள் முதல்வாதம், சமூகத்தின் இயங்கியல்

6.    அமைப்பிய ஆய்வுமுறை மனிதமைய வாதத் திற்கும் தன்னிலைவாதத்திற்கும் எதிரானது X நிகழ் வியத்தை அப்புறப்படுத்திவிட்டு வளர்ச்சி யடைந்த பல அறிவுபூர்வமான சிந்தனைகளுக்கு வழிவிட்டது.

7.    அமானுஷ்ய நிகழ்வியம் தகர்ந்ததும்    X ஹைடேக்கரின் பொருள் கொள்ளுதல் கருத்தாக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

8.    நிகழ்வியம், பொருள் கொள்ளுதல், அமைப்பிய வாதம் இவை எவற்றினின்றும் வேறுபட்டவர் பூக்கோ.

தாங்கள் மார்க்சியரா? அல்லது வெறும் அறி வாளிகள் தாமா? பொதுப்படையில் மார்க்சிய அரசியல் தாபன வேலைகளில் அவர்களுடைய தலையீடு என்பது அப்போதைக்கப்போது அல் லது இல்லையென்றே சொல்லலாம். கோட் பாட்டுத் தளத்தில் சொல்வதென்றால் அவர்கள் மார்க்சியர் என்று கொள்ள முடியாது. செவ்விய மார்க்சியம் முன்வைக்கும் உற்பத்திமுறை என்ற கருத்தாக்கத்திற்கும் இவர்கள் முன்வைக்கும் கலாசார கருத்தாக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை. அல்லது அரசியல் பொருளாதார விமர்சனம் ஒன்றையே கொண்ட மார்க்சிய கோட்பாடு களைத் திருத்த முயன்ற பக்காத் திருத்தல் வாதிகளே. அரசியல் சூழலில் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துவதென்பது கடினம், அதிலும் மேற்கத்திய மார்க்சியர் வர்க்கப் போராட்டத்தில் பங்கெடுத்ததே இல்லை. 1968 மே பாரீஸ் நிகழ்வுகள் எல்லாவற்றையும் மாற்றின. ஏனெனில் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு வெளியிலிருந்து உருவான இந்த இயக்கத்திலிருந்துதான் புதிய விமர்சனக் கோட்பாட்டுத்தளம் கிடைத்தது. இந்தக் கூடிவருதலில் தான் மேற்கத்திய மார்க்சியர் வேகவேகமாக மார்க்சியத்துடனான தங்களது உறவைத் தகவமைத்துக்கொண்டனர்.

1968 மே நிகழ்வுகள் வரைக்கும் பூக்கோவின் அறிவுபூர்வ செயல்பாடு என்பது மேற்கத்திய மார்க்சியத்தோடு ஒட்டாமலிருந்தது. பிராங்க் பர்ட் பள்ளி என்று ஒன்று இருப்பதாகக்கூட பல்கலைக்கழக ஆசிரியர்கள் பூக்கோவுக்குச் சொன்னதில்லையாம். தெரிந்திருந்தால் இப் போது வடிவமைத்திருக்கும் கோட்பாடுகளும் கருத்தாக்கங்களுக்குமான சிந்தனை வீச்சுக்கு ஆதரவும் பலமும் கிடைத்திருக்குமென்று பூக்கோ குற்றம் சாட்டினார்.

பூக்கோவுக்கும் பிரெஞ்சு மேற்கத்திய மார்க்சியருக்குமான உறவு என்பது சற்று சிக்க லானது. மிர்லு - பொன்டி மற்றும் சார்த்தரையும் விட இளையவரான பூக்கோவும் பின்யுத்த காலத்தெழுந்த ஹெகலிய மீட்டுருவாக்கத்தில், அவர்களைப் போலவே அதிகம் ஈடுபாடு கொண் டார்; ஏனெனில் மிகச்சிறந்த ஹெகலிய ஆய் வாளரான ஜீன் ஹிப்போலைட்டுடன் பூக்கோவும் ஒன்றாகப் பயின்றார். ஜெர்மன் இருத்தலிய வாதத்தால் அதிகம் பூக்கோவும், அவர்களைப் போலவே கவரப்பட்டார். பூக்கோவினுடைய புகழ்பெற்ற ‘பைத்தியமும் நாகரிகமும்’ என்ற நூலே சார்த்தார். மிர்லு - பொன்டியினுடைய விஞ்ஞான எதிர்ப்பு போன்ற பார்வையுடைய மேற்கத்திய பகுத்தறிவுக்கு விமர்சனமாகப் படைக்கப்பட்டிருந்தது; ‘சித்தசுவாதீனமும் உள வியலும்’ என்ற நூல் ஹைடேக்கரின் தாக்கத்திற்கு ஆள்பட்ட லுத்விக் பின்ஸ்வாங்கர் என்ற உளவியல் வல்லுநர்க்கென்று எழுதப்பட்டது. கடைசியாக இருத்தலிய மார்க்சியரைப் போல பூக்கோவும் பின்யுத்த காலகட்டத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். இருந்தாலும் 1960களிலேயே, சார்த்தர் மிகவும் எதிர்த்த அமைப்பியல் வாத சிந்தனையோட்டத்தில் பூக்கோவும் கரைந்தார். இப்படியாக 1960கள் வரைக்குமான பூக்கோவின் அறிவுப் பயணம் இருத்தலிய மார்க்சியருக்கு இணையாக இருந்தது.

அந்தப் புள்ளியிலிருந்துதான் சார்த்தரிட மிருந்து அறிவார்த்தமாக வேறுபடுகிறார். மனித வாதம் மற்றும் உணர்வு குறித்த அனைத்து தத்து வார்த்தங்களிலிருந்தும், சார்த்தரிய இருத்தலிய மார்க்சியம் உள்பட, வேறுபட்டு எதிரும் புதிரு மான நிலைப்பாட்டை எடுக்கிறார் பூக்கோ. சார்த் தரின் ‘தன்னிலை’ குறித்த கோட்பாடுகளை எதிர்த்துதான் பூக்கோ போராடினார். இது முற்றிலும் உண்மை. இருந்தும் சார்த்தருக்கும் பூக்கோவுக்குமான சில ஒற்றுமைகளைச் சொல்ல முடியும். புதிய அமைப்பியவாத கருத்தோட் டத்தை வன்மையாக எதிர்த்தவர் மறுத்தவர் சார்த்தர் என்று பாரீஸ் நகர அறிவுஜீவிகளுக்கு தெரிந்திருந்த போதிலும் சார்த்தரும் அமைப்பிய வாதிகளும் மேற்கத்திய அனுபூதவிய மரபுக்கு எதிரானவர்கள், மறுத்தவர்கள் என்று பறை சாற்றிக் கொண்டனர். அறிவார்ந்த தன்னிலையின் கார்பீசிய கருத்தாக்கமான அறிவுத் தோற்ற மாகவும் யதார்த்த இருப்பியலாகவும் தன்னிலை யைப் பார்ப்பதை எதிர்த்தவர் சார்த்தார். ‘தன்னிலை’யை கருத்துமுதல்வாதப் பார்வையில் சார்த்தர் பார்க்கிறார் என்று அமைப்பியவாதிகள் குற்றம் சுமத்தியது உண்மையென்றாலும் “இயங் கியல் பகுத்தறிவு குறித்த விமர்சனம்” என்ற நூலில் கார்பீசிய பகுத்தறிவின் தளத்தை மறுக்கும் சார்த் தரின் உள்நோக்கமும் அதே அறிவுபூர்வ தளத்தில் பூக்கோவும் சிந்தித்தார் என்பதும் உண்மை. பூக்கோவும் அமைப்பியல்வாதிகளும் சேர்ந்தே சார்த்தரின் இந்த வெற்றியை மறுத்தனர். அமைப் பியல்வாதத்தின் பரபரப்பு அடங்கிப்போன 1970 களில் பூக்கோ ‘தன்னிலை’ குறித்து மீளாய்வு செய்கிறார். ‘இயக்க மறுப்பு’ பார்வைக்குப் போய் விடக்கூடிய அபாயம் இருந்தாலும், விமர்சனக் கோட்பாட்டிற்கு ‘தன்னிலை’ குறித்த கேள்வியைப் புறக்கணிக்க முடியாது. தன்னிலை குறித்த நிலைப் பாட்டைச் சொல்லியே ஆகவேண்டும். தன்னிலை அல்லது சப்ஜக்ட்ஸ் குறித்த சில கோட்பாட்டை யாவது வைத்துக் கொள்ளாமல் ‘அதிகாரத்தை’ எதிர்க்க முடியாது. பூக்கோ எதை மறுக்கிறார் என் றால், ‘தன்னிலை’ சாசுவதமானது, என்றென்றும் மாறாதது என்று கருதிக் கொள்வதைத் தான் எதிர்க்கிறார். சார்த்தருடைய படைப்பில் இது மாதிரியான கருத்தோட்டம் நிலவுவதாக பூக்கோ குற்றம் சாட்டுகிறார்.

