எது இருந்தால்
உருவாகும் கவிதை

இது இருந்தால்
உருவாகுமோ கவிதை

அது இருந்தால்தான்
கருவாகும் கவிதை

அது இது எது?

மது இருந்தால்
மணம் பரப்பும் கவிப்பூ

பாட்டில் ருசியுள்ள கவிக்கு
பாட்டில் வாங்க பணமில்லை பாப்பா

நான் கடவுள் அன்று
நான் கடையில் இன்று

குடித்து படைப்பவன் கவிஞன்
படைத்து குடிப்பவன் மாகவி

கட்டிங் போட காசு கொடு பாப்பா!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.