வரலாற்றுப்பூர்வமாக தொல்லியலறிஞர்களால் கண்டறியப்பட்ட ‘பிளாட்டோ அகாடமி’ மற்றும் அரிஸ்டாட்டிலினுடைய ‘பெரிபாடெடிக் பள்ளி’யிலிருந்தே அரசியல் தத்துவார்த்த பொதுவெளிகள் - பொது விவாத அரங்கம் தொடங்குகின்றன எனலாம். பண்டைக்கால மக்கள் அரங்கம் பொதுவெளிகள் - அடிமைகளுக்கு இடமில்லை- குறித்த தகவல்கள் விவாதங்கள் ஏராளமாக இந்திய மற்றும் உலக இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. சங்க இலக்கியம், தொல்காப்பியம் மற்றும் மணிமேகலைக் காப்பியத்தில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை தொடங்கி இடம் பெறும் மெய்யியல் விவாதங்கள் அக்காப்பியத்தின் காலத்தை வரையறை செய்வதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. திருக்குறள், மக்கள்அரங்கம் அரசவை, சபை போன்ற பொதுவெளியில் நடைபெறும் தத்துவப் பிரச்சினைகளை ஆராய்கிறது.
பொதுவெளி குறித்த கோட்பாடுகள்
பொதுவெளிகள் ஜனநாயக அமைப்புகளாகக் காணப்பட்டன. ஏனெனில் பொதுவெளிகள் பகுத்தறிவு சார்ந்த விவாதத்திற்கான வெளியாக இருந்தன. பொதுவெளி என்ற வெகுசன பொதுவிவாத அரங்கில் பொதுக்கருத்தொன்று உருவாகுகிறது. ஜனநாயகப்பூர்வமான சிந்தனைச் செயல்பாடுகளுக்குப் பொதுக்களங்கள் வழிவகுத்தன.
பொதுவெளியில் அனைவரும் பங்குகொள்ளும் வாய்ப்புள்ளது. கருத்துச் சுதந்திரம்-பொதுக் கருத்துக்கணிப்பு - பொதுக் கருத்துக்களை அச்சிட்டு அறிவார்ந்த சரக்காக சந்தையில் விநியோகிக்கப்படுகிறது. சமூக அரசியல் - பொருளாதார கலாச்சார ஆதிக்கத்திலிருந்து- கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவேண்டி, அவற்றை எதிர்க்கும் கண்டனக் குரலாகவும் வாழ்வாதார உரிமைக் குரலாகவும்- பொதுக்கருத்து விழிப்புணர்வு பொதுவெளியில் பதிவு செய்யப்படுகிறது.
காலனிய காலத்தில் பொதுவெளி :
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தத்துவ விவேசினி இதழ்- பத்திரிக்கைப் பொதுவெளியில் மெய்யியல் விவாதங்கள் நடந்திருக்கின்றன.
1931இல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தி முழுமையான நம்பிக்கையுடனும் நிதானமாகவும் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதி என்று அறிவித்தார். பொதுவெளியில் அம்பேத்கருடனான அவருடைய முதல் மோதல் (தீண்டப்படாதவர்களுக்குத் தனித் தொகுதிகள் கேட்கும் அம்பேத்கரின் திட்டம் குறித்து) நிகழ்ந்த அந்த மாநாட்டில் இப்படிப் பேச காந்தியால் முடிந்தது, “நான் ஒரு தனிப்பட்ட நபராக என் சொந்த ஆளுமையால் பரந்துபட்ட தீண்டப்படாதோரின் பிரதிநிதியாக என்னை முன்வைக்கிறேன்.”
பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்
ஊர்ச்சாவடி - மண்டபம், திண்ணை, டீக்கடை
பெஞ்ச் - தமிழ் நியூஸ் பேப்பரிலிருந்து அரசியல் பொதுவெளி தொடங்குகிறது. நமக்கான பொதுவெளியாகிய அரசியல் விவாத நிகழ்ச்சிகளைப் பார்க்கவும்; பங்கெடுக்கவும் வேண்டும். நம்முடைய பொதுவெளி கலாசாரத்தின்படி வெற்றுக் கூச்சல்களையும் அபத்த சவடால்களையும் தவிர்த்து நமக்கு ஆரோக்கியமாக, உருப்படியாக விவாதிக்கவே தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சற்றாவது உருப்படியாக உரையாடுபவர்களுக்கு பொதுவெளிகளிலும் ஊடகங்களிலும் இடம் கிடைப்பதில்லை என்பதோடு பொதுஜன சராசரி மனமும் இவர்களை ரசிப்பதில்லை. அவர்களுக்கு பொழுதுபோக, வம்புபேசுமளவிற்கு ஆக்சன் மற்றும் காமெடி செய்பவர்களையே பிடித்திருக்கிறது.
பூர்ஷ்வா பொதுவெளி - பாட்டாளி பொதுவெளி
சந்தைப்போட்டியில் நடுத்தெருவிற்கு வந்த தனிப் பொதுமக்களே பூர்ஷ்வா பொதுவெளிகளாகும். உடனே நாங்கள்தான் அதிகாரப்பூர்வ பொதுவெளிகள் அரசதிகாரிகளல்லர் என உரிமை கொண்டாடி பொதுவிஷயங்களை விவாதிக்கவும் நேர்படப்பேசவும் பொதுவெளி பட்டா போட்டனர். பூர்ஷ்வா பொதுவெளியும் பாட்டாளி பொதுவெளியும் வேறு வேறு; இரண்டும் வர்க்க வேறுபாடுள்ளவை மட்டுமல்ல. பாட்டாளி வர்க்க சமூக பொருளாதார கலாச்சார வாழ்க்கையை அடிமைப்படுத்தியும் ஆதிக்கம் செலுத்தியும் வருபவை பூர்ஷ§வா பொதுவெளிகள். பாட்டாளி வர்க்கம் என்ற உற்பத்தி சக்திகளின் உழைப்பில்தான் பூர்ஷ§வா பொதுவெளிகள் இயங்குகின்றன. தத்துவார்த்த சித்தாந்த மேலாதிக்கம் நிகழ்த்த வேண்டி பூர்ஷ§வாக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொதுவெளிகள்- பொதுவெளிகள் முதலாளித்துவ பூர்ஷ்வா நலன்களுக்கான வெளிகளாக மாற்றப்படுவதைத் தடுக்கவேண்டும். அது கூர்மையான அறிவு சார்ந்த பொதுவிவாதங்கள் மூலம்தான் சாத்தியம். அறிவே ஆயுதம்.
தனியார் வெளியும் பொது வெளியும்
பொதுவெளி என்பது யாருக்கானது? பொதுவெளிகள் என்பன அரசு அதிகாரத்திற்கு உட்பட்ட அரசின் கருவிகள் அல்ல. ‘அடையாளமற்ற வெளி’யாக இயங்கும் தனியார் வெளிகள் இன்றைக்கு அடையாள அரசியல் மூலம் பொதுவெளி விவாதத்திற்குள் இடம்பெறுகின்றனர். அரசியல், சினிமா, பொதுவெளி வார்த்தைகள், தத்துவங்கள், இலக்கியங்கள் நம்முன் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. தொடர்பியலைத் தாண்டிய கலாச்சாரப் பரிவர்த்தனை, ஊடக வெளியின் மையமாய் மாறுகிறது. வாழ்வின் பிரதிகளை வாசித்துக் கண்டறிவதில் ஒற்றைத் தன்மை மீறப்பட்டுள்ளது. இது பன்மையின் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. பாலியல்பு பற்றிய சர்ச்சைகள் பொது வெளியில் ஓரளவு பேசப்பட்டு வருகின்றன. பொதுவெளியில் காட்சிப்படுத்துவது 90களுக்குப் பிறகு தலித்திய விவாதங்களினூடே தலித் பெண்ணியம் என்பதாக ஓரளவு பேசப்பட்டது. படைப்பு என்கிற தளத்தில் கவிதையில் மட்டுமே பெண்களின் முயற்சி கணிசமான அளவு வெளிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று வரை நீள்கிறது. பொதுவாகப் பெண்களின் படைப்பு முயற்சி என்பது பெருமளவு கவிதையில் தொடங்கிக் கவிதையிலே முடிவதாக இருக்கிறது. பிற இலக்கிய வகைகளில் (புனைவு, சிறுகதை, விமர்சனம்) விரல்விட்டு எண்ணும்படியான படைப்புகளே வெளிவந்துள்ளது. இது ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இப்புதிரை உடைத்து பெண்ணிய வெளி என்பது பல பரிமாணங்களில் ஊடாடிச் செல்லுவதாக வெளிப்படல் வேண்டும்.
