கீற்றில் தேட...

தயங்கிவரும் கோழைக்கும்

தாவிவரத் தோன்றும்! இவர்

தமிழைக் கேட்டால்

புயங்களுக்குச் சிலிர்ப்பு வரும்!

புத்துணர்ச்சி நெஞ்சில் வரும்!

பொய், பூச் சுக்கு

மயங்கி வரும் இனத்துக்கு

‘மருந்து’ தரும் இயக்கத்தில்

மறவ னைப்போல்

இயங்கிவரும் கட்டழகர்!

எங்கள் பே ராசிரியர்

இளமை வாழ்க!

 

விந்தை செயப் பிறந்த மகன்!

விழிகுளிரத் தமிழ்மக்கள்

வியந்து போற்றும்

சிந்தை நிறை ‘தளபதி’யின்

செயல்வேகம் அத்தனையும்

சிறக்க, ‘‘ஞானத்

தந்தை’’யென வழிகாட்டித்

‘‘தடையாவும் வெல்க’’ வெனத்

தமிழால் வாழ்த்தி

முந்துபுகழ் அவையத்தில்

முழங்கிய பே ராசிரியர்

மொய்ம்பு- வாழ்க!

நன்றி: முரசொலி