வாசக் கதவைத் தாழ்போடு

நீளக் கொம்பை கையிலெடு

பொந்தையல்லாம் அடைத்தாயோ?

"பொட்டிக்குள் தான் எங்கேயோ...?'

குத்திக் கிளப்ப வெளித்துள்ளும்

கவனம்

தப்பிக் கொள்ளும் வெறி உந்த

ஓடித் திரிந்து ஒளிந்துவிடும்

கொட்டிக் குதறி பொறி மீளும்

எலி அதோ! அடி! அடி!

முயன்றதோர் நூறு முறையும்

முடிந்தது நாளை முயல

எலிகளோ மனத்தைப் போலே

எதனினும் வசங்கொள்ளாது

பழகிடச் சகிக்கும் இதுவும்

விடு

-மாலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.