1960களில் மனிதமையவாதம் மற்றும் உணர் வின், பிரக்ஞையின் தத்துவார்த்தங்களை முற்றாக, அவை எந்த வடிவத்திலிருந்தாலும் பூக்கோ ஒதுக்கித் தள்ளினார். வெளிப்படையாகவே மேற்கத்திய மார்க்சியரை குறிப்பாக சார்த்தரை எதிர்த்துத் தாக்கினார். ‘மனிதன் செத்துவிட் டான்’ என்று பூக்கோ முழங்கும்போதே சார்த் தரையும் சேர்த்த மனிதவாதிகளைத்தான் குறிப் பிட்டார்; சார்த்தரை ஒரு பொருட்டாகவே கருத வில்லை. 1968க்குப் பிறகு பூக்கோவின் மேற்கத்திய மார்க்சியம் குறிப்பாக சார்த்தரின் மீதான இந்தக் காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு எல்லாம் மாற்றமடை கிறது. அவர்களுடைய நிலைப்பாட்டின் முக்கியத் துவத்தை உணர்ந்த பூக்கோதான் வேறெவரையும் விட பாரீஸ் அறிவுலகத்திற்கு அரசியல் இயக் கங்களுக்கு சார்த்தரின் நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லி முன்னெடுத்துச் சென்றவர்.

1970களில் சார்த்தர்தான் 20-ஆம் நூற் றாண்டின் வால்டேர். சிறந்த சிந்தனையாளர்; பன் முக அறிவுத் திறனாளி. வேறெந்தக் கட்சியும் தாபனமுமில்லாமலேயே தனியாளாக நின்று ஆட்சியாளரையும் நிறுவனங்களையும் எதிர்த்து ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக வீதியிறங்கிப் போராடியவர்.

வால்டேரைப் போல சார்த்தருக்கும் வெகு ஜனப் பாராட்டும் புகழும் கிடைத்தது; நிறு வனங்களின் அதிகாரிகளின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானார். பூக்கோ இது மாதிரியான பேரும் புகழும் பெற்றதில்லை. ஆனால் ஆரம்ப எழுபதுகளில் பல போராட்ட இயக்கங்களை உருவாக்கியிருக்கிறார்; முன்னணி அரசியல் பத்திரிகைகளில் வீரஉரை எழுதி யிருக்கிறார். சிறை சீரமைப்பு, மனநோய் எதிர்ப்பு இயக்கம், பெண் விடுதலை, ஈரானிய ஷா சர்வாதிகாரியாட்சியைத் தூக்கியெறிந்த புரட்சி இயக்கம் போன்றவற்றுக்குப் பெரும்பங்கும் பேராதரவும் நல்கியிருக்கிறார். இந்த வருடங்களில் தான் பூக்கோவின் அறிவுத் தீவிரத்திற்குப் பேரும் புகழும் கிட்டியது; இடதுசாரி அரசியலில் பூக்கோ பங்கெடுத்தார். பாரம்பரிய அறிவுஜீவிகளின் பங்குப் பணிபற்றியும் அறிவுத் திறமை பற்றியும் காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தார்.

பூக்கோவைப் புரிந்துகொள்ளாமல், 1970 களில் புதிய அரசியல் பிரவேசத்தினடிப்படையில் சார்த்தரை விமர்சித்துப் பத்திரிகைகளிலும் நேர் காணலிலும் அவர் புகழ்ந்து பேசியதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அறுபதுகளின் இறுதியில் சார்த்தருக்கும் பூக்கோவுக்குமான நட்பும் தோழமையுணர்வும் ------- படைப்புகள் குறித்து ஒருவரையொருவர் பாராட்டிக் கொண் டனர். ஆனால் லெவிஸ்ட்ராஸ் மீதான குற்றச் சாட்டை சார்த்தர் மீண்டும் கையிலெடுத்தார் : எப்படி ஒரே கால கட்ட அறிவுகள் மற்றவைகளால் புறந்தள்ளப்படுகின்றன; கடந்துபோகப்படு கின்றன? போன்ற வரலாறு குறித்த கேள்விக் கணைகளை பூக்கோ புறக்கணித்தார். சில மாதங்களுக்கு முன்னர் அதே பத்திரிகையில் “அறிவுலக அரங்கில் ஒரு பேரான்மா கடந்து போனதைப் போல் சார்த்தரும், மிர்லு - பொன் டியும் வீரமிக்க துணிச்சலான மனிதவாதிகள், முடிந்துபோன முந்தைய சகாப்தத்தைச் சேர்ந் தவர்கள்” என்று எழுதினார். அதே பத்திரிகையில் மே நிகழ்வுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு மார்ச் 68-இல் “ஹெகல் முதல் சார்த்தர் வரைக்கு மான தத்துவத்தில் மொத்தப்படுத்தும் உறுதிமிக்க துணிச்சலை, விலைபோகாத கடைச்சரக்கென்று கைவிட்டார் பூக்கோ.

மேலும் பெருந்தன்மையான பெருமிதத்தில், “சார்த்தருடைய உறுதியான ஆழமான மனிதகுலப் படைப்பு ஒரு யுகத்தையே ஆட்டிப்படைத்திருக் கிறது; வரையறை செய்து காட்டியிருக்கிறது. வேறெந்தப் படைப்பையும் சார்த்தரோடு ஒப்பீடு செய்யவோ ஏன், முரண்பட்டது என்றுகூட - வரலாற்று முறையியலாக நான் முன்வைத்த ஆய் வேடுமே சிறிய படைப்புத்தான்” என்று சிலாகித்து எழுதினார் பூக்கோ. இருந்தாலும் அறிவார்ந்த சந்ததி இடைவெளியை 1970களில் ‘விடுதலை’ பத்திரிகையில் இருவரும் சேர்ந்தெழுதி வேலை பார்த்ததன் மூலம் தவிர்த்தனர்.

