நிழல் தாவரம்
அடர்ந்து கிளை விரிக்கிறது.

பூக்கள் மலர்வதில்
வார்த்தைகள் தெறிக்கின்றன.

அடிமனசில் வண்டல் படிவில்
படிந்து கிடக்கும் தனிமை
சிலிர்த்து ஊறி
பீறிட்டிக்கிறது.

சொல்லொணாத் துயரம்
குடையின் மீது
கவிழ்ந்து கொட்டும்
குடத் தண்ணீராய்
அதிர்ந்து உலுக்குகிறது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.