சொல்லாடலுக்கான பொதுவெளி. ஊடகம் - சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத் தளம் என்பது ஒத்தக் கருத்துடையோர் அல்லது செயற்பாடு கொண்டோரின் சமூகத்தை வளர்க்கவும் அவர்களிடையே உள்ள சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும் வழிசெய்கின்ற ஓர் இணையசேவை, தளம் அல்லது வலைத்தளம் ஆகும்.
· இணையம் என்னும் அமுத சுரபி...! இணையப் பொதுவெளி பயன்பாடுகள் பற்றிய பார்வை..! இவ்வகையான இணையத்தளங்கள் சமூகத்தை எப்போதும் ஒன்றாக இணைத்து வைத்திருத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு பொதுவான சமூக வலைத் தளம் ஒவ்வொரு பயனர் குறித்த தகவல்களையும் (சுய விவரம்), அவரது சமூக பிணைப்புகள் மற்றும் பல்வேறு சேவைகளையும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இவை இணையத்தில் அமைக்கப்பட்டு பயனர்கள் மின்னஞ்சல், உடனடி தகவல் சேவைகள் போன்ற இணையவழியே உறவாட வகை செய்யும். சிலநேரங்களில் இணையச் சமூக சேவைகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் சமூக வலைத்தளங்கள் வழமையாக தனிநபர் சார்ந்த சேவைகளாக இருக்கும். இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள், இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள வழிசெய்கின்றன.
· பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் பள்ளி/கல்லூரி மாணவர்கள், ஒரே பணி/பணியிடம், வாழிடம் போன்ற பகுப்புகளில் தங்கள் நண்பர்களை (தன் விவர குறிப்புக்கள் மூலம்) அடையாளம் காணக்கூடிய தளங்களையும் நம்பிக்கைக்குரிய பரிந்துரை அமைப்புகளை வழங்கும் அமைப்புகளையும் கொண்டுள்ளன.
· 2011ஆம் ஆண்டுக் கருத்துக்கணிப்பு ஒன்று 47 சதம் அமெரிக்கர்கள் சமூக வலைத்தளங்களைப் பாவிப்பதாக கண்டறிந்துள்ளது. இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது.
· 2011ஆம் ஆண்டு அராபிய இளவேனில் என அழைக்கப்படும் எழுச்சிப்போர்களின் காலத்தில் ஒத்த கருத்துடைய எதிர்ப்பாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை பரப்பிடவும் தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் சமூக வலைத்தளங்களை பெரிதும் பயன்படுத்தினர்.
· பின்நவீன உலகம் தகவல் சமூகமாக இனங்காணப்படுகின்றது. பின்நவீனத்துவக் கருத்தியல் ‘உண்மை’களை ‘மொழி’க்கூடாகவே பார்த்தது.
· இன்றைய உலகின் போக்கு தகவலை மையப்படுத்தியதாகவே உள்ளது. இன்றைய பொருளாதாரம் தகவல் பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய காலம் தகவல் யுகம் என அழைக்கப்படுகின்றது. உலகமயமாக்கல் தகவல்பெருக்கத்தின் ஊடாக ஆப்பிரிக்க கண்டத்தின் காட்டிலுள்ள சமூகம் வரை பாய்கின்றது.
· பல்வேறுபட்ட சமூகங்களின் அடையாளங்களை உலகமயமாக்கும் தன்மை அழிக்க முற்படுவதே பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக உள்ளது. சிறுபான்மைச் சமூகங்கள் தமது அடையாளம் அழிக்கப்படுவதாக நினைக்கின்றன.