சார்த்தர் மற்றும் மேலை மார்க்சியத்தின் மீதான பூக்கோவின் அணுகுமுறை 1968க்குப் பிறகு மாறுதலடைந்தது. இனிமேலும் தத்துவார்த்த எதிரியாக சார்த்தரைப் பார்க்கவேண்டியதில்லை; இருவரும் ஒத்துப் போகும், சந்திக்கும் புள்ளிகளை இப்போது பூக்கோ கண்டுபிடித்துவிட்டார். “பிரெஞ்சு வெகுஜன அறிவுபூர்வ அரசியல் உணர்வுமட்டங்களை உயர்த்தியதில் சார்த்தரின் பங்கு மகத்தானது” என்று நேர்காணலில் பூக்கோ: “யுத்தத்திற்குப் பின்வந்த காலகட்டத்தில்... கல்விப் புலத்திலிருந்து ஆழமான கருத்தோட்டங்கள் உருவானதை நாம் பார்க்கிறோம்... வெறும் பல் கலைக்கழகத்தைக் காட்டிலும் அதிகம் வெகுஜன விரிந்த தளத்தில் பேசப்பட்டன. இப்போது சார்த்தரைப் போன்ற ஆளுமை கொண்டவ ரில்லையென்றாலும் இளைய தலைமுறையையே உலுக்கிய நிகழ்வு ஜனநாயகப்படுத்தப்பட்ட தாயிற்று. சார்த்தரால் மட்டுமே - சார்த்தரும், மிர்லு - பொன்டியும் - வெகுஜன கலாசார மட்டம் இப்போது வெகுவாக உயர்ந்திருக்கிறது - இதை சாதிக்க முடியும்.”

சார்த்தரை ஒரு இடதுசாரி சித்தாந்தியாகவே பூக்கோ அடையாளப்படுத்துகிறார் : “பிரான்சில் இடதுசாரிகள் இருந்திருந்தால்... இடதுசாரி சிந்தனையின் மிக முக்கியமான இயல்பே அரசியல் விமர்சனம் பங்கெடுப்பு. அதிலும் 1968 நிகழ்வு கட்சிகளுக்கு வெளியே நடந்திருக்கிறது; ஏனெ னில், உதாரணமாக அல்ஜீரிய யுத்தம், முழுக்க அறிவுலக வாழ்க்கையால் நடந்ததாகும்... அசா தாரணமான காத்திரமான இடதுசாரி சிந்தனை.” பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி ஆதரித்த அல்ஜீரிய யுத்தத்தை சார்த்தரும், பிரான்சிஸ் ஜென்சனும் கடுமையாக எதிர்த்து பத்திரிகையில் பிரச்சாரம் செய்ததை பூக்கோ குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கு வெளியில் இடதுசாரி விமர்சனத்தை உருவாக்கிய இருத்தலிய மார்க்சியரின் பங் களிப்பைப் பாராட்டி பூக்கோ பிரச்சாரம் செய் தார். சார்த்தரிய சித்தாந்தத்தில் நீட்ஷேயின் தாக்கம், செல்வாக்கு அதிகம் இருப்பதைப் பெரு மிதத்துடன் : “சார்த்தர் எழுதிய முதல் நூலே நீட் ஷேய பாணியிலமைந்ததே. ‘உண்மையின் வரலாறு’ என்ற ஆய்வுக் கட்டுரை 1925-இல் (பூக் கோவுக்கு) வந்த அதே பிரச்சினை சார்த்தருக்கும் -உ ண்மையின் வரலாற்றைத் தேடப் போனவர் நிகழ்வியத்திற்கு நகர்ந்ததும் புதிராக இருந்தது. பின்னால் நம்முடைய காலகட்டத்தில் நிகழ்வியத் திலிருந்து உண்மையின் வரலாற்றுக்கு நகர்ந்தது தான் நிஜம்.”

‘சார்த்தரும் நானும் நீட்ஷேயின் குழந்தைகள். மற்றபடி சார்த்தர் இந்த மரபிலிருந்து விலகி யிருந்தார் என்ற ஒரு வித்தியாசம் மட்டுமே’ என்று பூக்கோ இருவருக்குமுள்ள வித்தியாசங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டே சார்த்தரை சக தோழனாகக் கொண்டாடுகிறார். * ((* ‘வரலாற்றில் அறிவு’ குறித்து பூக்கோவும் சார்த்தரும் கட்டுரை))

மே 1968க்குப் பிறகு பூக்கோவின் சிந்தனைப் போக்கே கருத்துக்களைத் தெளிவுபடுத்த வேண் டியே மாற்றியமைத்துக் கொள்கிறார். விளைவு, படைப்பின் தொனியே மாறுதலடைகிறது; கோட்பாட்டுருவாக்கத்தையே மாற்றியமைத்துக் கொள்கிறார். மேலை மார்க்சியத்திலுள்ள மையப் பிரச்சினையை கையிலெடுத்துக்கொண்ட பூக்கோ உண்மையிலேயே ஒரு மார்க்சியரைப்போல் அலசி ஆராய்ந்து அதையும் தாண்டி ஒரு புதிய விமர்சன கோட்பாட்டாக்கத்திற்கான முறைமைகளையே வடிவமைத்துவிட்டார். சுருக்கமாகச் சொன்னால் மேலை மார்க்சிய பிரச்சினைப்பாடுகளை விமர் சிக்க வந்த பூக்கோ ஒரு புதிய ஆய்வு மட்டத்துக்கு சிந்தனைத் தளத்துக்கு மேலை மார்க்சியத்தை உயர்த்தினார்.

மே 1968க்குப் பிறகு

மே 68 நிகழ்வுகள், சமகால மார்க்சிய வழி காட்டுதலின்றியே நடப்பு சமூக அமைப்பு முறையை மாற்றும்முகமாக அரசதிகாரத்தை எதிர்த்து ஒரு உறுதியான அரசியல் போராட் டத்தை நடத்த முடியும் என்பதைக் காட்டின. தொழிலாளி வர்க்கமல்லாத பிற குழுக்கள் - புதிய ஜனநாயக குழுக்கள் இந்தப் போராட்டத்தில் உக்கிரமாகப் பங்கெடுத்தன மார்க்சிய தாபனத் திற்குத் தொடர்பில்லாத இளம் தொழிலாளர்கள், மாணவப் பேரியக்கம், தொழில் நுட்ப வல்லுநர் கள் என்று பலதரப்பட்ட புதிய இளைஞர்கள், வாலிபர்கள் வீதியிறங்கிப் போராடினர்.

