பூனைகளை மயக்கிப்புணரும் வித்தைகள் இவ்விடம் கற்றுத் தரப்படும்
விளம்பரம் கண்டு
ஆவலோடு நெருங்கி அமரும் எலிகளோடு
முதல் உரையை தொடர்கிறீர்கள்

பெண்னெலிகள்
உங்கள்
மனைவியை களவொழுக்கம் செய்ய சமயம் பார்க்கையில்
நஞ்சூரும் விழிகளால்
பொறியன்றைத் திறந்து காட்டுகிறீகள்

அழுத்திப்பிடிக்கப்பட்ட
யோனியின் சதை கண்டு
எலிகள் நாவை உள்ளிழுத்துக் கொள்கின்றன.
சவுக்கின் சொடுக்கை
முதன் முறையாக
மனைவியின் மேனி முழுவதும் பிரதியெடுக்கையில்

அதிகாரங்கொண்ட
இரு
பெண்களின் கையில் உங்கள் குறி பிடுங்கியெறியப்படுகிறது.

ஒருத்தி
உங்கள்
தாய்....

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.