· இன்றைய யுகத்தை இருவிதமாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. முதலாவது உலகமயமாதல் தன்மையும் அதற்கெதிரான பயங்கரவாதமும். இவ்வுலகமயமாதல் தன்மையை கணினியும் தகவலும் இலகுபடுத்திக் கொடுத்துள்ளன. ‘உலகமயமாதல் மரபுகளின் வேர்களை பிடுங்கி எறிகிறது. உலகமயமாதல் உலகினை வெற்றியடைந்தவர்கள், தோற்றவர்கள் என்று மட்டுமே பாகுபடுத்துகின்றது.’
· மேலும் ‘ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றின் உண்மைப் பொருளைச் சிதைத்து நுகர்வியக் கலாச்சாரத்தை ஜனநாயகமாக முன்னிறுத்துவதும் பயங்கரவாதத்திற்கு மற்றொரு காரணமாகும்’
· இதை வேறொரு விதமாகவும் பார்க்க முடியும். உலகமயமாதலை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்வதற்கான வெளியையும் சாத்தியப்படுத்தியிருக்கின்றது. அதைப் பயன்படுத்துவதே சிறுபான்மையினரிடம் உள்ள முக்கிய சவாலாகும். தகவல் யுகத்தில் சிறுபான்மையினர் சார்பான தகவல் பெருக்கத்தை நிகழ்த்துவதும் அதிலிருந்தான அறிவுருவாக்கம் என்பதைச் சாத்தியமாக்கக் கூடிய வெளியையும் அதே தாராளவாதம் வழங்கியுள்ளது.
· ‘அறிவில் இருந்து அதிகாரம் உருவாகின்றது. அதே அதிகாரம் தனக்குச் சார்பான அறிவை உற்பத்தி செய்கின்றது.’ என்ற கருத்தியலை பிரயோகிக்கும் போது சிறுபான்மை மக்களின் அறிவை அவர்களது பார்வையில் உற்பத்தி செய்ய முடியும். இவ்வறிவுருவாக்கம் ஒற்றை அதிகாரத்தை தகர்வுக்குள்ளாக்குகின்றது. சிறுபான்மைச் சமூகங்களது அறிவுருவாக்கம் என்பது அவர்களது சமூகச்செயற்பாட்டுக்கான ஆரம்பப் புள்ளியாகும்.
· தகவல் என்பது அறிவுருவாக்கத்தின் ஆரம்பநிலையாகும். இதுவே இச்சுழற்சியின் மூலமாகும். உலகமயமாதல் - தகவல் பெருக்கச் சுழல் அதிகாரவர்க்கம் சார்பானதாக இருந்தாலும் அது ஏற்படுத்தியிருக்கும் இடைவெளிகளில் தம்மை நிலைநிறுத்துவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
· சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இச்சுழற்சியில் அது ஏற்படுத்தியிருக்கும் வெளியில் தம்மைப் பொருத்திக் கொள்வதேயாகும். அதன் மூலமான சமூகத்தின் ஆதாரமான அறிவுருவாக்கச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்வே சமூகச்செயற்பாடுகளுக்கான ஆதாரமாகும்.
· பேஸ்புக் பயன்படுத்துபவர்களால் ஒரு மாதத்திற்கு 700 பில்லியன் நிமிடங்கள்...வீணடிக்கப்படுகின்றன
· 800 மில்லியன் பயனாளர்கள் பேஸ்புக் தளத்தை செல்போன்கள் வழியாக பயன்படுத்துகின்றனர்.
· 3 மில்லியன் இணையதளங்கள் பேஸ்புக்குடன் இணைந்து சேவை வழங்குகின்றன. அதாவது பேஸ்புக் வசதியை வழங்குகின்றன. லைக், கமெண்ட் போன்றவை இதில் அடங்கும்.
· ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் தளத்தில் உள்ள தகவல்கள் 30 பில்லியன் என்ற அளவில் மற்றவர்களுடன் பகிரப்படுகின்றது.