நிறுவன அமைப்புகளின் ஆட்சியதிகாரத்தின் பலவீனங்களை லஞ்ச ஊழல்களை கையாலாகாத் தனத்தை பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டியதால்; மொத்த அதிகார அமைப்புமே ஆட்டம் கண்டது. புதிய போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய தாபன திட்டமிட்டபடி வீதிகளில் தாக்குதல்களை நடத்தினர். நியாயமான ஜனநாயகப் போராட்டங்களாக வடிவமைத்து ஆனால் உறுதியுடன் ஒரே சமயத்தில் கலகங்கள் முடுக்கிவிடப்பட்டன. இறுதியாக பின்மார்க்சிய சமூகத்திற்குரிய விமர்சனக் கோரிக்கைப் பட்டி யலைத் தயாரித்து தெருவெங்கும் ஒட்டினர். முதலாளித்துவத்திற்கு எதிரான கோஷங்கள், சித்தாந்தங்கள் அராஜகத்துக்கு எதிரான கலகக் குரல், ஜனநாயகத் தன்மையற்ற சமூக அமைப்பு களைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பப்பட்டன. சுரண்டலை எதிர்த்தும் அதிகம் குறிப்பாக அதிகம் அந்நியமாதலை எதிர்த்தும் புரட்சி வெடித்தது. தொழிற்சாலைகளைக் குறி வைத்தும் அன்றாட வாழ்க்கையின் பல நிறுவனங்களை அதிகம் வளைத்தும் போராட்டம் நடந்தது.

பாரம்பரிய புரட்சிப் போராட்டங்களிலிருந்து மே 1968 போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக அமைந்து விட்டதாகப் பல இடதுசாரி அறிஞர்கள் கருதினர். புதிய தலை முறை, புதிய சமுதாயம் உருவானது. புதிய விமர்சனக் கோட்பாடு பிறந்தது. பெண் விடுதலை, சிறை சீரமைப்பு, சூழலிய இயக்கம், அணுசக்தி எதிர்ப்பியக்கம், பல்வேறு ஆலைக்கழிவு எதிர்ப் பியக்கங்கள், மாற்றுத் திறனாளிகள் இயக்கம் என்று புதியபுதிய போராட்டக்குழுக்கள் இணைந்து புரட்சி செய்தன. சீன கலாச்சாரப் புரட்சிக்கு இணையாக மே-68 மற்றும் 70களின் பேரணி பேசப்பட்டது. பாட்டாளி, தொழிலாளி வர்க்கப் புரட்சிக்குள் மேற்படி போராட்ட இயக்கங்களை உள்ளிழுக்கும் வழிவகை தெரியா மலிருந்ததை அரசியல் தேக்கத்தை பூக்கோ, டெலூஸ், கட்டாரி, கா1டோரியடிஸ், லிபோ, லியோதார்த், போத்ரலார்த், மோரின், லெஃப்ரே, போன்றோர் புதிய நிகழ்வை நுணுக்கமாக வேகவேகமாக ஆராய்ந்து ஓர் புதிய கோட் பாட்டை அமைத்துக் கொடுத்தனர்.

பூக்கோ ஆதிக்கம் மற்றும் அதிகாரம் போன்ற விஷயங்களை எடுத்துக் கொண்டார்.

1970 பிரெஞ்சு கல்லூரியில் ஆற்றிய உரையில், பகுத்தறிவிற்கும் அதிகாரத்திற்குமான நெருக் கத்தை வலியுறுத்திப் பேசினார் பூக்கோ. உண்மைக்கான வைராக்கியத்தை நிறுவனங்கள் ஆதரவு கொடுக்கின்றன என்றும் அதேபோல் தான் சமூகத்தில் அறிவும் தொழிற்படுகின்றன என்று மொழி மீதான சொல்லாடல் நூலில் வலியுறுத்துகிறார் பூக்கோ. இதையே மேலும் வளர்த்துக் கொண்டே சொல்லாடலின் வம்சா வளியை ஆய்வு செய்தோமானால் அதிகாரத்தின் வடிவங்களாகச் சொல்லாடலைப் புரிந்து கொள்ளமுடியும். சொல்லாடலில் வாதத்தை அழுத்திப் பேசும் அதிகாரம், மறுதலிக்கும் அதி காரமல்ல. சொல்லாடலுக்கான பொருள்கோள் களை நியமிக்கும் அதிகாரமாகும். பகுத்தறிவு ஒடுக்கிய அறிதல்முறைகளை ஆய்வுசெய்த பூக் கோவின் கண்டுபிடிப்பு கடைசியில் செயல்பாடு களை உருவாக்கும், நியமிக்கும் அறிவின் இயக் கத்தையே விளக்கிவிட்டார். அதிகாரம் என்பது ஒதுக்கப்படவேண்டிய, புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றாக இனிமேலும் பார்க்க முடியாது. ஆனால் நேரான உருவாக்கமுடையது அதிகாரம். 1970களில் சிறைகள் மற்றும் பாலியல் குறித்த பூக்கோவின் நூல்கள் இதைத் தாம் சாதித்தன.

இப்போது அதிகாரம் என்பது தீயதுஅல்ல நல்லது என்று வரையறை செய்யப்பட்டாயிற்று. உடனே அறிவையும் செயலையும் சேர்த்தாயிற்று. கொள்கையும் செயல்பாடும் நெருங்கிவரச் செய் தாயிற்று. சொல்லாடலில் வெளிப்படும் அறிவு ஏற்கனவே வரலாற்றிலும் இருக்கிறது. லெவி ஸ்ட்ராஸ்ஸினுடைய உறவின்முறை ஆய்வுக்கு சமூகப் பகுப்பாய்விற்கு, மொழியின் உள்கட்ட மைப்பு குறித்த கண்டுபிடிப்பு அறிவை மாதிரி யாகக் கொள்ளவில்லை. அப்பாவி மொழி எப்படி மாதிரியாகும் என்ற பூக்கோ இந்த இடத்தில் வேறுபடுகிறார். சொல்லாடலாகத் திரண்டிருக் கும் மொழி எப்போதுமே ஒழுக்கத்தின் ஒழுங்கு படுத்துதலின் வடிவமாகச் செயல்படுமே ஒழிய வேறில்லை. மனித குழுக்களை ஒழுங்கமைக்கும் ஒழுக்கமே சொல்லாடைத் தகவமைக்கிறது உண் மைக்கும் அதிகாரத்துக்குமான ஒட்டும் உறவும் அதேபோல் கொள்கைக்கும் செய்கைக்குமான நெருக்கத்தைக் குறித்து மோசமான ஆனால் நுட்பமான வரையறைகளை கோட்பாடுகளை வைக்கத் தெரிந்த பூக்கோ, அமைப்பியலையும் தாண்டிச் சென்று மேற்கத்திய மார்க்சியத்துடன் நேருக்கு நேரான தாக்குதலைத் தொடுக்க முடிந்தது. பூக்கோ வைத்த சவால்களை மேற் கத்திய மார்க்சியரால் பதிலளிப்பதற்குப் புதிய கோட்பாடுகள் தேவைப்பட்டது. அப்போதைய வரலாற்றுக்குள்தான் அப்போதைய அறிவு செல்லுபடியாகும் என்பதை வலியுறுத்த நீட்ஷேயின் கோட்பாடுகளைப் புதுப்பித்து, செதுக்கிப் புதிய பகுப்பாய்வு முறையை, மேற் கத்திய மார்க்சியர் செய்யவேண்டிய வேலையை பூக்கோ பூர்த்தி செய்தார். சார்த்தரும் மார்க்யூசும் ஹெகல் மார்க்ஸ் வடிவத்தில் இந்த ஆய்வை முன்வைத்தனர். ஆனால் பூக்கோவோ, மீண்டும் மீண்டும் நீட்ஷேயை முன் நிறுத்துகிறார். இந்த ஆய்வுமுறையை உருவாக்கியமைப்பதில் சார்த் தருக்கும் பூக்கோவுக்கும் அதிகம் ஒற்றுமையு முண்டு, வித்தியாசமும் உண்டு.

