கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்                                            

                                                                              ( குறள்: 796)

நமைச்சூழ்ந்து நின்றிடும் நண்பர்கள் தன்மையை

                நாமறிய வேண்டு மென்றால்

நமக்கொரு துன்பமே வருகின்ற நேரத்தில்

                நன்குநாம் அறிய லாகும்

 நண்பர்கள் அன்பையே அளவுசெய் கோலது

                நம்முடைய துன்ப மாகும்

நல்லவர் கெட்டவர் தேர்ந்துநாம் துணைக்கொள்ள

                நல்லவழி சொன்ன குறளே!  

Pin It