· பேஸ்புக் தளத்தை 70 மொழிகளில் மொழிபெயர்க்க சுமார் 3 லட்சம் பேர் உதவியிருக்கிறார்கள்.
· ஒவ்வொரு நாளும் 30 மில்லியன் பேஸ்புக் அப்ளிகேசன்கள் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
· யூடியூப் தளத்தை 1 பில்லியன் மக்கள் மாதந்தோறும் பார்வையிடுகின்றனர்.
· பேஸ்புக் கணக்கெடுப்பின் படி, சராசரியாக ஒவ்வொரு பயனாளரும் மாதத்திற்கு 15 மணிநேரம் 33 நிமிடங்கள் பேஸ்புக் தளத்தில் உலா வருகின்றனர்.
· யூடியூப் பக்கங்கள் ஒவ்வொரு மாதமும் 200 பில்லியன் அளவிற்கு பார்க்கப்படுகிறது.
· யூடியூப் தளத்தை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு மாதமும் பயனாளர்களால் வீணடிக்கப்படும் நேரம் 5 பில்லியன் மணிநேரங்கள்.
· விக்கிபீடியாவில் 17 மில்லியன் பக்கங்கள் உள்ளன. 91,000 எழுத்தாளர்களின் பங்களிப்பு உள்ளது.
· ஒவ்வொரு நிமிடமும் பிளிக்கர் தளத்தில் 4,000 புகைப்படங்கள் தரவேற்றப்படுகிறது. பிளிக்கர் தளத்தில் 15 பில்லியன் புகைப்படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
· டிவிட்டர் தளத்தில் ஒவ்வொருநாளும் 500 மில்லியன் டிவீட்கள் செய்யப்படுகின்றன.
· நம்முடைய நிஜ வாழ்க்கையை வெர்ச்சுவல் வாழ்க்கை ஆதிக்கம் செலுத்துகிறது.
· இந்தியாவை வேட்டையாட பேஸ்புக் திட்டம்
“இணையச் சம நிலை என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறோம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இலவச இணையச் சேவை அவசியம். இதற்காக ஆண்டுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவளிக்கின்றன தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.” பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் தனது பயனாளர்களாக இருக்கும் கோடிக்கணக்கான நபர்களின் பெயரில் அவர்களது ஒவ்வொரு பேஸ்புக் கணக்கிற்கும் 1276 டாலர் அளவிற்கு கட்டணத்தை விளம்பரதாரர்களிடமிருந்து வசூலித்துக்கொண்டிருக்கிறது என்பது பேஸ்புக் பயனர்களே அறியாத விஷயம். அதாவது தனது பயனர்கள் ஒவ்வொருவரையும் விளம்பரதாரர்களிடம் பேஸ்புக் நிறுவனம் விற்றுவிட்டது என்பதே இதன் பொருள் என கட்டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
· மதிமயக்கும் இணையமும், வாழ்வை சிதைக்கும் சமூக வலைத்தளங்களும்.
ஒரு மனிதனை வளமாக்க தேடலை விட சிறந்த ஆசான் எவருமில்லை. சமூக வலைத்தளங்கள் இன்று போதைக்கு நிகரான ஒன்றாக வர்ணிக்கப்படுகின்றன. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் உங்களை கட்டுப்படுத்துகின்றனவா? இல்லை நீங்கள் கட்டுப்படுத்துகின்றீர்களா? என்பதனைப் பொறுத்தே உள்ளது.
இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் என எண்ணிலடங்கா விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் தம்மை வளப்படுத்தத் தேவையானவற்றை தேடிப்படித்து ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளமுடியும்.
சமூக வலைத்தளங்கள் எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்; ரஷ்யா எச்சரிக்கை - செய்தி :
கூகுள், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ரஷ்ய நாட்டின் சட்ட திட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதாக அந்நாட்டு ஊடக கண்காணிப்பகம், அந்நிறுவனங்களை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலை நீடித்தால் எந்நேரத்திலும் இந்த மூன்று சமூக வலைத்தளங்களும் ரஷ்யா முழுவதும் முடக்கப்படும் என்று ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர் கலாச்சார வெளி
இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொதுவெளி கவியரங்கும் உரையாடலும் வாழ்வின் பேசுபொருளாக மாறி இருக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பொதுவெளி என்று வந்துவிட்டால் தனிமனிதனுக்கும் “சமூகப் பொறுப்பு “ இருக்கிறது. பொதுவெளியில் கருத்துச்சொல்லும்போது கருத்துக்கள் கடுமையாகச் சொல்லப்படுவது இயல்பு.