வரலாற்றில் அறிவு

வர்க்க வரலாறுதான் அறிவை உருவாக்கு கிறது, புதுப்பிக்கிறது. கொள்கைவாதியின் நிலைப் பாடும் உலக சித்தாந்தங்களும் வர்க்கத்தால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது மேலை மார்க் சியர் வாதம். பின்னாளைய சார்த்தருக்கோ, சிந்திப்பவனின் சூழலும் இருப்புமே வர்க்கமாகும்; அந்த வர்க்கச் சூழலில் உற்பத்திமுறை தான் மனி தனின் சிந்தனையைத் தூண்டுகிறது, தீர்மானிக் கிறது. ‘வரலாற்றில் அறிவே’ அறிவின் வர லாற்றாய்வாக முன்வைக்கப்படுகிறது. ஹெகல் - மார்க்ஸ் மரபுக்கு லூகாஸ் சிறந்த உதாரணம். அறிவை இருப்பிய அந்தஸ்துக்கு உயர்த்தும் கருத்துமுதல்வாதப் போக்கிற்கு எதிராக வரலாற்றில் அறிவு என்கிற ஆய்வு, யதார்த்தத்தை அறிவுதான் சீர்தூக்கிப் பார்க்கிறது, புரிந்து கொள்ள உதவி செய்கிறது போன்ற அறிவிற்கும் யதார்த்தத்துக்குமான கொடுக்கல் வாங்கல்களை பெரும் வரலாற்றுத்தளத்திற்கு உயர்த்தியது. வர்க்கப் போராட்டத்தினூடே வரலாற்று இயங் கியல் நகர்கிறது. வரலாற்று நாயகனான தொழி லாளி வர்க்கமே, நிலைமறுக்கும் தொழிலாளி வர்க்கத்தின் உலகப் பார்வையே கோட்பாட்டாள ரின் பார்வையாக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் உண்மை விளம்பியாக பேரறிவாளன் ஹெகல் - மார்க்ஸ் ஆய்வுமுறை, அதுவே லூகாஸ் முன் வைக்கும் கொள்கைமுறை, மேற்கத்திய மார்க்சியத் தின் முதல் ஆக்கபூர்வமான படைப்பாகத் திகழ்கிறது.

பிராங்க்பர்ட் பள்ளியாரை கொஞ்ச காலத் திற்கேனும் காப்பாற்றியது எதுவென்றால், பாட் டாளி வர்க்கப் புரட்சிப் பாதையிலிருந்து இயங் கியல் தடம்புரண்டுவிட்டது என்கிற குற்றச் சாட்டை வைக்கத் தெரிந்த இயங்கியல் பார்வை தான். ஹெகல் - மார்க்ஸ் இயங்கியல் ஆய்வி லுள்ள சிக்கல்களை, பிரச்சினைகளை பிராங்க் பர்ட் பள்ளியாரில் வேறெவரையும்விட அடார் னோவின் ‘எதிர் இயங்கியல்’ மற்றும் ‘அறிவுத் தோற்றவியலுக்கு எதிராக’ ஆய்வில் ‘வரலாற்றில் அறிவு’ நோக்கில் தேடலைச் செய்திருப்பதால் இயக்க மறுப்பிய சிந்தனை முற்றாக தவிர்க்கப் பட்டிருக்கிறது.

‘வரலாற்றில் அறிவு’ என்ற சிந்தனையை பூக்கோ ஒதுக்கிவிட்டார் அதைப் பற்றி பேசா மலிருப்பதன் மூலம் ஆதரவு கொடுத்துவிட்டார். ஏனெனில் நீட்ஷேய பரிசோதித்துப் பார்க்கும் முறைப்படி பூக்கோவுக்கு அறிவைப் பொருத்த மட்டில் உண்மை என்ற ஒன்று கிடையாது; அறிவை இருப்பியமாக்கக்கூடிய அறிவுத்தோற்ற தளம் என்று ஒன்று கிடையாது. அறிவின் மூலம் மொத்தத்தையும் கிரகித்துக்கொள்ள முடியாது. அதன் மூலம் உண்மையைத் தரிசிக்க முடியாது. எதையும் மறுக்கும் பூக்கோவினுடைய வாதம் நிகிலிசமல்ல, ஒவ்வொரு அறிவுத்துறையும் ஆதிக் கத்தின் கீழ், அதிகாரத்தின் இரும்புப் பிடிக்குள் தான் அறிவு செயல்படமுடிகிறது என்கிற ஆய்வை முன்வைப்பதே பூக்கோவின் வாதம். சொல்லாடல் - நடைமுறை என்ற இரண்டும் பொருள்கொள்ளும் வட்டத்தினுள் செயல்படுகிறதேயொழிய வர்க்கப் போராட்டம் என்ற ஒற்றை நடைமுறையால் சொல்லாடல் உருவாவதில்லை. இன்னும் போனால் எந்த முன்மாதிரி வடிவமில்லாமலே சொல்லாடலானது நடைமுறையை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் முடியும். பழைய சிறைத் தண்டனை முறையே இப்போது இன்னும் குரூரச் சித்திரவதையாகிப் போனதை சிறை நிர்வாக முறையை மாற்றியமைக்கப்பட்டது. “மூடிய சிறைக்குள் எல்லாவகை உடல் அரசியல்களோடு சிறையின் வரலாற்றை ஆய்வு செய்திருக்கிறேன். ஏன்? வெறும் கடந்தகாலம் குறித்த ஆர்வத்தாலா? இல்லை இல்லை நிகழ்காலச் சூழலிலிருந்து கடந்தகால வரலாற்றை ----பவருக்கு என்பதில் ‘இல்லை’. நிகழ்காலத்தின் வரலாற்றைத்தான் எழுதுகிறேன் என்பவருக்கு என் பதில் ‘ஆம்’ என்கிறார் பூக்கோ. எங்கே ஆதிக்கமானது ஒழுக்கம் மற்றும் சொல்லாடல் வடிவெடுக் கிறதோ அந்த உலகில் சொல்லாடலும் நடை முறையும் ஒழுக்கமாக ஒழுங்கமைக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால் வரலாற்றில் அறி வானது அதிகாரமாக, 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்பெல்லாம் காணப்படாத வகையில் அதிகாரம் செலுத்துகிறது. மனித விஞ்ஞானங் களெல்லாம் அரசியல் செல்வாக்கு பெறும் இன்றைய காலகட்டத்தில், அவையெல்லாம் அறிவை இருப்பிடமாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்கிற வாதத்தை பூக்கோ முன்வைக்கிறார்.

