கோவில் பிரகாரத்தில்

குத்து விளக்கெதிரில்

குங்குமப் பொட்டோடு

வந்த விஜியா?

 

சாவில் முடிவு என

நாள்தோறும் சொன்ன

விடுதியயதிர் சுடுகாட்டுத் தீயா?

 

அல்லால்

அன்று நெடில் காரில் சென்றவன்

சாலைச் சேற்றை என் மீதிறைத்த

திமிரா?

 

பனியில் நனைந்து இரவில் மலர்ந்து

சுகந்தம் பரப்பும் மலரா?

 

இல்லை

கலியில் தினம் கருகிச் சாகும்

முகமற்ற என் முப்பது கோடி உறவா?

 

நேரில்

எது என்னைக் கவிசொல்லச்

சொன்னதன்று?

என் கவிமூலம் எதுவெனத்

தினம் தேடுகிறேன் நெடுந்தூரம் சென்று

 

-தேவக்கோட்டை வா.மூர்த்தி
Pin It