முற்றுப்பெறாத அப்பணிக்கு
சத்தமிடத் தீர்மானித்திருந்ததை
தவிர்க்க வைத்த அந்த மழை மாலை
நான் பொறுத்திக்கொள்ளவிருந்த
சீன முகமூடியை பறித்துக்கொண்டு
மனதைக் காற்றில்  இறகாய் மிதக்கவிட்டு
கவிதையெழுதுமொரு சூழலுக்கு உந்தித்தள்ள
இடையூறு ஏதுமில்லை என்றாலுங்கூட
பலத்த
இடிச்சத்தமொன்றிற்கு அதிர்ந்த பறவைகள்
கம்பிகளுக்குள்ளிருந்து இன்னமும்
மௌனங்களையே துப்பிக் கொண்டிருக்கின்றன.

- பா.ராஜா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.