உழைப்பிலிருந்து அன்றாட வாழ்க்கைக்கு

1981 சோசலிச கட்சி பெற்ற அமோக வெற்றிக்குக் காரணமாகயிருந்தவர்களில் பிரெஞ்சு மேற்கத்திய மார்க்சியருள் தன்னையும் சேர்த்துப் பாராட்டிக் கொள்கிறார் பூக்கோ : “சோசலிச கட்சியின் அமோக ஆதரவுக்குக் காரணம், புதிய சிந்தனைக்குப் புதிய பிரச்சினைகள், புதிய கேள்விகளுக்கு அக்கட்சியில் இடமுண்டு என் பதால்தான்... அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை கள், பாலியல் வாழ்க்கை, தம்பதியர் மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை குறிப்பாக சுய மரியாதை விஷயத்தில் அக்கட்சி மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பாடுபடும். இவையனைத்துமே இடதுசாரி சிந்தனைகள்தாம்... இடதுசாரி கட்சியின் அரசியல் வாழ்விலோ, மார்க்சியத்தை அணுகுமுறையிலோ இவை குறித்த கரிசனம் இருக்காது.”

அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை குறித்த விமர்சன கோட்பாட்டை வைத்தவருள் சார்த் தரும் மிர்லு - பொன்டியுமே காரசாரமான விவா தத்தை முன்வைத்தவர்கள். சார்த்தரின் 1960-இல் வெளியான ‘இயங்கியல் அறிவு குறித்த விமர் சனம்’ என்னும் நூலின் மைய விஷயமே அன்றாட வாழ்க்கை ஆய்விலிருந்து உருவான விமர்சன கோட்பாடுகள்தாம். பிரெஞ்சு மார்க்சிய கோட் பாட்டு வரலாற்றில் சார்த்தருடைய நூல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மார்க்ஸ் வடிவமைத்துக் கொடுத்த வரலாற்றுப் புரட்சியை நடத்த முடியாத பாட்டாளி வர்க்கத்தை ஆய்வு செய்த சார்த்தர் தன்னிலையின் முழு சுதந்திர வாழ்க்கைக்குத் தடைகளாக இருப்பனவற்றைக் களைவதற்குக் கோட்பாடுகளை முன்வைத்தார். தொண்டூழியச் சுமைகளைக் கண்டறிந்து தொழிலாளிவர்க்கம் அத்தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு விடுதலையடையும் செயல் திட்டங்களை முன்வைத்தார்.

அந்நியமாதல் என்கிற கருத்தாக்கத்தை ஆலைத் தொழிலாளியோடு நிறுத்திக் கொண்ட மார்க்ஸின் பதிவைப் பெரிதாக விரித்து அன்றாட சமூக வாழ்க்கைக் குழுக்களுக்குப் பொருத்திக் காட்டினர் மேலை மார்க்சியர். தொழிலாளி, ஆலையில் மட்டும் அந்நியப்படவில்லை தின வாழ்க்கையிலும் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு ஆட்படுகிறான். பெண்கள், குழந்தைகள், வயோ திகர், மாணவர், நுகர்வோர், குடியிருப்போர், இப்படிச் சிதறுண்டு கிடத்தலும் அந்நியமாதலும் சமூக வாழ்வெங்கும் காணக்கிடைக்கிறது என்று ஹென்றி லெஃப்ரே, டிபோர்டு போன்ற பிரெஞ்சு மேற்கத்திய மார்க்சியர் மக்கள் கூட்டம் சிதறுண்டு கிடப்பதை, குழுக்களாகப் பிரிந்திருப்பதை அந்நிய மாகிக் கிடப்பதை வலியுறுத்திப் பல நூல்கள், பத்திரிகை, கட்டுரைகள், விவாதங்கள் என்று கொட்டித் தீர்த்தனர்.

பூக்கோவும் மார்க்சியரும்

மார்க்சியரின் மனிதமைய வாதத்தையும் மொத்தப்படுத்திப் பார்ப்பதையும் எதிர்த்தவர் பூக்கோ. பூக்கோவினுடைய கொள்கைத் திட்டத் தில் அரசியல் பொருளாதாரம் குறித்த ஆய்வு இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது; புரட்சி கரத் தன்னிலையின் செயல்பாடுகள்பற்றி எந்த வொரு பதிலும் பூக்கோவிடமில்லை. பூக்கோ, மார்க்ஸை நிராகரிக்கவில்லை; ஆனால் மார்க் சியரின் மரபான கட்சியின் குறிப்பிட்ட நிலைப் பாட்டைத்தான் எதிர்த்தார். நீட்ஷேயவாதிகள் மார்க்சியத்தை புறக்கணிப்பதில்லை, நிராகரிப் பதில்லை; அவர்கள் நிகழ்வியத்துக்கு எதிரான வர்கள், புறக்கணித்தவர்கள். ஆனால், இது குறித்த கொள்கையை பூக்கோ ஒருபோதும் சொன்ன தில்லை, பேசியதில்லை. ‘பூக்கோவிய மார்க்ஸ்’ என்று ஓர் ஆய்வு முன்வைக்கப்படுகிறது. அத் தகைய கோட்பாட்டாக்கத்தில்தான் ‘குடிவழி மார்க்சியம்’ - மார்க்ஸும் பூக்கோவும் ஒரே மரபுவழி, சிந்தனைவழி வந்தவர்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

“நீட்ஷே அல்லது படெய்ல்லெ மீது ஆர்வ முள்ள எங்களைப் போன்ற இளம் அறிவாளி களுக்கு மார்க்சியமோ அல்லது கம்யூனிசமோ வேண்டும்தான். ஏனெனில் நாம் கம்யூனிசம் என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற் கான ஒரே வழியும் அதுதான்” - மிஷல் பூக்கோ

மார்க்ஸினுடைய மிகைமதிப்பின் கோட்பாடு இப்போதுள்ள வர்க்கப் பகைமையை உடைத்து அதிகாரத்தின் நுண்பௌதிகமாக்கிவிட்டது என்று மார்க்சியத்தை பின் அமைப்பியப் பார்வை யில் விளக்கம் கொடுக்க 1970களில் பூக்கோவின் மார்க்சிய விமர்சன நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதாவது முதலாளித்துவ ஆதிக்கம் என்பது ஒற்றை அதிகாரம் வடிவிலில்லை. மாறாக அதிகார உறவுகளின் பன்மையாக, பரவலாக இருக் கின்றன. பெரும் சமூக மாற்றம் மூலமாக இப் பன்மை அதிகாரங்களை ஒழித்துக்கட்ட முடி யாது; வேறொரு புதிய அதிகார அமைப்பு மையம் மூலமும் இவற்றை அழித்துவிட முடியாது. இவ் வதிகாரங்களை எப்படி எதிர்கொள்வதென்றால் மத்தியத்துவப்படுத்தப்படாத தனித்தனியான குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் நேரடி மாற்று அமைப்புக்களை உருவாக்குவதன் மூலமே முதலாளித்துவப் பன்மை அதிகாரங்களை முடக்க முடியும். பூக்கோ சொன்ன சமூக முழுமை உடைந்து நுண் நடைமுறையின் பெருக்கமாகி வரும் பிரிதல் போக்கை ஏற்கனவே மார்க்ஸ், கிரண்ட்ரிஸ் - மூலதனம் நூலுக்கான முன் குறிப்புகள் - நூலில் ஏராளமாகப் பேசியிருக்கிறார்.

