அறையின் கதவைத்
தள்ளித் திறந்து
நுழைகிறீர்கள்

முகத்தை முகத்தைப் பார்த்து
ஏதோ கேட்க முனையுமுங்களை
வாயமர்த்தி

கோப்பையிலிருக்கிறதை
சரிபாதியாகப் பகிர்ந்து

உங்களுக்குமொரு
சன்னலை விரித்து

விட்ட இடத்திலிருந்து
ரசனைக்குள் தொலைக்கிறேன்

மீள்கையில்
கடந்திருந்தீர்கள்

அடைத்து
அறையப்பட்டிருந்தது
சாளரம்

- மௌனம் இரமேசு

More articles by மௌனம் இரமேசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.