நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ கமலஹாசன்தான் காரணம் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் இருக்கும்வரை நீட் தேர்வு தொடரும். நீட் தேர்வு உயர் சாதியினருக்குச் சாதகமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம்தானே என்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழ்நாட்டு மந்திரிகள் ஒருவருக்கும் உள்ளூர் வங்கிகளில் பணமே இல்லை என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
வைக்கப்படும் பேனர் காற்றடித்துத்தான் விழுகிறது. ஆகவே காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும் என்கிறார் அமைச்சர் பொன்னையன்.
சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்னையனின் பேச்சை ஏற்க முடியாது என்று கடுமையாகக் கூறியிருக்கிறது.
ஒன்று மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். அல்லது தான்தோன்றித்தனமாகப் உளறுகிறார்கள்.
மக்களைப் பற்றியோ, தமிழகத்தைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதும் இல்லை, பேசுவதும் இல்லை.
ஜெயலலிதா மீது நமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த மந்திரிகளைப் பேசவிடாமல், வாய்ப்பூட்டு போட்டு வைத்திருந்தக் காரணம் இப்பொழுதுதான் தெரிகிறது.