தாராள ஜனநாயகத்தின் மீதான பூக்கோவின் விமர்சனம் இன்றைக்கு உணரப்படுகிறது. நவீன மான, அறிவார்ந்த மற்றும் ஒளிவுமறைவற்ற முறை யில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று மார்தட்டுவாருக்கு ஜனநாயகம் என்பதே மக்கள் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் ஒழுங்கு படுத்துவதற்குமான முறையே தவிர வேறில்லை என்று வைக்கிறார் பூக்கோ. பொதுவாக நிலப் பிரபுத்துவ சமூகத்தைவிட முதலாளித்துவ சமூகத் தில் அதிகாரப் பரவலும் அரசின் இரும்புக்கர ஆட்சியும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும் வெகுஜன ஒப்புதலுடனே ஆட்சி அதிகாரம் செயல்படுகிறது; தார்மீக தராதரங் களுக்கேற்ப வெகுமக்கள் சம்மதங்கள் வென் றெடுக்கப்பட்டு ஆட்சி பரிபாலனம் சாத்தியப் படுகிறது.

மார்க்சிய கோட்பாடுகளை விரிவுபடுத்துதல்?

இருபதாம் நூற்றாண்டு சமூக வளர்ச்சிப் பின் புலத்தில் செவ்விய மார்க்சிய கோட்பாடுகளை விரிவாக்கும் தேவையை உணர்ந்த மேலை மார்க் சியர் உளவிய பகுப்பாய்வு / இருத்தலிய கருத் தாக்கங்களை இணைத்த இயங்கியலை உருவாக்க முனைந்தனர். இது விஷயத்தில் சார்த்தருடைய கோட்பாட்டுப் பங்களிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. சார்த்தருடைய இருத்தலிய மார்க்சியம் என்பது இருபெரும் கருத்தாக்க முறைகளை இணைக்க அரும்பாடுபட்டதின் விளைவாகக் கண்டுபிடித்தது ஊகித்தறிதல் அபாயமுள்ள மொத்தப்படுத்துதல் என்கிற வகைமையின், பார்வைதான். மொத்தத்துவத்தின் இயக்கத்தை அவரால் விளக்க முடிந்தது. ‘இயங்கியல் அறிவு குறித்த விமர்சனம்’ என்னும் நூலில் மார்க்சிய கோட்பாடுகளின் விரிவாக்கத் தேவையை வலியுறுத்துகிறார் சார்த்தர்; இதன் மூலம் குறுக்கல் வாதமற்ற மொத்தப்படுத்துதல் கோட் பாட்டின் இயங்கியலை வளர்த்தெடுக்கிறார். மொத்த இயங்கியல் திட்டத்தில் பூர்ஷ்வா சமூகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய கவனமும் முக்கியத்துவமும் அளிக்கப்படும். உதாரணமாக குடும்பம் அதற்கேயுரிய அதிகார வடிவத்தை உரு வாக்கிக் கொள்ளும் அதே சமயம் சமூக மொத்தத் துவத்தின் முக்கிய அங்கமாகவும் விளங்கும்.

இயங் கியலின் ஒவ்வொரு கணத்தின் சார்பு தன்னாட் சிக்கு விளக்கம் சொல்லியே ஆக வேண்டும் என்று வாதித்த சார்த்தர், குறுக்கல் வாதத்தையும் மூடிய ஒற்றைப் பார்வையையும் தவிர்க்க வேண்டு மானால் பல்வேறு வகைமைகளை இயங்கியலில் கொண்டுவர வேண்டும் - அகவய புறவய கருத் தாக்கங்களைஇயங்கியல் பார்வைக்குக் கொண்டுவரவேண்டும். இந்த வகைமை கருவி களுக்கான திறவுகோலே மொத்தத்துவம் குறித்த கருத்தாக்கமாகும். சரியான விமர்சன கோட்பாடு மொத்தப்படுத்துதலின் இரண்டு கணங்களைச் சொல்லியே ஆக வேண்டும். ஒன்று பகுப்பாய்வு தொடங்கும்போது மற்றது ஆய்வு முடிவின்போது. முதலாவது அறிவுத் தோற்ற தளத்தில் ஆய்வைத் தொடங்கி முடிக்கும் போது இருப்பிய தளத்தில் நிறுவவேண்டும். இருப்பிய தளத்தில் எதை முன்கருதிக் கொள்கிறோமென்றால், கொடுக்கப் பட்ட எந்தவொரு கணத்திலும் மனித வரலாறு அல்லது சமூகம் என்பதே மொத்தத்துவ இயக்கத் திலிருப்பதாக எண்ணிக் கொள்கிறோம்; மனி தனால் கட்டமைக்கப்பட்ட மொத்த அமைப்பு; மனித ஏஜன்ட்டுகளின் விருப்பங்களின், நோக்கங் களின் கூட்டுத்தொகை நேரடி குறிக்கோள்களை விட அந்நியமாதல் நோக்கம் அதிகமாயிருந் தாலுமே மொத்த நோக்கங்களுமே இயக்கத் திலிருக்கின்றன.

சார்த்தருடைய வாதம் என்ன வெனில், வரலாறு இருப்பிய தளத்தில் இயங்கு கிறது என்பதே “மனித சாரத்தைவிட மனித இருத்தலே முதன்மையானது” - சார்த்தர் அனைத்து மனிதர்களும் மொத்தத்துவ சுதந்திரத் தில் திளைத்து மொத்த சமுதாயம் சுதந்திரமாக செயல்பட ஆக்கபூர்வமான உழைப்பை ஊக்க முடன் நல்குவர்; அந்நியமாதல் (‘மற்றது’ ஆதலின் விளைவு) இல்லையென்றாகி நாளைய உலகின் சுதந்திர மனிதனாகத் தன்னிலையை உறுதிப் படுத்திக்கொள்ள முடியும். இந்த ஹெகலிய சாத்தியப்பாட்டை மிகுந்த அக்கறையுடன் சொன்ன கடைசிச் சிந்தனையாளர் சார்த்தரே. ஒவ்வொரு மனிதனும் மொத்தத்துவ வாழ்ந்து காட்டுவதன் மூலம் மொத்தத்துவப்படுத்துகிறான். மனித தன்னிலையின் இருத்தலே மொத்தத்துவ நடவடிக்கையாகும் என்ற சார்த்தரின் கண்டு பிடிப்பே கோட்பாட்டாளரின் மொத்தப்படுத்து தலுக்கான அடிப்படையாகும்.

அறிவுத்தோற்றவியல் குறித்த மார்க்சிய புரிதலை மாற்றித்தந்து நிறுவிய சார்த்தர் இருத் தலியத்திலிருந்துதான் மொத்தத்துவ தத்துவத்தை, வகைமையை வரையறை செய்ய முடிந்தது. இந்த இணைவாக்கத்தைச் செய்துகாட்டியதுதான் சார்த்தரின் மார்க்சிய பங்களிப்பு.

பூக்கோவைப் பற்றி முழு ஆய்வு செய்தால் இடதுசாரிகளுக்கு அவர் வைக்கும் கோரிக்கை காத்திரமானது என்பது தெளிவாகும்; அறிவு பூர்வமானதும் தீவிர அரசியல் போராட்ட சூழ லிலும் பூக்கோ இயங்கியதை ஆய்வு செய்தாலும் சரியான புரிதல் கிட்டும்.