பொதுவெளி, தனிவெளி என்னும் கருத்தினை காலனிய காலத்தில் பொதுவெளி உருவாகும் முறை- 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொதுக்களத்திற்கான உரிமைக் கோருதலில் ஈடுபட்ட தலித் முன்னோடிகளின் சட்டமன்ற தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
எதிர்கலாச்சார கலை வெளிப்பாடாக அடையாளம் காண உலக எதிர்கலாச்சார இயக்கங்களைப் பற்றியும் அவை தத்துவம் முதல் தொழில்நுட்பம் வரை சகல துறைகளிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
பின் மதச்சார்பின்மை (போஸ்ட்செக்யூலர்) ஏன்? - ஹேபர்மாஸ் உரை
“நவீன தொழில்நுட்ப உதவியால் சமூகம் வளர்ந்த அளவுக்கு பண்பாடு வளரவில்லை. எனவே அத்தகைய சமுதாயங்களில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டு விட்டது. நவீனம் மதசார்பற்று, சமயத்தை நிராகரிப்பதாக இருக்கிறது. மரபு பழைய விழுமியங்களை விட்டுத்தர மறுக்கிறது. இரண்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை. அரசு ஒரு பகிரங்க கொலைத்திட்டம் நடத்துகிறது. வெடிகுண்டுகளும், ராக்கட் லாஞ்சர்களும் கொண்ட மொழியற்ற வன்முறையால் ஒரு பேச்சுவார்த்தை நிகழ்த்துகிறது.
இதைத் தவிர்க்க இரு தரப்பினரும் பேசிக் கொள்ள ஒரு பொதுமொழி தேவைப்படுகிறது. அந்தப் பொதுமொழியை உருவாக்குமுன் தொழில் நுட்பத்துக்கும் சமய நம்பிக்கைக்கும் பொருத்தமே இல்லை, இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை என்ற எண்ணம் மறைய வேண்டும். மதசார்பின்மை முன்னேற்றப் பாதை, ‘முற்போக்கு சக்தி’ என்ற அடிப்படைவாதத்தையும் மதசார்பின்மை ஒரு பண்பாட்டு நசிவு என்ற அடிப்படைவாதத்தையும் தணிக்கத்தக்க ஒரு பார்வை உருவாக்கப்பட வேண்டும். பன்முகப்பட்ட சமூக அமைப்பு, அறிவியல் உண்மைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்த அரசு- இவற்றை சமய நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க வேண்டும். அற அடிப்படையிலான அவநம்பிக்கைகளை சமயம் சார்ந்த மொழியில் வெளிபடுத்தும் ஆத்திகர்களின் குரல்கள் மதசார்பற்ற சக்திகளால் நசுக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு கொடுத்து சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பைச் சேர்ந்தவர்களோடும் சுதந்திர அரசுகள் உரையாட வேண்டும். இது நிகழ சமய நிலைப்பாடுகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.”
