காலம் காலமாய் சுமந்த
மணல் கருப்பையையும்,
சுவாசம் தந்த
தாவரத் தொப்புள் கொடிகளையும்
சந்தையில் விற்றுக் காசாக்க
சன்னம் சன்னமாய்க்
கத்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்
தறுதலைப் பிள்ளைகள்...
மரணத்தோடு மல்லுக்கட்டி
மலடியாக மாறிக் கொண்டிருக்கிறாள்
நதித்தாய்...
தாய்மையை விற்றுவிட்டு
என்ன பெறப் போகிறார்கள்
அதைவிடப் பெரிதாய்?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.