எங்களைச்
செடியில் வைத்தாலென்ன?
குடுவையில் வைத்தாலென்ன?
நிச்சயிக்கப்பட்ட
நேரம் வரை
மலர்ச்சியாகவே தோற்றமளிக்க
வேண்டியவர்கள் நாங்கள்
பிரிவோம் என்று
தெரிந்த பின்னும்
பெற்றெடுக்கின்றன செடிகள்
பறிப்போம் என்றே
தினமும்
புதுமலரை நாடும்
கைகள் -
மறுக்க முடியாத நிலையில்
நாங்கள்...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.