300,000 கட்சி உறுப்பினர் கொண்ட பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றெந்த வளர்ந்த முத லாளித்துவ நாடுகளிலுள்ள கட்சியை விடவும் அதிகம் இடதுசாரி பார்வையுடையது. அரசியல் பங்கெடுப்பு, தலையீடு செய்த சுமார் 75,000 கட்சி உறுப்பினர் இரண்டாம் உலகப்போரில் தேசத் திற்காக இன்னுயிர் நீத்தனர் என்று கட்சி மதிப் பிட்டது. 1970கள் வரைக்குமான தேர்தலில் வேறெந்தக் கட்சியையும் விட ஞஊகு அதிக வாக்கு களுடன் வெற்றிபெற்றது. பல்வேறு தொழிலாளர் களை உறுப்பினராகக் கொண்ட ஞஊகு முழுக்க சோவியத் ஆதரவாளர்; 1956இல் சோவியத் படை ஹங்கேரிக்குள் ஊடுருவி நடத்திய போரில் 20,000 ஜனங்கள் மாண்டனர். தன்னை ஒரு மார்க்சிய கட்சி என்று பிரகடனம் செய்த ஞஊகு லோக்கல் பிரெஞ்சு அரசியலில் அப்படியொன்றும் புரட்சி கரப் போராட்டங்களை நடத்திவிடவில்லை. 1917 ரஷ்யப் புரட்சியை 1789 பிரெஞ்சு புரட்சியுடன் இனங்கண்ட ஞஊகுஇன் மையப் பார்வையே தேசியவாத மார்க்சியம் என்றும் மார்க்சியத் தினுடைய மையக் கருத்தாக்கம் முழுக்க பிரெஞ்சு மரபில் வந்தவையே என்றும் கோரியது.

சிறிது காலமே கட்சி உறுப்பினராக இருந்த பூக்கோ 1960களில் பிரெஞ்சு உயர் கல்விக் குழும அரசாங்க அதிகாரியாக வேலை பார்த்தார். மே 1968 மாணவர் புரட்சிக்கு கர்த்தாவாக டோரியாக பூக்கோ படைப்பாக்கம் செய்தார். அரசியலில் அவருடைய வளர்ச்சி முழுக்க தொடர்ச்சியாக மேற்கத்திய மேலாதிக்க சித்தாந்தத்தை எதிர்த்துப் புறக்கணித்தே வந்தார். விஞ்ஞானமும் அறிவும் எப்பவுமே தொடர்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது என்றும் சமூகத்தினுள் முரண்பாடுகள் இருப்பதை மறுத்துப் பேசும் மேற்கத்திய சித்தாந்தத்தை வெறுத்த 1968க்கு முன்பும் பின்புமே ஞஊகு-இன் மேலாதிக்கத்தை எதிர்த்து கட்சிக்கு வெளியே மாற்றுத் தாபனங்கள் செல் வாக்கு பெற்றன. கட்சிக்கு வெளியேதான் சார்த் தருடைய மார்க்சிய கட்டுமானம் பெரும் வர வேற்பைப் பெற்றது. அதேபோல் டிராட்ஸ்ட்கிய கட்சிகளும் பெரும் செல்வாக்கு பெற்றன. மார்க்சியம் குறித்து பூக்கோ,

“19-ஆம் நூற்றாண்டு முழுக்க மார்க்சிய மானது தரையில் விழுந்த மீனைப் போலத் துடித்தது” என்று சொல்லி நிராகரித்தார். பூக்கோ இன்றைய சமூகத்தின் பொதுவிவேகத்தைப் பார்த் துக் கேட்ட அறிவுபூர்வமான கேள்விகள் வேறு வகையிலான வாழ்க்கைமுறை சாத்தியம் என்று பறைசாற்றின. மார்க்சியம் குறித்த விமர்சனம் என்பது முதலாளித்துவத்தை எதிர்ப்போருக்கு, நிராகரிப்பவருக்குச் சரியாகத் தோன்றினாலும் சோவியத் வல்லரசின் வீழ்ச்சிக்குக் காரணம் மார்க்சியம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சோவியத் சோசலிசத்தை மறுத்து மாற்றுத்திட்டத்தை முன்வைத்த பூக்கோவின் அரசியல் நிலைப்பாடு எந்த விதத்தில் ஊக்கமும் ஆக்கமும் தந்தது? மேற்கத்திய முதலாளித்துவத் தையும் கீழை கம்யூனிசத்தையும் வெறுத்த பூக்கோ, ஒருங்கிணைந்த மாற்று உலகப் பார்வையையும் சொல்ல மறுத்துவிட்டார். கட்சி வேலைபார்க் கும் வர்க்கம், தொழிற்சங்கப் போராட்டங்கள், பொருளாதாரம், அரசு, பார்லிமென்டு அரசியல் போன்ற விஷயங்களில் பூக்கோ தலையிடுவ தில்லை. பூக்கோ கேட்பது : 16-ஆம் நூற்றாண்டி லிருந்தே பல்வேறு வடிவங்களில் விஷயங்களில் வளர்ந்துவரும் அறிவுத் திகழ்ச்சியை மனிதகுல விடுதலைக்கான ஆகப்பெரும் உத்தரவாதமாக மதிப்பிடுகிறோம். இந்தப் பெருமை உணர்வோடு இன்னொரு உண்மையும் சேர்ந்தே இருக்கிறது. பெரும் அறிவுத்துறைகள் உருவாகும்போதே அதிகார ஆட்சி செய்யும் குணாம்சத்துடன் நிலை பெறுகிறது.

இதன்படி பார்த்தால் எந்த சமூக ஆய்வுமே சுரண்டலுக்குத்தான் வழிவிடுமே தவிர விடு தலையை நோக்கியல்ல.

வரலாறு என்பதே மனிதருக்குள் அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கான முடிவற்ற போராட்டமே சம்பவங்கள் தாமே தவிர வேறில்லை. இந்த அதிகாரத்திற்கான போராட் டங்கள்தாம் மனித சிந்தனையில் கருத்தில் விஞ்ஞான அறிவார்த்தத்தில் பிரதிபலிக்கிறதே தவிர யதார்த்தத்தை அப்படியே சொல்லும் முயற்சிகூட இல்லை. “தீர்வைச் சொல்லியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நான் எழுதுவதில்லை” ஆகவே என் படைப்புகளில் நிலையான ஒரே மாதிரியான விஷயங்களை எதிர்பார்ப்பவருக்கு நான் சொல்வதெல்லாம் “எந்தவொரு மதிப்பீட்டை வைப்பதற்காகவும் என்னுடைய படைப்பைக் கட்டியெழுப்பவில்லை. எனக்காகவோ அல்லது பிறருக்காகவோ மதிப்பீடு கள் அவற்றில் சொல்லியிருக்கப்பட மாட்டாது.” பூக்கோவின் படைப்புக்களில் எந்தவொரு அரசியலும் ஆய்வு செய்திருக்கப்படமாட்டாது; எந்தவொரு அரசியல் நோக்கமும் அவற்றிலில்லை.

Pin It