வார்த்தைகளற்ற பகிர்வில்
கனத்து
கறுத்து உதிர்கின்றன
மௌனங்கள்

"கை கழுவ"வென
அலம்பிய நீரில்
விரல்களின் ரேகைகள்

வெளிறிய முகம்
துடைத்த துவாலையில்

தாழ்வாரத்தில்
இடித்துக் கொள்ளாத தலையசைப்பில்
தப்பித்தலின் குதூகலம்

இனியென்ன...
கோடைக்கும்
கோடைக்குமிடையில்
நனவோடை

- மௌனம் இரமேசு

More articles by மௌனம் இரமேசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.