ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக,ராஜபக்சேவுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு,இப்பொழுது வீரவணக்க அஞ்சலிக் கூட்டத்திற்குத் தடை விதிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஈழ ஆதரவு நிலையிலிருந்து தமிழக அரசு விலகிச் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.தாணா தெருவில் ம.தி.மு.க.வுக்கு அனுமதி, எங்களுக்கு மறுப்பு. முதலில்    போக்குவரத்தைக்     காரணம்      காட்டினார்கள்.     பிறகு,    டெபுடி கமி­னர் பவனேஷ்வரியிடமிருந்து ஒரு கடிதம். அதில், மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழுவதால் உங்கள் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்றார்கள்.ஒரே நிகழ்ச்சிக்கு இரண்டு தடைகள்.காவல்துறையின் செயல்பாட்டில் உள்நோக்கம் இருக்கிறது.ஈழத் தமிழினப் போராட்டம் குறித்துச் சின்ன சின்ன நடவடிக்கைகயைக் கடந்த தி.மு.க.அரசு எடுத்தாலும்,லபோதிபோ என்று குதித்த தமிழ்த்தேசியவாதிகள் இந்தத் தடைக்கு ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்?

- தொல் . திருமாவளவன் (நக்கீரன், 2013 மே 22 - 24)

மே 17,18 - களில் நம் தமிழ் உறவுகள் பல்லாயிரக்கணக்கானோர் அழிக்கப்பட்டதை நினைவு கூரும் கூட்டங்களை எந்த வன்முறையும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால்,சென்னையில் நடந்த ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர மற்ற எல்லாக் கூட்டங்களுக்கும் தடைவிதித்துள்ளது இந்த அரசு.ஒரு புறம் ஈழத்தை ஆதரிப்பதாகத் தீர்மானம்,மற்றொருபுறம் கண்ணீர்விட்டு அழுவதற்குத் தடை.இது ஜெயலலிதா அம்மையாரின் இயல்பான இரட்டை முகம்.தமிழ் வழிக்கல்வியை மறைத்துவிட்டு, தமிழ்த்தாய்க்குச் சிலை என்று சொல்லவில்லையா என்ன? மணல் திட்டுகளை அகற்றலாம் எனப் பேசிவிட்டு, ராமர் பாலம், புராதனச் சின்னம் என்று இன்றைக்குச் சொல்லவில்லையா என்ன?இரட்டை வேடங்கள் இந்த அம்மையாருக்குப் பழக்கமான ஒன்றுதான்.இதனை இனியாவது தமிழ் உணர்வாளர்கள், உணர்வார்களா?

- பேரா.சுப.வீரபாண்டியன் (நக்கீரன், 2013 மே 22 - 24.)

செத்து மடிந்தவர்களுக்காகக் கூடி அழக்கூட எங்களுக்கு உரிமை இல்லை.பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியதாக எங்களுக்குக் கூட்டம் நடத்தத் தடை விதித்துள்ளனர்.கடந்த தேர்தலில் இவர்களுக்காக அந்தப் படத்தை வைத்துத்தானே ஓட்டுக்கேட்டோம்.அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா?

- சீமான் (ஜுனியர் விகடன், 26 - 5 - 2013)

தலைவர் பிரபாகரன் படத்துக்குத் தடையாம்.அவரது படத்திற்கு இப்போது தடைபோடுகிற ஜெயலலிதாவுக்கு,உங்களுக்காக மைக் பிடித்து வாக்கு சேகரித்தபோது என்பின்னால், பிரபாகரன் படம் இருந்ததே... அப்போது தெரியவில்லையா?

- சீமான் (நக்கீரன், 2013 மே 22 - 24)

அப்போது தெருவுக்குத் தெரு பேனர் வைத்துவிட்டு,இப்போது பேனரே வைக்கக்கூடாது என்று சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? ஒருவேளை, பாலச்சந்திரனுக்கு நியாயம் கேட்கப் பாலச்சந்திரன் படத்தைப் பயன்படுத்தக் கூடாது,அரசியல் லாபத்துக்காக மட்டும்தான் அந்தப் பிள்ளையின் படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து விட்டார்களா?

- புகழேந்தி தங்கராஜ் அரசியல், 29 - 05 - 2013.

இந்த ஆண்டும் சென்னை,புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17ந்தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ.நெடுமாறன், கெளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.பிரபாகரன் படம் இல்லாமல் அந்த மேடை காட்சி தந்தது. தடையை மீறி நடத்தினாலும் பிரபாகரன் படம் இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் கூட்டத்தையோ,அஞ்சலிக் கூட்டத்தையோ நடத்த மாட்டார் வைகோ. அப்படிப்பட்டவர்,கூட்டத்திற்குத் தடை எதுவும் இல்லாத நிலையில்,பிரபாகரன் படம் இல்லாமல் கூட்டம் நடத்துகிறார் என்றால்,ஒருவேளை பிரபாகரன் படத்தை வைகோ கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வாளர்களிடம் எதிரொலித்தது.

(நக்கீரன், 2013 மே 22 - 24)

Pin It