எப்படி இந்த மொழிபெயர்ப்பு நிகழ வேண்டும் என்பதை ஒரு கிறித்துவ கோட்பாட்டை வைத்து சொல்கிறார் :
கருச்சிதைவுக்கு எதிரான ஆத்திகர்கள், ஆண்டவன் மனிதனைத் தன் பிம்பமாகப் படைத்தான் என்று சொல்கிறார்கள். மற்றொருவர் இல்லாத இடத்தில் அன்பு இல்லை. இருவர் ஒருவரை ஒருவர் வேறாக அடையாளம் காணாத இடத்தில் சுதந்திரம் இல்லை. கடவுள் அன்பே உருவானவன். அவன் மனிதனுக்குப் பூரண சுதந்திரம் தந்திருக்கிறான். மனிதன் கடவுளின் பிம்பமாக இருந்தாலும், அவன் வேறானவன். இந்த வேற்றுத்தன்மையும் கடவுளின் படைப்பே, காப்பாற்றப்பட வேண்டியதே- இந்த வேற்றுத்தன்மை இருக்கும்வரைதான் வழிபாடு இருக்க முடியும். மனிதன் வேறு கடவுள் வேறு என்ற சுதந்திரம் உள்ளவரைதான் கடவுள் சுதந்திரமான மனிதர்களின் கடவுளாக இருக்கிறார். அவனது சுதந்திரத்துக்குத் தடைகள் எழுப்பப்படக் கூடாது. மனிதனுக்கு சுதந்திரமாய் வாழ்வதற்கான சுதந்திரம் தந்து அவர் அவனை சுதந்திரமாய் வாழ நிர்பந்திக்கிறார்- அறத்தின் குரலாகவே அவர் அவன் வாழ்வை நிர்வகிக்கிறார்.
இத்தகைய ஆத்திகக் கோட்பாடுகளின் விளைவுகளை கணிக்க அவற்றை ஏற்க வேண்டுமென்பதில்லை. கடவுளே ஒருவனுக்குத் தன் சுதந்திரத்தைத் தீர்மானம் செய்து கொள்ளும் உரிமையைத் தந்திருக்கும்போது, இடையில் புக சக மனிதன் யார்?
உண்மைகளின் அடிப்படையில் மட்டும்தான் பொதுவெளியில் விவாதங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் வழியான உரை நிகழ்த்தப்பட வேண்டும்.
· ஜனநாயகப்பூர்வமாக நடந்த பொதுவிவாதங்கள்-பொது வெளிகள் இன்றைக்குப் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் இந்திய கனிம வளம், தாதுவளம், கடல்வளம், விவசாய வளம், இயற்கைவளம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொழில் நுட்ப ஆராய்ச்சி போன்ற அறிவுச் சொத்துக்கள், மெகா தகவல்கள் கொள்ளையடிக்கப்பட்டு மனித வாழ்வாதாரத்தையே சுவாசக் காற்றையே சூறையாடும் மரபணுமாற்று விதைகள் ஜிஎம் மன்சான்ட்டோ கோக், பெப்சி, வால்ட்மார்ட், போஸ்கோ போன்ற அமெரிக்க மெகா கார்ப்பரேட்டுகள் உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி விற்றுவிடுகின்றன.
‘மாற்றுவெளி’ ஆய்விதழ்
‘தலித்முரசு’ ‘புதியகோடாங்கி’ போன்ற இதழ்கள் தலித்திய, விளிம்புநிலை கருத்தாடல்களை முன்னெடுத்தன; பெண் வெளி குறித்த தேடலை, பெண்ணிய எழுத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பனிக்குடம், அணங்கு போன்ற இதழ்கள் எழுச்சி கொண்டன. தமிழில் மாற்றுவெளி என்னும் இதழ் மொழி, இலக்கிய ஆய்வுப் பெருவெளியில் நிரம்பிவழிகிற சில வெளிகளை விடுத்து மாற்று வெளியை நாடிச் செல்கிறது. இலக்கிய இலக்கண ஆய்வுகளை மீள்வாசிப்பு செய்தல் என்கிற தளத்தில் நோக்கு, பனுவல் (இணைய வழி ஆய்விதழ்) இதழ்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து வேறான தளத்தில் மாற்றுவெளி இதழ் பரிமளிக்கிறது. மாற்றுவெளி இதழின் தனித்த சிறப்பு என்னவென்றால் இளம் ஆய்வு மாணவர்களின் சிந்தனைக்கு வழி வகுப்பதாகவும், அவர்களின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அடையாளம் கொண்டுள்ளது. ஒரு மாறுதலுக்காக அல்ல, மாற்றுச் சிந்தனையை முன்வைத்து நடத்திச் செல்வதற்காக மாற்றுவெளி இதழாசிரியர்குழு பொதுவெளிப் போராளிகளாக இயங்குகின்றனர்.